Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kurunkathaigal 40
Kurunkathaigal 40
Kurunkathaigal 40
Ebook128 pages44 minutes

Kurunkathaigal 40

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்பட்டவர்களின் நிலை என்ன?

அன்பாலும் பாசத்தாலும் வருவதுதான் உறவு, பணத்தால் அல்ல!

இச்சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு கருத்துகள் அடங்கிய தொகுப்பே இச்சிறுகதை

Languageதமிழ்
Release dateApr 9, 2022
ISBN6580154008354
Kurunkathaigal 40

Read more from Tamilselvan Ratna Pandian

Related to Kurunkathaigal 40

Related ebooks

Reviews for Kurunkathaigal 40

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kurunkathaigal 40 - Tamilselvan Ratna Pandian

    https://www.pustaka.co.in

    குறுங்கதைகள் 40

    Kurunkathaigal 40

    Author:

    தமிழ்செல்வன் ரத்னபாண்டியன்

    Tamilselvan Ratna Pandian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamilselvan-ratna-pandian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. செருப்பு

    2) இப்படியும் உறவா?

    3) யாரைத் தேர்ந்தெடுக்க

    4) கொலை செய்வது எப்படி?

    5) உரிமைக்குரல்

    6) வெள்ளைச்சட்டை

    7) சந்தோஷம்

    8) ஒப்பீடு

    9) சரவணனின் காதல்

    10) யார் GM?

    11) தினக்கூலி

    12) ஆம்பிள பசங்க

    13) அம்மாவின் இரண்டு பவுன் சங்கிலி

    14) தாய்

    15) இளமாறனும் விச்சுவும்

    16) பொறாமை

    17) ஸ்டீம்

    18) இரு மகள்கள்

    19) வெள்ளையம்மா வெளியேறு

    20) இரண்டு மனைவிகள்

    21) உழைப்பு

    22) குழந்தையின் புன்னகை

    23) பெற்றோரும் மகனும்

    24) கை

    25) அம்மா

    26) இரு மனங்கள்

    27) மூணாவது சட்டை

    28) ஒலிம்பிக்

    29) தங்கம் விலை ஏறியாச்சு

    30) யாரவள்

    31) விவசாயி

    32) மனசு

    33) ஒன்னுமில்லை

    34) பொண்ணு பின்னாடி ஒரு 55 வயசு.

    35) முத்து

    36) மாமனார்

    37) நாக்கு

    38) கண்ணன் வாழ்வான்

    39) பாதிப்பு.

    40) ஒரே விலை

    1. செருப்பு

    நான் பத்தாங்கிளாஸ் விடுமுறையில் திருச்செந்தூர் பக்கம் ஆறுமுகநேரி சித்தி வீட்டுக்குப் போயிருந்த பொது இலட்சுமி மாநகரம் அம்மன் கோவிலில்தான் அவரை முதலில் பார்த்தேன். வெள்ளை வெளேர்னு அன்றுதான் நூற்ற சட்டை போல அரைக்கைச் சட்டை, சட்டைப்பையில் தெரியும் 500 ரூபாய் டிசைன், தும்பைப்பூ எட்டு முழு வேட்டி salt 90 சதவீதம் , pepper 10 சதவீதம் கலந்த தலை... தயிர் சாதத்திலே கடுகு மாதிரி, ஊர்லயே பெரிய salt agent, real estate, விவசாயம்னு முதன்மை பணக்காரர், குணக் குன்று... ஏழைகளின் படிப்புக்கு வருடத்துக்கு பத்து பேருக்காவது உதவும் மனம். என் சித்தப்பா அவர் புகழைத்தான் அடிக்கடி பாடுவார். வியாபாரத்தில் நேர்மை தவறுவதேயில்லையாம் அவர். சொன்ன சொல் மாறாதாம்.

    அம்மன் முன்னாடி வெறுங்காலுடன் பய பக்தியுடன் அவருடன் நின்ற அனைத்துத் தலைகளையும், கால்களையும்

    நோட்டமிட்டன என் கண்கள்... என்ன செய்ய? திரை விலகுவது வரை எதையாவது பார்க்கணுமே... பெரு விரலை விட நீண்ட நாலு கால்கள், பாதி நகமிழந்த பெருவிரல்கள், எண்ணெய் பார்த்திராத ஆறு கால்கள்.... சாம்பல் நிறத்தில், வெடிப்புக்கால் 8, சின்ன விரல் தனியாக ஆவர்த்தனம் பண்ணும் 4 கால்... வாழைப்பூ போன்று சீரான வரிசை விரல்களுடன் 4 கால்.... கால்களில் எத்தனை விதம்... பூசை முடிந்து எல்லோரும் தத்தம் செருப்பை அணிந்து சென்றனர். பெரியவர் வீடு அதே தெரு என்பதாலோ என்னவோ நடந்தே சென்றார் ஒரு பந்தாவுமில்லாமல்... அதுவும் செருப்பின்றி... குறைந்த பட்சம் பாட்டாவோ, காதீமோ எதிர்பார்த்த எனக்கு ஷாக். ஒருவேளை வீடு நடக்கிற தூரம்னு செருப்பு போடாம

    வந்திருப்பாரோ? கடைசியில் என் செருப்பு மட்டும் பந்தல் மூலையில் என்னை அண்ணாந்து பார்த்து மறந்துடாதே மறந்துடாதே என்று கெஞ்சியது.

    சாப்பிடும்போது சித்தப்பாவிடம் இதைப் பற்றிக் கேட்டேன். சித்தப்பாவும் உப்பு ஏஜண்ட்தான். அந்தப் பெரியவர் தூரத்து உறவு. சின்னப் பிள்ளையிலிருந்து நானும் பார்த்து வாரேன்... அவர் செருப்பே போட்டதில்லை என்றார் சித்தப்பா.

    ஏன் சித்தப்பா? பக்கத்திலிருந்த பக்கோடாவைக் கொறித்தபடி கேட்டேன்.

    தெரியாது. நாங்க யாரும் கேட்டதில்லை. கேட்க பயம். அவரும் பெரும்பாலும் மாருதி கார்லதான் போவார். திருச்செந்தூர் கோயில், அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில், வன திருப்பதி... எல்லாத்துக்கும்... கார்தான்... நடக்கிறதும் குறைவுதான்...

    அத்தோடு அந்தப் பேச்சு முடிந்தது.

    அடுத்து நான் காலேஜ், ஸிபிஐ ல சென்னையில் இன்ஸ்பெக்டரா சேர்ந்ததுன்னு பிஸியாயிட்டேன். கோவில் கொடைக்கெல்லாம் போய் பத்து வருஷமாச்சு. பிறகு சித்தி இறந்ததுக்குத்தான் போயிருந்தேன். அப்பவும் பெரியவர் வெறுங்காலுடன்தான் இருந்தார். இரண்டாவது விரல் பெருவிரலைவிட நீளமாய் இருந்தது. நகம்லா சீராக வெட்டியிருந்தார். எனக்கு மனசுல ஒரு ஆர்வம்... கேளேன்... கேளேன்னு... இதயத்தில் இரத்தம் பம்ப் பண்ணுவது மாதிரி ஆர்வம் உந்தித் தள்ளியது.

    வெளியே போட்டிருந்த பெஞ்சுல அவர் பக்கம் போய் வணக்கம் போட்டுட்டு தள்ளி மரியாதையா உட்கார்ந்திருந்தேன். இதயம் வேகமா அடிச்சுகிட்டு இருந்தது.

    பெரியப்பா உங்ககிட்ட ஒன்னு கேக்கலாமா? என் கண்கள் அவர் காலைப் பார்த்ததை அவதானித்துக் கொண்டார்"

    வா... அப்படியே நடப்போம்னு மற்றவர்கள் எங்க பேச்சு கேட்கக் கூடாதுன்னு தீர்மானிச்சவர் போல முன்னாடி நடந்தார்.

    கேளு

    தப்பா நினைக்கலைன்னாகேக்கிறேன் மீண்டும் அனிச்சையாய் என் கண்கள் அவர் கால்களை நோக்கின.

    டேய்... எம்பொண்ணுங்க கேட்டு ஒரு தடவ சொல்லிருக்கேன்... அது பெரிய விஷயமில்ல... செருப்பு பற்றித்தானே கேக்கிறே?

    ஆமா பெரியப்பா

    நாஞ்சின்னப்பயலா இருக்கிறப்ப இவ்வளவு வசதிலாம் கிடையாது.... சோத்துக்கே ததிங்கிணதோம்... ஒரு நா திருச்செந்தூர் கோயிலுக்குப் போயிட்டு வெளியே வந்த போது ஒரு செருப்பு என் கண்ல பட்டது. கொஞ்சம் பெரிசுதான் இருந்தாலும் பாக்க நல்லாருந்துச்சு... யாருக்குந் தெரியாம போட்டுட்டு வந்துட்டேன். சைக்கிள்ல வீட்டுக்கு வந்த பிறகுதான் பாத்துட்டு அப்பா, ஏண்டா திருடினேன்னு அடிச்சு வீட்டுக்கு வெளில ராத்திரி பூரா நிக்க வச்சுட்டாரு

    அடுத்த நாள் அப்பா, செருப்பைக் கோவிலுக்கு வெளில போட்டுட்டு வந்துட்டாரு... அன்னிக்கு எடுத்த சபதந்தான்... சாகும் வரைக்கு அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப் படக்கூடாது, செருப்பும் போட மாட்டேன்னு மனசுக்குள் சொல்லிக் கிட்டேன். எனக்கு நானே கொடுத்த தண்டனை அப்படின்னாங்க பெரியப்பா.

    பெரியப்பா அவர் உயரத்தை விட அதிக உயரமாக காட்சியளித்தார் இப்போது.

    2) இப்படியும் உறவா?

    ஞாயிற்றுக்கிழமை ஹாயா ஒரு கையால் காஃபி குடித்துக் கொண்டே மறு கையால் தினமலரை பற்றிக் கொண்டிருந்தேன். கண்கள்... நகைக் கொள்ளை... மொபைல் பறிப்பு... தைப்பூசம் விடுமுறை... மேய்ந்து கொண்டிருந்தது. மேலே ஃபேன் கரகர

    Enjoying the preview?
    Page 1 of 1