Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thanjamena Vanthavaley
Thanjamena Vanthavaley
Thanjamena Vanthavaley
Ebook337 pages3 hours

Thanjamena Vanthavaley

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

சாரதா அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள். தன் தாய் யார் என்பதை அவள் எப்படி அறிந்தாள்? தன் தாய் ஏன் இறந்தாள்? பிரதாபன் யார்? சாரதா தஞ்சமென எங்கே வந்தாள்? படித்து அறிவோம்...

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580133810078
Thanjamena Vanthavaley

Read more from Muthulakshmi Raghavan

Related to Thanjamena Vanthavaley

Related ebooks

Reviews for Thanjamena Vanthavaley

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thanjamena Vanthavaley - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தஞ்சமென வந்தவளே

    Thanjamena Vanthavaley

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    1

    "மாணிக்க வீணையேந்தும்

    மாதேவி கலைவாணி...!

    தேன்தமிழ் சொல்லெடுத்து

    பாடவந்தோம்... அம்மா...!

    பாட வந்தோம்..."

    கண்மூடிப் பாடிக் கொண்டிருந்தாள் சாரதா... அவள் முகத்தில் தெரிந்த அமைதி கலந்த ஒளியைப் பார்த்தபோது அப்படியே அவளுடைய அம்மா சரயுவைப் பார்ப்பதைப் போலவே நந்தினிக்கு இருந்தது...

    சரயுவும் சாரதாவைப் போலவே அந்த அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள்தான்... வளர்ந்து படித்து வேலை கிடைத்தவுடன் ஆசிரம விதிகளின்படி ஆசிரமத்தை விட்டுப் பிரிந்து சென்றாள்... எங்கிருந்தாலும் ஆசிரமத்தில் கடைபிடித்த நெறிமுறைகளோடு வாழவேண்டுமென்ற அறிவுரையுடன் அவளை அனுப்பி வைத்தாள் நந்தினி... இரண்டு ஆண்டுகள் கழிந்தபின் ஒரு நாள் காலையில் அவளுக்கு ஒரு போன் கால் வந்தது...

    அன்னை சாரதாதேவி ஆசிரமத்தின் பாதுகாவலர் நந்தினி மேடமா...?

    ஆமாம்...

    வளர்மதி ஹாஸ்பிடல்ல இருந்து பேசறோம்... உடனே கிளம்பி வருகிறீங்களா...?

    இந்தக் கேள்வியில் நந்தினியின் தூக்கம் பறந்தது... அந்த அதிகாலையின் விடிந்தும் விடியாத கருக்கல் வேளையில்... அவள் அவசரமாக எழுந்து அமர்ந்தாள்...

    ஏன்...? எதுக்காக என்னை அங்கே வரச் சொல்கிறிங்க...?

    எங்களிடம் டெலிவரிக்காக அட்மிட் ஆகியிருக்கிற பேசண்ட் ஒருத்தங்க உங்க பெயரைச் சொல்லி... உங்களைப் பார்க்கனும்னு சொல்கிறாங்க... அவங்க... அவங்களோட கடைசி நிமிசங்களை எண்ணிக்கிட்டு இருக்காங்க... ஸோ... ப்ளீஸ் கம் பாஸ்ட்...

    இப்படியொரு வேண்டுதலுடன் அந்த விடியல் விடியுமென்று நந்தினி கொஞ்சம்கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை... அவள் அவசரமாக கிளம்பி அந்த மருத்துவமனைக்குச் சொன்றாள்... அவளுக்காக காத்திருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது...

    சரயு...??!!...

    அவளின் அதிர்ச்சி கலந்த அழைப்பில் கட்டிலில் கண்மூடிப் படுத்திருந்த சரயு வெகுப் பிரயத்தனப்பட்டுக் கண்களைத் திறந்தாள்... அவளருகில் இருந்த தொட்டிலில் அப்போதுதான் பிறந்த பெண்குழந்தை இருந்தது...

    அம்மா...!

    சரயுவின் நலிந்த குரலில் தெரிந்த பாசத்தின் அழைப்பில் நந்தினியின் பெறாத வயிறு துடித்தது... எத்தனையோ குழந்தைகளை கைகளில் ஏந்தி... அவர்களை வளர்த்து ஆளாக்கிய அந்தத்தாய்... அவள் வளர்த்த அந்தப் பெண்ணின் தீனமான கடைசிக் குரலில் பதறியவளாக அவளருகில் ஓடி அமர்ந்தாள்...

    என்னம்மா இது...? இது உன் குழந்தையா...?

    நந்தினியின் கண்கள் சரயுவின் கழுத்தை ஆராய்ந்தன... அதில் தெரிந்த தாலிச்சரட்டில் அவள் மனம் அமைதி கொண்டது... அவள் வளர்த்த குழந்தை நெறி முறை தவறி நடந்து விடவில்லை...

    உனக்குக் கல்யாணம் ஆனதை ஏன் என்னிடம் சொல்லலை...? உன் கணவர் எங்கேயிருக்கிறார்...? என்ன செய்கிறார்...?

    நந்தினியின் எந்தக் கேள்விக்கும் சரயு பதில் சொல்ல வில்லை... அவளுடைய தலையணையின் அடியிலிருந்த கனத்த காகித உறையை எடுத்து நந்தினியிடம் நீட்டினாள்... திகைப்புடன் அதை வாங்கிக் கொண்டாள் நந்தினி...

    இதில... எல்லா விவரமும் எழுதியிருக்கேன் படிச்சுப் பாருங்க...

    இதைச் சொல்வதற்குள் அவள் திக்கித் திணறி விட்டாள்... அவளுடைய நடுங்கிய கரம் நந்தினியின் கரத்தைப் பிடித்து இழுத்து... அவளருகில் இருந்த தொட்டிலில் படுத்திருந்த குழந்தையின் கரத்தின் மீது வைத்தது...

    இனி... இவ... உங்க பொறுப்பு...

    அவ்வளவுதான்... அவ்வளேதான்... அதைச் சொல்வதற்காககேவே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருந்ததைப் போல சரயுவின் தலை சாய்ந்து விட்டது... நந்தினியிடம் தான் பெற்ற குழந்தையை ஒப்படைத்து விட்டு மீளாத்துயிலில் ஆழ்ந்து விட்டாள் சரயு...

    நந்தினியின் விழிகளில் இருந்து கண்ணீர் தாரை தாரையாகப் பெருகி... சரயுவின் மீது மாலையாக விழுந்தது...

    அவள் சரயுவின் உடலைப் பெற்றுக் கொண்டாள்... இறுதிக்காரியங்களை முறைப்படி அவளும்... ஆசிரம நிர்வாகத்தினரும் செய்தார்கள்... சரயு பெற்ற குழந்தை ஆசிரமக் குழந்தைகளுடன் ஐக்கியமானது... அந்தக் குழந்தைக்கு ‘சாரதா...’ என்று நந்தினிதான் பெயர் சூட்டினாள்...

    சாரதா அருமையான குழந்தையாக இருந்தாள்... அவளைப் பொருத்தவரை நந்தினிதான் அவளுக்குத் தாய்... இருந்த போதிலும்... ஓடும் நதியை ஒருவர் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது என்ற தாத்பர்யத்தை உணர்ந்தவளாக அவள் பாசத்தைக் கண்களில்

    பிரதிபலித்தபடி நந்தினியிடம் எந்த விதமான பிரத்யேகச் சலுகைகளையும்... பாசத்தையும் எதிர்பார்க்காமல் தள்ளியே நிற்பாள்... அவளின் அந்த அறிவில் நந்தினியின் மனம் நெகிழ்ந்து விடும்...

    மலர்கின்ற மலர்களுக்கு மணம் பரப்பச் சொன்னது யார்...? புலர்கின்ற சூரியனில் வெளிச்சத்தினை வைத்து யார்...?

    இவையெல்லாம் இயற்கையான இறைவனின் படைப்பல்லவா...?

    அதைப் போலதான் சாரதாவிடம் தென்பட்ட அனைத்து நல்லியல்புகளும் அவளிடம் இயற்கையாக பிறந்து வந்திருந்தன... நந்தினியின் கண்காணிப்பில் அவை மெருகேறின...

    அம்மா... என்று அழைத்தவளுக்கு அன்னை சரஸ்வதியின் திருவுருவப் படத்தைக் காட்டி...

    அவள்தான் உனக்கு அம்மா... என்று சொல்லிக் கொடுத்தாள் நந்தினி...

    சாரதா அப்படித்தான் வளர்ந்தாள்... கலைமகளின் மகளாக... அறிவார்ந்த குழந்தையாக அவள் இருந்தாள்... சில சமயங்களில் அவளைப் பார்க்கும் நந்தினியின் விழிகளில் தெரியும் ஏதோ ஒன்றில் அவள் மனம் குழம்பும்.

    அம்மா...?

    கேள்வியாக அவள் வினவும் போதே அந்த ஏதோ ஒன்று விழிகளில் இருந்து மறைய... இயல்பான புன்னகையுடன் நடந்து விடுவாள் நந்தினி...

    தான் யார்...? தன்னைப் பெற்றவர்கள் யார்...? எப்படி அந்த அநாதை ஆசிரமத்திற்குள் அவள் வந்தாள்...? என்பதைப் போன்ற எந்தக் கேள்விகளையும் சாரதா கேட்டதில்லை...

    நீ சாரதா...! உன் கடமை இது... என்று நந்தினி சொன்ன அறிமுகத்தில் அவள் வளர்ந்தாள்... அவள் கைகாட்டிய திசையில் அவள் நடந்தாள்... எந்தத் தருணத்திலும் அவள் விழிகள் நந்தினியின் விழி சொன்ன கட்டளையை மீறி நடந்தது இல்லை...

    "வெள்ளைக் கமலத்திலே – அவள்

    வீற்றிருப்பாள்... புகழ் ஏற்றிப்பாள்...

    கொள்ளைக் கனியிசைதான் – கொட்டும்

    நல்யாழினைக் கொண்டிருப்பாள்..."

    கண்மூடிப் பாடுகையில்... அந்த அன்னை சரஸ்வதி பெற்ற அருமை மகளாகத்தான் நந்தினியின் கண்களுக்குச் சாரதா தெரிவாள்...

    அவளது பள்ளிப் பருவத்திலும் சரி... கல்லூரி பருவத்திலும் சரி... எல்லாப் பாடங்களிலும் முதல் மதிப்பெண்களைப் பெற்று வகுப்பின் முதன்மை மாணவியாக அவள்தான் திகழ்ந்தாள்... ஆசிரமத்திற்கு சிரமம் வைக்காமல் அவள் படிக்கத் தேவையான உதவித் தொகையை அவளது கல்வி அவளுக்குப் பெற்றுத் தந்தது... அப்படித்தான் அவளும் நினைத்தாள்...

    பந்தன வாசல் ஜமின்தாராம்... உன் படிப்புக்கான செலவை அவர்தான் ஏற்றுக்கிட்டு இருக்காராம்...

    அவள் கூடப் படித்த மாணவிகள் சொன்னபோது அதைப் பெரிதாக அவள் எடுத்துக் கொள்ளவில்லை... அந்த ஆசிரமத்தில் அது வழக்கமான நிகழ்வுதான்... நன்றாகப் படிக்கும் குழந்தைகளைப் படிக்க வைக்கும் பொறுப்பை பணக்காரர்கள் ஏற்றுக் கொள்ளுவார்கள்...

    அப்படித்தான் சாரதாவும் அதை ஏற்றுக் கொண்டாள்... அந்த உதவித் தொகை அவளுடைய மருத்துவ கல்வி வரைக்கும் தொடர்ந்த போதுதான் அந்த ஜமீன்தாரரின் முகவரியை நந்தினியிடம் அவள் கேட்டாள்...

    உனக்கெதுக்கு அவரோட அட்ரஸ்...? நந்தினி முகம் சுளித்தாள்...

    அந்த முகம் சுளித்தலில் சாரதாவின் முகம் சுணங்கி விட்டது... அதுவரை அவளிடம் நந்தினி முகம் சுளித்துப் பேசியதேயில்லை... அன்று அப்படிப்பேசும்படி அவள் நடந்து கொண்டாளே...

    இல்லை அம்மா... தவறு செய்து விட்ட குற்ற உணர்வுடன் அவள் திக்கித் திணறினாள்...

    இத்தனை நாளாய் அவர் படிக்க வைத்தது பெரிய விசயமில்லை அம்மா... இப்ப படிக்கப் போகிறது பெரிய படிப்பு... இதையும் அவர் படிக்க வைக்கிறார்ன்னா... அதுக்கான நன்றியை அவருக்குச் சொல்ல வேண்டாமா...?

    நன்றி...!

    நந்தினியின் இதழ்கள் இகழ்ச்சியாக ஏன் வளைந்து மடிந்தன என்ற மர்மம் சாரதாவுக்கு புலப்படவே இல்லை... அவளறிந்த அவளுடைய அம்மா... யாரையும் எப்போதும்... இகழ்ச்சியாக பேச மாட்டாள்...

    இப்போது மட்டும் அவள் இதழ்கள் எதற்காக இகழ்ச்சியாக வளைந்து மடிகின்றன...?

    சாரதாவுக்குப் புரியவில்லை... அவளுக்குப் புரிந்தது ஒன்றே ஒன்றுதான்... அது அந்த நன்றி சொல்லுதலில் நந்தினிக்கு விருப்பமில்லை என்பதுதான்...

    அதை அடுத்து வந்த அவளது வார்த்தைகள் உறுதி செய்தன...

    யார்... யார்... எதைச் செய்யனும்னு விதிச்சிருக்கோ... அதை அவங்க செய்கிறாங்க... இதில நீ அவருக்குப் பெரிதாக நன்றி சொல்லனும்கிற அவசியம் எதுவுமில்லை... உண்மையில் அவர்தான் உனக்கு நன்றி சொல்லனும்...

    எதுக்கும்மா...?

    தன் போக்கில் பேசிக் கொண்டிருந்த நந்தினி சாரதாவின் இந்தக் கேள்வியில் தன்னுணர்வு வரப் பெற்றவளாக அவளைப் பார்த்தாள்...

    வேற எதுக்கு...? செய்து விட்ட பாவங்களுக்கு பிராயசித்தம் பண்ண இப்படிப்பட்ட புண்ணியங்களைச் செய்கிறதுக்கான வாய்ப்பை நாம அவருக்குக் கொடுத் திருக்கோமில்லையா... அதுக்குத்தான்...

    அதற்குமேல் எதையும் நந்தினி பேசவில்லை... சாரதாவும் முகவரியைக் கேட்காமல் திரும்பி வந்து விட்டாள்... ஏதோ ஒரு காரணத்தினால் நந்தினிக்கு பந்தனவாசல் ஜமின்தாரரைப் பிடிக்காமல் போயிருக்க வேண்டுமென்று அவளது அறிவு அவளுக்குச் சொன்னது... அன்னைக்குப் பிடிக்காத அந்த பணக்கார திமிர் பிடித்த ஜமீன்தாரரின் தயவில்தான் படிக்க வேண்டுமா என்ற கோபம் அவளுக்குள் எழுந்தாலும்... அவள் படிப்பின் சுமையை ஆசிரமத்தின் மீது சுமத்தி விடக்கூடாது என்ற பொறுப்புணர்வினால் அதை அடக்கிக் கொண்டாள்...

    ‘இருக்கட்டும்... என் படிப்பு முடிந்து நான் சம்பாதிக்க ஆரம்பிக்கும் போது... அந்த ஆள் எனக்குச் செலவளித்த பணத்தை வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுத்து விட்டு அம்மாவிடம் அதைச் சொல்ல வேண்டும்...’

    சாரதா மனதிற்குள் தீர்மானித்திருந்தாள்... அந்த நொடியில் நந்தினியின் முகத்தில் தோன்றும் மலர்ச்சியைக் காண வேண்டுமென்ற ஆவல் அவளுக்குள் துளிர்த்தது...

    அந்த நிகழ்விற்குப் பின்னால் அந்த ஜமீன்தாரரைப் பற்றியும் அவர் செய்து கொண்டிருக்கும் உதவிகளைப் பற்றியும்... மறந்தும் சாரதா பேசியதில்லை... மற்றவர்கள் பேசும் போதும் மௌனமாக நகர்ந்து விடுவாள்...

    அவளது படிப்பு முடிந்து... பயிற்சிக் காலமும் ஆரம்பித்து விட்டது... அந்த மாதத்தோடு பயிற்சி முடிய இருந்த நிலையில் அந்த ஆசிரமத்தின் விதிகளின்படி அதை விட்டுப் பிரிய வேண்டுமே என்ற மனக்கவலை அவளுக்குள் எழுந்தது...

    உனக்கு வேலை காத்திருக்கு சாரு... அடுத்த மாதம் நீ அதில் சேரும்படியா இருக்கும்... எங்களுக்குத் தெரிந்த லேடிஸ் ஹாஸ்டலில் பேசிவைத்துட்டேன்...

    நந்தினி அவளை அழைத்துச் சொன்னபோது சாரதா பொங்கி அழுது விட்டாள்... எதற்கும் அசையாத நந்தினியின் மனமும் அப்போது அசைந்து விட்டது...

    வா... மகளே... அவள் இருகைகளையும் விரித்தாள்.

    அம்மா... சாரதா அவள் கைகளுக்குள் பாய்ந்தாள்...

    புயல் வேகத்தில் அவள் கைகளுக்குள் அடைக் கலமாகி விட்ட... அவள் வளர்த்த அந்தக் குழந்தையின் முடி கோதியபோது நந்தினியின் தாய் மனம் துடித்தது...

    பிரிவு என்பது உடலுக்குத்தான் மகளே... மனதுக்கு இல்லை...

    ஆனாலும் அம்மா... உடலுக்கும் ஏன் அந்தப் பிரிவைக் கொடுக்க வேண்டும்...?

    வேறு வழியில்லை மகளே... இது ஆசிரமம்... இங்கே சில நியதிகள் இருக்கின்றன... தாய்பறவையின் சிறகுக் கடியில் வளரும் குஞ்சுப்பறவைகள் சிறகு முளைத்ததும் சிறகை விரித்துப் பறந்து பிரிந்துதான் ஆக வேண்டும்... அடுத்த குஞ்சுகளுக்கு அங்கே இடம் வேண்டுமல்லவா...? இது சிறிய ஆசிரமம் மகளே... தாங்கும் சக்தி குறைவானது... தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும் சக்தி படைத்தவர்கள் வெளியேறினால்தான் அடுத்த குழந்தைகளுக்கு நாங்கள் ஆதரவு கொடுக்க முடியும்...

    அந்த சக்தி படைத்தவர்கள் தங்களின் சம்பாத்தியத்தை... ஆசிரமத்திற்குக் கொடுத்து விட்டால் ஆசிரமத்தின் தாங்கும் சக்தி அதிகரித்து விடுமே அம்மா...

    அது சுயநலமாகும் மகளே...! நாங்கள் நன்கொடை பெறுவது வசதி படைத்த பணக்காரர்களிடம்தான்... அதில் வளர்ந்த குழந்தைகள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொண்டாலே போதும்... வேறு எதையும் எங்கள் உள்ளம் எதிர்பார்க்காது... இது நீ வளர்ந்த ஆசிரமம்... ஒரு நாள் நீயும் பெரிய ஆளாக வருவாய்... அப்போது இந்த ஆசிரமத்திற்கு உன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்... சந்தோசமாக நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம்... இப்போதைக்கு நீ உன் காலில் நின்று உனக்கான வாழ்வை வாழ்ந்து காட்டு... இதுவே நான் உன்னிடம் எதிர்பார்க்கும் உதவி... நந்தினி சொல்லி விட்டாள்...

    2

    சிறகுகள் ஏன் முளைத்தன என்று பறவை வருத்தப் படுமா...?

    சாரதா வருத்தப் பட்டாள்... அவள் காலில் நிற்பதற்கான தகுதி ஏன் அவளுக்கு வந்தது என்று வருத்தப் பட்டாள்... அன்று வரை அந்த ஆசிரமத்தின் ஒரு அங்கமாக... அங்கிருந்தோர்களை உறவினர்களாகக் கருதி வாழ்ந்து வந்த வாழ்க்கை மாறிப் போவதில் வருத்தப் பட்டாள்... ‘அம்மா’ என்று ஓடிவந்தால்... அருள் பாலிக்கும் முகத்துடன் விழிகளாலேயே அவளை அரவணைத்துக் கொள்ளும் நந்தினியை விட்டுப் பிரிய வேண்டுமே என்று அவள் வருத்தப் பட்டாள்...

    நந்தினி அந்த வருத்தத்தைப் போக்கும் வகையில் இதமான வார்த்தைகளை எடுத்துக் கூறி மனதளவில் ஆசிரமத்தை விட்டுப் பிரிவதற்காக சாரதாவை தயார் செய்து விட்டாள்...

    ‘ஆச்சு... இன்னும் இரண்டு நாளில் ஆசிரமத்தை விட்டுக் கிளம்பனும்...’

    அன்றைய பிரார்த்தனைக்குக் கிளம்பும் போது இந்த எண்ணமே ஏக்கமாக சாரதாவின் மனதில் வியாபித்திருந்தது...

    அவளுடைய பயிற்சிக் காலம் முடிவடைந்து விட்டது... தஞ்சையின் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் அவளுக்கு வேலைகிடைத்திருந்தது... அங்கே கிளம்புவதற்கான ஆயத்தங்களில் அவள் இருந்தாள்... அந்த நினைவுகள் தந்த சுமையுடன் பிரார்த்தனையில் கலந்து கொண்டு கண்மூடி பாடி முடித்தவள்... கண் திறந்த போது... அவளையே பார்த்துக் கொண்டிருந்த நந்தினியின் விழிகளில் சிறுவயது முதல் அவள் உணரும் அந்த ‘ஏதோ’ ஒன்று... இருந்தது.

    ‘என்னவா இருக்கும்...?’

    யோசனையுடன் சரஸ்வதி தேவியை வணங்கிவிட்டு பிரார்த்தனை மண்டபத்தை விட்டு வெளியில் வந்தாள் சாரதா...

    சாரு...

    அவளுக்குப் பின்னால் வந்த நந்தினியின் அழைப்பில் திரும்பிப் பார்த்தவள்...

    அம்மா...? என்று அவளருகில் விரைந்து சென்றாள்.

    ஆபிஸ் ரூமுக்கு வாம்மா... கட்டளையாய் ஒலித்தது நந்தினியின் குரல்...

    அந்தக் குரலில் தொனித்தது கோபமா... பாசமா... வருத்தமா... என்ற எதுவும் புரியாமல் தடுமாறி அவள் முகம் பார்த்தாள் சாரதா...

    அம்மா... நான் லேடிஸ் ஹாஸ்டலுக்குக் கிளம்ப ரெடியாத்தான் இருக்கேன்... ஆனா அம்மா... அதுக்கு இன்னமும் இரண்டு நாள்கள் இருக்கே... அதுவரை இங்கேயே உங்க கூடவே இருக்கேனே...

    சாரதாவின் கெஞ்சலில் நந்தினியின் கண்கள் பனித்து விட்டன...

    என் மகளே...

    சாரதாவின் முடிகோதி அவள் உச்சி முகர்ந்தாள்... அதுதான் சாக்கென்று அவள் தோளில் தலைசாய்த்து பாசம் கொண்டாடினாள் சாரதா...

    அதற்காக உன்னைக் கூப்பிடலை சாரு... வேற ஒன்னு இருக்கு...

    என்னம்மா...?

    உன்னைப் பார்க்க இரண்டு பேர் வந்திருக்காங்க...

    என்னைப் பார்க்கவா...?

    யாராக இருக்கும் என்ற குழப்பத்துடன் நந்தினியைப் பின்பற்றிச் சென்றாள் சாரதா... அங்கே நந்தினியின் அலுவலக அறையில் அவளுக்கு முதுகு காட்டி ஒரு ஆணும்... பெண்ணும் அமர்ந்திருந்தார்கள்... பின்புறத் தோற்றத்தில் தென்பட்ட லேசான நரையோடிய அந்தப் பெண்மணியின் கொண்டை அவளின் நடுத்தர வயதைத் தாண்டிக் கொண்டிருக்கும் வயதை உணர்த்த... ஆஜானு பாகுவான அகன்ற தோள்களுடன்... உயரமாக அமர்ந்திருந்த அந்த வாலிபனின் அடர்ந்த கருமையான முடி அவன் இளம்வயதினன் என்பதைச் சொல்லாமல் சொல்லியது...

    ‘யார் இவங்க...?’

    அவளைப் பார்க்கவென்று வந்திருக்கும் அந்த ஆணும்... பெண்ணும் யாராக இருக்கக் கூடும் என்ற எண்ணம் மனதை அரிக்க நந்தினியைத் தொடர்ந்து அந்த அறைக்குள் நுழைந்தாள் சாரதா...

    இப்படி வா சாரு...

    சாரதாவை அருகே அமரவைத்துக் கொண்ட நந்தினி அவர்கள் இருவரையும் நிமிர்ந்து பார்த்தாள்... இப்போது அவர்களுக்கு எதிராக அமர்ந்து விட்ட சாரதாவினால் அவர்கள் முகத்தைப் பார்க்கமுடிந்தது...

    வைரங்கள் ஒளிர்ந்த அந்தப் பெண்ணின் முகத்தில் அசாத்தியமான ஒரு அழகு இருந்தது... மேல் தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவள் என்பதை அவள் அணிந்திருந்த நகைகளும்... பட்டுப் புடவையும் உணர்த்தின... சோகம் ததும்பிய கண்களுடன் சாரதாவை அவள் பார்த்த பார்வையில் அடிக்கடி நந்தியினியிடம் சாரதா உணரும் அந்த ‘ஏதோ...’ ஒன்று இருந்தது...

    அவளருகில் அமர்ந்திருந்த வாலிபனிடம் ராஜகம்பீரம் தெரிந்தது... அப்படியொரு ஆண்மை ததும்பும் கம்பீரத்துடன் கூடிய ஆண்மகனை அதற்கு முன்னால் சாரதா பார்த்ததே இல்லையென்று சொல்லும் வகையில் அவன் தோற்றம் இருந்தது... உயரமாக இருந்தான்... செதுக்கி வைத்த சிலையைப் போன்ற முக வடிவுடன் இருந்தான்... அடர்ந்த மீசையின் அடியில் தெரிந்த உதடுகளின் இறுக்கம் அவன் பிடிவாதக்காரன் என்பதை அறிவித்தது... அவன் கண்களில் தெரிந்த தீட்சண்யம் அவன் அறிவார்ந்தவன் என்பதைச் சொல்லாமல் சொல்லியது... அந்த ஆசிரமத்திலும் கால்மேல் கால் போட்டுத் தோரணையாக அமர்ந்திருந் தவனின் தோற்றம் அவனது பணத்திமிரை அறிவித்தது... அவனுடைய விழிகள் பிரதிபலித்த கடுமை அவன் முரட்டுத்தனத்தை முரசு கொட்டியது...

    இருவரிடமும் தெரிந்த முகச்சாயலின் ஒற்றுமையில் அவர்கள் இருவரும் யாராக இருக்கக் கூடும் என்று குழம்பிப் போனாள் சாரதா... அவர்களிடம் தெரிந்த வயது வித்தியாசம் நிச்சயமாக அவர்கள் இருவரும் தாய்... மகனாகவோ... இல்லை... அக்கா... தம்பியாகவோ இருக்க முடியாது என்பதை அறிவுறுத்த... அவர்களின் உறவு முறையைப் பற்றிய யோசனையால் மண்டை காய்ந்து விடக்கூடும் என்று அந்த யோசனையை கை விட்டு விட்டாள் சாரதா...

    அவர்கள் யாராகவோ இருந்து விட்டுப் போகட்டும்... அதனால் சாரதாவிற்கு ஆகப் போவது ஏதுமில்லையெனும் போது எதற்காக அவர்களின் உறவு முறையைப் பற்றிய ஆராய்ச்சியில் அவள் ஈடுபடவேண்டும்...?

    அவளுக்கு இருக்கிறது ஆயிரம் கவலைகள்... அடுத்த இரண்டாவது நாளில் அவள் அந்த ஆசிரமத்தை விட்டுப் பிரிய வேண்டும்... அவளுடன் உற்றார் உறவினராகப் பழகிய ஆசிரம பிரஜைகளை விட்டுப் பிரிய வேண்டும்... நந்தினி அம்மாவை விட்டுப் பிரிய வேண்டும்...

    இத்தனை கவலைகள் அவளுடன் இருக்கும் போது... எதிரே இருப்பவர்களைப் பற்றிய வெட்டிக் கவலைகள் அவளுக்கு எதற்கு...?

    அவள் எதற்காக நந்தினி அவளை

    Enjoying the preview?
    Page 1 of 1