Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

எப்படி சொல்வேனடி!
எப்படி சொல்வேனடி!
எப்படி சொல்வேனடி!
Ebook160 pages38 minutes

எப்படி சொல்வேனடி!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அவனைக் கண்டதும் மெல்லியதொரு அதிர்வை நெஞ்சில் வாங்கினாள் மான்சி.
 வளையாபதி.
 பெயர் இலக்கிய ரீதியில் இருந்தாலும் தோற்றத்தில் ஸ்டைலாயிருந்தான். உயர்த்தி வாரிய கேசம். கண்களில் கூலிங் க்ளாஸ். கவர்ச்சியான மீசை. பளிச்சென்ற நிறம். அரவிந்த்சாமியின் அழகை ஞாபகப்படுத்தினான்.
 "ஏய்... என்ன பஸ் வரலையா?" என்றான்.
 "வந்து... பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன்."
 "ஏதோ பணத்தோட பர்ஸை மிஸ் பண்ணினமாதிரி இதுக்கா இவ்வளவு சோகமாயிருப்பே?" மீண்டும் சிரித்தான்.
 தன் வருத்தத்தை அவன் வாசித்து விட்டதில் வெட்கப்பட்டாள் மான்சி.
 அந்த வெட்கத்தையும் விவஸ்தை இல்லாமல் அவன் ரசிப்பானோ என்ற பதைபதைப்பில் சட்டென்று சகஜ நிலைக்கு வந்தாள்.
 "சரி. வண்டியிலே உட்கார்."
 "இல்ல வேண்டாம். உங்களுக்கெதுக்கு சிரமம்?

"சிரமமா? ஒரு சமயம் நீ ஐம்பது வயது கிழவியாயிருந்திருந்தா அப்படி நினைச்சிருப்பேன். ஐம்பது கிலோ அல்வா உன்னை சுமக்க என் வண்டி சிரமப்படாது." என்றான்.
 அவனுடைய கண்களில் குறும்பு மின்ன அவள் தன்னையும் மீறி வெட்கமாக சிரித்தாள்.
 "சரி. உட்கார்" இரண்டாம் உத்தரவிற்கு இணங்கினாள். அவன் பின்னால் அமர்ந்தாள்.
 "போகலாமா?"
 "ம்..."
 புறப்பட்டான். வெகு ஜாக்கிரதையாக அமர்ந்திருந்தாள். கவனமெல்லாம் அவன் உடம்பின் மீது தன் உடம்பு பட்டுவிடக் கூடாது என்பதிலேயே குறியாயிருந்தது.
 மோத வைக்கும் மேடு பள்ளங்களில் கூட சர்வ ஜாக்கிரதையாக அமர்ந்திருந்தாள்.
 "பஸ்ஸை எப்படி மிஸ் பண்ணினே? ஏதாவது ஸ்பெஷல் க்ளாஸா?"
 "அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஒரு ஃபிரண்டோட பேசிக்கிட்டே வந்ததுல லேட்டாயிட்டு."
 "ம்... படிப்பெல்லாம் எப்படியிருக்கு?"
 "ம்... படிக்கிறேன்."
 அவன் கல்லூரியைப் பற்றி ஏதேதோ பேசியபடி வந்தான். அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் வீட்டிற்கு வந்தனர்.
 இறங்கிக் கொண்ட மான்சி "தேங்க் யூ..." என்றாள்.
 அவன் சிரித்தான். "தேங்க்ஸ் எதுக்கு? நான் என்ன அந்நியனா?"
 "ஐயய்யோ..." அவள் போலியாகக் கண்களில் மிரட்சி காட்டினாள்.
 "என்னாச்சு?உங்களை அந்நியனா நினைச்சா என்னாகறது? அப்பறம் நீங்க பாட்டுக்கு முடியையெல்லாம் முன்னாடி தொங்கவிட்டுக்கிட்டு விக்ரம் ஸ்டைல்ல ரோட்ல நடந்தா பார்க்க நல்லாயிருக்குமா?"
 மான்சி கலகலவென சிரிக்க - வளையாபதியும் அந்த சிரிப்பில் கலந்து கொண்டான்.
 வீடு பூட்டியிருந்தது.
 "என்ன... வீடு பூட்டியிருக்கு?  அம்மா இல்லையா?"
 "அம்மா இங்கதான் எங்காவது கோயில் கடைன்னு போயிருப்பாங்க. என்கிட்டே ஒரு சாவியிருக்கு. வாங்க." என படிகளில் ஏறி பூட்டைத் திறந்தாள்.
 மறுபடியும் திரும்பி "வாங்க வளையாபதி" என்றாள்.
 "இல்லே மான்சி. நான் கிளம்பறேன்."
 "இவ்வளவு தூரம் என்னைக் கொண்டு வந்து விட்டிருக்கீங்க. ஒரு காபி சாப்பிட்டுட்டு போகலாமே!"
 "ஓ.கே." என உள்ளே வந்தான்.
 "உட்காருங்க. காபி கொண்டு வர்றேன்" என்றாள்.
 "காபியோட சேர்த்து டிபன் ஏதாவது கிடைச்சா நல்லாயிருக்கும்" என்றான்.
 அவள் சிரித்தாள்.
 "கண்டிப்பா. அம்மா தினமும் எனக்காக ஏதாவது டிபன் செய்து வச்சிருப்பாங்க. இன்னைக்கு என்னயிருக்குன்னு பார்க்கிறேன்" என்றபடியே உடையைக் கூட மாற்றாமல் சமையலறைக்குள் நுழைந்தாள். மூடியிருந்த பாத்திரங்களைத் திறந்து பார்த்தாள்.
 முளைகட்டிய பச்சைப் பயறு சுண்டல் செய்து கேரட்டும், தேங்காய்பூவும் தூவி வைத்திருந்தாள் அம்மா.
 அகல கிண்ணத்தில் அதை வைத்து ஸ்பூனுடன் கொண்டு வந்தாள்.
 "அம்மா சுண்டல் செய்திருக்காங்க. சாப்பிடுங்க. நான் காபி கலந்து எடுத்து வர்றேன்" என உள்ளே சென்றாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223647904
எப்படி சொல்வேனடி!

Read more from R.Sumathi

Related to எப்படி சொல்வேனடி!

Related ebooks

Related categories

Reviews for எப்படி சொல்வேனடி!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    எப்படி சொல்வேனடி! - R.Sumathi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    கல்லூரியின் மணியோசை இனிமையாக ஒலித்தது. பேராசிரியை புத்தகத்தை மூடினார். மாணவ, மாணவிகள் எழுந்து நன்றி சொன்னதும் அதை வாங்கிக் கொண்டு நகர்ந்தார்.

    வகுப்பே ‘சுந்தரவனம்’ போன்றிருந்தது. எல்லாம் சுடிதார் சுந்தரிகள். ஒற்றைப் பின்னல், இரட்டைப் பின்னல், ஒருங்கிணைத்துக் கட்டிய குதிரைவால், ஒரேயடியாக விரித்துவிட்ட கூந்தல் என விதவிதமான சிகையலங்காரம்.

    எளிமையாக நகையலங்காரம். கட்டழகு சிலைகள் கல்வி கற்ற களைப்பில் புத்தகங்களைப் பொறுக்கினர் புறப்படுவதற்காக.

    கவர்ச்சியான தன் அழகை இந்தக் கலியுகம் பார்த்து விடக்கூடாது என்பதைப் போல் புத்தகத்தை நெஞ்சில் கவிழ்த்தபடி தன் வகுப்பை விட்டு வெளியே வந்தாள் மான்சி.

    கடைசி எழுத்தை எடுத்துவிடலாம் என்ற ஆசை வரும்படி மான் போலவேயிருந்தாள். மான்விழிகளில் தேன் கலந்த இதழ்கள். ஆண்மகனைப் பின்னால் சுற்ற வைக்கும் அழகு.

    விழிகளால் யாரையோ தேடினாள். அதற்கு விடைபோல் வந்தாள் வேணி. ஏணியைப் போல் சற்று கூடுதல் உயரம். இன்னும் கொஞ்சம் சதைபோட்டிருக்கலாம் என இளைஞர்கள் கவலைப்படும் உடல்வாகு. மான்சிக்கு அருகில் வந்து நின்று அவளுக்கு மதிப்பெண்ணை அதிகமாக்கினாள்.

    என்னடி பின் பெஞ்சுல உட்கார்ந்து நல்லாத் தூங்கிட்டியா? பெல் அடிச்சு எவ்வளவு நேரமாகுது. ஆடி அசைஞ்சு வர்றே? இப்படி வந்தா பஸ் போய்டும் என்று அழகு விழிகளை கோபத்திற்கு பழக்கினாள் மான்சி.

    மான்சி, நீ எனக்காகக் காத்திருக்க வேண்டாம். நீ கிளம்பு. எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு. வேணி அவளுடன் நடந்தபடியே சொன்னாள்.

    ஏன்? லைப்ரரிக்கு போறியா?

    இல்லை. ஆமா...

    ஏன் பொய் சொல்றே? பிரபுகூட எங்காவது போறியா? - வேணியின் முகத்தில் வெட்கம் தற்காலிகமாகத் தோன்றி மறைந்தது.

    ஆமா! வெளியில ஹோட்டலுக்குப் போய் டிபன் சாபிட்டுட்டு போகலாம்னு...

    வேணி... சொல்றேன்னு தப்பா நினைக்காதே. இந்தக் காதல் கண்றாவியெல்லாம் வேண்டாம்... விட்டு விடு.

    விளையாடற வயசுல விவேகானந்தர் மாதிரி பேசாதே. காதலிக்கற பருவம் இதுதான்! இந்த வயசுல காதலிக்காம வேற எப்போ காதலிக்கறதாம்?

    நீ சொல்றது சரிதான். ஆனா... காதலிச்சா மட்டும் போதாது. அதுல ஜெயிக்கணும். அப்பத்தான் வாழ்க்கை சந்தோஷமாயிருக்கும். ஒருவேளை தோத்துப் போய்ட்டா அதைத் தாங்கிக்கற பக்குவமும், தைரியமும் வேணும். அப்படியே பக்குவமும் தைரியமும் இருந்தாலும் தோற்றுப் போன காதல் ஒரு மூலைல இருந்துக்கிட்டு காலம் முழுவதும் ஒரு வேதனையையும், உறுத்தலையும் தந்துக்கிட்டுதானேயிருக்கும்?

    உனக்கு எப்பவுமே நெகட்டிவ் சிந்தனைதான். நல்லதே நினைக்கமாட்டியா?

    வேணியின் முகத்தில் எரிச்சல் படர்ந்தது.

    காலம் அப்படியிருக்கு வேணி. காதல்ங்கறது ஒரு வாழ்க்கைங்கறது போய் இப்போ அது ஒரு பொழுதுபோக்கு மாதிரி ஆயிட்டு.

    அப்போ... நானும் பொழுதுபோக்கா காதலிக்கிறேன்னு சொல்ல வர்றியா?

    ச்சே! நான் அப்படியெல்லாம் சொல்லலை. இந்தக் காலத்து ஆண்கள் மேல நம்பிக்கை குறைஞ்சுட்டு. பசங்க சரியில்லை.

    இருவரும் காலேஜ் வாசலுக்கு வந்துவிட்டனர்.

    அப்படின்னா... பிரபு சரியில்லைன்னு சொல்றியா? அவனைக் கெட்டவன்னு நினைக்கறியா?

    இல்லை. ஆனா... அவன் காலேஜ்ல உன்கூட பழக்கமானதிலிருந்துதான் உனக்குத் தெரியும். அவன் பெங்களூர்லயிருந்து இங்க வந்து தங்கிப் படிக்கிறான். அவன் எப்படி, குடும்பம் எப்படின்னு எதுவுமே தெரியாம நீ அவனைக் காதலிக்கிறியே...

    இதைக்கேட்டு கலகலவென சிரித்தாள் வேணி. சிரிப்பில் அதிக அளவில் இருந்தது அலட்சியம்தான்.

    நீ சொல்றதைப் பார்த்தா குலம் கோத்திரமெல்லாம் பார்த்து ஜாதகம் பார்த்து சரியாயிருந்தா மட்டும் காதலிக்கச் சொல்வே போலிருக்கே? இது காதல்டி. கல்யாணம் இல்லை.

    அதனாலதான் சொல்றேன். குலம் கோத்ரம், ஜாதகம் பார்த்து ஆயிரம் பேர் சாட்சியா நின்னு நடத்தற கல்யாணமே இப்பவெல்லாம் சரியாயிருக்கறதில்லை. இந்த லட்சணத்துல எங்கயிருந்தோ படிக்க வந்தவனை நீ விரும்பறது ஏனோ எனக்கு சரியாப்படலை. இந்தக் காலத்துல நாளைய வாழ்க்கைக்கு சம்பாதிச்சு வச்சுக்கிட்டாத்தான் பாதுகாப்பு. வாழ்க்கையில ஒவ்வொரு விஷயத்திலேயும் பாதுகாப்பா இருக்க வேண்டியது முக்கியம். இந்த வயசுல மனசை செலவு பண்ணாம சேமிச்சு அப்படியே வச்சிடணும். அப்பத்தான் கல்யாண வாழ்க்கை பாதுகாப்பாயிருக்கும்.

    அப்படின்னா நீ யாரையுமே காதலிக்க மாட்டியா?

    நோ. யாரையும் காதலிக்க மாட்டேன். வாழ்க்கையை சந்தோஷமா வாழணும்னு நினைக்கிற யாரும் காதல் வலையில விழ மாட்டாங்க. நானும் அப்படித்தான். நிறைய படிக்கணும். அம்மா பார்த்து வைக்கற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கணும். சந்தோஷமா வாழ்க்கை நடத்தணும். டென்ஷன் இல்லாம வாழ்க்கை போகணும்.

    வேணி வேண்டுமென்றே பெரிதாக சிரித்தாள்.

    இப்படி சொன்ன எத்தனை பேரை பார்த்திருக்கேன்? நீ மட்டும் இதுக்கு விதிவிலக்கா என்ன? ‘விழாமலே இருக்க முடியுமா? விழுந்து விட்டேன் காதல் வலையிலே’ன்னு ஒருநாள் எவன் கூடவாவது டூயட் பாடப்போறே பாரு.

    அதெல்லாம் நிச்சயமா நடக்காது.

    உன்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா ஆளைக் கவிழ்க்கறமாதிரியான இந்த அழகுமேல நம்பிக்கை இல்லை. என் அழகிலேயே ஒருத்தன் மயங்கி என்னைக் காதலிக்கும்போது ஆண் உலகம் உன்னை சும்மாவிடுமா? இப்போதே எத்தனை பேர் கனவை நீ ஆக்ரமிச்சுட்டிருக்கியோ? எத்தனை பேர் ‘சொல்லாமலே...’ ஸ்டைல்ல காதலிக்கிறான்களோ?

    Enjoying the preview?
    Page 1 of 1