Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thendralai Thedi
Thendralai Thedi
Thendralai Thedi
Ebook261 pages1 hour

Thendralai Thedi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆகாஷ் வர்ஷாவை காதலித்து வந்தான். ஒரு கட்டத்தில், விவேக்கிற்கும், வர்ஷாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தேறியது. ஆகாஷ், வர்ஷாவை காதலித்த விஷயம் அறிந்த விவேக் என்ன முடிவெடுத்தான்? தென்றலே தேடி அலைந்த ஆகாஷின் நிலை என்ன? சுவாரசியத்துடன் படித்து அறிவோம்.

Languageதமிழ்
Release dateSep 2, 2023
ISBN6580133810110
Thendralai Thedi

Read more from Muthulakshmi Raghavan

Related to Thendralai Thedi

Related ebooks

Reviews for Thendralai Thedi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thendralai Thedi - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தென்றலைத் தேடி

    Thendralai Thedi

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    1

    அறைக் கதவு மெலிதாகத் தட்டப்பட்டது... தன் முன்னிருந்த லேப் - டாப்பிலேயே கவனமாக இருந்த ஆகாஷ் முகம் நிமிர்த்தாமல்,

    யெஸ்... கமின்... என்றான்...

    யுவர் சிக்னேச்சர் ப்ளீஸ் சார்... என்றபடி அவன் முன் நீட்டப்பட்ட ஃபைலைப் பிடித்திருந்த சிவந்த வளைக் கரத்தைப் பார்த்தவுடன், சிலிர்த்துப் போனவனாய் அவள் முகம் பார்த்தான்...

    ‘வர்ஷா...!’ அவன் மனதில் தென்றலடித்தது... எதிரில் நின்று கொண்டிருந்தவளும் தென்றலைப் போல்தான் இருந்தாள்... ஓரளவு உயரமாய்... ஒல்லியாய்... கொடி போன்ற உடல்வாகுடன்... வட்ட வடிவமான முகத்துடன் இருந்தாள்... ஆர்வமாய் அவள் முகத்தில் படிந்த பார்வையைக் கண்டு கொள்ளாமல் சலனமற்ற முகபாவத்துடன் நின்றிருந்தாள்... அவனது ஆவல் அவளை எந்த விதத்திலும் பாதித்ததாகத் தெரியவில்லை...

    வர்ஷா... வந்து விட்டீங்களா...? அவன் பரபரப்பாய் கேட்டான்...

    ஏன் சார் இப்படிக் கேட்கறீங்க...? அவள் புரியாதவள் போல வினவினாள்...

    இரண்டு நாட்களாய் லீவ் போட்டிருந்தீங்களே...

    எனக்குப் பதில் வயலெட் இந்த வேலையைப் பார்த்திருப்பாங்களே...

    அவளது பதிலின் அர்த்தம் அவனுக்குப் புரிந்தது...

    ‘நான் வந்தாலும்... வராவிட்டாலும்... அலுவலக வேலை நடக்கிறதுதானே... அப்புறம் ஏன் எனது வரவைப் பற்றி கேட்கிறாய்...’ என்று சொல்லாமல் சொல்லுகிறாள்...

    இவள் இப்படித்தான் பேசுவாள் என்பது அவனுக்கு அத்துப்படி... ஒரு நாளல்ல... இரண்டு நாளல்ல... மூன்று வருடங்களாய் அவளைக் காதலிக்கிறான்... இவனது மனதை மறைமுகமாய் பலமுறை அவளிடம் சொல்லியிருக் கிறான்... அவள் கண்டு கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை... அவளைக் கண்டால் அவனது உடலில் புது ரத்தம் பாய அவளைப் பருகி விடுவது போல் பார்ப்பான்... அவளோ பதிலுக்குக் கல்லையும்... மண்ணையும் பார்ப்பது போல் இவனையும் உணர்ச்சியில்லாமல் ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போய் விடுவாள்...

    மூன்று வருடங்களாக இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது... ஆகாஷின் அனைத்துப் பிரயத்தனங்களுக்கும் வர்ஷாவிடமிருந்து

    எந்த எதிரொலியும் கிடைக்கவில்லை... அவன் நேரடியாகப் பேச முயன்றால் அவள் பிடி கொடுக்காமல் நழுவினாள்... தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல் ஆகாஷ் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டே யிருக்கிறான்...

    வர்ஷா அலட்சியப்படுத்தும் அளவிற்கு ஆகாஷ் ஒன்றும் சாமானியன் அல்ல... உயரமாய் கோதுமை நிறத்துடன் கம்பீரமாகத் தோற்றமளிப்பவன்... எம்பிஏ முடித்து அந்தக் கம்பெனியில் பெர்ஸனல் மேனேஜர் ஆகப் பதவி வகிப்பவன்... சென்னை மாநகரில் சொந்த வீடும் காரும் உள்ளவன்... பெற்றோருக்கு ஒரே பிள்ளை... அவனது கடைக்கண் பார்வைக்காக பலர் தவமிருக்க... அவனோ வர்ஷாவின் கடைக்கண் பார்வைக்காக தவமிருந்தான்...

    காதலில் உருகும் ஆகாஷைத் தெனாவெட்டாய் பார்த்துவிட்டு நகரும் வர்ஷா... ஆகாஷை அலட்சியமாய் பார்க்கும் அளவிற்கு திமிர் பிடித்த பெண் அல்ல... பழகுவதற்கு இனிய நற்குணங்கள் கொண்ட பெண்... ஆகாஷ் ஒருவனைத் தவிர அனைவரோடும் நன்றாகவே பழகினாள்... ஆகாஷை மட்டுமே அலட்சியப் பார்வை பார்த்தாள்... பொருளாதார ரீதியில் பார்த்தால் வர்ஷா நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள்... வாடகை வீட்டில் அம்மாவுடன் குடியிருப்பவள்... அந்தக் கம்பெனியில் செக்ரட்டரியாய் வேலை பார்ப்பவள்... அவளது நிலைமைக்கு ஆகாஷ் எட்டாக் கனி... அவன் கையருகே வந்தான்... அவன் அவளது காதலுக்காக ஏங்கி நின்ற போதும் அவள் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை...

    சைன் ப்ளீஸ் சார்... அவளது குரல் அவனது சிந்தனையைக் கலைத்தது...

    ‘வேலையிலேயே கவனமாக இரு...’ பெருமூச்சுடன் கையெழுத்தைப் போட்டவன் அவளிடம் பைலை நீட்டினான்...

    பைலை வாங்கிக் கொண்டவள் பிஸ்கெட் கலர் பிரிண்டட் சேலை உடுத்தியிருந்தாள்... நீண்ட பின்னலாட போகத் திரும்பியவளை,

    வர்ஷா... ஒன்மினிட்... என்ற ஆகாஷின் குரல் நிறத்தியது...

    யெஸ் சார்... அவள் நின்று திரும்பினாள்...

    எதற்காக லீவ் போட்டிருந்தீங்க...?

    பெர்சனல் சார்...

    என்னிடம் கூட சொல்லக் கூடாத பெர்சனலா...?

    மூன்றாம் மனிதரிடம் சொல்லக் கூடாத பெர்ஸனல் தான் சார்... ஆகாஷின் மனம் காயப்பட்டது...

    நான் மூன்றாம் மனிதனா...?

    நீங்கள் ஆபிஸில் எனது சுப்பீரியர் ஆபிஸர் சார்...

    ‘சொந்த வாழ்க்கையில் நீ யாருமில்லை என்கிறாள்...’ ஆகாஷ் தாடை இறுக மௌனமானான்...

    நான் போகலாமா சார்...

    அவனது தலை அசைவை உத்தரவாய் ஏற்றுக் கொண்டு வெளியேறியவளைப் பார்க்கையில் அவனது மனம் பொங்கியது... ஏன் இவள் அவன் மனதைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாள்... தாய் என்னதான் கடிந்து கொண்டாலும் மீண்டும் மீண்டும் அவளையே தேடி வரும் குழந்தையைப் போல்... வர்ஷா என்னதான் முகத்தில் அடித்தாற்போல் பதில் கூறினாலும் ஆகாஷின் மனம் அவளையே தேடி அவள் பின்னால் ஓடியது...

    ‘தென்றல் வந்து என்னைத் தொடும்...

    ஆஹா சத்தமின்றி முத்தமிடும்...’

    எப்போதோ கேட்ட பாடல் வரிகள் அவனது இதயத்தில் ஒலித்தது... வர்ஷாவைக் காணும் போதெல்லாம் அவன் மனதில் தென்றலடிக்கும்... தென்றல் அவனது இதயத்தைத் தொடும் உணர்வை அவன் பெறும் போதெல்லாம் இந்தப் பாடல் வரிகள் அவன் மனதில் ஒலிக்கும்...

    தென்றலாய் வந்து அவன் இதயத்தில் புகுந்தவள்... நிஜத்தில் கடும் புயல் போல அவனைப் பாதித்தாள்... நெருப்பாகச் சுட்டாள்... அவள் ஏற்படுத்திய காதலின் வலிக்கு அவளிடமே மருந்திருக்கும்போது நோய் தீர வழியேது...? அவன் பித்தனைப் போல் தலையைப் பிடித்துக் கொண்டான்...

    என்னடா... தலையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிற...? அறைக் கதவைத் திறந்து கொண்டு வந்த மணியன் வினவினான்...

    ச்சு... தலை வலிக்குதுடா...

    இன்றைக்கும் தலைவலியா...? இரண்டு நாட்களாக அவளைக் காணோம்ன்னு தலையைப் பிடித்துக் கொண்டு இருந்தாய்... இன்று தான் அவள் வந்து விட்டாளே... இன்னுமா உன் தலைவலி நிற்க வில்லை...?

    ச்சு... அவளால் தான் தலைவலிடா...

    அதை நீ தெரிந்து கொண்டால் சரி...

    என்ன சொல்கிற...?

    நேற்று உன் அப்பாவை பீச் ரோட்டில் பார்த்தேன்... ஈவினிங் வாக்கிங் போய் கொண்டிருந்தார்... உன் கல்யாணத்தைப் பற்றிப் பேசினார்... ரொம்பவும் வருத்தப் பட்டார்... ‘ஒற்றைப் பிள்ளை... காலா காலத்தில் கல்யாணம் பண்ணிப் பார்க்க எங்களுக்கு ஆசை இருக்காதா...’ ன்னு கேட்கிறார்... அவர் கேட்பதும் நியாயம்தானே...

    ச்சு... அவருக்கு வேறு வேலை இல்லை...

    எல்லாவற்றிற்கும் ‘ச்சு’ கொட்டிக் கொண்டிருந்தால் எப்படிடா... அப்படியென்ன இந்தப் பெண் பெரிய ரதியா...?

    எனக்கு அவள்தான் ரதி...

    சும்மா பிதற்றாதே ஆகாஷ்... உன் அருமை புரியாத வளுக்காக உருகிக் கொண்டிருக்காதே... நான் இவ்வளவு தான் சொல்வேன்... அவளை நீ மறந்து விடுவதுதான் உன் எதிர்காலத்திற்கு நல்லது...

    என் எதிர்காலமே அவள்தான்...

    போடா முட்டாள்... எந்த வகையிலும் அவள் உனக்கு ஏற்றவள் அல்ல... காதலுக்கு கண் இல்லை... புத்தியுமா இல்லாமல் போய் விட்டது...? உன் அழகிற்கும்... படிப்பிற்கும்... வசதிக்கும் நான்... நீயென்று போட்டி போட்டுக் கொண்டு கியூவில் வந்து பெண்கள் நிற்பார்கள்...

    அதில் ஏண்டா இவள் நிற்க மாட்டேன் என்கிறாள்...?

    நீ அந்தக் கவலையிலேயே இரு... நீ திருந்தவே மாட்டாயாடா...?

    காதலிப்பது தவறா...? என்னை ஏன் திருந்தச் சொல்கிற...?

    நீ திருந்தாத ஜென்மமாகவே இரு... நீ தேறாத கேஸ்டா...

    அவள் இன்றைக்கு பிஸ்கெட் கலரில் பிரிண்டட் சேலை கட்டியிருக்கிறாள் மணி... தேவதை போல் இருக்கிறாள்டா...

    நான் தேவதையையெல்லாம் நேரில் பார்த்தது இல்லை...

    அப்போ வர்ஷாவைப் பார்...

    அது எதற்கு எனக்கு வேண்டாத வேலை...? நான் வீட்டிற்குப்போய் என் பெண்டாட்டியைப் பார்த்துக் கொள்கிறேன்...

    ம்ம்... கல்யாணம் முடிந்துவிட்ட பெருமையை என்னிடம் காட்டுகிற...

    தெரிந்தால் சரி... சொல்ல மறந்து விட்டேன்... உன் அப்பா இதையும் சொல்லிப் புலம்பினார்...

    என்னன்னு புலம்பினார்...?

    உனக்கும் கல்யாணமாகி ஒரு குழந்தைக்கும் தகப்பன் ஆகி விட்டாய்... என் மகன் இன்னும் தனி மரமாய் நிற்கிறானேன்னு புலம்பினார்.

    என்னை மரமாக்குவதில் அவருக்கு ஒரு சந்தோசம்...

    அவரைப் புலம்ப வைப்பதில் உனக்கு சந்தோசம்...

    மணியன் எழுந்து சென்று விட்டான்... அவன் சொல்வது உண்மை தானே என்று ஆகாஷின் மனம் வினவியது...

    உறவினர் வீட்டுத் திருமணங்களுக்குப் போய் வந்த பின்னால் ஆகாஷின் அம்மா ராஜேஸ்வரி சொல்லிச் சொல்லிப் புலம்புவாள்...

    கல்யாண வீட்டில் கேட்காத ஆள் பாக்கியில்லை... உன் மகனுக்கு எப்போது கல்யாணம்னு... பெண்ணைப் பெற்றவங்க என்னையே சுற்றிச் சுற்றி வருகிறாங்க...

    அது ஏன்மா... உங்களையே சுற்றி வருகிறாங்க... கோவிலில் உள்ள தெய்வத்தைச் சுற்றினாலாவது புண்ணியம் கிடைக்கும்...

    பிள்ளையைப் பெற்றவங்களைச் சுற்றினால் மாப்பிள்ளை கிடைக்குமே... ஏண்டா ஆகாஷ்... எனக்குக் கை காலெல்லாம் குடையுது... தலையெல்லாம் நோவுது...

    டாக்டரிடம் போகலாமா அம்மா...

    இவன் ஒருத்தன்... மண்ணு மாதிரி பேசிக் கொண்டு... என்னால் எந்த வேலையையும் செய்ய முடியலைடா...

    வேலைக்கு ஆள் இருக்கிறாங்களே அம்மா...

    ஏண்டா இப்படிக் குதர்க்கமாவே பேசுகிற...? ஒரு கல்யாணத்தைப் பண்ணிக் கொண்டு எனக்கு நிம்மதியைக் கொடுக்கக் கூடாதா...?

    ஆகாஷ் மௌனிப்பான்... அவனது தந்தை பார்த்த சாரதியின் அணுகுமுறையே வேறு...

    ஆகாஷ்... வாக்கிங் போகலாமா...

    ஓகேப்பா...

    இருவரும் கடலோரச் சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது மெதுவாக பேச்சை ஆரம்பிப்பார்...

    ஆகாஷ்... எனக்குப் படிக்கிற காலத்தில் காதலித்துக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும்ங்கிற ஆசை இருந்தது...

    இன்ட்ரெஸ்டிங்... அப்புறம்...

    ஏனோ... எனக்குப் பிடித்ததுபோல் ஒரு பெண்ணைக் கூட என்னால் சந்திக்க முடியவில்லை...

    அப்செட் ஆகிட்டிங்களா...?

    அதெல்லாம் இல்லை... வீட்டில் பெண் பார்க்க அழைத்துப் போனாங்க... போய் பார்த்தால்... நான் எதிர் பார்த்த அத்தனை அம்சங்களுடன் உன் அம்மா வந்து அமர்ந்தாள்... என் கண்களையே என்னால் நம்ப முடிய வில்லை... எப்படிடா... நாம் கனவில் நினைத்த காதலியே எதிரில் வந்து உட்காருகிறான்னு ஆச்சரியப்பட்டுப் போனேன்...

    தகப்பனார் எங்கே வருகிறார் என்று ஆகாஷிற்கு புரிந்து விடும்... பேசாமல் கடலைப் பார்த்துக் கொண்டே நடப்பவனிடம் மெதுவான குரலில் விசாரிப்பார் பார்த்த சாரதி...

    அப்படி எதுவும் உனக்குள் எதிர்பார்ப்பு இருக்கிறதா ஆகாஷ்...? இருந்தால் என்னிடம் சொல்... அதற்கேற்றாற் போல் பெண் தேடுகிறேன்... என்னிடம் சொல்லத் தயக்கமாக இருந்தால் எங்களுடன் வந்து பெண்ணைப் பார்... ஒரு வேளை எனக்கு அமைந்தது போல் உனக்கும் நீ தேடிய பெண் போலவே அமைந்து விடுவாள்...

    ‘எனக்கு நான் தேடும் பெண் போல வேண்டாம் அப்பா... நான் தேடும் பெண்தான் வேண்டும்...’ மனதிற்குள் சொல்லிக் கொள்வான் ஆகாஷ்...

    என்னப்பா பதில் சொல்ல மாட்டேங்கிற...?

    எனக்கு இப்போது கல்யாணத்தில் இன்ட்ரெஸ்ட் இல்லைப்பா...

    அதற்கு மேல் தோளுக்கு மேல் வளர்ந்த மகனிடம் எப்படி அவனது திருமணத்தைப் பற்றி வற்புறுத்திப் பேசுவது...? பார்த்தசாரதி விட்டு விடுவார்... ஆனால் ஆகாஷின் நண்பர்களிடம் தூண்டித் துருவி விசாரிப்பார்...

    ஏன் விவேக்... அவன் யாரையாவது காதலிக்கிறானா...?

    விதியே என்று நொந்து கொண்டு,

    இல்லைப்பா... என்று பதில் சொல்வான் விவேக்...

    உனக்குத் தெரியாமல் இருக்காதே மணி... ஆகாஷின் மனதில் ஏதும் பெண்ணைப் பற்றிய நினைவு இருக்கிறதா...?

    ‘பேசாமல் சுற்றி வளைத்து வாக்கிங் போயிருக்கலாம்... இவ்வளவு பெரிய மனிதரிடம் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இருந்திருக்காது...’ என்று பெருமூச்சு விட்டபடி,

    சேச்சே... அவன் தங்கம்பா... என்று பொய் சொல்லுவான் மணியன்...

    காய்கறி வாங்கப் போகும் இடத்தில் மாலதி மாட்டிக் கொள்வாள்... தப்பிக்க வழி தேடி விழிப்பவளிடம்,

    அம்மா மாலதி... நீ ஆகாஷின் பெஸ்ட் பிரண்ட்... உனக்கு அவன் மனதில் என்ன இருக்கிறதுன்னு கண்டிப்பாகத் தெரியும்... என்று தூண்டில் போடுவார் பார்த்தசாரதி...

    ‘அவன் மனதிலிருப்பதை அவன் மனதிலிருப் பவளிடமே இன்னும் சொல்லவில்லையே...’ என்ற ஆதங்கத்துடன்,

    அப்படி எதுவும் இருந்தால் உங்களிடம் நானே சொல்லியிருப்பேனே அப்பா... என்று வருத்தத்துடன் கூறுவாள் மாலதி...

    மொத்தத்தில் ஆகாஷ் வர்ஷாவின் காதலைத் தேடி அலைந்து கொண்டிருந்ததில் அவளது தோழர்களும் தோழிகளும் பாதிப்புக்கு உள்ளானார்கள்...

    2

    பஸ் ஸ்டாப்பை விட்டு பஸ் நகர ஆரம்பிக்க அவசரமாய் ஓடிப் போய் பஸ்ஸில் தொற்றிக் கொண்டாள் வர்ஷா...

    டிக்கெட்... என்ற கண்டக்டரிடம்,

    திருவான்மியூர்... என்று கூறி பணத்தைக் கொடுத்து டிக்கெட்டை வாங்கிக் கொண்டாள்...

    பஸ்ஸில் கூட்டம் அதிகமில்லை... ஆசுவாச மூச்சு விட்டவள் பஸ்ஸின் தாங்கு கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றாள்... அடுத்த ஸ்டாப்பில் ஒரு பெண் இறங்க, காலியான இருக்கையில் அமர்ந்து கொண்டாள்... ஜன்னலோரம் இருந்த பெண்ணும் இறங்கிக் கொள்ள நகர்ந்து அமர்ந்து வெளியே வேடிக்கைப் பார்த்தாள்... மாலை நேரத்து இதமான காற்று முகத்தில் பட்டது... முன்னால் சென்று கொண்டிருந்த காரைப் பார்த்தபோது ஆகாஷின் நினைவு வந்தது... அவனுடைய காரின் நிறமும் இதுதான்...

    ‘வர்ஷா... வந்து விட்டீங்களா...?’ ஆவலாய் அவன் கேட்டது நினைவில் ஆடியது... ‘மூன்று வருடங்களாய் இதே ஆவலைக் காட்டுகிறானே... அவளது பாரா முகம் கொஞ்சம் கூட அவனது ஆவலைக் குறைக்க வில்லையா...?’ வேதனையுடன் நினைத்துக் கொண்டாள்...

    அலுவலகத்தில் அவனுக்கு அவ்வளவு நல்ல பெயர்... கீழே வேலை பார்ப்பவர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் திறமைசாலி... மற்றவர்களின் மனம் புண்பட அவன் ஓர் வார்த்தை சொன்னதாக ஒருவர்கூட அவளிடம் கூறியதில்லை... அந்தக் கம்பெனியில் நேர்முகத் தேர்வு வைத்தபோது அவளை இன்டர்வியூ செய்தவர்களில் அவனும் ஒருவன்... பயத்தில் முகமெல்லாம் வியர்க்க... படபடப்புடன் பதில் கூறியவளைப் பார்த்து ஆதரவாய் புன்னகைத்தான்...

    "ஏன் பயப்படுகிறீங்க...? பதட்டமில்லாமல் பதில் சொல்லுங்கள்... நாங்கள் ஒன்றும் சிங்கம்...

    Enjoying the preview?
    Page 1 of 1