Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arugil Miga Arugil...
Arugil Miga Arugil...
Arugil Miga Arugil...
Ebook118 pages59 minutes

Arugil Miga Arugil...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

ஜீவரத்தினம் என்பவருக்கு சந்திரசேகர், வசந்தகுமார், சூரியகுமார் என மூன்று மகன்கள் ஜீவரத்தினத்தின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் மூன்று மகன்களும் தன் தந்தையின் மீது ஒவ்வொரு விதத்தில் வெறுக்கிறார்கள். ஒரு நாள் ஜீவரத்தினம் கொலை செய்யப்படுகிறார். யார் கொன்றது ஜீவரத்தினத்தை? எதற்காக கொன்றார்கள்? அவரது நடவடிக்கை சரியில்லாத காரணத்தாலா? அல்லது வேறு காரணமா? பார்ப்போம் பட்டுக்கோட்டை பிரபாகரின் பரபரப்பான நடையில்...

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580100907007
Arugil Miga Arugil...

Read more from Pattukottai Prabakar

Related to Arugil Miga Arugil...

Related ebooks

Related categories

Reviews for Arugil Miga Arugil...

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arugil Miga Arugil... - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    அருகில் மிக அருகில்...

    Arugil Miga Arugil…

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சூரியகுமார் பேசுகிறேன்

    புவனேசுவரி பேசுகிறேன்

    சூரியகுமார் பேசுகிறேன்

    தீர்த்தராமன் பேசுகிறேன்

    சூரியகுமார் பேசுகிறேன்

    ரத்னா பேசுகிறேன்

    தீர்த்தராமன் பேசுகிறேன்

    காசிநாதன் பேசுகிறேன்

    சூரியகுமார் பேசுகிறேன்

    பாண்டியன் பேசுகிறேன்

    சந்திரசேகர் பேசுகிறேன்

    வசந்தகுமார் பேசுகிறேன்

    காசிநாதன் பேசுகிறேன்..

    தீர்த்தராமன் பேசுகிறேன்...

    சூரியகுமார் பேசுகிறேன்…

    சூரியகுமார் பேசுகிறேன்

    இந்தக் கதையை எங்கே ஆரம்பித்துச் சொல்வது என்று புரியவில்லை.

    எனக்கு நினைவு தெரிந்த நாளில் ஆரம்பித்தால்... அந்த சம்பவங்களில் உப்பும் இருக்காது, சப்பும் இருக்காது

    என் அப்பாவை ரத்த வெள்ளத்தில் பார்த்த அந்த காட்சியில் இருந்து தொடங்கினால் ஒரு சுவாரசியம் கிடைக்கும்.

    திடுதிப்பென்று அந்த சிகப்புச் சம்பவத்திற்குப் போவதற்கு முன்னால் சில அவசியமான விஷயங்கள் தெரிவித்து விடுவது நல்லது.

    அதற்கும் முன்னால் ஒரு பறவையின் பார்வையில் எல்லோரையும் அறிமுகப்படுத்திக் கொள்கிறீர்களா? முதலில் அப்பா.

    தரை, கடல், ஆகாயம் - எந்த மார்க்கமாக, எந்த வாகனத்தில் வந்து சென்னையில் இறங்கினாலும் சரி, என் அப்பா பேரை மட்டும் ஆட்டோ டிரைவரிடம் சொல்லிவிட்டால் போதும். நீங்கள் எங்கள் வீட்டிற்கு பத்திரமாக வந்து சேர்ந்து விடுவீர்கள்.

    அப்பா அவ்வளவு பிரபலம். அப்பா அரசியல்வாதி இல்லை. சினிமாக்காரர் இல்லை. கிரிக்கெட் நபரும் இல்லை. வெற்றிகரமான தொழிலதிபர். என்ன, என்ன தொழில்கள் என்று என்னை விசாரியுங்கள். பெயர்களைத் தப்புத் தப்பாய் சொல்வேன். நாலைந்தை சொல்ல விட்டுவிடுவேன். எத்தனை கார்கள் இருக்கின்றன என்று கேட்டால் உடனே கூட்டிப் பார்த்து ஒன்பது என்று சரியாய் சொல்லிவிடுவேன்.

    எதற்கு ஒன்பது?

    வேலையிருக்கிறது. உங்களுக்குப் புரியாது. அலுவல் விஷயமாய் அப்பா போக ஒரு வண்டி. விருந்துகளுக்குப் போக ஒரு வண்டி. நாங்கள் மூன்று சகோதரர்கள். ஆளுக்கு ஒரு வண்டி. பெரியண்ணன் மாத்திரம் கல்யாணம் செய்து கொண்டுவிட, அண்ணி பியூட்டி பார்லருக்கும், பெண்கள் கிளப்புகளுக்கும் போக, வர ஒன்று. அப்புறம் அலுவலகத்தில் வருகிற பெரிய மனிதர்களின் சவுகரியத் தேவைகளுக்காக இரண்டு. ஏதாவது ஒன்று ரிப்பேராய் போனால் வந்து நிற்கும் ஒன்பதாவது வண்டி.

    அப்பாவின் முகத்தை ஒரு தரம் பார்த்தவர்கள் மறப்பதில்லை. மறக்க முடியாதபடி அமைப்பு. கறுப்பும், நரையும் இரண்டறக் கலந்திருக்கும் முடியை நடு வகிடு எடுத்துச் சீவியிருப்பார். ஆண்களில் நடு வகிடு அபூர்வம். மீசை சுத்தமாகப் பிடிக்காது. தினம் காலையில் கால் மணி நேரம் சவரம். அந்தக்கால எஸ்.எஸ்.எல்.சி. தொலைபேசியில் அவர் பேசும் ஆங்கில வாக்கியங்கள் எதிராளியை காலடிக்குக் கொண்டுவந்து சேர்க்கும்.

    எப்படிப்பட்ட வாசலாய் இருந்தாலும் அப்பா குனிந்துதான் போக வேண்டும். அந்த உயரத்திற்கு உடம்பு பற்றாக்குறையாகத்தான் இருக்கும். பாண்ட்டும், சட்டையும் ஒரே துணியில் ‘சபாரி’ போல் தைத்து அணிவார். நினைவாற்றல் அதிகம். கொச்சின் கிளை அலுவலகத்தின் வாட்ச்மேனின் பெயரைக் கேளுங்கள். இனிஷியலோடு சொல்வார்.

    அப்பாவுக்குப் பணம் மேல் ஒருவித பைத்தியம். சின்ன வயதில் சைக்கிள் ரிக்க்ஷா ஓட்டினாராம். சர்பத் தயாரித்து சைக்கிளில் கட்டிக்கொண்டு பெட்டிக் கடைகளில் கொண்டுபோய் போட்டாராம். பஸ் கம்பெனியில் கிளீனராக இருந்தாராம். அந்த வடுக்களுக்கு அஞ்சலியாய் பணம் – பணம் - பணம் ஒன்றுதான் அமையும் என்று தாகம் ஏற்படுத்திக்கொண்டு வெறியாய் இயங்கினாராம்.

    அதைத் தொட்டு, இதைத் தொட்டு எங்கேயோ எட்டாத உயரத்திற்கு வந்துவிட்ட இவ்வளவு பிரபலமான, பணக்கார அப்பாவை எனக்குப் பிடிக்காது.

    காரணம் - அவரின் இரண்டு பலவீனங்கள்.

    ஒன்று: மது. எப்போது, எதற்காக ஆரம்பித்தாரோ, தெரியாது. படுக்கை அறையில் ஒரு அலமாரி முழுக்க வகைவகையாக பாட்டில்கள் வைத்திருப்பார். கடைகளில் இருந்து பெட்டி, பெட்டியாகத்தான் வாங்குவார். அநேகமாக அவர் போதையில் இல்லாத நேரம் மிகக் குறைவு. ஆனால், உளறுவதெல்லாம் கிடையாது. பேச்சிலோ, செயலிலோ மதுவினால் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால், போதை குறைய, குறைய ஊற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

    அப்பாவின் இன்னொரு பலவீனம்: பெண். நான் பள்ளி விட்டு வீட்டுக்கு வரும்போது ஒருநாள் அம்மா அழுதுகொண்டிருந்தாள். என்னம்மா என்றேன். எனக்கு ஒரு சக்களத்தி வந்திருக்காடா என்றார். எனக்குப் புரியவில்லை. புரியும் வயதில்லை. வீட்டுக்கே அழைத்து வந்துவிட்ட அந்தப் பெண்ணின் மேல் உதட்டில் ஒரு மச்சமும், தொப்புள் தெரிய அவள் கட்டியிருந்த மெல்லிசான சேலையும்தான் என் நினைவில் இருக்கின்றன. அவளை நான் சித்தி என்று கூப்பிட வேண்டும் என்றார் அப்பா. நானோ, அண்ணன்களோ அப்படிக் கூப்பிடவில்லை. என் அம்மா பக்கத்து உறவினர்கள் எல்லாம் ஒரு ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வந்தார்கள். அப்பாவுடன் சண்டை போட்டார்கள். நடுநடுவே பொசுக்கென்று அம்மா அழுதாள். அப்புறம் அந்த சக்களத்தி வீட்டில் இல்லை. அப்பா வெளியூர் போய்விட்டுத் திரும்பினால், அம்மா சந்தேகமாகக் கேள்விகள் கேட்பாள். அம்மா செத்துப் போனபோது அப்பா மட்டும் அழாதது எனக்குப் பிடிக்கவே இல்லை. அண்ணன்கள் இரண்டு பேரும் பெங்களூரில் கல்லூரிகளில் படிக்க... நான் மட்டும் வீட்டில் இருப்பேன். சினிமாவுக்கு அழைத்துப் போகச் சொல்லி டிரைவரிடம் காசு

    Enjoying the preview?
    Page 1 of 1