Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Enbathu Mayavalai
Kaadhal Enbathu Mayavalai
Kaadhal Enbathu Mayavalai
Ebook117 pages52 minutes

Kaadhal Enbathu Mayavalai

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

சிலருக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நினைத்த வாழ்க்கை அமைவதில்லை. வாழ்க்கையோடு போராடும் சூழ்நிலைகள் உருவாகிவிடுகிறது. அப்படிப்பட்ட தான ஒரு போராட்டத்தை எதிர் கொள்கிறாள் இந்த கதையின் நாயகி. இறுதியில் அவளின் போராட்டம் வெற்றி அடைந்ததா?? இல்லையா??
கதையின் முடிவில் தெரியும்.
Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580129505182
Kaadhal Enbathu Mayavalai

Read more from Daisy Maran

Related to Kaadhal Enbathu Mayavalai

Related ebooks

Reviews for Kaadhal Enbathu Mayavalai

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Enbathu Mayavalai - Daisy Maran

    http://www.pustaka.co.in

    காதல் என்பது மாயவலை

    Kaadhal Enbathu Mayavalai

    Author:

    டெய்சி மாறன்

    Daisy Maran

    For more books

    http://pustaka.co.in/home/author/daisy-maran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    முன்னுரை

    என் இனிய தோழமைகளுக்கு,

    ஏராளமான பாராட்டுதல்களையும், ஆதரவினையும் அள்ளித் தரும் வாசகர்களின் வரிசை மேலும் மேலும் உயர்ந்து வருவது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இந்த சிலிர்த்த தருணத்தில் வாசகர்கள் குறித்தும் இதழ்கள் இன்னும் சிறப்படைய - பொறுப்பும், தேடலும் என்கிற பணிகள் என்னை இறக்கை கட்டிக் கொண்டு பறக்க வைத்துள்ளது.

    இதற்கு எங்களின் ஒரு கை ஓசை மட்டும் போதாது. எனவே, வாருங்கள்... கூட்டு முயற்சியில் களம் இறங்க வரவேற்கிறோம் என்ற தாரக மந்திரத்தைக் கொண்டு உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கின்றோம். இனி நாவல் பற்றிய விஷயம்...

    இந்த இதழில் எழுத்தாளர் டெய்சி மாறன் அவர்கள் எழுதியுள்ள காதல் என்பது மாயவலை...! என்ற நாவல் அரங்கேறியுள்ளது.

    இதழ் பற்றிய வழக்கமான விமர்சனங்கள் உங்களிடமிருந்து கடித கணைகளாகப் பாயட்டும். நன்றி... வணக்கம்...

    ஆசிரியர்,

    எம். தேவி.

    1

    நள்ளிரவு நேரம். விடாமல் பெய்துக் கொண்டிருந்த மழையின் வேகம் மெல்ல, மெல்ல குறைந்து, தூரலாக மாறிக் கொண்டிருந்தது. அந்த நேரத்திலேயும் கூட கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு பரப்பரப்பாகத்தான் காணப்பட்டது. இன்னமும் இரண்டு நாட்களில் தீபாவளி பண்டிகை என்பதால், வெளி ஊர்களில் இருந்து வந்து சென்னையில் வேலை பார்க்கும் மக்கள், தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ்சுக்காகக் காத்திருந்தனர்.

    அந்த கூட்டத்திலேயே... விருப்பமில்லாமல், வெறுப்புகளை மட்டுமே சுமந்து கொண்டு, விதியை நினைத்து நொந்தபடி நின்றவள் வினோதினி மட்டுந்தான்.

    அவள் வேலை பார்க்கும் கம்பெனியை தேடிக் கொண்டு அந்த பெரியவர் மட்டும் வராமலிருந்தால், அவள் ஏன் இந்த நடுராத்திரியில் இங்கு வந்து நிற்கப் போகிறாள்?

    ஆரணி, ஆரணி...

    இவளை கடந்து சென்ற பஸ்ஸிலிருந்து கண்டக்டர் கூச்சலிட்டார். இறக்கி வைத்திருந்த பேக்கை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு பஸ்சை நோக்கி விரைந்தாள்.

    என்னம்மா... எங்கம்மா போகணும்...?

    ஆரணிதான் போகணுங்க...

    வாம்மா... வாம்மா, சீக்கிரம் வந்து ஏறு... பஸ்ஸில் ஏறியவள், தன் கையில் வைத்திருந்த டிக்கெட்டை சரிபார்த்துவிட்டு இருக்கையில் அமர்ந்தாள். தோள் பட்டையை இறுக்கிக் கொண்டிருந்த பேக்கை கழற்றி அருகில் வைத்தாள்.

    ஏம்மா... இங்க யாருன்னா வர்றாங்களா...? அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர், அவளுக்கு பக்கத்து இருக்கையை காட்டிக் கேட்டார்.

    இல்லங்க... என் பேக்குதான், எடுத்துக்கிறேன்...

    பேக்கை எடுத்து அந்த பெரியவருக்கு வழிவிட்டாள். இவரைப் பார்க்கும் போது, தன்னைத் தேடி வந்த அந்த பெரியவரின் ஞாபகம் வந்தது. அவர் பேசியதை ஒரு முறை நினைத்துப் பார்த்தாள்.

    அந்த மனுஷன் சாக கெடக்குறாரும்மா, உசுருபோறதுக்குள்ள ஒரு எட்டு வந்து பார்த்துட்டுப் போயேன். உன்னை பார்த்த பிறகுதான் உசிரை விடுவேன்னு, இழுத்துப் பிடிச்சிகிட்டு கெடக்குறாருண்ணா பாரேன். நீ... என் மக மாதிரி. என் பேச்சுக்கு மதிப்புக் கொடுப்பேங்கிற நம்பிக்கையில்தான் வந்திருக்கிறேன். எங்கூட புறப்பட்டு வா...

    அவள் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.

    உன்... மனசு படுற பாடு எனக்குப் புரியுது. அதையெல்லாம் நெனைச்சிக்கிட்டிருக்கிற நேரம் இது இல்லம்மா...

    வினோதினி...

    அவள் வேலை பார்க்கும் கம்பெனியின் முதலாளி அவளை அழைத்தார்.

    சார்... சொல்லுங்க சார்...?

    வினோதினி... ஒரு நிமிஷம் கொஞ்சம் இப்படி வரீங்களா? நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். தப்பா எடுத்துக்க வேண்டாம் தற்செயலாகத்தான்... நான் என்ன சொல்றேன்னா இந்த பெரியவர் இவ்வளவு தூரம் இறங்கி வந்து கெஞ்சி கேட்கும் போது நீங்க கொஞ்சம் கன்சிடர் பண்ணலாம் இல்லையா? ரொம்ப பிடிவாதமா இருக்கீங்களோன்னு தோணுது. நான் ஆபீசர் என்ற முறையில் சொல்லவில்லை. ஒரு குடும்ப நண்பராக வெல்விஷ்சரா சொல்றேன் நீங்க என் பேச்சைக் கேட்கனுன்னு இல்ல. அவருடைய வயசுக்கு மரியாதை கொடுக்கலா இல்லையா? அதுக்கு அப்புறம் உங்க விருப்பம்."

    வினோதினிக்கு தர்மசங்கடமாக இருந்தது என்ன சொல்வதென்று புரியவில்லை. ஆபீஸரை எதிர்த்து பேசவும் முடியாது. தன்னுடைய நிலைமையை எப்படி இவருக்கு விளக்கிச் சொல்வது? நான் இந்த அளவுக்கு பிடிவாதமாய் இருப்பதாய் நினைக்க மாட்டாரா? காரணம் தெரிந்தால் இப்படி பேசமாட்டார்தான் ஆனால்... பிரச்சினைகளை அனுபவித்தவள் நானாயிற்றே, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு இனிமேல் எதுவுமே சாத்தியமில்லை என்று உணர்ந்த பிறகுதான் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடி வந்தேன்.

    எந்த ஊர் பக்கமே போகவே கூடாது என்ற முடிவோடு வந்தேனோ அதே ஊருக்கு திரும்பவும் எப்படி போவது?

    ஓகே வினோதினி... எதுவாக இருந்தாலும் ஒரு நல்ல முடிவா எடுங்க... என்று கூறி விட்டு விலகி சென்றார் ஆபீசர்.

    தயக்கத்தோடு பெரியவர் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் வந்து அமர்ந்தாள்.

    என்னம்மா பண்றது உன் மனசு என்ன பாடு படுதுன்னு எனக்கு புரியாமல் இல்லை. ஆனால் அதை எல்லாம் நினைச்சு பார்க்குற நேரம் இது இல்லை. என்னதான் நமக்கு பிடிக்காதவங்களா இருந்தாலும் நமக்கு கெடுதல் பண்ணினவங்களா இருந்தாலும் சாகக் கிடக்கும் போது பழச எல்லாம் நெனச்சுக்கிட்டு இருக்க முடியுமா? என் பொண்ணு மாதிரி நெனச்சுக்கிட்டு உன் கிட்ட சொல்றேன் ஒரு எட்டு ஒரு பக்கம் வந்துட்டு போ... ராத்திரி பஸ் ஏறினா வெள்ளென ஊருக்கு வந்து சேர்ந்துவிடலாம். அங்க வந்து போன் போடு உன்னை கூட்டிட்டு போறதுக்கு காரோட நான் வந்து நிக்கிறேன். இந்தா இந்த கடுதாசியில என்னுடைய போன் நம்பர் இருக்கு அவசரத்துக்கு இதை வச்சுக்கோ சரியா...? நீ வருவே என்ற நம்பிக்கையோட

    Enjoying the preview?
    Page 1 of 1