Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

என் உயிரே!
என் உயிரே!
என் உயிரே!
Ebook140 pages51 minutes

என் உயிரே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஸ்ஸ ரிரி கக மம பப தத நிநி ஸஸ
 ஸஸ நிநி தத பப மம கக ரிரி ஸஸ...'
 எதிரே அப்பொழுதுதான் இதழ் விரித்த ரோஜாவாய் தன் சிவந்த இதழ்களை விரித்து, பிஞ்சுக் கைகளால் தொடையில் தாளம் தட்டியபடியே பாடிய மதுராணியை முதுகில் தட்டி "சபாஷ் என்றாள் ரஞ்சிதம்.
 "மதுக்குட்டி... அருமையாப் பாடறே. நாளைக்கு இதெல்லாம் ப்ராக்டீஸ் பண்ணியிருக்கணும் என்ன?" என்றாள்.
 "எஸ்... மிஸ்" என்றவாறே தன் சங்கீத சம்பந்தப்பட்ட புத்தகங்களையும், நோட்டையும் திரட்டிக் கொண்டு தன் குட்டைப் பாவாடை குடைபோல் விரிய அழகாய் குதிரை வாலை ஆட்டியபடியே உள்ளே ஓடினாள் மதுராணி.
 அவள் தத்தி தத்தி அழகாய் ஓடும் அழகையே கண்ணிமைக்காமல் ஒரு கணம் பார்த்து ரசித்தாள் ரஞ்சிதம்.
 அவளும்தான் எதிர்பார்த்தாள்! இப்படி ஒரு அழகை தன் அக்காள் வசந்தி தருவாள் என்று எங்கே... ஐந்து வருடம் முழுசாய் ஓடிவிட்டது.
 'சித்தி... சித்தி...' என்று சிறிய வாய் திறந்து சிதறும் வார்த்தைகளுக்காக அவளின் சிந்தையும்தான் ஏங்கியது.
 பெருமூச்சுடன் எழுந்தாள். ஆர்மோனியப் பெட்டியை அதன் இடத்தில் வைத்துவிட்டு தரையில் விரித்திருந்த ஜமக்காளத்தை மடித்து சோபாவில் வைத்துவிட்டு உட்கார்ந்ததால் உண்டான புடவைக் கசங்கலைச் சரிசெய்தபடியே தன் கைப்பையை எடுத்து தோளில் மாட்டியபோது மதுராணியின் தாய் வந்தாள். அவள் கையில் அந்த மாத சம்பளம்.
 "மிஸ்"
 நிமிர்ந்து சிரித்தாள் ரஞ்சிதம்.
 "இந்த மாச பீஸ் இந்தாங்க"தாங்க்யூ..." கை நீட்டி வாங்கி பேகில் நுழைத்துக் கொண்டு மறுபடியும் சிரித்துவிட்டு "நான் வர்றேன்" என்று கூறிவிட்டு வெளியே வந்தாள். ஹாலில் நடந்தபோது ஏனோ அவளுக்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மையும் அவமானமும் சூழ்ந்தது.
 இப்படி பணக்கார வீட்டுப் படியேறி பாட்டு சொல்லித் தரும் தன் ஏழ்மையின் மேல் அவளுக்கு எரிச்சல் வந்தது. வீட்டில் பாட்டு சொல்லித் தந்தால் ஒருவருக்கு ஐம்பது ரூபாய் இதுபோல் வீட்டிற்கு வந்து சொல்லித் தருவதால் முன்னூறு ரூபாய். அவள் காலையில் வீட்டிலும் சொல்லித் தந்துவிட்டு இப்படி மாலையில் பணக்காரப் படியேறி... ஒருபுறம் தன்மானம் அரித்தது. படித்த படிப்பு சில சமயம் கால்களைத் தயங்க வைக்கத்தான் செய்கிறது. ஆனால் வறுமைக்கு அபார சக்தி. எல்லாவற்றையும் அது வென்று விடுகிறது.
 அப்பாவோ... அண்ணன் ஒருவனோ இருந்திருந்தால் இந்த நிலை வருமா? மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய வயதில்தான் இப்படி மன வேதனையோடு...'
 'என்ன பெண் நான்? எத்தனைப் பெண்கள் உடலை வருத்தி காலையிலிருந்து மாலை வரை உழைத்து சம்பாதிக்கிறார்கள்? வாழ்க்கையோடு போராடுகிறார்கள். நான் என்ன உழைக்கிறேன். தொடையில் தாளம் தட்டிப் பாடவே கசக்கிறதா? வீட்டு வேலைக்குப் போயெல்லாம் பெண்கள் வேலை செய்யவில்லையா? நான் அந்த மாதிரியா கஷ்டப்படுகிறேன்'
 மனம் என்னதான் சமாதானம் சொன்னாலும் அவளுக்கு இறுக்கமான மனநிலை குறையவில்லை.
 நாலெழுத்துப் படித்து விட்டாலே கவுரவம் வந்து ஒட்டிக் கொள்கிறது. பிறருக்கு தலைவணங்க மறுக்கிறது என்பதை மட்டும் தெள்ளத் தெளிவாக அவள் உணர்ந்து கொண்டாள்.
 வாசலுக்கு வந்து செருப்பில் கால் நுழைத்தபோது 'இன்னும் இரண்டு நாளில் நான் உன் பாதங்களை விட்டுப் போய் விடுவேன்' என்று பயமுறுத்தியது, கடைசிக் கட்டத்தில் இருந்த தேய்ந்த செருப்பு.
 சிரிப்பு வந்தது. தெருவில் இறங்கி நடந்தபோது அடுத்த தெரு போகும் ஆசை வந்தது. ஏழாம் நம்பர் வீட்டுக்குப் போகும் ஆசை வந்தது. நினைத்த மாத்திரத்திலேயே மகிழ்ச்சியும் உற்சாகமும் ஒருவிதப் படபடப்பும் இணைந்து வந்தது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 7, 2023
ISBN9798223550952
என் உயிரே!

Read more from R.Sumathi

Related to என் உயிரே!

Related ebooks

Reviews for என் உயிரே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    என் உயிரே! - R.Sumathi

    1

    வசந்தி கலவரமாய் கடிகாரத்தைப் பார்த்தாள். மாலை ஐந்தாகிவிட்டது. சுந்தரேசன் வரும் நேரம். மதியம் இரண்டு மணியிலிருந்து இவள் சித்தம் கலங்கியதைப் போல் இப்படியே உட்கார்ந்திருக்கிறாள். சரியாகக்கூட சாப்பிடவில்லை. குளிக்கக்கூட இல்லை. இந்த சோபாவிலேயே ஐக்கியமாகிக் கிடக்கிறாள். கொஞ்ச நேரம் படுப்பதும் கொஞ்ச நேரம் உட்காருவதும், எதையாவது யோசனை செய்வதும், கண் கலங்குவதும் இப்படியே ஐந்து மணி வரை பொழுது போனது.

    சுந்தரேசன் நல்லவனா? கெட்டவனா? தெரிந்து கொள்ள சரியாக ஐந்து வருஷம்கூட அவளுக்குப் போதவில்லை. இன்னும் அவளால் அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவளுக்கு கல்யாணம் ஆகும்போது அவளின் தந்தை இருந்தார். போட்ட நகையை ஏற்றுக்கொண்டு எந்த சீர்செனத்தி என்றும் வாய் திறக்காது நல்ல மருமகனாய் பெயர் எடுத்தான். அவள் வீட்டிற்கு மூத்த மகள். அதிக செல்லமும் அன்பும் கொடுத்து வளர்க்கப்பட்டவள். அவளின் திருமணத்தை தந்தை வெகு விமரிசையாக செய்து வைத்தார். இந்த ஐந்து வருடத்தில் அவளை அவன் ஒருநாளும் முகம் கோணப் பேசியதில்லை. ஆனால் கொஞ்ச நாளாய் அவனுடைய பேச்சு அவளை மிகவும் சங்கடப்படுத்தியது.

    ஏன்?

    எதனால்?

    காலையில் நடந்த சம்பாஷணையை அவள் மீண்டும் மனத்திரையில் ஓடவிட்டாள்.

    வசந்தி...

    மிக்ஸியில் சட்னி அரைத்துக் கொண்டிருந்த வசந்தி திரும்பினாள்.

    என்னங்க?

    சாயந்தரம் அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்பியிரு சட்டைக்கு பட்டன் போட்டவாறே சொன்னவனிடம் முகத்தில் மகிழ்ச்சி ஜொலிக்க அருகே வந்து அவன் மூக்கை செல்லமாய் பிடித்தவாறே கேட்டாள்.

    சினிமாவுக்கா?

    இல்லை...

    பின்னே ஆபீஸ்ல ஏதாவது பங்ஷனா?

    இல்லை...

    வேற எங்கே?

    மூக்கைப் பிடித்து ஆட்டிய அவளின் கையை ‘வெடுக்’ கெனத் தட்டிவிட்டவாறே உறுமல் போல் ஒரு குரலில் சொன்னான்.

    ஹாஸ்பிடலுக்கு

    ஏன்... எனக்கென்ன? நான் நல்லாத்தானே இருக்கேன். எனக்கு ஒண்ணுமில்லையே!

    உனக்கு ஒண்ணுமில்லையேன்னுதான் கூப்பிடுறேன்.

    என்ன சொல்றீங்க?

    நமக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆயிட்டுது. ஆனா உன் வயித்துல ஒண்ணுமே உற்பத்தி ஆகலை.

    பளாரென கன்னத்தில் அறைந்ததைப் போல் துடித்தாள்.

    நான் டாக்டர்கிட்ட என்னைத் தரோவா செக் பண்ணிட்டேன் என்கிட்ட எந்தக் குறையும் இல்லை.

    சில கணம் மவுனமாக இருந்தாள். பின் சொன்னாள். சரி... உங்ககிட்ட குறை இல்லைன்னா என்கிட்ட குறை இருக்குனு நினைக்கிறீங்க இல்லையா?

    ஆமா

    சரி! அப்படியே இருந்துட்டுப் போகட்டும். உண்மைதான் தெரிஞ்சிடுச்சி. அப்புறம் எதுக்கு டாக்டர் வீட்டுக்குப் போகணும்?

    அவங்க வாயால் உறுதியா சொல்லட்டுமேன்னுதான்!

    சொன்ன பிறகு மட்டும் என்ன ஆகப் போவுது?

    எவ்வளவோ

    எவ்வளவோன்னா?

    இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாமில்லையா?

    சாட்டை கொண்டு வெற்றுமேனியில் அடித்ததைப் போல் துடித்தாள் வசந்தி.

    என்ன சொன்னீங்க? இன்னொரு கல்யாணம் பண்ணிக்கம் போறீங்களா? இப்படிச் சொல்ல வெட்கமாயில்லை உங்களுக்கு?

    எனக்கென்ன வெட்கம்? எனக்குப் புள்ளை வேணும் உன்னால தரமுடியலைன்னா கண்டிப்பா நான் வேற கல்யாணம் பண்ணிக்கத்தான் போறேன்.

    இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்.

    என்ன செய்வே? கோர்ட்ல கேஸ் போடுவியா? கையில பணபலம் இருந்தா போடு.

    வசந்தி வெகுண்டாள்.

    நான் ஒரு வேலை பார்க்குற அளவுக்கு படிக்காதவ. பணம் சம்பாதிக்கத் தகுதி இல்லாதவ, அதனாலதானே இப்படி பேசறீங்க!

    புரிஞ்சுகிட்டா சரி...

    வசந்தி அழுதாள்.

    ‘ஒரு பெண் எதுவுமே இல்லாமல் எல்லோரையும் எதிர்த்து வாழ முடியும். ஆனால், பொருளாதாரமும் தன்னம்பிக்கையும் இல்லாமல் கட்டியவனை எதிர்த்து வாழ முடியவில்லை.’

    வசந்தி ஐந்தாவது படித்ததே அதிகம் என்று நிறுத்திவிட்டார் தந்தை. வயது வந்த நாள் தொடங்கி வரன் தேடினார் சுந்தரேசன் கிடைத்ததும் கட்டி வைத்துவிட்டார்.

    வசந்தி எவ்வளவோ பிடிவாதம் பிடித்தாள். ‘என் படிப்பை நிறுத்தாதீங்க...’ என்று.

    யார் கேட்டார்கள்?

    அப்பா ஆரம்பப் பள்ளி ஆசிரியர். இரண்டு பெண்கள். சொற்ப சம்பளம். வாடகை வீடு. எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை. முடியாத உடல்நிலை வேறு. மனைவிக்கு பாரமாய் வைத்துவிட்டு போய்விடக் கூடாதே என்ற கவலையில் அவசர அவசரமாய் வசந்திக்கு திருமணம் முடித்தபோது அவளுக்கு வயது பதினெட்டு. இளையவள் ரஞ்சிதம், வசந்திக்கு இரண்டு வயது சிறியவள்.

    அப்பா இறந்த பின் அவரின் பென்ஷன் தொகையும், ரஞ்சிதம் பாட்டு சொல்லித் தந்து வரும் பணத்திலுமே குடும்பம் ஓடுகிறது. அதிலும் சீக்கு சீக்கு என அடிக்கடி படுத்துக் கொள்ளும் அம்மா.

    நான்கு நாள் விருந்துக்கு சென்றால் மூன்றாம் நாளே கிளம்பச் சொல்லும் கஷ்டம். மகள் நன்றாய் வாழ்கிறாள் என்ற எண்ணம் தாய்க்கு. அவளும் நன்றாகத்தான் வாழ்ந்தாள். இனி வாழ்வதுதான் இயலாத காரியமாய் தோன்றியது.

    சுந்தரேசனை விலகி எங்கே போவாள்? ஒரு டெய்லரிங்கூட சொல்லித் தராத தன் குடும்பத்து மேல் ஆத்திரம் வந்தது.

    தாய் வீட்டோடு போய் இருப்பது என்பது எப்படி முடியும்? அவளால் அப்படி இருக்கத்தான் முடியுமா?

    கணவன்மேல் அளவு கடந்த காதலும் பாசமும் வைத்திருக்கிறாள். அவனைப் பிரிந்து வாழ்வதென்பது முடிகிற காரியமா? அதே சமயத்தில் அவன் இன்னொருத்தியுடன் வாழும்போது அதைப் பார்த்துக் கொண்டு இருக்கத்தான் முடியுமா?

    இன்னொருத்திக்கு, பிறக்கப் போகும் குழந்தை அவளை குரூரப்படுத்தி விடாதா?

    நெஞ்சம் வெடித்து விடும் நிலையில் தஞ்சம் எதுவுமில்லாமல் அவள் தவித்து திணறியபோது கதவு திறக்கும் ஓசை கேட்டது. தலை திருப்பி பார்வையை வாசலில் போட்டாள். சுந்தரேசன் உள்ளே நுழைந்தான்.

    சட்டையை கழட்டி மாட்டியபடியே அவளைப் பார்த்தான். கலங்கிய கண்களுடன் உட்கார்ந்திருந்த வசந்தியைப் பார்த்து கர்ஜித்தான்.

    ஏய்... காலையில சொல்லிட்டு போனவன் என்ன மடையனா?

    அவனுடைய கேள்விக்கு அவள் விசும்பினாள்.

    இங்க பார்... இப்ப எதுக்கு அழுவறே?

    வேண்டாங்க என்னை விட்டுடாதீங்க.

    டெஸ்ட்ல உனக்கு ஒரு குறையும் இல்லேன்னு சொல்லிட்டா நான் வேற கல்யாணம் பண்ணிக்கமாட்டேன். குழந்தைக்காக வெயிட் பண்ணலாம். ஆனா உனக்குத் தாயாகற தகுதி இல்லைன்னா என் முடிவில் மாற்றமில்லே. புடவையை மாத்திக்கிட்டு கிளம்பு.

    சொல்லிவிட்டு அவன் முகம் கழுவ உள்ளே சென்றுவிட்டான்.

    வசந்தி குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

    2

    ‘ஸ்ஸ ரிரி கக மம பப தத நிநி ஸஸ

    ஸஸ நிநி தத பப மம கக ரிரி ஸஸ...’

    எதிரே அப்பொழுதுதான் இதழ் விரித்த ரோஜாவாய் தன் சிவந்த இதழ்களை விரித்து, பிஞ்சுக் கைகளால் தொடையில் தாளம் தட்டியபடியே பாடிய மதுராணியை முதுகில் தட்டி "சபாஷ் என்றாள் ரஞ்சிதம்.

    மதுக்குட்டி... அருமையாப் பாடறே. நாளைக்கு இதெல்லாம் ப்ராக்டீஸ் பண்ணியிருக்கணும் என்ன? என்றாள்.

    எஸ்... மிஸ் என்றவாறே தன் சங்கீத சம்பந்தப்பட்ட புத்தகங்களையும், நோட்டையும் திரட்டிக் கொண்டு தன் குட்டைப் பாவாடை குடைபோல் விரிய அழகாய் குதிரை வாலை ஆட்டியபடியே உள்ளே ஓடினாள் மதுராணி.

    அவள் தத்தி தத்தி அழகாய் ஓடும் அழகையே கண்ணிமைக்காமல் ஒரு கணம் பார்த்து ரசித்தாள் ரஞ்சிதம்.

    அவளும்தான் எதிர்பார்த்தாள்! இப்படி ஒரு அழகை தன் அக்காள் வசந்தி தருவாள் என்று எங்கே... ஐந்து வருடம் முழுசாய் ஓடிவிட்டது.

    ‘சித்தி... சித்தி...’ என்று சிறிய வாய் திறந்து சிதறும் வார்த்தைகளுக்காக அவளின் சிந்தையும்தான் ஏங்கியது.

    பெருமூச்சுடன் எழுந்தாள். ஆர்மோனியப் பெட்டியை அதன் இடத்தில் வைத்துவிட்டு தரையில் விரித்திருந்த ஜமக்காளத்தை மடித்து சோபாவில் வைத்துவிட்டு உட்கார்ந்ததால் உண்டான புடவைக் கசங்கலைச் சரிசெய்தபடியே தன் கைப்பையை எடுத்து தோளில் மாட்டியபோது மதுராணியின் தாய் வந்தாள். அவள் கையில் அந்த மாத சம்பளம்.

    Enjoying the preview?
    Page 1 of 1