Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manitharil Ithanai Nirangala...?
Manitharil Ithanai Nirangala...?
Manitharil Ithanai Nirangala...?
Ebook145 pages55 minutes

Manitharil Ithanai Nirangala...?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனிதர்கள் ஒரே மாதிரியான மனநிலையோடு இருப்பதில்லை. சூழ்நிலைகள் மாறும் போது அவர்களும் மாறுகிறார்கள். பிறப்பு இறப்பு இதற்கு இடைப்பட்ட பயணம் தான் வாழ்க்கை. சிந்தனை செயல் எண்ணம் எல்லாமே ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு சூழல்களை உருவாக்கித் தந்து விடுகிறது. இந்த சிறுகதை தொகுப்பை பொறுத்தவரை அன்பு பாசம் காதல் வெற்றி தோல்வி தியாகம் பொறுமை போராட்டம் இப்படி பலவித சிந்தனைகளை உள்ளடக்கி இருக்கிறது. ஒவ்வொரு சிறுகதையும் வெவ்வேறு பாதையில் பயணப்படுகிறது. அந்தப் பாதையில் பயணப்படும் போதுதான் "மனிதர்களில் இத்தனை நிறங்களா?" என்ற விடையில்லா கேள்வி ஒன்று எழுகிறது.. சிறுகதை தொகுப்பை வாசித்து வாழ்க்கையை நேசிக்க பழகுவோம்..

Languageதமிழ்
Release dateMar 9, 2024
ISBN6580129510796
Manitharil Ithanai Nirangala...?

Read more from Daisy Maran

Related to Manitharil Ithanai Nirangala...?

Related ebooks

Reviews for Manitharil Ithanai Nirangala...?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manitharil Ithanai Nirangala...? - Daisy Maran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மனிதரில் இத்தனை நிறங்களா…?

    (சிறுகதைகள்)

    Manitharil Ithanai Nirangala...?

    (Sirukadhaigal)

    Author:

    டெய்சி மாறன்

    Daisy Maran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/daisy-maran

    பொருளடக்கம்

    1. பயலே நீ ரோஷக்காரண்டா!

    2. அவளுக்கென்று ஒரு மனம்…!

    3. பலிகடா...!

    4. நீதியின் தீர்ப்பு...!

    5. தோதகத்தி மரம்!

    6. இதயத்தைத் திருடியவன்...!

    7. சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு!

    8. செவ்வந்தீ...!

    9. பல்லாங்குழி!

    10. மனிதர்களில் இத்தனை நிறங்களா...?

    11. பாரதியின் கண்ணம்மாள்!

    12. தூரத்து சொந்தம்!

    13. தாய் எட்டடி பாய்ந்தால்...?

    1. பயலே நீ ரோஷக்காரண்டா!

    கொரங்காட்டி கோவிந்தன் போயிட்டானாம்! என்கிற செய்தி அதிகாலை துவங்கி, கொஞ்சம் கொஞ்சமாய் பரவ ஆரம்பித்ததும், கோவிந்தன் குடியிருந்த அந்த சிறிய சந்து திடீரென்று முக்கியத்துவம் பெற்றது. பொழுது விடிந்தும் விடியாமலேயே அங்கு ஜன நடமாட்டம் வரத் தொடங்கியது.

    நேத்திக்குப் பார்த்தேனே...நல்லாத்தானே இருந்தான்!... டீ குடிக்கிறியா அப்பு?ன்னு கேட்டதுக்கு... இல்ல சாமி...வாய்ல பொகையில போட்டிருக்கேன் சாமி!ன்னுட்டுப் போனானே? டீக்கடை குப்பன் சொல்ல,

    என்னத்தைச் சொல்றது?...மனுசனுக்கு மாரடைப்பு சொல்லிட்டா வருது? என்றான் உடனிருந்தவன்.

    சாவு வீட்டின் முன் கூடியிருந்த ஆண்கள் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருக்க, பெண்கள் பெருங்குரலில் அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர்.

    "மலையாள வைத்தியனை... மறக்காமக் கூட்டிவந்தோம்

    மலையாள வைத்தியனும்... மருந்தறிய மாட்டலையே!

    சீமை வைத்தியனை... சீக்கிரமாக் கூட்டிவந்தோம்

    சீமை வைத்தியனும்... சீக்கறிய மாட்டலையே!"

    ஒப்பாரிக் கிழவி தன் வழக்கமான ஒப்பாரிப் பாடலை அதே ராகத்துடன் ஒப்பித்துக் கொண்டிருந்தாள். இடையிடையே பெரிய சப்தத்துடன் மூக்குச் சீந்தல் வேறு. சாவு விழுந்தது யார் வீடென்றாலும், சவமாய் சாய்ந்தவர் யாரோ? என்றாலும், தப்பாமல் அங்கிருப்பாள் ஒப்பாரிக்கிழவி.

    ஊர் பெரிய தலைகள் கூட ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தனர்.

    தற்காலிக பந்தல், அவசர அவசரமாய் போடப்பட்டது. ஊர் பொதுச் செலவில், தப்பட்டைக்காரன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அவன் வந்ததும் வராததுமாய் எங்கிருந்தோ சுள்ளிகளைப் பொறுக்கி வந்து நெருப்பைப் புகைய வைத்தான். அதற்குப் பக்கத்தில் ஒரு துண்டை விரித்து வைத்து அதில் அவனே சில சில்லரைக் காசுகளைப் போட்டு விட்டு, எல்லோரையும் பார்த்து இளித்தான்.

    தான் விரித்த துண்டில் ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் எறியும் ஆட்களை ஒப்புக்குப் பாராட்டி, ஓரிரு வரிகள் மட்டும் பாடிய தப்பட்டைக்காரன், பத்து ரூபாய்...இருபது ரூபாய் போடும் பரோபகாரிகளை இந்திரன்...சந்திரன், தருமராசன்...மகராசன் என்று கொட்டடித்துப் பாடி குதியாட்டம் போட்டுக் காட்டினான்.

    சற்றுத் தள்ளி, கைகட்டி நின்று கொண்டிருந்த தருமன் சவமாய் கிடந்த தன் தந்தையை ஊடுருவிப் பார்த்தான். ஏனோ அவனுக்குள் சோகமோ… வேதனையோ… துயரமோ... கவலையோ...எதுவுமே சிறிதும் கூட தோன்றவேயில்லை.யார் யாரோ வர்றாங்க!...அப்பாவோட சவத்தைப் பார்த்து வாய்விட்டு அழுவறாங்க!...உண்மையில் அவங்களுக்கும் அப்பாவுக்கும் எந்த ரத்த உறவுமே கிடையாது...வெறும் பழக்க வழக்கம் மட்டும்தான்!... ஆனா...நான் அவரோட ரத்தம்...அவரோட ஒரே வாரிசு!...என்...அப்பாவின் மரணம் என்னை மட்டும் கொஞ்சங் கூடப் பாதிக்கவேயில்லை? யோசித்துப் பார்த்தான்.ஒரு வேளை...எப்பவும் அவரு கூட சண்டை போட்டுக்கிட்டே இருந்ததால் என்னையுமறியாம எனக்குள்ளார அவரு மேல ஒரு வெறுப்பு வளர்ந்திடுச்சோ?...தான் ஆடா விட்டாலும் தசை ஆடும்!ன்னு சொல்லுவாங்களே...?...அது கூட இல்லையே இங்க!...ஏன்?...என் மனசு கல் மனசா?...

    தான் சிறிதும் பாதிப்படையாமல், அவ்வாறு அழுத்தமாக இருப்பதைப் பார்த்து யாராவது, ஏதாவது சொல்லி விடுவார்களோ? என்கிற பயமும் உள்ளூர இருந்து கொண்டுதானிருந்தது அவனுக்கு.

    அவன் பயந்த மாதிரியே, இந்தாப்பா…தருமு…அப்படித் தள்ளிப் போயி நின்னுட்டா என்னப்பா அர்த்தம்?...வாப்பா…இப்படி முன்னாடி வந்து நின்னு சாவுக்கு வர்றவங்ககிட்ட கும்பிடு வாங்கிக்கப்பா…செத்துப் போன கொரங்காட்டி கோவிந்தனுக்கு நீதானே ஒரே மகன்? ஊர் பெரியவர் கத்தலாய் சொல்ல,

    உடம்பெல்லாம் எரிந்தது தருமனுக்கு. வாய் வரை வந்து விட்ட வார்த்தைகளைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.

    வேலை வெட்டியில்லாத வெறும் பயல்தண்டச் சோத்து தடிராமன்தண்டுவன்...என்று பலவிதமான வசை வார்த்தைகள் தன் மீது எறியப்படும் போதெல்லாம் சிறிதும் ஆத்திரப்படாமல் மௌனமாய் தன் கோபத்தை விழுங்கிக் கொண்டு நகரும் தருமனால் கொரங்காட்டி மகன் என்று யாராவது அவனை அடையாளம் கூறி விட்டால் போதும், தாங்க முடியாமல், ருத்ரமூர்த்தி ஆகிவிடுவான்.

    யோவ்…எனக்கு குல தெய்வம் கோயில்ல வெச்சு...சொந்த பந்தங்களை அழைச்சு வெச்சு தருமன்ன்னு அழகான பேரு வெச்சிருக்கு!...மகாபாரதத்துல வர்ற தர்மன் பேரு!...சொல்றதுன்னா...அதைச் சொல்லி அடையாளம் சொல்லு!… இல்லையா?...மொட்டையா கோவிந்தன் மகன்ன்னு எங்கப்பன் பேரைச் சொல்லி அடையாளம் சொல்லு!…அதையெல்லாம் விட்டுட்டு...அதென்னய்யா கொரங்காட்டி மகன்? பற்களை ‘நற...நற’வென்று கடித்துக் கொண்டு கத்துவான்.

    அட…இப்ப என்னப்பா சொல்லிட்டாங்க?…உங்கப்பனோட தொழிலு அதானே?…அதைத்தானே சொன்னோம்?...இதிலென்னா தப்பிருக்கு? என்று சொன்னவர்கள் சமாளிப்பு பேச்சுப் பேசினால்,

    என்னய்யா பெரிய தொழிலு?...கொரங்காட்டித் தொழிலு!…அந்தக் கெழவன்தான் வேற எந்தத் தொழிலும் பண்ண வக்கில்லாம...கேவலம் ஒரு கொரங்கைப் புடிச்சுக்கிட்டு ரோடு ரோடா திரிஞ்சு...வித்தை காட்டிப் பொழைச்சான்னா...அவனைச் சொல்லுங்க கொரங்காட்டின்னு!...என்னையும் எதுக்கய்யா கொரங்காட்டி மகன்னு சொல்லிச் சொல்லிக் கேவலப்படுத்தறீங்க?...இனிமே எந்தச் சிறுக்கி மவனாவது என்னைய கொரங்காட்டி மகன்!னு சொல்லட்டும் அப்புறம் காட்டறேன் நான் யாருன்னு சொன்னவர்கள் நடுங்கும்படி சிலம்பாட்டம் ஆடுவான் தருமன்.

    க்கும்…இதுக்கு ஒண்ணும் கொறைச்சலில்லை…கொரங்குதானப்பா உங்கப்பன் தொழிலுக்கே முதலீடு!...அந்தத் தொழில்ல சம்பாரிச்ச காசுலதானே உன்னையெல்லாம் வளர்த்தாரு உங்கப்பன்?...ஹூம்...கொரங்கு வித்தைல தின்னு வளர்ந்த ஒடம்பு பேசுற பேச்சைப்பாரு என்று முணுமுணுத்துக் கொண்டே, சம்மந்தப்பட்டவர்கள் சத்தமில்லாமல் நகருவார்கள்.

    கூசிப் போய் நிற்பான் தருமன். அவன் கோபமெல்லாம் அவர்களைத் தாண்டி, தன் தந்தையின் மீது விழும். அதன் காரணமாய் வீட்டில் அப்பனுக்கும், மகனுக்கும் அடிக்கடி சண்டை எழும். இருவரும் வீட்டில் எலியும், பூனையுமாகவே இருப்பார்கள்.

    திடீரென்று வானத்தில் கருமேகங்கள் கூடி, உறும ஆரம்பிக்க,

    ஆஹா…வானம் கடாமுடாங்குதே...மழை கிழை புடிக்கறதுக்கு முன்னாடி சவத்தைத் தூக்க ஏற்பாடு பண்ணணுமே? முண்டாசு கட்டியிருந்த காரியக்காரனொருத்தன் திடீரென்று எழுந்து பொத்தாம் பொதுவாய் உரத்த குரலில் சொன்னான். அவன் காதில் அரை பீடி தொத்திக் கொண்டிருந்தது. அவன் வாயில் உள்ளூர் சாராயம் ஊத்தை வாடை அடித்துக் கொண்டிருந்தது.

    அவனது எச்சரிக்கை எல்லோரையும் உசுப்பி விட, எல்லோரும் சொல்லி வைத்தார்போல் மேலே வானத்தைப் பார்த்தனர். மறுவிநாடி, காரியங்கள் துரித கதியில் நடைபெற்றன. வெளியே, மர பெஞ்சில் கிடத்தப்பட்ட கொரங்காட்டி கோவிந்தனின் சடலம் அவசர அவசரமாய் குளிக்க வைக்கப்பட்டது. தொடர்ந்து நெய்...அரப்பு பூசுபவர்களும், நெய் பந்தம் பிடிப்பவர்களும், வரிசையாக வந்து தத்தம் உறவுகளுக்கான சடங்குகளைச் சீராகச் செய்து முடித்தவுடன், அடுத்த அரை மணி நேரத்தில் சடலம் பாடைப் பல்லக்கில் ஏறி, பயணப்பட்டது காடு நோக்கி. மழையின் காரணமாக பல சடங்குகள் தவிர்க்கப்பட்டதை அறிந்தோர் கண்டு கொள்ளவில்லை.

    பெரிய மக்கள் கூட்டம் என்று சொல்ல முடியாவிட்டாலும், உறவுக்காரர்களும், ஊர்க்காரர்களுமாய் மொத்தம் ஒரு அறுபது...எழுபது பேருக்கு மேல் பாடையின் பின்னே சென்றார்கள். அந்த சவ ஊர்வலத்தின் முகப்பில், கயிற்றில் தொங்கும் தீச்சட்டியைத் தூக்கிக் கொண்டு நிதானமாக நடந்தான் தருமன். அந்த நொடியிலும் கூட அவன் மனதில் தந்தையின் சாவுக்காக ஒரு சோகமோ...துயரமோ...வேதனையோ...எதுவுமே தோன்றவில்லை.

    ஆயிரம்தான் தகப்பனுடன் மனக்கசப்பு இருந்தாலும், ஒரு மகன் என்கிற நிலையில் அவருக்கு நிறைவேற்ற வேண்டிய ஈமச் சடங்குகளை சிறிதும் குறை வைக்காமல் செவ்வனே செய்து முடித்தான் தருமன். ஒரு வேளை, அது கூட ஊர் பேச்சிலிருந்து தப்பிக்க வேண்டி செய்ததாயிருக்கலாம்.

    அடுத்த வாரத்தில் ஒரு நாள்,

    மொட்டைத் தலையுடன் திண்ணையில் அமர்ந்திருந்த தருமனை அவன் தாய் வடிவாம்பாள் வார்த்தைகளால் இடித்தாள்.

    ஹூம்...ஊட்டுல அரிசி பருப்பெல்லாம் தீர்ந்து போச்சு...ஆருகிட்டப் போயி சொல்ல?...அந்த மனுசன் இருந்தப்ப எப்படியாச்சும் நாலு தெரு சுத்தி தெனமும் பத்து இருபதுன்னு கொண்டாந்து வீட்ல அடுப்பெரிய வெப்பாரு…இவனுந்தான் இருக்கானே திண்ணையைத் தேய்ச்சுக்கிட்டு...இவனைப் பெத்ததுக்கு பதிலா இன்னும் ரெண்டு கொரங்கைப் பெத்திருந்தா...வாழ்நா பூராவும்...வருத்தமில்லாமச் சாப்புடலாம் அவள் சொல்வது உண்மைதான் கொரங்காட்டியாயிருந்தாலும் கோவிந்தன் சம்பாத்தியத்துல கெட்டி!...செலவழிக்கறதுல உஷாரு.!...வெளியூர் திருவிழாக்களுக்குச் சென்று திரும்பும் போதெல்லாம் எண்ண முடியாத அளவிற்கு சில்லரைகளையும், நோட்டுகளையும் மூட்டை கட்டிக் கொண்டு வருவான்.

    தன்னை வசை பாடும்

    Enjoying the preview?
    Page 1 of 1