Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அன்பே... ஆருயிரே..!
அன்பே... ஆருயிரே..!
அன்பே... ஆருயிரே..!
Ebook105 pages37 minutes

அன்பே... ஆருயிரே..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்றைக்கு வங்கியில் அதிகக் கூட்டம் இல்ல. சேமிப்புப் புத்தகத்தின் சேமிப்பைக் கணிப்பொறியில் சரிபார்த்து வாடிக்கையாளர்கள் விரும்பிய பணத்தை எண்ணிக் கொடுத்து விட்டு சற்றே இருக்கையில் சாய்ந்தான் ஆதித்யன்.
 ஒரே படபடப்பாக இருந்தது. நேற்று இரவு உறக்கம் சுத்தமாக இல்லை. ஒரே குழப்பம். மனம் உளைச்சலாக இருந்தது. மண்டைக்குள் ஏதேதோ கேள்விகள் குடைந்தன.
 அவனுடைய கைகள் அனிச்சையாக மேசையில் இழுப்பறையை இழுத்தன.
 அந்தக் கல்யாணப் பத்திரிகை மீண்டும் அவனுக்கு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தியது.
 எடுத்தான். உறைக்குள்ளிருந்த அழைப்பிதழை உருவினான். பிரித்தான்.
 அந்தப் புகைப்படங்களைப் பார்த்தான். செல்வி. காயசண்டிகை என்ற பெயருக்கு மேல் அம்மாவின் படம். அம்மா கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில் பழைய கால சுஜாதாவைப் போல் அழகாக இருந்தாள்.
 அவனுடைய கண்கள் மெல்ல உருண்டு பக்கத்திலிருந்த புகைப்படத்தில் பதிந்தன.
 செல்வன். கிருபாகரன் என்ற பெயருக்கு மேல் இருந்த புகைப்படத்தை உற்றுப் பார்த்தான்.
 சிரித்த முகம். களையான தோற்றம். அந்தக் கால ஜெமினி கணேசனின் மீசை.
 இவர் தான் என் அப்பாவா?e
 நான் பார்க்காத அப்பா? எப்படியிருக்கும் அவர் முகம் என்பதே தெரியாத அவனுடைய மன நிலையில் வினோதமான உணர்வுகள். இத்தனை நாள் அப்பா என்ற வார்த்தை உள்ளுக்குள் தோன்றினாலே கூடவே எரிச்சலும் உண்டாகும். ஆனால் இப்பொழுது -
 ஏனோ அந்த முகத்தைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அடிக்கடி எடுத்துப் பார்த்தான்அப்பா... இந்த உடலும் உயிரும் தோன்றக் காரணமானவர் இவரிலிருந்து தானே நான் உருவானேன்.'
 இதயம் ரம்மியமாக உணர்ச்சிவசப்பட்டது. 'உடலும் உயிரும் தோன்ற ஒருவன் காரணமாக இருந்தால் மட்டும் போதுமா? தன் கடமையிலிருந்து தவறியவன். கட்டிய மனைவிக்கு துரோகம் செய்தவன். பிள்ளையைப் பேணத் தெரியாதவன். அழகான துணைவி இருக்க அவளை விட்டு விட்டு இன்னொருத்தியிடம் ஓடியவன். பாவம் அம்மா...! உலகப் பெருங்கொடுமை இளமையில் வறுமை' என்றாள் அவ்வை. அதனினும் கொடுமை இளமையில் விதவை. அம்மா விதவையைப் போல் வாழ்ந்தவள். எந்தச் சுகத்தையும் அனுபவிக்காதவள். வாழாவெட்டியாகக் காலத்தைத் தள்ளியவள். கோடையில் சூடான பூமி கூட மார்கழியில் குளிர்ந்து சுகப்படுகிறது. மண்ணிற்குக் கூட இங்கு சுகம் தேவையெனும்போது அந்த மண்ணில் பிறந்த மங்கை மண்ணை விட மோசமான பொருளாக வாழ்க்கை நடத்தியிருக்கிறாள்.
 'அம்மாவைப் பட்டமரமாக்கியவனை நினைக்க வேண்டுமா? எரிச்சலுடன் அவன் அந்தப் பத்திரிகையை மூட முற்பட்டபோது, "என்ன டியர் என்ன பலத்த சிந்தனை?" என்ற குரல் வெகு அருகே கிசுகிசுப்பாகக் கேட்டது.
 சுதர்சனா நின்றிருந்தாள். உயர்த்திக் கட்டிய கூந்தல் தோளில் சரிந்திருந்தது. மஞ்சள் நிற சுடிதார், மார்பை மறைத்து மூடிய துப்பட்டா, திருத்திய புருவங்களுக்குக் கீழே நெஞ்சை இழுக்கும் கருவிழிகள். சிறகடிக்கும் இமைகள்.
 அவளை நிமிர்ந்து பார்த்த ஆதித்யன் ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றினான்.
 "என்னப்பா... என்ன ஆச்சு? ரொம்ப டல்லா இருக்கீங்க?"
 "ஒண்ணுமில்லை..."
 "ஒண்ணுமில்லையா? நான் வந்ததிலிருந்து கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். பணமெல்லாம் சரியாயிருக்கான்னு சோதிச்சுப் பாருங்க... ஏதோ ஒரு உலகத்துல சஞ்சரிச்சுக்கிட்டே பணத்தை எண்ணிக் கொடுத்துக்கிட்டிருந்தீங்க. யார்கிட்டேயாவது அதிகமாக கொடுத்திருக்கப் போறீங்க" என்றாள் சிரித்தபடி.
 அவன் அமைதியாக சிரித்தான். அந்தச் சிரிப்பில் பெரியதொரு வேதனை மறைந்திருப்பதைப் போலிருந்ததுசுதர்சனா தூரத்தில் வரும்போதே அவனுடைய இதயம் நிலையில்லாது தவிக்கும். அழுத்தம் அதிகரிக்கும். அவள் அருகே வந்து விட்டாலோ அவன் அந்தரத்தில் மிதப்பான். அதிலும் அவள் பேசினாலோ அவன் கண்ணிமைக்காமல் ரசித்து ரசித்து கேட்டுக் கொண்டிருப்பான். அப்படிப்பட்டவன் சிலையாக அமர்ந்திருந்தான்.
 'ஆமா! பறிகொடுத்து விட்டேன்தான். எனக்கே நினைவு தெரியாத நாளில் எதுவுமே தெரியாத வயதில் பறிகொடுத்திருக்கிறேன். என் அப்பாவை. என் பிறப்பிற்குக் காரணமான அவர் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருப்பதை நினைத்துப் பார்க்கும் போது எதையோ இழந்து விட்டதாகத்தான் தோன்றுகிறது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223601265
அன்பே... ஆருயிரே..!

Read more from R.Sumathi

Related to அன்பே... ஆருயிரே..!

Related ebooks

Related categories

Reviews for அன்பே... ஆருயிரே..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அன்பே... ஆருயிரே..! - R.Sumathi

    1

    ஆதித்யன் அன்றைக்கு வீட்டிலிருந்தான் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள்.

    ஓய்வு என்பது உழைக்காமல் படுத்திருப்பதல்ல. செய்த வேலையைச் சற்றே ஒதுக்கி விட்டு இன்னொரு வேலையில் ஈடுபடுவதே இனிமையான ஓய்வு. அப்படிப்பட்ட ஓய்வு மனிதனை அமைதிப்படுத்துவதோடு அபாரமானதொரு சக்தியைத் தருகிறது. மறுபடி அதிக உற்சாகத்தோடு கடமையில் ஈடுபட உதவுகிறது. மாற்றம் என்பதுதான் மகத்தான ஓய்வு. ஞாயிற்றுக்கிழமையிலும் ஆதித்யன் வழக்கம் போல்தான் எழுவான். அம்மாவிற்கு மணக்க மணக்க காபியை கொடுத்து எழுப்புவான். சேர்ந்து அமர்ந்து செய்திகளை வாசிப்பான். அம்மா இட்லி ஊற்றும்போது அவன் மிக்சியில் சட்னியைச் சுற்றுவான். தட்டு வைத்து அம்மாவிற்குப் பார்த்துப் பார்த்துப் பரிமாறுவான். காலை வேலைகள் முடிந்துவிட்டிருந்தன.

    அம்மா, கூடத்தில் காலை நீட்டிப் போட்டுக் கொண்டு மதிய சமையலுக்காகக் காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தாள். ஆதித்யன் அம்மாவின் அறையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான். அம்மா பாவம்! நாளெல்லாம் உழைக்கிறாள். மருத்துவமனையில் உழைத்து விட்டு வந்து வீட்டிலும் அலுப்பில்லாமல் வேலை செய்கிறாள். அக்கடாவென ஒரு பொழுது படுக்க மாட்டாள். சற்றே ஓய்வு கிடைத்தாலும் புதுவிதமாக என்ன சமையல் செய்து மகனுக்குக் கொடுக்கலாம் என்ற தேடலில் ஈடுபடுவாள். அந்த பெரிய வீட்டில் அம்மாவும் அவனும்தான்.

    அம்மாவின் உழைப்பில் உருவான வீடு அது. அம்மாவின் பெயரை முகப்பில் பொறிக்க வேண்டும் என்பது அவனுடைய பிடிவாதம். ‘காயசண்டிகை இல்லம்’ எனப் பொறித்தான். அம்மா வாயில் விரல் பதித்து முத்து மூக்குத்தி மின்ன வெட்கப்பட்டாள்.

    என்னடாயிது? வாசல்ல பளிச்சுன்னு என் பேரைப் போட்டுக்கிட்டு...

    இருக்கட்டும்மா. நிராதரவா தெருவில விடப்பட்ட நீ இன்னைக்கு சொந்தமா இடம் வாங்கி வீடு கட்டியிருக்கிறது சாதனை இல்லையாம்மா? பெண்ணால முடியாதது எதுவும் இல்லைன்னு நிரூபிச்சிருக்கியேம்மா... இந்த வீட்டைப் பார்க்கும் போது நீ கம்பீரமா தைரியமா நிமிர்ந்து நின்னு சிரிக்கிற மாதிரியிருக்கு...

    இப்படி அம்மாவை அவன் பாராட்டினாலும் அவ்வளவு பெரிய வீட்டை அவசியம் கட்ட வேண்டுமா என்று நினைப்பான்.

    அம்மா... இருக்கறது நாம ரெண்டு பேர். சினிமா தியேட்டர் மாதிரி அவ்வளவு பெரிய வீடு எதுக்கு? என்பான்.

    போடா மக்குப் பையா... இப்ப நாம ரெண்டு பேரு நாளைக்கு? உனக்குக் கல்யாணம் பண்ணினா இந்த வீடு முழுக்க பேரக் குழந்தைங்க விளையாடாதா? நான்தான் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு பெத்துட்டேன். ஆனா நீ நிறைய பெத்துக்கணும்... சொல்லிவிட்டு அந்தக் காட்சியைக் கற்பனையில் கண்டுகளிப்பவளைப் போல கண்மூடிச் சிரிப்பாள்.

    ‘அம்மா, அப்பாவோட நீ சேர்ந்து வாழ்ந்திருந்தா அந்தப் பாவி உன்னை விட்டு ஓடாம இருந்திருந்தா எனக்கும் தங்கையோ, தம்பியோ இருந்திருப்பார்களே...’ நினைத்துக் கொள்வான். அம்மாவே அவனுக்குச் சகலமும்.

    அம்மா, அப்பா எல்லாமும் அவள்தான். அப்பாவின் முகம் கூட அவனுக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.

    அப்பாவைப் பற்றிக்கேட்ட ஒரு சில தருணங்களில் அம்மாவின் முகம், ஆயிரம் சுருக்கங்களை உருவாக்கிக் கொண்டதை உணர நேர்ந்தபோது அப்பாவைப் பற்றிய எண்ணங்களை முழுவதுமாக உதறிவிட்டான்.

    அம்மா அவனை இடுப்பில் சுமந்த காலத்திலிருந்து எவ்வளவு சிரமப்பட்டாள். தன்னந்தனியாக கஷ்டப்பட்டாள் என்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறான்.

    அம்மாவைக் காலம் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.

    அம்மாவிற்குச் சென்னையில் புகழ் பெற்ற மகப்பேறு மருத்துவர் ஜோதியிடம் நர்சாக வேலை. பம்பரமாகச் சுழலும் வேலை. சிக்கன வாழ்க்கையில் மகனைச் சிறப்பாக உயர்த்த வேண்டுமென்ற லட்சியம். இப்போது அவனுக்கு அரசு வங்கியில் காசாளராக வேலை.

    அச்சு... அச்சு... பரண்மேல் கிடந்த பொருட்களை ஒழுங்குபடுத்தித் தேவையில்லாத புத்தகங்களையும் காகிதங்களையும் உயரே தூக்கிப்போட்டுக் கொண்டிருந்த ஆதித்யன் தூசுகளின் தாக்குதலில் தும்மினான்.

    அம்மா கூடத்திலிருந்து குரல் கொடுத்தாள்.

    ஆதி... என்னடா பண்றே?

    ஒண்ணுமில்லைம்மா... உன் அறையைச் சுத்தம் பண்றேன்.

    அம்மா எழுந்தே வந்துவிட்டாள்.

    கதவின் இருபக்கமும் கைகளைப் பதித்துக் கடிந்து கொண்டாள்.

    என்னடா வேலை பண்றே? இப்ப சுத்தம் பண்றதுக்கு என்ன அவசரம்? ஒரு நாள் லீவுன்னா படுத்துத் தூங்கி ஓய்வெடுப்பியா? அதை விட்டுட்டு இப்படி தூசு தட்டிக்கிட்டு...

    அம்மா... உன்னோட அறையை, எவ்வளவு அழகா ஒழுங்குபடுத்தி இருக்கேன் பாரும்மா... உன் சேலையை எல்லாம் எவ்வளவு அழகாக மடிச்சுக் கொடியில போட்டிருக்கேன் பார். அம்மா... உன்னோட சிவகாமி சபதம். பார்த்திபன் கனவு எல்லாம் என் தயவால தப்பிச்சது. இல்லாட்டி கரப்பான் பூச்சிக்கு இரையாகியிருக்கும். எல்லாத்தையும் தட்டி அழகா அடுக்கி வச்சிருக்கேன். தேவையில்லாததை எல்லாம் தூக்கி மேலே போட்டிருக்கேன்...

    சரி...சரி... உன் உதவிக்கு என் மனமார்ந்த நன்றி. முதல்ல கீழே இறங்கு. கையைக் காலை முறிச்சுக்காதே...

    முறிஞ்சா என்னம்மா? நர்ஸ் நீ கட்டுப்போட்டு ஆத்திடப்போறே? சிரித்தான்.

    போடா... ஆயிரம்பேருக்கு வைத்தியம் பார்த்தாலும் பெத்த புள்ளைக்கு ஒண்ணுன்னா என்னால தாங்க முடியுமாடா? உன்னை எப்படியெல்லாம் பாதுகாத்து வளர்த்தேன்னு எனக்குத்தாண்டா தெரியும்...

    சரி...சரி... நான் கீழே இறங்கணும். அவ்வளவு தானே... இறங்கிடறேன்.

    கையை எடுத்து விட்டு அவன் இறங்க முற்பட்ட போது அந்தக் காகித அடுக்கு சரிந்து அவன் தலையிலேயே கொட்டியது.

    தரையிறங்கிய அவனைச் சுற்றிப் புத்தகங்களும் செய்தித் தாள்களும் இறைந்து கிடக்க, பரவிய தூசியில் அவன் பலமாகத் தும்ம, அம்மா விழுந்து விழுந்து சிரித்தாள்.

    "தேவையாடா இது...? எல்லாத்தையும் அடுக்கி வை... நீ வேலைமெனக்கட்டு அடுக்கி வச்சதோட, பழசும் சேர்ந்து விழுந்திருக்கு. எல்லாத்தையும் எடுத்து அடுக்கி

    Enjoying the preview?
    Page 1 of 1