Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maragatha Ponveenai
Maragatha Ponveenai
Maragatha Ponveenai
Ebook120 pages47 minutes

Maragatha Ponveenai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJul 1, 2018
ISBN9781043466220
Maragatha Ponveenai

Read more from Geetharani

Related to Maragatha Ponveenai

Related ebooks

Reviews for Maragatha Ponveenai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maragatha Ponveenai - Geetharani

    11

    1

    சூரியன் சுறுசுறுப்பாய் தன் ஒளிக்கதிர்களை நாலாத்திக்கும் வீசி விண்ணின் உச்சத்திற்கு மெல்ல மெல்ல உயர்ந்துகொண்டிருந்த பகல்நேரம் ரமணன் மிக அமைதியாய் ஏதோ சிந்தனை வயப்பட்டவராய் தன் அலுவலக அறையில் உலவிக் கொண்டிருந்தார்.

    காரணம்-

    காலை அவர் அலுவலகம் வந்ததுமே முதன் முதலில் பதிவஞ்சலில் கிடைத்த அந்த கடிதம்தான். கடிதம் மட்டும் முக்கியமானதல்ல. அதை எழுதியவரும் மிக மிக முக்கியமானவர்தான். ஆனால், கடிதத்தின் வாசகங்கள்தான் காலநேரத்தினால் மிகவும் பின்தங்கிவிட்டதாய், முப்பத்தி இரண்டு ஆண்டுக்குள் மூப்பு பெற்றதாய் இருந்தன என்றாலும் ரமணனால் சட்டென்று ஜீரணிக்க முடியவில்லை.

    ஏனெனில் - விஜியை அவரால் என்றுமே மறக்க முடியாது. ஒரு கால கட்டத்தில் அவள் மீதிருந்த அசாத்திய நேசத்தை எந்தக் காலத்திலும் மறுக்க முடியாது. அவள் மீதான அவரின் நேசத்தை வெளிப்படுத்த எத்தனையோ சந்தர்ப்பங்கள் கைக்கு அருகாமையில் இருந்தபோதிலும், ஏனோ - அவர் வெளிப்படுத்தவில்லை. வெளிப்படுத்த துடித்த போதெல்லாம் எதுவோ ஒன்று தொண்டைக்குள் கிடுக்குப்பிடி போட்டு தடுத்துவிடும்.

    தான் நேசித்த விஜி தன்னையும் நேசித்திருக்கிறாள் என்பதை உணர்ந்து கொள்ள முப்பத்தியிரண்டாண்டு காலமா...? ம்ஹ்... சில நேரங்களில் சிலவற்றிற்கு அர்த்தமே விளங்குவதில்லைதான். அர்த்தங்கள் விளங்குகின்ற சமயத்தில் அதை பரிபூரணமாக்கிக் கொள்ளும் தருணம் தன்னைவிட்டு தொலைதூரத்தில் தள்ளிப் போயிருக்கும்.

    கடிதத்தை மறுபடியும் பார்த்தார். அச்சுக்கோர்த்தாற் போன்று அழகிய கையெழுத்துகளில் முத்துமணிச் சரங்களாய் வெள்ளைத் தாளில் பளீரென்று வாசகங்கள் சிரித்தன. மிகவும் சிரத்தையுடன் எழுதியிருப்பாள் என்றே தோன்றிற்று. இதுவரை பத்துமுறை படித்து முடித்திருந்தாலும் கூட அலுப்பு தட்டாது மீண்டும் முதல் வரியிலிருந்து வாசித்தார்.

    ‘என் ப்ரியமான ரமணனிற்கு’ என்ற முதல் வரியை கைகளால் தொட்டு நீவினார். மனதிற்குள் புதுப்பிரவாகத்தை உண்டு பண்ணியது அந்தக் கடிதத்தின் ஸ்பரிசம். நாடி தளர்ந்து நரம்புகளின் வீரியம் குறைந்து ஆளை ஆயாசமாய் அசத்துகின்ற காலத்தில் கூட ஒடுக்கப்பட்ட காதல் ஓங்கி எழுந்து உற்சாகக் குரல் எழுப்புமா...?

    எழுப்பிற்று. விசாகப்பட்டிணத்துக் கடற்கரையின் ராட்சச அலைகள் எம்பி, எழும்பி ஆளைக் கவிழ்க்கின்ற ஆவேசத்துடன் உணர்ச்சிகள் ஒன்றுகூடி மறுபடியும் அந்த இருபதுகளுக்குள் கொண்டு தள்ளி திக்கு முக்காட வைத்தது. அந்த கடிதத்தை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டார். ‘விஜி...’ என்று தன்னையுமறியாமல் இதழ்கள் மெல்ல முணு முணுத்தன. கண்களில் சுடச்சுட நீர் பொங்கித் தளும்பி நின்றது. மனசு நிறைந்து தளும்பி கண்களின் வழியாக கசிகிறதோ...?

    சார்... எக்ஸ்க்யூஸ்மி...

    ஸ்டெனோ சுகுணாதான் அறைக் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே பிரவேசித்தாள்.

    சில வினாடிகள்தான் ரமணன் சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டவராய் ‘எஸ்’ என்று அவளை ஏறிட்டார். கையுடன் கொண்டு வந்திருந்த கோப்புகளை அவரிடம் நீட்டினாள்.

    டேபிள்லே வெச்சிடுங்க மிஸ், சுகுணா, நான் அப்புறமா பார்த்து அனுப்பறேன்...

    ஓகே... சார்... உங்களை மீட் பண்ணனும்னு ராம்லால் சேட் பாம்பேலேர்ந்து வந்திருக்கார்... என்றவள் அவரின் பதிலை எதிர்பார்த்து நின்றிருந்தாள்.

    ஓ... ஐஸி... ஏற்கனவே அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணினதுதானே...

    எஸ். ஸார்...

    ம்... ஒரு பத்து நிமிசம் கழிச்சு அனுப்புங்க... என்றார். அவள் வாயிற் கதவை நெருங்கும் முன்னர்... ஆங்... மிஸ் சுகுணா... அவரை உடனே அனுப்பி வையுங்க... என்று சட்டென்று மனம் மாறினவராய் சொல்ல அவர் ஏதோ குழப்பத்தில் ஆட்பட்டிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டவளாய் ஸ்டெனோ வெளியேறினாள்.

    நீண்ட பெருமூச்சொறிந்தவராய் அந்த கடிதத்தை மிக பத்திரமாய் தன் ‘பர்சனல்’ பீரோவின் மேல் தட்டில் வைத்து பீரோவைப் பூட்டி சாவியை கையோடு எடுத்துக் கொண்டு இருக்கையில் வந்து அமரவும். அந்த ராம்லால் சேட் நுழையவும் சரியாக இருந்தது.

    நமஸ்தே ஜி... நமஸ்தே... என்று பீடாக்கறைப்பற்கள் தெரிய பெரிய புன்னகை ஒன்றை சிந்தினவாறே ராம்லால் சேட் ரமணனின் நேர் எதிர் இருக்கையில் அமர, ரமணனிற்கு இவருக்கு எதற்காக அப்பாயிண்ட்மெண்ட் வழங்கப்பட்டது என்று மூளையைக் கசக்கி சற்று யோசித்த பின்னர்தான் புரிந்தது. புதிதாக மும்பையில் ஆரம்பிக்க இருக்கும் கார்மெண்ட்ஸ் ஏஜென்சி விசயமாக வரச்சொல்லியிருந்தது என்று.

    மனம் சட்டென்று வியாபார விஷயத்துக்கு தாவிற்று. ராம்லால் சேட் ஜி லாப நஷ்டங்களைப் பற்றி இந்தியில் சரளமாக விவாதித்து, சூட்டோடு சூடாக தன் அலுவலக வழக்கறிஞரையும் அழைத்து ஒப்பந்தப்பத்திரம் தயாரித்து கையொப்பமிட்டு நிமிர்ந்த போது நேரம் நண்பகலைக் கடந்துவிட்டிருந்தது. ஹோட்டல் தென்னவனிலிருந்து சாப்பாடு வரவழைத்து சேட்ஜியை உபசரித்து அனுப்பிவிட்டு அவர் தன் இருக்கைக்குத் திரும்பின போது மணி சரியாய் மூன்று என்றது. அந்த வெளிநாட்டு அழகிய வேலைப்பாடுகள் நிரம்பிய சுவர்க்கடிகாரம்.

    அடுத்தடுத்து போன்கால்கள், ஃபைல்கள் என்று அவரை இடைவிடாது வேலையில் மூழ்கடித்தன. சற்றும் களைப்படையாதவராய் ரமணன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்.

    இந்த சுறுசுறுப்பும், சலிப்பில்லாத்தன்மையும் தான் ஒரு காலத்தில் மாற்றுச் சட்டைக்குக் கூட வழியற்றுத் திண்டாடின ரமணனை இந்த நிலைக்கு உயர்தியிருக்கிறது என்றால் அது மிகையில்லை. நல்ல புத்திசாதுர்யமும், அதைத் தகுந்த நேரத்தில் பயன்படுத்தி வெற்றியை எட்டுகின்ற நுணுக்கமும் சாதாரண ரமணனை இன்று கணக்கற்ற சொத்துகளுக்கு அதிபதியாக்கி இருக்கிறது.

    மனம் நிறைந்த மண வாழ்க்கை என்று மட்டும் அவரால் ஏற்றுக் கொள்ள இயலாத வகையில் மனைவியாய் சாந்தகுமாரி. இவர் தென்முனை என்றால் அவள் வடமுனை. ஏணி வைத்தாலும் எட்டாது. இவரின் புத்திக் கூர்மைக்கு ஆனால் சதாசர்வகாலமும் சாந்தகுமாரி தான்தான் அந்த வீட்டின் அதிபுத்திசாலி என்கிற நினைப்பில் இவரை, குழந்தைகளை விரட்டிக் கொண்டிருப்பாள்.

    அதற்கு காரணமில்லாமல் இல்லை. படித்த பட்டதாரியாய் இருந்தும் வேலையில்லாது திண்டாடித் திரிந்து கொண்டிருந்த ரமணனை தன் மகளுக்கு கட்டி வைத்து. இந்த கம்பெனி பொறுப்பையும் ஒப்படைத்து விட்டோமானால் படித்தவன் ஓரளவு தன் கணிப்பில் அறிவாளி எப்படியும் முன்னேறிவிடுவான் என்று சாந்தகுமாரியின் தகப்பன் நினைத்ததால்தான் ஏழை ரமணன் அந்த கம்பெனிக்கு மானேஜரானான். சிறிய கம்பெனிதான் என்றாலும் ரமணனின் திறமையால் புதிது புதிதாய் வேலைப்பாடுகள் நிரம்பிய உடைகளுக்கு என்று நாலாதிக்கிலிருந்தும் ஆர்டர்கள் வந்து குவிய ஒரே வருடத்தில் ‘சிட்டி கார்மெண்ட்ஸ்’ என்ற பெயரில் நகரின் மையப்பகுதியில் கம்பெனி இடம் மாறியது. அந்த இடமாற்றம் வாழ்க்கையில் பல மாற்றங்களை உண்டுபண்ணியது. சாந்த குமாரியின் அப்பா மண்டையைப் போட, மொத்த கம்பெனிக்கும் ஆஸ்தான உரிமையாளராய் ரமணன் மட்டுமே நின்றார். தன் புத்தி சாதுர்யத்தினால் இரண்டை நாலாலக்கி, நாலை எட்டாக்கி என படிப்படியாய் முன்னேறி இன்று கம்பெனியின் கிளைகள் முக்கிய நகரங்களில்லாம் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

    கிட்டத்தட்ட இருபத்தியைந்து வருட கால கடின உழைப்பு இன்று பலரின் முன் கனவானாய் அவரை நிறுத்தியிருக்கிறது. பணம் பணம் என்று இருபத்தியைந்தில் அடியெடுத்து வைத்தது முதல் மாராதான் ஓட்டம் ஒடிக் கொண்டிருந்தவருக்கு மனசைப் புரிந்து கொள்ள ஆள் இல்லாதது பெரிய பலவீனமாகத் தெரிந்தது எப்போதாவது கடந்தகால நினைவுகளில் அசைபோட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதுண்டு.

    Enjoying the preview?
    Page 1 of 1