Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yenazhuthaai Enuyire
Yenazhuthaai Enuyire
Yenazhuthaai Enuyire
Ebook137 pages1 hour

Yenazhuthaai Enuyire

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJul 1, 2018
ISBN9781043466237
Yenazhuthaai Enuyire

Read more from Geetharani

Related to Yenazhuthaai Enuyire

Related ebooks

Reviews for Yenazhuthaai Enuyire

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yenazhuthaai Enuyire - Geetharani

    14

    1

    வெளியே யாரோ அழைப்பது கேட்க, சட்டையை அயர்ன் செய்து கொண்டிருந்த வேலையை விடுத்து, ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். மனோன்மணி நின்று கொண்டிருந்தாள். இவள் எதற்காக இந்தக் காலை நேரத்தில் என்று நினைத்தவனாய் மேல் துண்டை எடுத்துப் போர்த்திக் கொண்டு வெளியே வந்தான். வந்தவர்களை, யாராயிருப்பினும், உபசரிப்பது தமிழ்ப் பண்பாடில்லையா...!

    வாங்கம்மா... என்று வரவேற்றான்.

    தம்பி... உள்ளே போய்ப் பேசலாமில்லையா... என்றவாறு படிகளில் ஏற, ‘ம்...’ என்ற ஒற்றைச் சொல்லுடன் மாணிக்கமும் பின் தொடர்ந்தான்.

    மனோன்மணி கூடத்திலிருந்த நீளவாக்கு ஒயர் சேரில் அமர்ந்து வீட்டைச் சுற்றும் முற்றும் பார்த்தாள். அதற்குள் மாணிக்கம் உபசாரம் கருதி ஒரு சொம்பு நீரை அவள் முன் கொண்டு வந்து வைத்தான்.

    நீயும் உட்காருப்பா...

    மாணிக்கம் அவளுக்கு எதிர்த்தாற் போன்று ஸ்டீல் சேரை விரித்துப் போட்டு அமர்ந்தான். மனசு ‘திக் திக்’ என்றது.

    எதற்காக இப்படி வீடு தேடி வந்திருக்கிறாள்? அதுவும் இந்தக் காலை நேரத்தில்... என்னவாக இருக்கும்?

    மனோன்மணி சாதாரணப்பட்ட நபர் அல்ல. கண்டரமாணிக்கம் பிரசிடெண்ட் வேலுமணியின் மனைவி என்பதால் மட்டுமல்ல மரியாதை. அந்த ஊரின் முக்கால் பாகத்தின் சொந்தக்காரரான சேதுராமையாத் தேவரின் ஒரே மகள் என்பதால் ஊரில் ‘மனோன்மணி அம்மா’ ரொம்பவும் பிரசித்தம். பணக்கார வர்க்கம் என்பதைப் பட்டவர்த்தனமாக அறிவிக்கும் படாடோப அலங்காரம். கம்பீரத்தைப் பறைசாற்றும் உடற்கட்டு எனப் பார்த்தவர்களைச் சற்றே நடுக்கத்துடன் வணங்கச் செய்யும் மீனாட்சி ஆட்சிதான் அங்கே நடந்து கொண்டிருந்தது. கணவர் வேலுமணி பெயரளவில் பிரசிடெண்ட். அவ்வளவுதான். மனோன்மணி இட்டதுதான் கட்டளை. அது தான் இன்றைய தேதிவரை நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பது அந்த ஊரின் அரை டிரவுசர்கள், அரைஞாண் கயிறுகள் கூடச் சொல்லும்.

    அப்பேர்ப்பட்டவள் ஏழை மாணிக்கத்தைக் காண - அதுவும் வீடு தேடி - வந்திருக்கிறாள் என்றால் அது அதிசயம். ஆச்சர்யம். ஆனால், உண்மை என்பது போல் அவள் மாணிக்கத்தைப் பார்த்தாள்.

    என்ன திடுதிப்புனு வீட்டுக்கே வந்து நிக்கறாளேன்னு ஆச்சர்யமா இருக்கா, மாணிக்கம்... பகட்டை விளம்பும் வார்த்தைகள் மதர்ப்புடன் வந்து விழுந்தன.

    மாணிக்கம் மௌனமாக அமர்ந்து இருந்தான். வாய்தான் மௌனித்துக் கிடந்தயேன்றி மனதிற்குள் பெரும் போராட்டமே நிகழ்ந்து கொண்டிருந்தது.

    தங்கச்சிங்களை இந்த வருசம் பொங்கலுக்கு அழைக்கலையா, மாணிக்கம்...? பேச்சு எங்கோ தாவிற்று.

    ம்... இன்னைக்குத்தான் போகணும்னு இருக்கேன்... ஏன், என்ன விசயம், எதற்காகக் கேட்கிறாய் என்பது போல் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

    அம்மா காலமாகி ஒரு வருசம் ஆயிடிச்சில்லை...

    ம்...

    எத்தனை நாள் இப்படித் தனியா இருக்கறதா உத்தேசம்...?

    ......

    நீயும் காலா காலத்துலெ ஒரு கல்யாணங் காட்சினு பண்ணிக்கிட்டா உனக்கும் ஒத்தாசையா இருக்குமில்லை...

    எதற்கு அடிப்போடுகிறாள் என்று புரிபடாதவனாய் அமைதியுடன் அமர்ந்திருந்தான்.

    பழசையே நினைச்சிட்டிருந்தா ஒரு புண்ணியமும் இல்லை, மாணிக்கம்! பேச்சில் அன்பு இழையோடியது.

    அதுக்காக...

    அதுக்காகச் சீக்கிரமா உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கறது நல்லதுன்னு சொல்ல வந்தேன்.

    அது என் தனிப்பட்ட விவகாரம்.

    உன் தனிப்பட்ட விவகாரம்தான்னு ஒத்துக்கிறேன். ஆனா, அதுல என் சுயநலமும் கலந்திருக்கிறதுனாலதான் இத்தனை தூரம் வீடு தேடி வந்தேன். சில சங்கதிகளை நாமளா தேடிப் போனாதான் மதிப்பு...

    வீட்டு வேலையாளை அனுப்பிச் சொல்லி விட்டிருந்தால் நீயாகவே என் வாசல் தேடி ஓடிவந்திருப்பாய். நானாகத் தேடி வந்திருக்கிறேன் என்றால்... அதைப் புரிந்து கொள், என்று சொல்லாமல் சொல்லின அவளின் வார்த்தைகள்.

    நீங்க... என்ன காரணமா என்னைப் பார்க்க வந்தீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா...?

    சொல்றேன். அதுக்காகத்தானே வந்திருக்கேன். ஏன் மாணிக்கம் வருஷா வருசம்தான் தைப் பொங்கலைத் தங்கைங்களை அழைச்சிக் கொண்டாடறே... இந்த வருசம் ஒரு மாறுதலுக்காக நீ ஏன் அவங்க வீட்லே போய்க் கொண்டாடக் கூடாதுன்றேன்...

    அது என் தனிப்பட்ட விருப்பம்... மாணிக்கத்தின் பேச்சில் காரசாரம் கலந்தது. அது மனோன்மணியின் கோபத்தை மெல்லக் கிளறிவிட்டுப் பதம் பார்த்தது.

    உன் தனிப்பட்ட விசயம் என் சொந்த விசயத்துலே குறுக்கிடக் கூடாதுன்னுதான் சொல்றேன்...

    மாணிக்கம் வெறுப்புடன் அவளை ஏறிட்டான்.

    என்ன அப்படிப் பார்க்கறே மாணிக்கம். நீ உன் தங்கைங்க வீட்லே பிரமாதமா பொங்கலைக் கொண்டாடு. எல்லாச் செலவையும் நான் ஏத்துக்கிறேன். ஆனா, நீ பொங்கல் முடிஞ்சு ஒரு வாரம் வரைக்கும் இந்த ஊர்ப் பக்கம் தலை காட்டக் கூடாது.

    அதான் ஏன்என்றேன்... மாணிக்கத்தின் குரலில் ஆத்திரம் படபடத்தது.

    காரண காரியத்தைச் சொல்லி வழியனுப்பி வைக்கணும்ன்ற அவசியமெல்லாம் எனக்கில்லை... - மனோன்மணியும் ரௌத்திரமாகப் பேசினாள்.

    ஊர்லே..... பெரிய மனுசின்ற பேர் இருக்கேன்ற மதிப்புலே, ஏதோ மரியாதை குடுத்துப் பேசினேன். என் சொந்தத் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கு. நான் என் வீட்லே என் தங்கச்சிகளை அழைச்சிப் பொங்கல் கொண்டாடக் கூடாதுன்னு சொல்றதுக்கு நீங்க யாரு. இதோ பாருங்க... நீங்க ஊருக்கு வேணா பெரிய மதிப்புள்ள ஆளா இருக்கலாம். ஆனா, அதுக்காக உங்க சட்ட திட்ட கட்டுப்பாடுகளுக்கெல்லாம் எல்லாரும் கட்டுப்பட்டு ஆடணும்னு நீங்க நினைக்கிறது அவ்வளவு சரியில்லை... மாணிக்கம் அதுவரை அடக்கி வைத்திருந்த குமுறலை வார்த்தைகளில் தோய்த்து அவள் முகத்தில் வீசினான்.

    மாணிக்கம்... என்ன பேசறோம்ன்றது தெரிஞ்சுதான் பேசறியா...

    உங்களை மாதிரிப் பணக்காரங்க இல்லைன்னாலும், கஞ்சித் தண்ணியிலே உப்புப் போட்டுத்தான் குடிக்கறேன். எனக்குன்னு மானம், ரோசம் எல்லாம் இருக்கு. அதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாதுன்ற சுய கௌரவமும் இருக்கு...

    எனக்கே பாடம் சொல்றியா...!

    எனக்குக் கட்டளையிட உங்களுக்கு யார் அதிகாரம் குடுத்தாங்க... எனக்கும், உங்களுக்கும் என்ன இருக்கு...?

    முழுப் பூசணிக்காயைச் சோத்துலே மறைக்கப் பார்க்கிறயேப்பா! நீ பெரிய ஆள்தான். உன்கிட்டே எனக்கென்ன பேச்சு வேண்டிக்கிடக்கு, மயிலே... மயிலேன்னா இறகு போடாது. எப்படி பிய்க்கறதுன்னு எனக்குத் தெரியும்... விருட்டென்று எழுந்த மனோன்மணி எச்சரிக்கை என்பது போல் அச்சுறுத்தலாய்ப் பார்வையை அவன் மீது ஓட விட்டு வாயிலைக் கடந்து கார் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குப் போனாள்.

    அவள் சென்ற பின்னர், மாணிக்கத்தின் நெஞ்சத்தில் தீக்கங்கைச் செருகினாற் போன்ற வேதனை சூழ்ந்து கொண்டது. இன்னும் கோபம் குறையவில்லை. கைகள் படபடத்துக் கொண்டிருந்தன.

    வெறுப்புடன் அங்கும் இங்கும் திரிந்தான். நகக் கண்கள் விளிம்புவரை கடித்துத் துப்பியிருந்தான். ஆயினும், மனசு அடங்கவில்லை.

    அன்று நான் விட்டுக் கொடுத்து விலகி வந்து விட்டதைத் தோற்று ஓடுகிறான் என்று நினைத்து விட்டவளுக்குச் சரியான பாடம் கற்பிக்காமல் விடப் போவதில்லை. அன்று கூட இவளின் அதிகார ஆட்டத்திற்கோ, அச்சுறுத்தலுக்கோ பயந்து போயா பின் வாங்கினேன்? என சுயநலத்திற்காக விட்டுக் கொடுத்து விலகி விட்டேன். அதன் பெயர் தோல்வியா...? அது தோல்வியா, தியாகமா என்பது மனித நேயம் புரிந்தவர்களுக்குத் தெரியும். இந்தப் பணத்திமிர் பிடித்த ஓநாய்க்கு எங்கே புரியும்.

    எண்ண ஓட்டம் அயர்ன் பாக்ஸின் வோல்டேஜை விட எகிறிக் கொண்டிருந்தது. அயர்ன் செய்த சட்டையைப் போட்டுக் கொண்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினான் - தங்கைகளைப் பண்டிகைக்கு அழைத்து வர -

    மாணிக்கம் தங்கை வீடு செல்லும் வரை அவனைப்பற்றி ஓர் சின்னக் குறிப்பு.

    பி.எஸ்.சி. அக்ரிகல்சரைக் கோவையில் முடித்தவுடன் வேலை வெட்டி இண்டர்வியூ என்று பொழுதை வெட்டியாய்க் கழிக்காமல், படித்த படிப்பைப் பயனுள்ளதாக்கிக் கொள்ளும் ஆர்வத்துடன் விவாசயத்தில் இறங்கி விட்டான். இருபத்தேழு வயதுக் கட்டிளங்காளை, தெற்கத்தியச் சிவப்பு நிறம். சுருள் சுருளாய் அடர்ந்து நிற்கும் பம்மென்று சிலும்பின கேசம், அழகான பல்வரிசை, சிகரெட் புகை

    Enjoying the preview?
    Page 1 of 1