Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பேசும் உள்ளம் பேசாத கண்கள்
பேசும் உள்ளம் பேசாத கண்கள்
பேசும் உள்ளம் பேசாத கண்கள்
Ebook162 pages1 hour

பேசும் உள்ளம் பேசாத கண்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த உலகில் விதி தரும் துன்பங்களை விட பிறரின் குத்தல் பேச்சு தரும் துன்பம் மிகவும் கொடுமையானது. விதி தரும் துன்பம் கழுத்தை நெரித்து கொல்வதைப் போல் சட்டென நிகழ்ந்து மறைந்து விடும். குத்தல் பேச்சு சீழ்ப்பிடித்த சிரங்கில் ஊசியை ஆழமாய் இறக்கி எடுப்பதைப் போன்ற வலியைத் தரும்.
 அந்த வலியை இந்த நிமிடம் மிதிலா அனுபவித்தாள். அவளின் பாதங்கள் கல்லூரியின் புல்வெளியில் நோக்கமின்றி நடந்தது. முகத்தில் சோகம் அலையலையாய் பொங்கியது. விழிகள் எதிரே தென்படும் காட்சியை மறைத்தது. புல்வெளியை ஒட்டியிருந்த பூங்காவினுள் நுழைந்தாள்.
 வேதனையான நேரத்தில் அழகான மலர்களும் செடிகளும் சற்று ஆறுதல், மென்மையான காற்று புண்பட்ட மனதை வருடி விடுவதைப் போலிருந்தது. தோளிலிருந்த பையை கழட்டி அங்கிருந்த புல்வெளியில் போட்டு விட்டு அமர்ந்தாள்.
 ச்சை... என்ன மனிதர்கள் இவர்கள்? அடுத்தவர் மனம் புண்பட எப்படி இவர்களால் பேச முடிகிறது. இவர்கள் வெறும் பேராசிரியைகள் மட்டுமா? வீட்டில் கணவனுக்கு மனைவி, குழந்தைக்கு தாய். எல்லா கோணங்களிலும் அன்பை செலுத்த வேண்டிய அவதாரம். ஆனால்... என் அன்பை நானும் சிவாவும் கொண்டிருக்கும் நட்பை எப்படி கேவலப்படுத்தி விட்டார்கள்.
 மனம் நிறைய குப்பையை குவித்துக் கொண்டு குடும்பம் நடத்தும் பெண்கள்.
 அழுக்கை அகத்தில் நிறைத்துக் கொண்டு அறிவை போதிக்கும் ஆசிரியைகள்.
 தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி எப்படி வேண்டுமானால் விமர்சிக்கலாம். தெள்ளத் தெளிவாகத் தெரிந்த ஒரு விஷயத்தை வேண்டுமென்றே தாறுமாறாக விமர்சிப்பதை அறியாமை என்பதா? திமிர் என்பதா? அகம் பாவம் என்பதா?சிவா எனது பால்ய சிநேகிதன் என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்த உண்மை. எனக்கு திருமணம் ஆகியிருந்தால் அவனை என்னோடு இப்படிப் பேசுவார்களா? திருமணம் ஆகாதப் பெண் யாரோடு பேசினாலும் அதைக் காதல் என்ற கோணத்தில் தான் பார்க்க வேண்டுமா?
 திருமணம்!
 ஒரு மனம் தேடிய இன்னொரு மனதை காலமெல்லாம் மணக்கும்படி இணைத்துக் கொள்ளும் இனிய வைபவம். பிறரின் அட்சதையை பெற்று ஆனந்த உலகத்தில் காலடி எடுத்து வைக்கும் நேரம். மனதில் அமர்ந்தவனோடு மணவறையில் அமர்ந்து மங்கல நாண் பெற்று மகிழும் காலம்.
 அப்படி ஒரு காலம் எனக்கு வாய்க்காமல் போனது எதனால்? சுதந்திரத்தை இழந்தவள் போல் இருப்பது எதனால்? சுதந்திரம்!
 தன்னந்தனியாய் பறப்பது சுதந்திரம் அல்ல. ஜோடி சேர்ந்து பறப்பது தான் சுதந்திரம். காதல் வானில் இறகு உரசி பறப்பதில் கிடைக்கும் ஆனந்த சுதந்திரம் தனிமைச் சிறையில் கிடைப்பதில்லை.
 படிப்பதற்கு அவளுக்கு சுதந்திரம் இருந்தது. சிந்திக்க சுதந்திரம் இருந்தது. எண்ணம் போல் வாழும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால்... அந்த வாழ்க்கைத்தான் கிடைக்கவில்லை.
 உறவு என்ற விலங்கு அவள் கைகளைப் பிணைத்திருக்கிறது. கடமை என்ற சிறைக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறாள். அந்த விலங்கு அவளின் வயதைப் பற்றியோ அது ஏறிக் கொண்டிருப்பதைப் பற்றியோ கவலைப்படவில்லை. அவளின் காதல் ஆசைகளை கட்டுப்படுத்துகிறது. கல்யாணக் கனவுகளை அடியோடு அழிக்கிறது. காமத்தைப் பற்றி எண்ணவே தடை விதிக்கிறது.
 இப்படிப்பட்டவர்களை உலகம் விட்டு வைக்குமா? அவளின் தனிமையை யாருடன் இணைத்து இஷ்டத்திற்குப் பேசலாம் என்று ஆரம்பித்து விடும். இலகுவாக மாட்டியவன் சிவா தான்.
 மெளனமாக அமர்ந்திருந்தவளின் தோளில் பனி விழுந்ததைப் போலிருந்தது.
 நிமிர்ந்தாள். விஜயா அவளின் அருகே அமர்ந்தாள்.விஜயா மிதிலாவின் வயதை ஒத்தவள்... அதே கல்லூரியில் பேராசிரியையாக இருப்பவள். மிதிலா இயற்பியல் துறை, விஜயா தமிழ். இருவரும் தோழிகள். விஜயாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. நான்கு வயது பெண் குழந்தைக்குத தாய், விஜயாவை அந்த நேரத்தில் அருகே பார்த்ததும் மிதிலாவிற்கு திடீரென தன் வேதனை விலகியதைப் போன்றிருந்தது.
 வேதனை விலக சிரித்தாள். சிரித்தவளைப் பார்த்து விஜயா கேட்டாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223358336
பேசும் உள்ளம் பேசாத கண்கள்

Read more from R.Sumathi

Related to பேசும் உள்ளம் பேசாத கண்கள்

Related ebooks

Reviews for பேசும் உள்ளம் பேசாத கண்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பேசும் உள்ளம் பேசாத கண்கள் - R.Sumathi

    1

    வகுப்பு முடிந்ததற்கான மணி ஒலித்த போது மிதிலா பாடத்தை நிறுத்தி இடது கையை உயர்த்திப் பார்த்தாள். அவள் அப்படி கையை உயர்த்தி அபிநயமாகப் பார்த்த அந்த அழகை ரசிக்கும் மனநிலையில் இல்லை அந்த வகுப்பு மாணவிகள் மாணவர்கள். மின்சாரம் கிடைத்த விசிறியைப் போல் சுழன்றார்கள். பரபரவென புத்தகங்களை வாரிக் கொண்டனர்.

    மாணவர்கள் கண்களை தாவணிப் பறவைகளின் மீது தவழவிட்டு தேடிய புத்தகங்களை நழுவ விட்டார்கள். கிசுகிசுப்பான ஒலிகள், பரபரப்பான பேச்சுக்கள். கொஞ்சம் சத்தமாய் சிரிப்பொலிகள்.

    தாங்க்யூ மேடம்.

    குட் ஈவினிங் மேடம்...

    விட்டால் போதும் என்ற தொணியில் இந்த வாக்கியங்களை உதிர்த்து விட்டு ஓடினர்.

    மிதிலா கண்ணிமைக்காமல் அந்த மாணவ - மாணவிகளையே பார்த்தாள்.

    ஒரு மணிநேரமாய் தன்னையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டு தன் பாடத்தை காதில் வாங்கிக் கொண்டு சிலையாய் வீற்றிருந்த இவர்களுக்குள் எங்கிருந்து வந்தது இப்படி ஒரு சுறுசுறுப்பு.

    கட்டை அறுத்துக்கொண்டு ஓடும் காளைகளைப் போல்…

    அப்படியே இருக்கையில் அமர்ந்தாள்.

    கையில் ஒட்டியிருந்த சுண்ணாம்புக் கட்டித்தூளை கவனியாதவளாய் கையை கன்னத்தில் வைத்துத் தாங்கிக் கொண்டாள்.

    இந்த மணி சத்தத்திற்குத்தான் எத்தனை சத்தி இருக்கிறது? ஒரு விடுதலையின் நாதத்தைப் போல் அல்லவா இருக்கிறது.

    இந்த மாணவர்கள் மட்டுமா? நானே எனது கல்லூரி நாட்களில் இந்த மணி சத்தம் காதில் ஒலிக்கும் நிமிடத்திற்காக எப்படிக் கிடப்பேன்?

    மணி சத்தத்தைப் பற்றி நினைத்ததும் அவளுக்கு சிவாவின் ஞாபகம் வந்தது. அவனை எண்ணியதுமே மனம் ஒருவித பாசத்தால் சுழன்றது.

    பள்ளி நாட்களில் இந்த மணி சத்தம் கேட்டதும் அவளும் சிவாவும் என்ன வேகத்தில் வகுப்பை விட்டு ஓடி வருவார்கள்? விழுந்தடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடி வருவார்கள்? முதலில் யார் வீட்டை சென்றடைவது என போட்டி. அதுவே பெரியவர்கள் ஆனதும் சைக்கிளில் பறப்பார்கள். பலமுறை அவனை ஜெயிக்க வேண்டும் என்ற வெறியில் சைக்கிளோடு விழுந்திருக்கிறாள். ஒரு முறை விழுந்ததில் வலது கை முறிந்து விட பாவம் சிவா தான் அவளுக்கு பாடங்களை எழுதிக் கொடுத்தான்...

    சிவாவும் அவளும் அடித்த லூட்டிகள்தான் எத்தனை எத்தனை. கல்லூரிப் பருவத்தில் மட்டுமா சின்னஞ்சிறு வயதிலிருந்தே அவர்களின் குறும்புத்தனமான சேட்டைகள் எத்தனை எத்தனை?

    கேலியும் கிண்டலுமாய் வளைய வரும் அந்த சிவா தான் இப்பொழுது எப்படியெல்லாம் மாறிவிட்டான்?

    பணம் பணம் என எந்திரமாய் உழைக்கிறான். எதிர் வீட்டிலிருந்தாலும் அவனைப் பார்க்க முடியவில்லை. பேச முடியவில்லை. அவனைத் தேடிப் போனால் கூட அவன் இருப்பதில்லை.

    அவனைப் பற்றி எண்ணியதும் அவன்மேல் இரக்கம் வழக்கம் போல் சுரந்தது.

    பாவம். வாழ்க்கையில் மிகவும் அடிப்பட்டவன். இன்று உழைக்கின்றான். அளவுக்கு மீறி சம்பாதிக்கிறான்.

    அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவன் பணக்காரனாகி விட்டான். எந்த நேரமும் பிஸினஸ் என அலைகிறான்.

    கல்லூரி நாட்களில் அவனோடு அரட்டையடித்ததைப் போல் இன்றும் அரட்டையடிக்க ஆசைதான். ஆனால் அவனுக்கும் நேரம் இல்லை. இவளுக்கும் நேரம் இல்லை.

    தன் ஆருயிர் தோழன் சிவாவை எண்ணியபடியே அவள் அமர்ந்திருக்க அவளின் நினைவைக் கலைப்பதைப் போல் அந்தக் குரல் ஒலித்தது.

    மேடம்...

    சட்டென பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டு நிமிர்ந்தாள். அவளின் சோர்வு நிரம்பிய விழிகளில் ப்யூன் பட்டான்.

    என்ன? என்றாள். பதிலுக்கு அவன் நீட்டிய நோட்டை வாங்கிப் பார்த்தாள்.

    புதிதாக அந்தக் கல்லூரிக்கு வேலைக்கு வந்திருக்கும் லெக்சரர் ஒருவருக்கு இன்று மாலை வரவேற்பு விழா என்றும், அனைத்து பேராசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கல்லூரியின் முதல்வர் தட்டச்சு செய்த வாக்கியங்களின் கீழ் கையெழுத்திட்டு கூறியிருந்தார்.

    புதிதாக வந்திருந்த அந்தப் பேராசிரியரின் பெயரை பார்க்க மறுபடியும் அதைப் படித்தாள். ‘மதியழகன்’ என்றிருந்தது.

    மெல்ல தன் உதடுகளைப் பிரித்து சொல்லிப் பார்த்தாள். ‘மதியழகன்’ நல்ல பெயர்? கையெழுத்திட்டு ப்யூனிடம் கொடுத்தாள். அவன் சென்றதும் இருக்கையை விட்டு எழுந்தாள். கைப்பையை எடுத்துக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியே வந்தாள்.

    காத்திருந்த காதலனைப் போல் காற்று சேலையைத் தீண்டியது.

    மாணவ - மாணவிகள் கலைந்து சென்று கொண்டிருந்தனர்.

    அவளின் பாதங்கள் எதிர் கட்டிடத்திலிருந்த அறையை நோக்கி சென்றது. உள்ளே நுழைந்த போது இருக்கைகளில் அந்தக் கல்லூரியின் பேராசிரியைகள் அமர்ந்திருந்தனர்.

    அனைவரும் முப்பது வயதிற்கும் மேற்பட்டவர்கள். மடிப்பு விழுந்த இடுப்பும், சதைப் போட்ட தோளும், லேசாய் தொங்கிய கன்னத்து சதையும் முதுமையின் படியில் அவர்கள் காலடி எடுத்து வைத்து விட்டதைப் பறைசாற்றியது. ஒருசில பெண்மணிகள் நரையை முதுமையின் போனஸாய் பெற்று விட்டு வருத்தப்பட்டனர்.

    அந்த முதுமை சூழலில் மிதிலா உள்ளே நுழைந்ததும் மிகவும் இளமையாகத் தெரிந்தாள். மாலை நேரச் சோர்விலும் அவளின் முகம் அழகாக இருந்தது. சின்ன செவ்விதழ்களை பிரித்து குட் ஈவினிங்... என்றாள் பொதுவாக.

    மிதிலா காலியாய் இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தாள். கைப் பையிலிருந்து கைக் குட்டையை எடுத்து முகத்தை அழுத்தி துடைத்தாள்.

    அறிவுக்களை சுடர்விடும் நெற்றியை உடைய அத்தனை அரிவையரும் அந்த ஓய்வு நேரத்திலும் ஒவ்வொரு வேலையில் ஈடுபட்டிருந்தனர். நாற்பது வயதை தொட்டுக் கொண்டிருந்த ஒருத்தி தன் சோடாபுட்டி கண்ணாடி வழியே வினாக்களை தேடிப் பொறுக்கிக் கொண்டிருந்தாள் தேர்விற்காக.

    நெடுநெடுவென உயரமாய் நீண்ட கூந்தலைக் கொண்ட மாது ஒருத்தி பாலகுமாரனின் ‘சிநேகமுள்ள சிங்கத்துடன்’ சிநேகமாயிருந்தாள்.

    சற்று எடுப்பான உடலமைப்புக் கொண்ட இன்னொருத்தி இடது கையில் உள்ளங்கையளவு கண்ணாடியை பதித்துக் கொண்டவளாய் முகத்தில் பவுடர் ஒற்றினாள்.

    மிதிலாவும் தன் கைப்பையிலிருந்து உள்ளங்கையளவு கண்ணாடியை எடுத்து தன் அழகான முகத்தைப் பார்த்தாள். ஒட்டுப் பொட்டை ஒற்றை விரல் கொண்டு அழுத்தினாள். அவளின் விழிகள் இமைக்காமல் கண்ணாடியையே பார்த்தது. வளைந்த புருவத்திற்கு கீழே காலையில் வைத்த மையை தொலைத்து விட்டு தேடிய விழிகள், கண்டுபிடித்து தருவதைப் போல் பாவனைப் புரிந்து கொண்டு துடிக்கும் இமைகள். மூக்கு சரிவில் பூத்த ஒற்றை குறிஞ்சி மலராய் மூக்குத்தி. ஒளி அடங்கத் தொடங்கிய மாலையில் கூட ஒளிர்ந்தது. தவறி விழுந்த இரு ரோஜா இதழ்களாய் உதடுகள். கழுத்தை சுற்றிப் பார்த்து விட்ட மார்பில் விழுந்து மயங்கிய முத்து மாலை.

    இப்படி கண்ணாடிப் பார்க்கும்போது மட்டுமே ஞாபகம் வரும் தன் முகம்...

    மற்ற நேரங்களில் புத்தகமும்... பேனாவும் சாக்பீஸும்.

    எத்தனை நாளைக்குத் தான் நீயே உன் அழகான முகத்தை ரசிச்சுக்கிட்டிருக்கப் போறே? எப்ப ஒருத்தனுக்கு சான்ஸ் தரப் போறே...?

    திடுக்கென இந்தக் குரலில் அதிர்ந்த மிதிலா சட்டென கண்ணாடியிலிருந்து முகத்தை எடுத்தாள். குரலுக்கு உரிய உருவைப் பார்த்தாள். அது - வினாக்களை தடித்தப் புத்தகத்திலிருந்து பொறுக்கிக் கொண்டிருந்த அந்த நாற்பது வயது நரைத்த நங்கை தான் இந்த வார்த்தைகளையும் பொறுக்கி எடுத்து எறிந்தவள்.

    மிதிலா பதிலுக்கு பேசத் தெரியாமல் லேசாய் புன்னகைத்தாள்.

    அந்த நரைத்த நங்கை கண்ணாடி வழியே தன் பெரிய விழிகளால் அவளைப் பார்த்து தடித்த உதடுகளால் சிரித்தாள்.

    சிநேகமுள்ள சிங்கத்தில் ஆழ்ந்திருந்தவள் சட்டென அதை விரோதித்துக் கொண்டவள் போல் புத்தகத்தை மூடி வைத்து விட்டு குறும்பாய் குதர்க்கமாய் ஆரம்பித்தாள்.

    சான்ஸ் கொடுக்காம என்ன? அதான் பர்மனன்ட்டா சிவாவுக்கு கொடுத்திருக்காளே... விழிகளை அனைவரின் மீதும் சுற்றியபடியே அவள் இப்படி சொன்னதும் கொதித்த எண்ணெயை நெஞ்சில் கொட்டியதைப் போல் துடித்தாள் மிதிலா. துடிக்கும் நாக்கை கடித்துக் கொண்டாள். ஆனால் பேசியவள் மறுபடியும் நொடித்துப் பேசினாள் தடித்த வார்த்தைகளால்.

    எத்தனை நாளுக்குத்தான் முகத்தை மட்டும் ரசிப்பான். மத்ததையும் ரசிக்க எப்ப அவனை அனுமதிக்கப் போறே...

    மிஸஸ். கல்யாணி போதும் நிறுத்துங்க. படிக்கிற புத்தகத்துக்கு தகுந்த மாதிரி பேசுங்க.

    கோபம் கொப்பளிக்க மிதிலா கத்த அந்த நரைத்த நங்கை நகைத்தாள்.

    அவள் சொன்னதுல என்னடி தப்பு? உனக்கும் இருபத்தெட்டு வயசாயிட்டு. சிவாவை எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறே?

    மேடம் நீங்களும் இப்படி பேசறீங்களே. உங்களுக்கே தெரியும். சிவா என்னோட நண்பன்.

    இதத்தான் இந்த காலேஜ்க்கு வேலைக்கு வந்ததிலேர்ந்து சொல்லிக்கிட்டிருக்கே. நாங்களும் நம்பிக்கிட்டிருக்கோம். கடைசி வரை சிவாவும் நீயும் நண்பர்கள்னு எப்படி நம்பறது?

    ஏன் நம்பக் கூடாது.

    உனக்கு கல்யாணம் ஆகலியே.

    கல்யாணம் ஆகாதது என் தலையெழுத்து. அதுக்காக சிவாவுக்கு எனக்கும் உள்ள நட்பை தயவுப் பண்ணிக் கொச்சைப் படுத்தாதீங்க.

    கண்ணீர் கொப்பளிக்க சட்டென தன் கைப்பையை எடுத்துத் தன் தோளில் மாட்டிக் கொண்டு விறுவிறுவென அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.

    பின்னால் சிரிப்பொலி கலவையாகக் கேட்டது. அவமானத்தால் அவளின் மனம் சிறுத்தது.

    2

    இந்த உலகில் விதி தரும் துன்பங்களை விட பிறரின் குத்தல் பேச்சு தரும் துன்பம் மிகவும் கொடுமையானது. விதி தரும் துன்பம் கழுத்தை நெரித்து

    Enjoying the preview?
    Page 1 of 1