Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஊஞ்சலாடும் நெஞ்சம்
ஊஞ்சலாடும் நெஞ்சம்
ஊஞ்சலாடும் நெஞ்சம்
Ebook121 pages41 minutes

ஊஞ்சலாடும் நெஞ்சம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"அம்மா... அப்பா சாப்பிட வரலையா?"
 கேட்டபடியே சாப்பாட்டு மேஜையின் முன் அமர்ந்தாள், மீனா. கருநீலநிற இரவு உடையில் கலக்கலாக இருந்தாள். அது, அவளுடைய நிறத்தையும் எடுப்பான பிரதேசங்களையும் கூடுதலாக்கிக் காட்டியது.
 உணவு வகைகளைச் சமையலறையிலிருந்து இடம் மாற்றிக் கொண்டிருந்த சிவகாமி, நிமிர்ந்தாள்.
 "அப்பாவுக்கு கோபம். உன்னோடு சேர்ந்து சாப்பிட மாட்டாராம்."
 இடது கையைக் கன்னத்தில் தாங்கி, சிரிப்பை மறைத்து, கவலையோடு சொன்னாள், மீனா.
 "என்மேல் என்ன கோபம்...?"
 "கல்யாணப் பேச்சை எடுத்ததும் 'இப்ப கல்யாணம் வேண்டாம்'னு முகத்தில் அடிச்ச மாதிரி சொன்னியாமே! அப்பா கோபமாயிருக்கார்."
 அதைக் கேட்டதும் இருக்கையை விட்டு எழுந்தாள். அம்மாவின் அருகே வந்து நின்றாள். இடுப்பில் கை பதித்தபடி ஆவேசமாகச் சொன்னாள்.
 "பலமாய் புத்திமதி சொல்லிட்டு மறுநிமிடமே உனக்குக் கல்யாணம்னா எப்படியிருக்கும்? நான் இன்னும் மருத்துவத்தில் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு. அப்பா மாதிரி நிறைய படிக்கணும். அதுக்குள்ள அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டா எப்படி சாதிக்க முடியும்?"
 மலர்ந்த முல்லைப் பூக்களைப் போன்ற அன்னத்தைத் தட்டில் சரித்த சிவகாமி புருவத்தைச் சுருக்கினாள்.
 "கல்யாணம் பண்ணிக்கிட்டா எதையும் சாதிக்க முடியாதா? கியூரி அம்மையாரும், இந்திரா காந்தியும் சாதிச்சது கல்யாணம் முடிச்ச பிறகுதானே?"
 "புரிஞ்சுக்காத புருசன் கிடைக்காட்டா பிரச்சினைதானே?"தப்பு... புரிஞ்சுக்காத வரைதான் பிரச்சினை. புரிஞ்சுக்கிட்டா அவங்களே நமக்கு பாதை போட்டு வசதி பண்ணித் தருவாங்க. "சாதிக்கணும்னு வாழுறவங்க பொறுமையா இருக்கணும்."
 "இல்லை... எனக்கு சுதந்திரம் வேணும்."
 "அதுக்கு அருமையான வழி இருக்கு. அன்பு வழி. அகிம்சை வழி. அண்ணல் காந்தி சொன்ன வழி. கட்டின
 புருஷன்கிட்ட இந்த ரெண்டு வழியிலேயும் பூரண சுதந்திரத்தைப் பெறலாம்."
 "அம்மா... சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கத் தெரியாம, அதை அன்னியன் கையில கொடுத்துட்டு அதை மீட்க அன்பு வழியிலும் அகிம்சை வழியிலும் கெஞ்சணுமா? காந்தி வழியெல்லாம் இனி சரிப்பட்டு வராது."
 "நாங்க சிறகொடிந்த பறவையா ஆயிட்டோம். வயசுங்கிற சிறகு தளர்ந்து போயிடுச்சு, எல்லையை நோக்கிப் போய்க் கிட்டிருக்கோம். முதுமையும் குழந்தைப் பருவம் மாதிரிதானே. குழந்தைகளோட கொஞ்சி விளையாடணும்னு ஆசை வந்துடுச்சு."
 "இவ்வளவுதானா? நம் அக்கம் பக்கத்துல குழந்தைகளுக்கா பஞ்சம்? அழைச்சு விளையாட வேண்டியதுதானே?"
 "எனக்குத் தேவை என் குழந்தையோட குழந்தை."
 "நீயே என்னைக் குழந்தைங்கிறே... குழந்தைத் திருமணத்தை எப்பவோ தடை செஞ்சாச்சும்மா!"
 "அடி வாங்கப்போறே! அந்தப் பையனுக்கென்ன குறைச்சல்? அவனும் உன்னை மாதிரி டாக்டர். அப்பாவோட நண்பரின் மகன். அவனுக்குப் பொண்ணு கொடுக்க நான் நீன்னு ஏகப்பட்ட போட்டி. உனக்குத் தெரியுமா? நீ கல்யாணத்துக்குச் சம்மதித்தால் தான் சாப்பிடுவேன்னு அப்பா உண்ணாவிரதம் இருக்கார். நீயாச்சு உங்க அப்பாவாச்சு."
 "அய்யோ... என்னம்மா இது?"
 "நீயே வந்து வயிறு முட்டச் சாப்பிடு. அவருக்கு பிடிச்ச பலகாரம் எல்லாம் ஆசை ஆசையா செய்தேன். கடைசியில்
 அவர் சாப்பிடலை. ம்..." சிவகாமி நீண்டதொரு பெருமூச்சைப் பெரிதாக விட்டாள்சரி! இப்ப என்ன... அப்பா சாப்பிடணும்... அவ்வளவு தானே?" என்றபடி எழுந்து விறுவிறுவென அடுத்த அறையினுள் நுழைந்தாள்.
 பிரம்மன் தன் அலமாரியில் தடித்தடியான புத்தகங்களில் ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தார்.
 "அப்பா..." பின்னால் வந்து நின்ற மகளைத் திரும்பிப் பார்க்காமல் பதில் கொடுத்தார்.
 "ம்..."
 "சாப்பிடாம இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? வாங்கப்பா சாப்பிடலாம்..."
 "உண்ணாவிரதத்தைப் பத்தி அம்மா சொல்லி இருப்பாளே?"
 "ம்... சொன்னாங்க..."
 "உன் சம்மதம் கிடைக்கிறவரை சாப்பிட மாட்டேன்னு தெரியுதில்லே... அப்புறம் எதுக்கு இங்க வந்தே?"
 "என் சம்மதத்தைச் சொல்லி உங்களைச் சாப்பிட வைக்கத் தான் வந்தேன்."
 "வாவ்..." என விடலைப் பையனைப் போல் துள்ளிக் குதித்து ஓடிவந்து மகளுடைய கைகளைப் பற்றிக் குலுக்கினார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 7, 2023
ISBN9798223186007
ஊஞ்சலாடும் நெஞ்சம்

Read more from R.Sumathi

Related to ஊஞ்சலாடும் நெஞ்சம்

Related ebooks

Reviews for ஊஞ்சலாடும் நெஞ்சம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஊஞ்சலாடும் நெஞ்சம் - R.Sumathi

    1

    இரு கை குவித்து வணக்கம் தெரிவித்து விட்டு எதிரே தயக்கத்துடன் அமர்ந்தவர்களை கேள்விக் குறியோடு பார்த்தாள், மருத்துவர் மீனா.

    முப்பத்தைந்து வயது பெண்ணொருத்தி அவளுக்கு ஒத்தவனாய் அவள் கணவன், மாயன்.

    அருகே தலையைக் குனிந்தபடி சற்றே விழிகளை உயர்த்திப் பார்த்தபடி சிறுவன்.

    குச்சி தேகம். வாட்டமான முகம். பயம் பூசிய விழிகள். பெரும் தவறு செய்து விட்டதைப் போல் குற்ற உணர்வு அழுத்தும் நிலை. வாலிபம் தரும் வசீகரத்தை வாங்கிக் கொள்ள மாட்டேன் எனப் பிடிவாதம் பிடிக்கும் இறுகிப்போன பார்வை.

    மீனா அந்தச் சிறுவனைக் கூர்ந்து பார்த்துவிட்டு, பார்வையைத் தகப்பன் மீது தாவவிட்டாள்.

    ம்... சொல்லுங்க...

    டாக்டர்... இவன் எங்களுக்கு ஒரே பையன். இவனை என்னென்னவோ படிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டோம். காசுக்குப் பிரச்சினை இல்லை. ஆனா... இவன் திடீர்னு சரியா படிக்காம ‘விட்டேத்தி’யா இருக்கான். நல்லா படிச்ச பையன் பெயில் மார்க் வாங்கியிருக்கான் அவன் நிறுத்திக்கொள்ள, மனைவி தொடர்ந்தாள்.

    அதுமட்டுமல்ல... யார் கூடேயும் சரியா பேசுறதும் கிடையாது. நண்பர்களையும் மறந்துட்டான். விளையாடுறதும் கிடையாது. ஏன் இப்படி இருக்கேன்னு கேட்டாலும், பதில் சொல்ல மாட்டேங்கிறான். அதான்... என இழுத்தாள்.

    அணிந்திருந்த கண்ணாடியை ஆட்காட்டி விரலால் அழுத்தி விட்டபடி பார்த்தாள், மீனா.

    சிறுவன் அதைக் கண்டு கொள்ளவில்லை. மாறாக மேசை மீதிருந்த பேனாவை எடுத்து தாளில் ஏதோ கிறுக்கியபடியே பார்வையைத் தழைத்துக் கொண்டான்.

    உன்பேர் என்னப்பா?

    அவன் நிமிராமலேயே பாஸ்கர் என்றான்.

    உனக்கென்ன ஆச்சு?

    எனக்கொண்ணும் ஆகலை. நான் நல்லாத்தான் இருக்கேன்.

    மீனாவின் விழிகள் அவனை அளவெடுத்தன. சில கணங்கள் அவனையே ஊடுருவிப் பார்த்துவிட்டு பெற்றோர் பக்கம் திரும்பினாள்.

    "உங்க பையனோட இந்த நிலைக்கு என்ன காரணம்னு இவனைப் பார்த்த மாத்திரத்திலே கண்டுபிடிச்சுட்டேன்.

    ஆனா... இருபத்து நான்கு மணி நேரமும் அவன் கூடவே இருக்கிற, அதுவும்... தாய் - தகப்பனான உங்களால் எப்படிக் கண்டுபிடிக்க முடியாமப் போச்சு?"

    டாக்டர்... இருவரும் ஆச்சரியமும் குழப்பமும் கலந்து ஏறிட்டனர்.

    உங்க மகனை ஒரு டாக்டரா ஆக்கணும். இன்ஜினியரா ஆக்கணும்னு அவனைப் படி படின்னு உந்தித் தள்ளி இருப்பீங்க. ஆனா... அவனுக்குள்ளே இருக்கிற அற்புதமான திறமையை மதிக்க மறந்திட்டீங்க... இங்க பாருங்க...

    பாஸ்கர் கிறுக்கிய காகிதத்தை வாங்கி அவர்களின் முகத்திற்கெதிரே நீட்டினார். அதில் அழகான பெண் உருவம்.

    கல்விங்கிற லட்சியம் பிறரால் உருவாக்கப்படலாம். ஆனா கலைங்கிற லட்சியம் மனிதனுக்குள் தானா மலரும். அவன் ஏதாவது வரையும்போது உசாகப்படுத்தாம திட்டி இருக்கீங்களா...?

    அந்தக் கேள்விக்கு இருவரும் பதில் சொல்லாமல் தலை குனிந்தனர்.

    என்ன... நான் சொல்றது சரிதானா?

    ஆமா டாக்டர். கண்டதை வரையிற நேரத்துல் உருப்படியா படிக்கலாமேன்னு அடிக்கடி இவர் திட்டுவார். ஒரு தடவை அவன் வைத்திருந்த வண்ணங்களை எல்லாம் கோபத்துல தூக்கியெறிந்து விட்டார்.

    பாஸ்கரின் தாய் சொல்லச் சொல்ல, மாயன் தலை குனிந்தான். அவன் படிக்காம போயிடுவானோங்கிற கோபத்துல...

    இந்த நாட்டுல எல்லாருமே டாக்டரா... இன்ஜினியராதான் ஆகணும்ன்னா... திறமைமிக்க கலைஞனை எந்த நாட்டுலேருந்து இரவல் வாங்குறது?

    ...

    பிள்ளைங்களை அவங்க பாதையில விட்டுத்தான் வளர்க்கணுமே தவிர, நம்ம பாதைக்குப் பிடிவாதமா இழுக்கக் கூடாது. குழந்தைங்க மனசை நோகடிச்சு வீணா வேற பாதையிலேயும் திருப்பக்கூடாது...

    மீனா பேசிக்கொண்டே போக, குற்ற உணர்வு அவர்களைத் தொற்றிக் கொண்டு, தொங்கிய தலையை நிமிர்த்த முடியாமல்

    செய்தது.

    ஆள்காட்டி விரலை மடக்கி அதன் சின்ன எலும்பால் அறைக்கதவு தட்டப்பட, மனநலம் பற்றிய மருத்துவப் புத்தகத்தில் ஆழ்ந்திருந்த மீனா நிமிர்ந்தாள்.

    கதவு மெதுவாகத் திறந்தது. உள்ளே நுழைந்தவர், உயரமான மனிதர். ஆரோக்கியமான பற்கள் பளீரிட சிரித்த அவருக்கு ஐம்பது வயதிருக்கும். பளபளக்கும் கண்ணாடிக்குள் ஆளை இழுக்கும் காந்த வீச்சு.

    வணக்கம்... டாக்டர்! சட்டென்று எழுந்தாள், மீனா.

    அப்பாவுக்கு எதுக்குடா மரியாதை? எத்தனை முறை சொன்னாலும் கேட்க மாட்டியா? சிரித்தபடியே அமர்ந்தார், பிரம்மன்.

    வித்தியாசமான பெயர். வைத்தவர்கள் என்ன நினைத்து வைத்தார்களோ! அப்படியே செயல்படுத்தி விட்டார். பிரமிக்க வைத்துவிட்டார்.

    அப்பாவாக இருந்தாலும் இந்த மருத்துவமனைக்கு நீங்க தலைமை மருத்துவராச்சே... நான் உங்களுக்கு கீழே வேலை பார்க்கும் டாக்டர்... மீனா பெருமிதமாகச் சிரிக்க, பிரம்மன் மகளைச் செல்லமாக அடித்தார்.

    போதும் புகழ்ந்தது.

    போதாதுப்பா... சாதாரண குடும்பத்தில் பிறந்து மேல மேல படிச்சு மருத்துவராகி, வாழ்க்கையில் உயர்ந்து இவ்வளவு பெரிய மருத்துவமனையைக் கட்டி, மருத்துவ உலகத்தோட மூலை முடுக்குக்கெல்லாம் பறந்துகிட்டிருக்கிற உங்களைப் பார்க்கும் போது கலிபோர்னியாவின் உயர்ந்த மலைச் சிகரத்தைப் பார்க்கிற மாதிரி இருக்குப்பா...

    நம்ம நாட்டில் கூட எத்தனையோ மலைச்சிகரங்கள் இருக்க, கலிபோர்னியா மலைச்சிகரத்தோட என்னை ஏம்மா ஒப்பிடுறே? அந்த உயர்ந்த மலைச்சிகரங்கள்ல கீழிருந்தே படிக்கிற மாதிரி ஒரு வாசகம் எழுதி இருக்கும்ப்பா... ‘உன்னை போல் உயரமான தலைவர்கள் பிறக்கட்டும்’ அப்படின்னு. அதைப் பார்க்கிற ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு உத்வேகம் பிறக்கும். இந்தச் சிகரம் மாதிரி நாம் உயரணும்னு! உங்களைப் பார்க்கும்போதும் எனக்குள் அப்படித்தாம்பா தோணுது. அவள் சொல்ல, சிரித்த பிரம்மன், மறுப்பாகத் தலையாட்டினார்.

    இல்லை! எனக்கு என்ன தோணுது தெரியுமா? நம்ம தமிழ்ப் பாட்டு ஞாபகம் வருது. ‘சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு. சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு...’ எப்படி? நீ சிகரத்தையும் மிஞ்சி வானத்தையும் வசப்படுத்தணும்’ அதான் எனக்குப் பெருமை.

    இரு கண்களையும் அகல விரித்து அப்பாவைப் பெருமை பொங்க பார்த்துச் சிரித்தாள்.

    நன்றிப்பா... உங்க அன்பும் வாழ்த்தும் இருக்கும்போது வானத்தை என்னப்பா... அதுக்கும் மேலகூட போக முடியும்!

    அப்படிச் சொல்லு. சரி... வந்த விஷயத்தை மறந்துட்டு என்னென்னமோ பேசுறேன் பாரு என தலையில் லேசாகத் தட்டிக் கொண்டார்.

    என்ன விஷயம்ப்பா...?

    உன் கல்யாண விஷயம்தான்.

    சட்டென்று மீனாவின் முகத்திலிருந்த சிரிப்பு பறந்து போனது. ஓட்டுக்குள் உடலை இழுத்துக்கொள்ளும் நத்தையைப் போல் மறைந்து

    Enjoying the preview?
    Page 1 of 1