Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சந்தன மின்னல்...
சந்தன மின்னல்...
சந்தன மின்னல்...
Ebook202 pages1 hour

சந்தன மின்னல்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அப்பா, நான் முதல் வகுப்பில் தேறிட்டேன்." தினசரியில் எண்ணைப் பார்த்து மஞ்சு போட்ட உற்சாகக் கூச்சல் மாளிகை முழுவதும் தொற்றிக் கொண்டது.
 "மேலே என்னம்மா செய்யப் போறே?" மகளிடம் அப்பா கேட்ட போது அம்மா அவரை வியப்பாகப் பார்த்தாள்.
 "என்ன நீங்க அவளை கேட்டுக்கிட்டிருக்கீங்க? வாசு படிப்பை முடிச்சிட்டு ரெண்டு வருஷமா காத்துக்கிட்டிருக்கான். குமார் இஞ்சினியரிங் முடிச்சு ஒரு வருஷமா வேற எதுவும் பெண் பார்க்காம நம்ம பதிலுக்காக காத்திருக்காங்க. நமக்கிருக்கிறது இவ ஒருத்திதானே? டிகிரி படிக்கணும்னு ஆசைப்பட்டா, படிப்பு முடிஞ்சிட்டுது. பேசாம கல்யாணம் பண்ணிடலாங்க."
 "பேசாமல் எப்படிம்மா கல்யாணம் ஏற்பாடு பண்ண முடியும்? பேசினால்தானே கல்யாணம் கை கூடும்? அம்மாவுக்கு எதுவுமே தெரியலைப்பா..."
 தன்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கும் மகளைப் பார்த்த அம்மாவுக்குக் கோபமும் சிரிப்பும் சேர்ந்து வந்தது.
 "பார்த்தீங்களா இவ கேலி செய்து சிரிக்கிறதை? கொஞ்சமாவது பயம் இருக்கா இவளுக்கு?"
 "உனக்கென்ன நாலு கையும் பத்து தலையுமா இருக்கு என் மக பார்த்து பயப்படறதுக்கு? உனக்கென்ன உடனே மாமியாராகணும்னு ஆசை வந்திட்டுது... அதுதானே இதோ இப்பவே கேட்டுடறேன். என்னம்மா சொல்றே?"
 அப்பாவின் குரலில் இருந்த கேலியையும் கிண்டலையும் புரிந்து கொண்ட மஞ்சு சொன்னாள், "எனக்கு கொஞ்ச நாளைக்கு வேலை செய்யணும்னு ஆசையா இருக்குப்பா. நம்ம கம்பெனிகளில் ஏதாவது ஒண்ணுல நான் யார்னு தெரிவிக்காம ஒரு சாதாரண கிளார்க்கா வேலை செய்யணும். அப்பறம் நானாககல்யாணத்தைப்பற்றி சொல்கிறேன். அதோட சொந்தத்திலேயே எனக்கு மாப்பிள்ளை வேணாம்பா..."
 பேசிக்கொண்டே கைகடிகாரத்தைப் பார்த்தாள்.
 "அடடா... மணி ஆகிவிட்டதே. என் சினேகிதிகளோடு மதிய சாப்பாட்டுக்கு வெளியே வருவதாக சொல்லி இருந்தேன். நான் போயிட்டு வரேன்ப்பா... அம்மா டாட்டா..."
 உல்லாசச் சிட்டுக்குருவி போல காரில் ஏறிப் போகும் மகளைப் பார்த்து அம்மா தலையில் அடித்துக்கொண்டாள். அப்பா ரசனையாகப் புன்னகைத்தார்.
 அவர்களிருவரையும் கலைப்பது போல காரில் வந்து இறங்கினான் வாசு. கையில் இனிப்புப் பெட்டியும் மலர்ச்செண்டும்.
 "எங்க மாமா மஞ்சு இப்படி ஓடறாளே? அவளை பாராட்டி போகலாம்னு வந்தேனே..." குரலில் ஏமாற்றம்.
 "நீ வந்தாச்சு... இன்னும் ஐந்து நிமிஷத்துல குமாரும் இதே மாதிரி பூச்செண்டும் இனிப்புமா வருவான். அதுக்கப்புறம் உன் கேள்விக்கு பதிலும் நீங்க ரெண்டுபேரும் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தையும் சொல்லுகிறேன்..."
 அப்பா சொன்னது போலவே குமாரும் வந்தான்.
 "எங்க மாமா மஞ்சு... உள்ள இருக்காளா? மஞ்சு... மஞ்சும்மா வெளிய வரியா... இல்லை நான் உள்ள வரவா?" குரலில் பரபரப்பும் வேகமும்...
 அப்பா தன்னையும் மீறி வாய்விட்டு சத்தமாகச் சிரித்தார்.
 "ஏண்டா மடையா, இத்தனை பேர் இங்க நிக்கறது உனக்கு கண்ணுல தெரியலை? நில்லுடா பரபரக்காம. முதல்ல ரெண்டுபேரும் வீட்டுக்குள்ள வாங்க. ஒரு வாய் காபி குடிங்க. ரெண்டு துண்டு மைசூர்பாகு சாப்பிடுங்க.
 பின்னாடி நான் சொல்லப்போற காரசாரமான விஷயத்தைக் கேட்டுட்டு வீட்டுக்குக் கௌம்புங்க..."
 "என்ன மாமா, கேலி செய்துகிட்டே இருக்கீங்க? என்னதான் விஷயம்னு சொல்லுங்களேன்..." குமார் திரும்பவும் பரபரத்தான்"சரி மருமகன்களே, நேரடியா விஷயத்துக்கே வந்துடறேன். மாமா மகள்னும், அத்தைமகள்னும் நீங்க ரெண்டு பேரும்தான் இப்படி உருகறீங்க. சாரிப்பா, உங்க ரெண்டு பேரையுமே கல்யாணம் பண்ணிக்கிற அபிப்பிராயம் மஞ்சுவுக்கு இல்லை. இப்பதான் சொல்லிட்டுப் போறா. உங்களுக்கு சந்தேகமா இருந்தா இதோ உங்க மாண்புமிகு அத்தையார் இருக்காங்க அவங்கக்கிட்டயே கேட்டுக்கலாம்.''
 அதன்பிறகு அங்கே பேச்சே இல்லை. கொண்டு வந்தவைகளை மேசைமீது வைத்துவிட்டு அவர்கள் இருவரும் கிளம்பிவிட்டார்கள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 29, 2023
ISBN9798223272397
சந்தன மின்னல்...

Read more from Megala Chitravel

Related to சந்தன மின்னல்...

Related ebooks

Reviews for சந்தன மின்னல்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சந்தன மின்னல்... - Megala Chitravel

    1

    பகல் குளத்தில் குளித்த நிலவுப் பெண் வெண்மேக ஆடையால் தன்னுடல் மறைத்து வான வீதியில் நடக்கும் போது, நட்சத்திர இளைஞர்கள் கண்சிமிட்டி ரசிக்கும் பின் மாலைப்பொழுது.

    மஞ்சு சன்னல் வழியாக வெளியே பார்த்தாள். தோட்டம் தெரிந்தது. இளங்காற்றில் மலர்கள் அசைவது தேர்ந்த நாட்டியம் போலிருந்தது. சுற்றுச் சுவரை ஒட்டியிருந்த மகிழமரத்தின் மீது பறவைகள் வந்து உட்கார ஆரம்பித்திருந்தன.

    அன்றையப் பகல் பொழுதின் வெளிச்சுற்றல் அனுபவங்களைத் தங்கள் இனத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தொடங்கின. அந்த உல்லாசப் பேச்சின் கும்மாள ஓசை மஞ்சுவுக்குப் புன்னகையைப் பிறப்பித்தது.

    அவளுக்கு எப்போதும் ஒன்று மட்டும் புரிவதில்லை. விடியுமுன்னே புறப்பட்டுப் போய் மாலையில் மிகச் சரியாகக் குறிப்பிட்ட மரத்துக்கு எப்படி அவை திரும்புகின்றன?

    வானத்தில் யாராவது அறிவிப்புப் பலகை நட்டு வைத்திருக்கிறார்களா? தன்னுடைய வீடு இந்த திசையில்தான் இருக்கிறது என்று எப்படி அவைகளுக்குத் தெரிகிறது? இப்படிப் புரிந்து கொள்வதற்கு எத்தனை அறிவும் நுணுக்கமான ஆராய்வும் இருக்க வேண்டும்?

    எத்தனை வண்ணங்களில் சேலை உடுத்தினாலும் இந்தப் பறவைகளின் சிறகு போல வண்ணம் அமையுமா? அத்தனை அழகும் பளபளப்பும் மனிதனால் படைக்கக்கூடியதா என்ன?

    மனிதர்களுக்குச் சிறகுகள் ஏனில்லை? பறவைகளுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதுதான் சிறகுகளாய் பரிணமித்திருக்கிறது. நமக்கு நம்பிக்கையும் இல்லை. நாளை நல்லது நடக்கும் என்கிற நிச்சயமும் இல்லை.

    தன்னையுமறியாமல் பெருமூச்சு வந்தது.

    கதவு மென்மையாகத் தட்டப்பட்டது. மஞ்சு திரும்பினாள்.

    என்ன மஞ்சு... எப்படி இருக்கே? என்றபடி வாசு உள்ளே நுழைந்தான். மருத்துவராகத் தன் பணிகளை முடித்தான்.

    மாமாவும் அத்தையும் எங்கே காணோம்? என்றபடி படுக்கையின் அருகில் உட்கார்ந்தான்.

    "ரெண்டு பேருமே ஊரில் இல்லை. அப்பா டெல்லிக்கு போயிருக்கார். மத்திய அமைச்சர்கூட முக்கியமான பேச்சு வார்த்தை. போகமாட்டேன்னு அடம் பிடித்தவரை நான்தான் பிடிவாதமா அனுப்பி வைத்தேன்.

    அம்மாவை மதுரையில் நடக்கிற என் சிநேகிதியோட திருமணத்துக்கு அனுப்பினேன். கிட்டதட்ட நாலு மாசமா என்கூடதானே உட்கார்ந்து கிடக்கறாங்க. பாவம்... ரெண்டு பேரும். இப்படி போனதாலயாவது கொஞ்சம் மாறுதலா இருக்கட்டுமே..."

    உனக்கு சொல்ல மறந்திட்டேனே... இப்ப உனக்கு போட்டேனே ஊசி இது அமெரிக்காவில இருந்து வந்திருக்கு. ரொம்ப புதுசு. நீயே ஆச்சரியப்படப்போறே பாரேன். இன்னும் ரெண்டே வாரத்தில் காலையில் ஓட்டப்பயிற்சிக்காக ஓடப்போறே...

    மஞ்சுவுக்குச் சிரிப்பு வந்தது.

    என்ன வாசு இது? மருத்துவர் வேலையை விட்டுட்டு இப்படி காது குத்தற வேலையில் எப்போ சேர்ந்தே?

    அவளுக்குப் பதில் சொல்ல முடியாமல் வாசு திணறும்போது, மஞ்சுவின் அப்பா வேகமாக உள்ளே வந்தார். மஞ்சுவின் புருவங்கள் வியப்பிலும் கோபத்திலும் மேலேறின.

    ஏம்ப்பா... நீங்க டெல்லிக்குப் போனீங்களா இல்ல அமிஞ்சிக்கரைக்குப் போனீங்களா? இப்பதான் வாசுகிட்டே சொல்லிக்கிட்டிருக்கேன்... நீங்க வந்து நிக்கறீங்களே போங்கப்பா... நீங்க...

    நேற்றே போனதினால் விடியற்காலையில் அமைச்சரைப் பார்த்து பேசிட்டேன். உடனே கிளம்பி ஓடி வரேன். உன்னை விட்டிட்டு இருக்க முடியலைம்மா. நேத்து ராத்திரியெல்லாம் தூக்கமே இல்லை. அதுசரி, நீ மருந்து மாத்திரையெல்லாம் ஒழுங்கா சாப்பிட்டியா? துணைக்கு வேலைக்காரர்கள் எல்லோரும் இருந்தாங்களா?

    எல்லாம் உங்க வேலைதானப்பா? நேத்து ராத்திரி முப்பதுபேர் எனக்கு காவலா இருந்தாங்கப்பா. கவலைப்படாதீங்க முதலில் நீங்கள் குளிச்சிட்டு சாப்பிடுங்க. அப்பறம் கேள்வி - பதில் நிகழ்ச்சி வைச்சுக்கலாம்.

    மஞ்சு... எதையாவது பேசி என் கவனத்தை மாத்தற வேலை வைச்சுக்காதே என்றபடியே மேஜை டிராயரை இழுத்துப் பார்த்தவர் திடுக்கிட்டார்.

    "பார்த்தியா நான் வேளை பிரகாரம் எடுத்து வைச்சிட்டுப் போயிருந்த மாத்திரையெல்லாம் அப்படியே இருக்கே... என்னடா கண்ணம்மா இது...’’

    ரொம்ப அலுப்பா இருந்ததுப்பா அதுதான் சாப்பிடலை. இந்த குண்டு குண்டு மாத்திரை எல்லாத்தையும் நம்ம தோட்டத்தில் பூக்காம இருக்கே ரோஜாசெடி அதுக்கு அடியில் கொட்டி புதைச்சு தண்ணீர் ஊத்தினா நல்லா வளர்ந்து பெரிசு பெரிசா பூக்குமாம். எப்பவோ படிச்சது நினப்புக்கு வருதுப்பா...

    அவளுக்குப் பதில் சொல்லாமல் அப்பா கண்கலங்க அறையைவிட்டு வெளியேறினார். வாசு அவளைக் கேட்டான்.

    என்ன மஞ்சு இது... நான் கேட்டப்ப மாத்திரையெல்லாம் போட்டுக்கிட்டதா சொன்னியே.

    மஞ்சு சிரித்தாள்.

    "இதுதான் பெத்தவங்களுக்கும் மத்தவங்களுக்கும் உள்ள வேறுபாடு. உனக்கு கேட்க மட்டும்தான் தெரிஞ்சுது. அவருக்கு எடுத்துப் பார்க்கவும் புரிஞ்சது. உனக்கு நான் மாமா மகள் மட்டும் தான். அவருக்கு பெத்த மகளாச்சே...

    வாசலில் நம்ம கார் சத்தம் கேட்குது. கண்டிப்பா எங்கம்மாதான் வராங்க பாரேன்."

    களைப்பும், ஆயாசமும் முகமெங்கும் பரவியிருக்க அம்மா உள்ளே வந்தாள்,

    விடியற்காலை முகூர்த்தம். உடனே கிளம்பிட்டேன். மீனாட்சியம்மன் கோவில் அர்ச்சனை செய்துட்டு ஓடிவர்றேன். மஞ்சுவுக்கு உடம்பு சீக்கிரம் நல்லாகிடணும். குடும்பத்தோடு வர்றோம்னு வேண்டிக்கிட்டு வந்திருக்கேன் என்றபடியே குங்குமத்தையும், திருநீறையும் அவள் நெற்றியில் வைத்துவிட்டாள்.

    நல்லவேளை எனக்கு மொட்டை போடறேன்னு வேண்டிக்கிட்டு வராம இருந்தியே... நான் தப்பிச்சேன். சிரிக்காமல் சொன்ன மஞ்சுவைப் பார்த்துப் பொய்க் கோபம் காட்டினாள் அம்மா.

    குறும்புக்காரி. உன்னை என்ன செய்யறேன் பார் மகளை அணைத்து முத்தமிட்டாள்.

    அதற்குள் அப்பா கையில் பழரசம் நிறைந்த டம்ளருடன் வந்தார்.

    முதலில் இதைக்குடி மஞ்சு. நீயும் வந்துட்டியா? வளவளன்னு பேசாம மாத்திரைகளை எடுத்துக்கொடு. அவள் பாட்டுக்கு சாப்பிடாமல் இருந்திருக்கிறா. இதுக்குதான் நாம் யாராவது ஒருத்தர் வீட்டிலேயே இருக்கணும்னு சொல்றது...

    மாத்திரை எல்லாம் நேரத்துக்கு சாப்பிடணும் மஞ்சு. அப்பதான் உடம்பு சீக்கிரமா குணமாகும். இந்தாடா கண்ணில்லே... சாப்பிடுடா...

    அம்மா கெஞ்சலும் கொஞ்சலுமாகக் கையில் கொட்டிய மாத்திரைகளையே ஒரு கணம் வெறித்தாள் மஞ்சு. உலகத்தில் இத்தனை வர்ணங்களா இருக்கிறது என்ற வியப்புத் தோன்றியது. அவற்றைத் திரும்ப அம்மாவின் கையிலேயே கொட்டினாள்.

    "எதுக்கும்மா இது? வேண்டாம். இன்னிக்கு வாசு போட்டிருக்கிற புது ஊசியிலே ஏதோ மந்திர சக்தி இருக்காம். இன்னும் எண்ணி ரெண்டே வாரத்தில் அப்பாவும் நானும் காலையில் ஓட்டம் ஓடப் போறோம். இல்லையா வாசு?

    இந்த மாத்திரைகளை விழுங்கி விழுங்கி என் தொண்டையில் தனியா ஒரு ஓடுபாதையே உருவாகிப் போச்சு. எனக்கு எல்லாமே அலுத்துப் போச்சுப்பா. சீக்கிரமே விடுதலை வந்துட்டாக்கூட நல்லா இருக்கும்னு தோணுதுப்பா..."

    அம்மா முகத்தைத் திருப்பி அழக்கிளம்ப அப்பா கண் கலங்க மகளை அணைத்துக் கொண்டார். மஞ்சு மட்டும் சிரித்தாள்.

    "என்னப்பா இது? நீங்கள்... இத்தனைக் கோழையா? முதல் தர தொழிலதிபர்... பத்தாயிரம் பேருக்கு முதலாளி... ஊருக்கு உபகாரம் செய்யும் கொடைவள்ளல். இப்படி அழறீங்களே...

    எல்லாம் இந்த அம்மாவால வர்றது. ஏம்மா நீ இப்படி அழுது அழுது மூக்கை சிந்திக்கிட்டிருக்க? விலை அதிகமான சேலையாச்சேன்னு துளியளவாவது கவலைப்படறியா? வாசுகிட்டே சொல்லி முதல்ல உனக்குதான் ஊசி போடச் சொல்லணும்..."

    அப்பா அவள் முகவாயைத் தூக்கிக் கெஞ்சினார்.

    "எனக்காக இந்த மாத்திரையைப் போட்டுக்கடா உடம்பு சீக்கிரம் குணமாகணும் இல்லே? என் கண்ணில்லே? ராஜாத்தியாச்சே...’’

    "அப்பா, நீங்க ரெண்டு பேரும் பாசத்திலே ஒண்ணை மறந்திடறீங்க. எனக்கு சமாதானம் சொல்றதா நினைச்சுக்கிட்டு மனமறிஞ்சு இத்தனை பொய் சொல்றீங்களே எனக்காக என் முன்னால் நீங்க போடற பொய் வேடத்தைக் கலைச்சிடுங்கப்பா.

    எது வந்தாலும் எதிர்கொள்ற தைரியம் எனக்கு வந்தாச்சுப்பா. அதை நீங்களும் வளர்த்துக்குங்க. இல்லையானால் உங்களுக்குத்தான் பின்னால் துயரம். எனக்காக இல்லைன்னாலும் உங்களுக்காக இதையெல்லாம் விழுங்கி வைக்கறேன். போதுமில்லையா?"

    அதற்குமேல் அங்கிருந்தால் தன்னால் தாங்கமுடியாமல் அழுது விடுவோமோ என்று வாசு தலையசைத்து விடை பெற்றான். அதற்குள் அம்மா மஞ்சுவுக்குச் சாப்பாடு கொண்டு வந்தாள்.

    சாப்பாடு என்ன பெரிய சாப்பாடு? வெறுசாக உப்பு மட்டும் போட்ட அரிசி நொய்க் கஞ்சி. இரண்டு சின்னக்கரண்டி எடுத்து சாப்பிடுமுன்னே குமட்டியது. அப்பா சமாதானம் செய்து தானே ஊட்டிவிட்டார். படுக்க வைத்துப் போர்த்திவிட்டார்.

    இரவு விளக்கு வெளிச்சத்தில் தூங்கும் மகளைப் பார்த்துக் கண்கலங்கியது. அவள் கையை எடுத்து வலித்துவிடாமல் பிரித்துப் பார்த்தார்.

    வியாதிக்காகச் சாப்பிடும் மருந்தின் தாக்கத்தால் உள்ளங்கைகூட கறுப்பாகிவிட்டிருந்தது. சத்தம் வராமல் குலுங்கிக் குலுங்கி அழுதவரை, அரைக்கண்ணால் பார்த்தாள் மஞ்சு. பாவம், தான் தூங்கிவிட்டதாக நினைத்துவிட்டிருக்கிறார்.

    மஞ்சுவுக்கு தன்னைப் பெற்றவர்களை நினைத்தால் பரிதாபமாக இருந்தது. கூடவே கோபமும் வந்தது.

    ‘ரெண்டுபேரும் இப்படி அசடா இருந்திருக்காங்களே. இவங்க காலத்தில் தான் மூன்று பிள்ளைகள் பெத்துக்குலாம்னு அனுமதி இருந்ததே. அந்த நாளில் போய் இப்படி ஒரு பெண்ணோடு நிறுத்திக்கிட்டிருக்காங்களே... எனக்கப்பறம் ஒரு தம்பியோ, தங்கையோ இருந்திருந்தால் இப்ப இப்படி பரிதவிக்கவேண்டியே இருக்காது... இத்தனை கோடி சொத்து இருந்தும் என்ன பயன்?

    அப்பா எனக்காக இன்னொரு தாஜ்மகால் கட்டினாலும் கட்டுவார். இரண்டு பேரையும் தனியா விட்டிட்டு எப்படி போறது? திசை தெரியாத படகு போல அழிந்து போயிடுவாங்களே...

    இவங்களுக்காகவாவது, அதிகம் வேண்டாம். அது பேராசை... இன்னும் ஒரு பதினைந்து வருடம் நான் உயிரோடு இருக்க முடிஞ்சா எத்தனை நல்லா இருக்கும்? என்ன வாழ்க்கை... எல்லாமே வெறும் நிழலாகிவிட்டதே...’

    ஆயாசமாக வந்தது. காலையில் கண் விழித்ததும் முதலில் பார்க்க வேண்டும் என்று எதிர்சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தைப் பார்த்தாள்.

    முன்னிரவுப் பொழுதில் கடலைப் பின்னணி வைத்து எடுக்கப்பட்ட படம். வெண்ணிற உடை அணிந்து சூர்யா நிற்கிறான். அவனருகில் வேண்டும் என்றே சூர்யாவுக்குப் பிடிக்காத ஆளை அடிக்கும் மஞ்சள் நிறத்தில் சேலை கட்டிக்கொண்டு மஞ்சு நிற்கிறாள். திருமணமான புதிதில் எடுக்கப்பட்ட படம். நிசமாகவே எதிரில் நிற்பது போல இருந்த சூர்யாவையே உற்றுப் பார்த்தாள்.

    சூர்யா அமெரிக்கா போய் ஒன்பது மாதம் முடிந்துவிட்டது. இன்னும் ஒரு மாதத்தில் திரும்பி விடுவான். தன் உடல் நிலையைப் பற்றி சூர்யாவுக்குச் தெரிவிக்கக்கூடாது என்று அப்பாவிடம் கண்டித்துச் சொல்லிவிட்டாள்.

    சேதி தெரிந்தால் உடனே அவன் ஊருக்குத் திரும்பி விடுவான். போன வேலை கெட்டுப் போகும்.

    அது கூடவே கூடாது. என் சூர்யா எல்லாவற்றிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும். தோல்வி என்பது சூர்யாவின் கம்பீரத்துக்குக் குறையாகிவிடுமே... என்னால் அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது.

    சூர்யா வரும் வரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டாவது காத்திருக்க வேண்டும். முடியுமா? அவரைக் கண்ணில் காண முடியுமா? உலகத்தின் எத்தனையோ கோடி உயிரினங்களில் என்னைத் தேடி வந்த இந்த நோய் அதுவரை என்னை அனுமதிக்குமா?

    நான் எத்தனை துரதிருஷ்டம் பிடித்தவள்! உலகத்தில் யாருக்குமே கிடைக்காத எத்தனையோ பெரும் பேறுகள் இருந்தும் என்ன பயன்?

    கணக்கில்லாமல் கொட்டிக்கிடக்கும் பணம். அன்பை அள்ளித் தரும் காதல் கணவன். பாசத்தை வாரித் தந்து கண்ணாய் காக்கும் பெற்றோர். இருந்தும் வாழ் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் கொடுமை. கண்ணில் நீர் பொங்கி வடிந்தது.

    ‘மனதை அதன் போக்கில் விட்டால் அது காட்டாறு போல ஒரே திசையில் தான் ஓடும். அதை நம் வழிக்குக் கொண்டு வந்து குறுக்கே எண்ணங்களினால் அணை கட்டி விட்டால் போதும். சொன்னதைக் கேட்டுக் கொண்டு பேசாமல் அடங்கித் தளும்பிக் கொண்டு கிடக்கும்.

    என்னுடைய ஒரே அணை சூர்யா மட்டும் தான். சூர்யா...’ என்னுடைய சூர்யா என்று சொல்லும் போதே தித்திப்பாய் மனதுக்குள் ஏதோ இறங்கியது. உடலெல்லாம் புளகித்து, தவிப்பாய் கிறங்கியது.

    Enjoying the preview?
    Page 1 of 1