Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கண்ணாளனே...
கண்ணாளனே...
கண்ணாளனே...
Ebook119 pages41 minutes

கண்ணாளனே...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கண்ணாடி எதிரே நின்று கொண்டு கொண்டை ஊசியை சரக்சரக்கென உருவி மேசை மீது போட்டுவிட்டு சடையைப் பிரித்து சீவி அள்ளி கொண்டையா முடிந்த சுதந்திரா முணுமுணுத்தாள்.
 "மூக்கும் முழியுமா எவளாவது இருந்திட்டா அலையறானுங்க, பொறுக்கிப் பசங்க."
 கட்டிலில் குப்புறப் படுத்துக் கொண்டு வழக்கம் போல விடுதி சாப்பாட்டை குறை கூறிக் கடிதம் எழுதிக் கொண்டிருந்த நித்யா நிமிர்ந்தாள்.
 "இன்னைக்கு யார் பாவம் பண்ணினா உன் வாயால் சாபம் வாங்க" என்று கேட்டாள், சிரித்துக் கொண்டே.
 'பேரன் லவ்லி'யைப் பிதுக்கி முகமெங்கும் புள்ளி வைத்தவாறே திரும்பிய சுதந்திராவின் குரலில் ஆத்திரம் இருந்தது.
 "அன்பழகன்."
 "யாரு... ஆராய்ச்சி படிப்பு படிக்கிறானே, அவனா...?"
 "அவனே தான். ஆராய்ச்சி படிப்பை விட்டுட்டு காதல் ஆராய்ச்சியில் இறங்கிட்டான்."
 அதே நேரம் கதவைத் திறந்து கொண்டு கைப்பையை சுழற்றியபடியே வந்தாள், சுடிதாரில் ஒரு சுந்தரி.
 "என்ன, காதல் ஆராய்ச்சியா? அதுவும் ஆடவர் வர்க்கத்தை அடியோடு வெறுக்கும் அல்லிராணி சுதந்திராவா இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவது?" நாடக பாணியில் கேட்டாள், வந்தவள்.
 அவளை முறைத்தாள், சுதந்திரா. "காலேஜ் விட்டா ஒழுங்கா நீ வீட்டுக்குப் போக மாட்டியா? ஆஸ்டலுக்கு எதுக்கு வந்தே?"
 "செமத்தியா போர் அடிக்குது. திலீப்புக்கு போன் பண்ணி வம்புக்கு இழுக்கலாமின்னு பார்த்தேன். அவர் அவரோட நண்பரோட கல்யாணத்துக்குப் போயிட்டாராம். அதான் இங்கே வந்துட்டேன். " என்றாள், அவள்

"உம்.. பானு நீ கொடுத்துவைச்சவ. அழகான அத்தைப் பையன். எனக்கு அத்தையுமில்லை. மகனுமில்லே." நித்யா வருத்தப்பட்டாள்.
 சுதந்திராவின் அருகில் வந்து நின்ற பானு அவளின் இடையை கிள்ளினாள். "என்னவோ சொல்லிக்கிட்டிருந்தே.. என்ன விசயம்?" என்றாள்.
 "நாட்டுக்கு ரொம்ப அவசியமான விசயம்" பவுடர் பூசியவாறே சொன்னாள், சுதந்திரா.
 "எது?"
 "அன்பழகன் காதல் கடிதம் தந்தது."
 "யாருக்கு?"
 "எனக்குத்தான்."
 "முட்டாள்! எனக்குதரக் கூடாது!" நொந்து கொண்டாள், நித்யா.
 "உம்... ஆயிரம் அட்வைஸ் பண்ணியிருப்பியே" என்றாள், பானு.
 "அவனுக்கா... நாலு அறை கொடுக்கலாம் போலிருந்தது. என்ன பண்றது? ஆம்பளையாயிருக்கானே."
 "ஆம்பளைன்னா அறையக் கூடாதா? அவ்வளவு மதிப்பா?"
 "மதிப்பா... மண்ணாங்கட்டி. கோபத்துல அது மாதிரி ஏதாவது செஞ்சிட்டா அது அவனுக்குள்ளே பழிவாங்கற உணர்வை தூண்டிவிட்டுடும். என்ன பண்றது? பொண்ணா பொறந்தாச்சே? பொறுத்துத்தான் போகணும்."
 பானு அங்கிருந்த நாற்காலியில் பொத்தென உட்கார்ந்து கொண்டு சொன்னாள். "அவனை நீ இப்படி உதாசீனப்படுத்தியிருக்கக் கூடாது."
 "ஏன்?"
 "அவன் உன் மேல உண்மையான அன்பு வைச்சிருக்கலாம் இல்லே?"
 இதைக் கேட்டு சுதந்திரா விழுந்து விழுந்து சிரித்தாள். பின் அவள் முகத்தில் சாந்தம் மறைந்து ஆத்திரம் தெரிந்தது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 8, 2023
ISBN9798223520986
கண்ணாளனே...

Read more from R.Sumathi

Related to கண்ணாளனே...

Related ebooks

Related categories

Reviews for கண்ணாளனே...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கண்ணாளனே... - R.Sumathi

    1

    குளிரூட்டப்பட்ட அந்த அறையில் உயர்ரக இருக்கையில் உட்கார்ந்து அலுவலகக் கோப்புகளை கவனித்து கொண்டிருந்தான், பூபாளன்.

    அந்த அறைக்கு தனி அழகும் கம்பீரமும் அவன் அந்த இருக்கையில் அமர்ந்திருப்பதால் உண்டாயின. இளம் பெண்ணின் கன்னத்தைப் போன்ற வழவழப்பா மேசை. அடிக்கடி அவனை சிணுங்க அழைக்கும் பல வண்ண தொலைபேசிகள் பூனைக்குட்டிகளைப் போல் மேசையில் படுத்திருந்தன. அவன் கைப்படக் காத்திருக்கும் அடுக்காக வைக்கப்பட்ட கோப்புகள். காற்றுக் காதலனுடன் ஓடிப்போக விடாமல் அவற்றை அடக்கி வைத்திருக்கும் கண்ணாடிக் குண்டுகள்.

    பூபாளன்!

    சராசரிக்கும் மேல் சற்று உயரமான தோற்றம். கம்பீரம் தரும் கருப்புநிறம். அறிவுத் திறமையைக் காட்டும் கூர்மையான விழிகள். புன்னகை படர்ந்த உதட்டுக்கு மேல் ஆண்மையின் கவர்ச்சியை அதிகப்படுத்தும் "மீசை. அடங்காத... ஆனால் அழகான முடி அடிக்கடி விழும் முன்நெற்றி. அவன் மனதின் நிறத்தை மற்றவர் அறிய சொல்லும் வெள்ளைச் சட்டை. பெயருக்கேற்றாற் போல முகத்தில் எப்பொழுதும் இருக்கும் புத்துணர்ச்சி.

    மணி ஒன்றாகிவிட்டதென ஒலி மூலம் உணர்த்தியது எதிரேயிருந்த கடிகாரம்.

    நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் கடிகார ஒலியில் கவனம் சிதறினான். பேனாவை மூடி அதனிடத்தில் சொருகிவிட்டு நிமிர்ந்தவனின் பார்வை எதிரே சுவரில் மாட்டியிருந்த அந்த பெரிய புகைப்படத்தில் நின்றது.

    ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருத்தி, மாலை சுமந்து ஊதுபத்தி புகை சூழ சிரித்தாள். அந்த முகத்தைக் கண்டதும் பூபாளன் அனிச்சையாய் எழுந்தான். சற்றுமுன் வயிற்றில் ஆட்சி செய்த பசி ஒரு கணம் நின்றது. எழுந்து, அந்தப் புகைப்படத்தின் எதிரே வந்து நின்றான். அவன் நெஞ்சம் பாசத்தால் விம்மியது.

    அம்மா...

    கண்களில் கண்ணீர் திரண்டது:

    ‘கட்டிய கணவனும் மகனும் இருந்த போதும் யாருமற்ற அனாதையாய் வாழ்ந்த என் தெய்வமே. இன்று உன் மகன் சகல வசதிகளையும் சம்பாதித்து வைத்திருக்கும் போது என்னுடன் வாழ உனக்குக் கொடுத்து வைக்கவில்லையே. அன்பையும் பாசத்தையும் எள்ளளவும் வாழ்க்கையில் அனுபவிக்காத என் உயிரே.. நெஞ்சு நிறையப் பாசத்தைத் தேக்கி வைத்து அழும் உன் மகனின் நிலையை அறிவாயா.’

    இதயம் குலுங்கியது. புகைப்படத்தில் இருப்பவள் பூபாளனின் தாய். அவரை தினமும் வணங்கித் தொழுகிறான் அவன். அவள் நினைவுகளில் பொதிந்து கிடந்த கடந்த காலம் மிகவும் வேதனையானது.

    இளம் வயதிலேயே பூபாளனின் தாய் இறந்து விட்டார் என்றும், தான் மறுமணம் புரிந்து கொண்டதாகவும் சொல்லி அவனை அவன்தந்தை வளர்த்தார். தந்தையின் இரண்டாம் மனைவியிடம் இன்னல்கள் பட்டுத்தான் பூபாளன் வளர்ந்தான். படித்தான், படித்து முடித்து பெரியவன் ஆனதும் தான் தன் வாழ்வில் மறைக்கப்பட்ட ஒரு உண்மையை அவன் கண்டுபிடித்தான். அவனுடைய தாய் விபத்து ஒன்றில் கண்பார்வையை இழந்து விட்டதால், அவளை விலக்கி வைத்துவிட்டு அப்பா இரண்டாம் திருமணம் செய்து கொண்டு சுகவாழ்க்கை வாழ்கிறார் என்ற உண்மை அவனை எட்டியபோது, அவன் துடித்துப் போனான். தாய் இறந்து விட்டதாகப் பொய் கூறி வளர்த்த அப்பாவிடம் சண்டை போட்டான். ‘இனியும் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று வீட்டை விட்டு வெளியேறினான். தன் தாயை எப்படியும் கண்டு பிடித்து விடுவதெனத் தேடினான். அவன் தேடல் தொடர்கதையாகியது.

    இதன் இடையே தனது படிப்பையும் திறமையை வைத்து நண்பன் திலீப்பின் உதவியுடன் சொந்தமாக வியாபாரம் தொடங்கினான். அதிர்ஷ்ட நங்கை அவனை காதலிக்க, சரசரவென உயர்ந்தான். செல்வத்தில் உயர்ந்து, கொண்டே, சென்ற அந்த நேரத்தில் தான் எதிர்பாரா விதமாகத் தாயை சந்தித்தான். தீபாவளி நேரத்தில் அனாதை விடுதிகளுக்குள் தன் செலவில் இனிப்பு வழங்கிய போது ஒரு அனாதை விடுதியில் பார்வை இழந்த தாயை உயிருடன் கண்டான். துடித்துப் போய் விட்டான். வாழ்க்கையில் வெகுநாளாய்த் தேடியது கையில் கிடைத்த மகிழ்ச்சி அவனுக்கு. தாய்க்கும் அதே நிலை. தன் இருப்பிடத்திற்கு அழைத்து வந்தான். பாசம் பொங்க வைத்திருந்தான். எல்லாம் ஒரு மாதம் தான். அவன் வாழ்க்கையில் அவன் மகிழ்ச்சியாய் இருந்தது அந்த ஒரு மாதம் தான். நெஞ்சுவலியால் படுத்தப் படுக்கையாகி ஒருநாள் இறந்தாள், அவன் தாய்.

    கதவு திறக்கும் ஓசை கேட்கப் பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டான், பூபாளன்.

    கையில் பெரிய சாப்பாட்டு அடுக்குடன் உள்ளே வந்தான் திலீப். பள்ளியில் தொடங்கி கல்லூரியில் இன்று வரை தோள் கொடுக்கும் ஆருயிர் நண்பன்.

    சட்டென தன் வேதனைகளை மறைத்துக் கொண்டு உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டான், பூபாளன்.

    டாண்ணு மணி ஒண்ணு ஆனதும் சாப்பிட வந்துட்டியே. - பள்ளிக்கூடத்துல எப்படி இருந்தியோ அப்படியே இன்னும் இருக்கே, என்று சிரித்தான்.

    மேசை மீது சாப்பாட்டு அடுக்கை வைத்து விட்டு அவனைப் பார்த்து சிரித்தான், திலீப்.

    ஆமா... அறுசுவை உணவு, பாரு. அப்படியே ஆசையா சாப்பிட வர்றேன். என்னமோ தலையெழுத்து... இந்த சமையல்காரி கையால சாப்பிட வேண்டியிருக்கு. நாக்கு செத்துப் போயிட்டது.

    திலீப் பூபாளனின் வீட்டிலேயே நிரந்தரமாக இருக்கிறான். இருவருக்கும் அன்றிலிருந்து இன்றுவரை சமைத்துப் போடுபவள், ஒரு கிழவி.

    கை கழுவிவிட்டு வந்த பூபாளன், விரல்களிலிருந்த தண்ணீரை – நண்பனின் முகத்தில் உதறினான், விளையாட்டாய்.

    டேய்.. சாப்பாட்டு ராமா, பேசாம நீ பானுவை கல்யாணம் பண்ணிக்கிட்டின்னா, நம்ம ரெண்டு பேருக்குமே நல்ல சாப்பாடு கிடைக்கும் என்றவாறு அவன் எதிரே அமர்ந்தான்.

    திலீப் சாப்பாட்டு அடுக்கை திறந்தவாறே சொன்னான்.

    நானா வேண்டாங்கறேன். பானுவிற்கு படிப்பு முடியணும்கிறார், மாமா. ஏன், நான் திருமணம் செய்து கொண்டால்தான் சாப்பாடு கிடைக்குமா? நீ செய்து கொண்டால் கிடைக்காதா?

    பூபாளன் சிரித்தான். கத்தரிக்காய் பொரியலை எடுத்து சுவைத்தவாறே பேசினான்.

    கிடைக்காது. பழையபடி சமையல்காரி சாப்பாடுதான் கிடைக்கும்.

    ஏன்... சமையல் தெரியாத பொண்ணாய் பார்த்து திருமணம் பண்ணிக்கப் போறியா?

    இல்ல. கண்ணு தெரியாத பொண்ணை திருமணம் செய்துக்கப் போறேன்.

    தேள் கொட்டியதைப் போல் துடித்தான், திலீப்.

    பூபாளன், என்ன உளர்றே?

    அப்பளத்தை எடுத்து கடித்தவாறே

    Enjoying the preview?
    Page 1 of 1