Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கனாக் கண்டேன் தோழி!
கனாக் கண்டேன் தோழி!
கனாக் கண்டேன் தோழி!
Ebook248 pages1 hour

கனாக் கண்டேன் தோழி!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபோது கூட்டம் அதிகமாக இருந்தது. அதற்குள் ஊடுருவி செல்லாமல் துர்கா சற்று தள்ளி நின்றாள். "அக்கா சௌக்கியமா இருக்கீங்களா...?"
 அன்பு விசாரிப்புடன் பக்கத்துத் தெரு குமாரி வந்தாள்.
 "அட... குமாரி... பார்த்து நாளாச்சே... எப்படிம்மா இருக்கே? வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க...? படிப்பு எல்லாம் எப்படி இருக்கு?" துர்கா விசாரித்தாள்.
 "நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். முதல் வருஷமா இருக்கிறதால... சப்ஜெக்ட் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. அதனால நெறைய படிக்க வேண்டி இருக்குக்கா..."
 "முதல்ல அப்படித்தான் இருக்கும்... சப்ஜெக்ட் பிடிபட்டுட்டா சுலபமாகிடும். கிளாஸ்ல கவனமா இருந்தாலே போதும்... நீ டூர் போக பணம் குடுத்திட்டியா?"
 துர்கா கேட்டபோது குமாரி வியந்தாள்.
 "காலேஜில டூர் எதுவும் போகலியேக்கா... அப்படியே போனாலும் வீடு இருக்கிற நிலைமைக்கு நான் எப்படிக்கா போக முடியும்? அந்தப் பணம் இருந்தா வீட்டு செலவுக்கு ஆகுமேக்கா... படிக்க வைக்கிறதுக்கே அம்மாவும் அப்பாவும் எவ்வளவோ கஷ்டப்படறாங்களேக்கா..." சிரிப்பு மாறாத முகத்தோடு குமாரி சொன்னபோது அவள் கன்னத்தில் முத்தமிட வேண்டும் போலிருந்தது துர்காவுக்கு. மேலே பேசும் முன் அவரவர் பேருந்து வரவும் தலையாட்டலுடன் ஓடிப்போய் ஏறிக் கொள்ளத்தான் நேரமிருந்தது.
 பேருந்தில் இடி ராஜாக்களை சமாளித்து... தலை கலைந்து... புடவை கசங்கி பயணப்பட்டு இறங்கி புதுக் காற்றை சுவாசித்ததும் தான் உயிர் வந்தது போலிருந்தது. அவசரமாக தலையை கோதி, புடவையை சரி செய்து ஓட்டமும் நடையுமாக அலுவலகத்தில் நுழையும் போது மணி எட்டே முக்கால். தண்ணீர் குடித்துஆசுவாசப்படுத்திக் கொண்டு பதிவேட்டில் கையெழுத்து போட்டு இருக்கையில் உட்கார்ந்தபோது மணி ஒன்பதடித்தது.
 அடுத்த ஒரு மணி நேரத்திற்கு அக்கம் பக்கம் பார்க்க முடியாத அளவுக்கு அம்பாரமாய் குவிந்து கிடந்த கோப்புகளோடு சரியாக இருந்தது. கைகளை சொடக்கிட்டு நாற்காலியில் சாய்ந்து கொண்டாள்.
 "என்ன துர்கா... ரொம்ப களைப்பா தெரியற...? உடம்பு சரியில்லையா?" தேவையில்லாமல் முதன்மையாளர் கேட்டார். ஒருநாளில் இரண்டு முறையாவது அவளிடம் பேசாவிட்டால் அவருக்கு தூக்கமே வராது. பதில் சொல்லப் பிடிக்காமல் இருந்தாலும் சொல்லித் தொலைக்க வேண்டிய கட்டாயம்... "அதெல்லாம் ஒண்ணுமில்லே சார்..."
 அசட்டுத்தனமாக இளித்த முதன்மையாளர் சிகரெட் குடிக்க வெளியே போனார். "துர்கா... எனக்கு ஒரு சின்ன உதவி வேணுமே..." என்று கேட்டபடி கையில் கோப்புடன் ராணி வந்தாள். ஒரு நாளைக்கு பத்து முறையாவது ராணிக்கு, துர்காவிடம் வந்து பேசியாக வேண்டும். இன்றைக்கும் அப்படித்தான் வந்துவிட்டாள். துர்காவுக்கும் அவளோடு பேசவில்லை என்றால் நன்றாகவே இருக்காது. ராணியிடமிருந்து கோப்பை வாங்கிப் பிரித்தாள். மிகவும் சிக்கலான வேலை. அதை ராணிக்கு விளக்கிச் சொல்லி புரிய வைத்து செய்ய வைப்பது சுலபமல்ல என்பது புரிந்தது.
 "ராணி இதை என்னிடம் கொடுத்துவிட்டுப் போ... நான் முடித்து வைக்கிறேன். மூன்று மணிக்கு வந்து வாங்கிக்கொண்டு போ..." துர்கா முடிக்கும்முன்னே ராணி கைகூப்பி வணங்கினாள்.
 "நீ நல்லா இருப்பே... கொள்ளு பேத்தி, எள்ளுப் பேத்தி பார்த்து பல்லாண்டு காலம் வாழுவேடி... என் ராஜாத்தி... நான் போறேன்... இல்லேன்னா ஜொள்ளுவாயன்... அவன்தாண்டி... எங்க பிரிவு கண்காணிப்பாளன் என்னைக் காணோம்னு டிவியில் விளம்பரம் கொடுத்திடுவான்..."
 சிரித்துக்கொண்டே போகும் ராணியைப் பார்த்தாள் துர்கா. எப்போதும் சிரித்த முகம், எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் சுபாவம். தனக்கு வயதாவதைப் பற்றி அலட்டிக்கொள்ளவே மாட்டாள்.அதுக்கென்னடி பண்றது...? நாளும் வயசும் யாருக்காக காத்திருக்கும்? சொல்லு... முப்பத்து ஆறு வயசுப் பெண்ணை வீட்டிலேயே வைத்திருக்கிறோமே... என்று வெட்கமே படாத என் பெற்றோரை வைத்துக்கொண்டு என்ன செய்யறது? அதனால்தான் சொல்றேன்... இப்பவே உனக்கு இருபத்து ஆறு வயதாகிட்டது. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிற வழியைப் பாரு... இன்னும் ரெண்டு வருஷம் ஏமார்ந்தேன்னு வை... நீயும் என் லிஸ்ட்ல சேர்ந்திடுவே." ராணி தினமும் சொல்லும் அறிவுரை இது. துர்கா பதில் ஏதும் பேசாமல் வெறுமையாகச் சிரிப்பாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 18, 2023
ISBN9798223163930
கனாக் கண்டேன் தோழி!

Read more from Megala Chitravel

Related to கனாக் கண்டேன் தோழி!

Related ebooks

Reviews for கனாக் கண்டேன் தோழி!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கனாக் கண்டேன் தோழி! - Megala Chitravel

    1

    வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

    நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்

    பூரணப் பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

    தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி! நான்

    மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

    முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற் கீழ்

    மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக்

    கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்...

    ஆண்டாளின் காதல் கனவு ஊரெங்கும் கேட்ட விடியல் பொழுது, தெய்வத்துக்கு சூடிக்கொடுத்த சுடர்கொடி அவள். அதனாலேயே நாரணனைக் கைத்தலம் பற்றக் கனாக் காணலாம். நாம் எவனுக்கு என்னத்தைக் கொடுத்தோம்? அவனைக் கைத்தலம் பற்றக் கனா காண்பதற்கு...? நினைக்கும் போதே துர்காவுக்கு சிரிப்பு வந்தது.

    காய்கறிகாரன் தொடங்கி ஓட்டை உடைசல் பழைய இரும்பு சாமான் வாங்குபவன் வரை சர்வ சுதந்திரமாக நுழையும் தெருக்களில் குடியிருக்கும், தங்களுடைய திருமணப் பேச்சுகள் மட்டும் நுழையாத நிலையிலிருக்கும் தன்னைப் போன்ற பலப் பெண்களும் கூட இப்படித்தான் நினைத்துக் கொண்டிருப்பார்களோ...? மேலே சிந்திக்க விடாமல் அவளைப் பார்த்து குக்கர் பையன் வேகமாக விசிலடித்தான்.

    மறுநாள் சமையலுக்கான முன்னேற்பாடுகளிலிருந்து உடுத்தப் போகும் உடைகள் வரை முதல் நாள் இரவே ஒழுங்கு செய்து கொள்வது அவள் வழக்கம். அதனால் காலைப் பொழுதில் வீட்டில் தன்னோடு யாரும் பேசினால் துர்காவுக்கு எரிச்சலாக வரும். காலைப் பொழுதின் அமைதியையும், சுகத்தையும் கெடுக்கும் எதையும் அவள் விரும்புவதில்லை.

    ஆனால், பேச்சு என்ற பெயரில் ஒருவரோடு ஒருவர் ஊளையிடும் கூச்சல் காலைப் பொழுதில்தான் இந்த வீட்டில் நடக்கும். இதோ... இன்றும் ஆரம்பித்து விட்டது.

    இதையெல்லாம் என்கிட்டே ஏண்டி கேக்கிறே...? தோள்ள பையை மாட்டிக்கிட்டு டங்கு... டங்குன்னு நானா வேலைக்குப் போறேன்... இல்லை மாசா மாசம் சுளை சுளையா சம்பளம் வாங்கி சரக்... சரக்குன்னு எண்ணிக்கிட்டிருக்கேனா...? இதுக்கெல்லாம் யார் ஆளோ அவங்கக்கிட்டே கேளு... அதை விட்டிட்டு என்னை ஏண்டித் தொணப்பறே...?

    தலைவாரிக் கொண்டிருக்கும் தன்னைக் குத்தவே அம்மா இப்படி பேசுகிறாள். உடனே தங்கையைக் கூப்பிட்டு, என்னடா வேணும் செல்லம்...? எதா இருந்தாலும் என்கிட்டே கேக்க வேண்டியதுதானேடி... என்று கொஞ்சுவாள் என்றெல்லாம் எதிர்பார்த்து இது சொல்லப்பட்டது இல்லை என்று துர்காவுக்குத் தெரியும். என்றைக்கு வேலைக்குப் போகிறேன் என்று தோளில் கைப்பை மாட்டிக்கொண்டு படி இறங்கினாளோ அன்றைக்கே இந்த அன்பான வசவுகள் தானே தாயிடமிருந்து வருகிறது...?

    ஏண்டி வாயை வெச்சுக்கிட்டு நீ சும்மாவே இருக்கமாட்டியா...? காலையில் எதுக்கு வம்பை வாங்கறே...? எல்லாத்துக்கும் அவங்கக்கிட்டதானே கையேந்த வேண்டி இருக்கு...? அப்பா தன் பங்கிற்கு குறி வைத்து அடித்தார்.

    ஏண்டா உங்க ரெண்டு பேருக்கும் மானம், ஈனம், சூடு, சொரணை கிடையாதா...? காலையில் ஏண்டா இப்படி போட்டி போட்டுக் குலைச்சிக்கிட்ருக்கீங்க...? கிளம்பற நேரத்தில் சும்மா இருங்களேண்டா... அத்தை முணுகினாள்.

    காலை பலகாரம், பத்து மணி காபி, மதிய சாப்பாடு மாலை கொறிக்க சிற்றுண்டி என்று வகை வகையாகச் செய்து மேசை மீது அடுக்கி வைத்துவிட்டு, புடவை மாற்றிக் கட்டி தோளில் பின்னூசிக் குத்திக் கொண்டிருக்கும் போது உள் அறையில் சலசலப்பு கேட்டது. கவனிக்காதது போல் துர்கா மதிய சாப்பாடு கட்டிக்கொண்டாள். ஜில்லென தண்ணீர் குடித்தாள்.

    அம்மா... கேளும்மா... வசந்தி அம்மாவைச் சீண்டினாள். உங்க எல்லார் கொள்ளைக்கும் நான் பலியா...? - கேட்டுட்டு திட்டு வாங்கிக்கறேன்... என்று கத்திய அம்மா பொந்துக்குள்ளிருந்து தலை நீட்டும் பாம்பு போல அறைக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தாள்.

    வசந்தி கிளாசிலே டூர் போறாங்களாம்... அதுக்கு ரெண்டாயிரம் ரூபாய் வேணுமாம்... எல்லாரும் வரணும்னு மாஸ்டர் கண்டிப்பா சொல்லி இருக்காராம்... அதான்...

    துர்கா புடவை மடிப்பை சரி செய்து கொண்டே மாசக் கடைசியில் என்கிட்டே பணம் கிடையாது... என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிட்டு நடந்தாள்.

    பார்த்தியாம்மா அவ பேசிட்டு போறதை...? பணம் இல்லைன்னு பொய் சொல்றாம்மா... பேங்க்ல நெறைய பணம் போட்டு வெச்சிருக்கா... அம்மா நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது... நாளைக்குப் பணம் வேணும். இல்லேன்னா என் பிரண்டுங்க நடுவில் என் கவுரவமே போயிடும்... வசந்தி கோபத்துடன் கிளம்பினாள்.

    சாப்பிட்டுட்டுப் போடி... அம்மா கத்தினது திரும்பி அவளிடமே வந்து காதைக் குடைந்தது. அம்மா எரிச்சலுடன் உள்ளே திரும்பும்போது, அம்மா... அம்மா... இங்க வாம்மா... கத்தலா, உறுமலா என்று இனம் பிரித்தறிய முடியாத குரல்...

    என்னடா... கடங்காரா... உனக்கென்ன வேணும்...? எல்லாரும் சுத்தி நின்னு என்னை சாவடிக்கிறீங்களேடா...?

    ஏம்மா கத்தறே...? அடுத்தவாரம் எங்க தலைவர் படம் ரிசீலாகுது... எங்க மன்றத்துல விழா எடுக்கிறோம்... என்னோட பங்குக்கு ஐந்தாயிரம். நீதான் ஏற்பாடு பண்ணித் தரணும்...

    என்னது ஐந்தாயிரமா...? நான் எப்படிடா பணம் ஏற்பாடு பண்ண முடியும்...? என்ன கேலி பண்றியா?

    நீ தராம யார் தருவாங்களாம்...? நாலு பொண்ணுக்கு அப்புறம் பையன் வேணும்னு தவமா தவமிருந்து என்னை பெற்றதா இருபத்து நாலு மணி நேரத்தில் இருபத்து எட்டு தரம் சொல்றே...? அப்ப நீதான் பணம் குடுக்கணும்... நான் ஆலோசனைக் கூட்டத்துக்குப் போகணும்... சீக்கிரமா டிபன் வைம்மா... என்றபடி தரணி சாப்பாட்டு மேசைக்குப் போனான்.

    ஏய்... அவனை முதலில் சாப்பிட விடாதே... எல்லாத்தையும் தின்னுடுவான்... மத்தவங்களைப் பத்தி கவலைப்படமாட்டாண்டி... அப்பா கத்தினார்.

    ஆமாண்டி... ஆளுக்கு நாலுன்னு கணக்கு பண்ணியில்லே இட்லி இருக்கும்...? இதோ நானும் வந்திட்டேன்... அத்தை தடதடவென ஓடி வந்தாள்.

    ஆனாலும் காரியம் மிஞ்சிவிட்டது. தரணி இருந்ததில் பாதியைத் தன் தட்டில் கொட்டி, முக்கால் கிண்ணம் சாம்பாரை ஊற்றி ஊற வைத்து தின்னக் கிளம்பி விட்டான். கிடைத்தவரை லாபம் என்று மீதி இருந்ததை அப்பாவும் அத்தையும் பங்கிட்டுக் கொள்ள சாப்பாட்டு மேசை களேபரமாகியது. தனக்கு சாம்பாரிலிருக்கும் கறிவேப்பிலை, கொத்தமல்லி கூட மிஞ்சாது என்பதைப் புரிந்த அம்மா கையாலாகாத தனத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றாள்.

    பாட்டி... பாட்டி... பசிக்கிறது பாட்டி... இட்லி குடுங்க... சித்தி போயிட்டாங்களா...? பொம்மி ஓடி வந்தாள்.

    கொழந்தையை பசியோட இத்தனை தூரம் அனுப்பி இருக்காளே... உங்கம்மா என்னடி பண்றா...? வீட்டுல சமைக்கலியா?

    இல்லை பாட்டி... அம்மாவுக்கு தலை சுத்தலாம்... படுத்திருக்கா... சமைக்கலை... பசிக்குது பாட்டி...

    சாந்திக்கு தலைசுற்றல் என்றதுமே அம்மாவுக்கு திகீரென்றது. ‘ஐயோ... இவ வேற மசக்கைன்னு வந்து நிக்கப் போறா... இப்ப வீடு இருக்கிற நிலைமையில் எதுவும் செய்ய முடியாது. துர்காவிடம் எதுவுமே கேட்க முடியாது... தொலைத்து விடுவாள்...’ அம்மா சட்டென சமாளித்துக் கொண்டு குழந்தைக்கு ஏதும் மிச்சம் இருக்கிறதா என்று பார்த்தாள். எல்லா பாத்திரமும் காலியாகிக் கிடந்தன. வந்திருக்கும் குழந்தையை என்ன ஏதென்று யாரும் கேட்கவில்லை. மூவரும் சாப்பிட்டு முடித்து கைகழுவிக் கொண்டிருந்தனர்.

    பொம்மி... இட்லி இல்லைடா... சாதம் கொஞ்சம் சாப்பிடறியா...? பருப்பு போட்டு வேணுமா? தயிர் போட்டுக்கிறியா...? குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.

    பருப்பு போட்டு தாங்க பாட்டி... குழந்தை ஒப்புக்கொண்டாள். அம்மா நிம்மதியானாள்... குழந்தைக்கு பருப்பும் நெய்யும் போட்டு குழைவாகப் பிசைந்து தட்டில் வைத்து தொட்டுக் கொள்ள காய் கூட்டு வைத்தாள்.

    ஏய்... என்று ஏப்பம் விட்டபடி தரணி வந்தான். பொம்மியைப் பார்த்து பழிப்புக் காட்டினான். முகரையைப் பாரு... அப்படியே அவ அப்பாவைக் கொண்டிருக்கு... எப்பப் பார்த்தாலும் திங்கறதுக்கு இங்க வந்திடும்... இதுக்குதான் ஒரே ஊரிலே இதுகளை கட்டிக் கொடுக்கக்கூடாது. இருக்கிற மத்த மூணையும் இலங்கையில் கட்டிக் கொடுத்திடும்மா... அங்கேயே கெடக்கட்டும்... சரிம்மா... பணத்துக்கு ஏற்பாடு பண்ணும்மா... நான் வெளியே போயிட்டு வரேன்... இதப்பாரு... அதுக்குள்ள முழுங்கிட்டு இன்னும் கேக்குது... இதுக்கும் போட்டு இதோட அம்மாவுக்கும் குடுத்துவிடு. ஒரு நாளைக்கு நீ பட்டினி கிட... என்று என்ன பேசுகிறோம் என்பதைக்கூட யோசிக்காமல் பேசும் அவனை பொம்மி புரியாமல் பார்த்து... பிறகு சொன்னது. மாமா கெட்ட பையன்... பாட்டி எனக்கு தயிர் சாதம் வேணும்...

    2

    பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபோது கூட்டம் அதிகமாக இருந்தது. அதற்குள் ஊடுருவி செல்லாமல் துர்கா சற்று தள்ளி நின்றாள். அக்கா சௌக்கியமா இருக்கீங்களா...?

    அன்பு விசாரிப்புடன் பக்கத்துத் தெரு குமாரி வந்தாள்.

    அட... குமாரி... பார்த்து நாளாச்சே... எப்படிம்மா இருக்கே? வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க...? படிப்பு எல்லாம் எப்படி இருக்கு? துர்கா விசாரித்தாள்.

    நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். முதல் வருஷமா இருக்கிறதால... சப்ஜெக்ட் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. அதனால நெறைய படிக்க வேண்டி இருக்குக்கா...

    முதல்ல அப்படித்தான் இருக்கும்... சப்ஜெக்ட் பிடிபட்டுட்டா சுலபமாகிடும். கிளாஸ்ல கவனமா இருந்தாலே போதும்... நீ டூர் போக பணம் குடுத்திட்டியா?

    துர்கா கேட்டபோது குமாரி வியந்தாள்.

    காலேஜில டூர் எதுவும் போகலியேக்கா... அப்படியே போனாலும் வீடு இருக்கிற நிலைமைக்கு நான் எப்படிக்கா போக முடியும்? அந்தப் பணம் இருந்தா வீட்டு செலவுக்கு ஆகுமேக்கா... படிக்க வைக்கிறதுக்கே அம்மாவும் அப்பாவும் எவ்வளவோ கஷ்டப்படறாங்களேக்கா... சிரிப்பு மாறாத முகத்தோடு குமாரி சொன்னபோது அவள் கன்னத்தில் முத்தமிட வேண்டும் போலிருந்தது துர்காவுக்கு. மேலே பேசும் முன் அவரவர் பேருந்து வரவும் தலையாட்டலுடன் ஓடிப்போய் ஏறிக் கொள்ளத்தான் நேரமிருந்தது.

    பேருந்தில் இடி ராஜாக்களை சமாளித்து... தலை கலைந்து... புடவை கசங்கி பயணப்பட்டு இறங்கி புதுக் காற்றை சுவாசித்ததும் தான் உயிர் வந்தது போலிருந்தது. அவசரமாக தலையை கோதி, புடவையை சரி செய்து ஓட்டமும் நடையுமாக அலுவலகத்தில் நுழையும் போது மணி எட்டே முக்கால். தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு பதிவேட்டில் கையெழுத்து போட்டு இருக்கையில் உட்கார்ந்தபோது மணி ஒன்பதடித்தது.

    அடுத்த ஒரு மணி நேரத்திற்கு அக்கம் பக்கம் பார்க்க முடியாத அளவுக்கு அம்பாரமாய் குவிந்து கிடந்த கோப்புகளோடு சரியாக இருந்தது. கைகளை சொடக்கிட்டு நாற்காலியில் சாய்ந்து கொண்டாள்.

    என்ன துர்கா... ரொம்ப களைப்பா தெரியற...? உடம்பு சரியில்லையா? தேவையில்லாமல் முதன்மையாளர் கேட்டார். ஒருநாளில் இரண்டு முறையாவது அவளிடம் பேசாவிட்டால் அவருக்கு தூக்கமே வராது. பதில் சொல்லப் பிடிக்காமல் இருந்தாலும் சொல்லித் தொலைக்க வேண்டிய கட்டாயம்... அதெல்லாம் ஒண்ணுமில்லே சார்...

    அசட்டுத்தனமாக இளித்த முதன்மையாளர் சிகரெட் குடிக்க வெளியே போனார். துர்கா... எனக்கு ஒரு சின்ன உதவி வேணுமே... என்று கேட்டபடி கையில் கோப்புடன் ராணி வந்தாள். ஒரு நாளைக்கு பத்து முறையாவது ராணிக்கு, துர்காவிடம் வந்து பேசியாக வேண்டும். இன்றைக்கும் அப்படித்தான் வந்துவிட்டாள். துர்காவுக்கும் அவளோடு பேசவில்லை என்றால் நன்றாகவே இருக்காது. ராணியிடமிருந்து கோப்பை வாங்கிப் பிரித்தாள். மிகவும் சிக்கலான வேலை. அதை ராணிக்கு விளக்கிச் சொல்லி புரிய வைத்து செய்ய வைப்பது சுலபமல்ல என்பது புரிந்தது.

    ராணி இதை என்னிடம் கொடுத்துவிட்டுப் போ... நான் முடித்து வைக்கிறேன். மூன்று மணிக்கு வந்து வாங்கிக்கொண்டு போ... துர்கா முடிக்கும்முன்னே ராணி கைகூப்பி வணங்கினாள்.

    நீ நல்லா இருப்பே... கொள்ளு பேத்தி, எள்ளுப் பேத்தி பார்த்து பல்லாண்டு காலம் வாழுவேடி... என் ராஜாத்தி... நான் போறேன்... இல்லேன்னா ஜொள்ளுவாயன்... அவன்தாண்டி... எங்க பிரிவு கண்காணிப்பாளன் என்னைக் காணோம்னு டிவியில் விளம்பரம் கொடுத்திடுவான்...

    சிரித்துக்கொண்டே போகும் ராணியைப் பார்த்தாள் துர்கா. எப்போதும் சிரித்த முகம், எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் சுபாவம். தனக்கு வயதாவதைப் பற்றி அலட்டிக்கொள்ளவே மாட்டாள்.

    அதுக்கென்னடி பண்றது...? நாளும் வயசும் யாருக்காக காத்திருக்கும்? சொல்லு... முப்பத்து ஆறு வயசுப் பெண்ணை வீட்டிலேயே வைத்திருக்கிறோமே... என்று வெட்கமே படாத என் பெற்றோரை வைத்துக்கொண்டு என்ன செய்யறது? அதனால்தான் சொல்றேன்... இப்பவே உனக்கு இருபத்து ஆறு வயதாகிட்டது. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிற வழியைப் பாரு... இன்னும் ரெண்டு வருஷம் ஏமார்ந்தேன்னு வை... நீயும் என் லிஸ்ட்ல சேர்ந்திடுவே. ராணி தினமும் சொல்லும் அறிவுரை இது. துர்கா பதில் ஏதும் பேசாமல் வெறுமையாகச் சிரிப்பாள்.

    நீ தேறமாட்டே... உன்னையெல்லாம் வெள்ளாவியில் போட்டு வெளுத்தாக் கூட மஞ்சள் பழுப்பு போகாதுடி... ஏண்டி இத்தனை லட்சணமா, திருத்தமா இருக்கியே... எவனையாவது காதலிக்கவாவது செய்யேண்டி... அப்பவாவது விடியுமேடி... இதுகளுக்கு உழைச்சுக் கொட்டினது போதுண்டி... கோபத்துடன் ராணி சொல்லும் போது துர்கா அமைதியாக இருப்பாள்.

    ‘எனக்கு வயசாகிட்டது... மாப்பிள்ளை பார்க்கமாட்டீர்களா? என்று ஒரு பெண் எப்படி நானாக கேட்க முடியாதோ, அதே அளவு வீரியம் பெண்ணுக்கு வயசாகிவிட்டது... மாப்பிள்ளை பார்க்கணும்... என்று பெற்றோர் முனைந்து நிற்பதற்கும் உண்டு. எங்கே இதையெல்லாம் நினைத்துப் பார்க்க யார் இருக்கிறார்கள்? இன்னேரம் இட்லிக்காக அங்கே அடிதடி நடந்து முடிந்து, பத்து மணி காபிக்கு அடுத்த யுத்தம் ஆரம்பித்திருக்கும். கடலில் அலை ஓய்ந்து குளித்த கதைதான்...’ பெருமூச்சுதான் வந்தது. துர்காம்மா... உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க... ஹால்ல உட்கார வெச்சிருக்கேன்... என்று அலுவலகப் பையன் துரை வந்து சொன்னபோது துர்காவுக்கு வியப்பாக இருந்தது.

    என்னைப் பார்க்கவா வந்திருக்காங்க...? நல்லா விசாரிச்சியா? என்று கேட்டாள்.

    விசாரிக்காம இருப்பேனாம்மா...? ஒரு தரத்துக்கு நாலு தரம் கேட்டேன். உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்கோம்னு தெளிவா சொல்லிட்டாங்க... அதுக்கப்புறம்தான் உங்கக்கிட்டே சொல்ல வந்தேன்... துரை போய்விட்டான்.

    துர்காவுக்கு வெடவெடத்தது. இத்தனை ஆண்டு காலம், இல்லாம தன்னைப் பார்க்க அதுவும்... அலுவலகத்துக்கே வருகிறார்கள் என்றால் யாராக இருக்கும்? பொதுவாக முன்புற வரவேற்பு கூடாரத்துக்கு வந்தாள். அவளைக் கண்டதும் வந்திருந்த பெரியவர் எழுந்து வணக்கம் சொன்னார்.

    பொம்மியிடம் சாப்பாடு கொடுத்து அனுப்பிவிட்டு வந்த அம்மாவிடம் அந்த காபி பிளாஸ்கை எடுத்துக்கிட்டு வரக்கூடாது. இப்பபாரு நான் போய் கொண்டு வரணும்... அத்தை எரிச்சலுடன் எழுந்தாள்... அக்கா எனக்கு சேர்ந்து ஒரு டம்ளர் கொண்டுவா... அப்பா உத்தரவிட்டார்.

    உனக்கு வேணும்னா நீயே எழுந்து வந்து குடி... என்னால கொண்டு வர முடியாது... சொல்லிவிட்டு தனக்கு மட்டும் காபியை ஊற்றிக்கொண்டு வந்து சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.

    ஏதோ கூடப் பிறந்தவளாச்சே... யாருமில்லாத அநாதை என்னமோ சட்டம் பேசறியே... அப்பா பாய்ந்தார்.

    ஆமா... சும்மாதானே வெச்சிருக்கே? என்னைப் பார்த்து சொல்லு...? என் கழுத்தில் கிடக்கிற நாலு பவுன் சங்கிலிக்கும்... கையில் கிடந்த மூணு பவுன் வளையலுக்கும்தானேடா வெச்சிருக்கே...? நாளைக்கு நான் மண்டையைப் போட்டுட்டா... எல்லாத்தையும் உருவிக்கப்போறே... அதுதானேடா உன் திட்டம்... அத்தை தன்

    Enjoying the preview?
    Page 1 of 1