Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

September, October, Christopher!
September, October, Christopher!
September, October, Christopher!
Ebook82 pages50 minutes

September, October, Christopher!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. At the same time he has penned lot of novels in all other genres like love, social, comedy. He has also worked as screenplay and dialogue writer for more than 25 tamil movies. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan. First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil. Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.
Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580100905533
September, October, Christopher!

Read more from Pattukottai Prabakar

Related to September, October, Christopher!

Related ebooks

Related categories

Reviews for September, October, Christopher!

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    September, October, Christopher! - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    செப்டம்பர், அக்டோபர், கிறிஸ்டோபர்!

    September, October, Christopher!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    புல்வெளியில் படுத்திருந்தான். நெற்றியில் கைக்குட்டை முடிச்சு. இரண்டு சட்டை பட்டன்கள் கழன்றிருக்க, மார்பு ரோமங்களுக்குள் கும்பகோணத்து மாலைத் தென்றல் கிச்சு கிச்சு தாம்பாளம் விளையாடிக் கொண்டிருந்தது.

    வானம் தயக்கத்தோடு கட்சி விட்டு கட்சி மாறிக் கொண்டிருக்க, கோபமாக சூரியன் வெளிநடப்பு செய்து கொண்டிருந்தது. ரகளை செய்வதற்காக சந்திரன் தலைமையில் நட்சத்திர தடியர்கள் வரப்போவதாகக் கேள்விப்பட்டு மேகங்கள் அவசர அவசரமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தன.

    தூரத்தில் மேம்பாலம். பொம்மை போல வாகனங்கள். அருகே சிணுங்கலுடன் ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்கால் தண்ணீர். தென்றல் சீறும்போதெல்லாம் அவன் மேல் லேசான சாரல் தெளிப்பு நடத்திக் கொண்டிருக்க - கொலுசு சத்தம். சட்டென்று எழுந்து கொண்டான். சற்று தூரத்தில் அம்பாசிடர் கார்.

    அவள் வந்து மௌனமாக முழங்கால்களைக் கட்டிக் கொண்டு அருகில் அமர, கூந்தலின் கூட்டுச் சேரா உதிரிகள் காற்றின் இஷ்டப்படி நடனமாட ஆரம்பித்தன.

    கிறிஸ்டோ என்றாள்.

    உதடுகள் துடித்தன; அல்லது தயங்கின.

    சொல்லு என்று முழங்கைகளில் ஒட்டிக்கொண்டிருந்த மணலை கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டான். சட்டையின் பட்டன்களை அணிந்து கொண்டான். தலையை மிகச் சாய்த்து அவள் கையில் நேரம் பார்த்துக் கொண்டு, ஒன்ரை மணி நேரமா வெய்ட் பண்றேன் சத்யா என்றான்.

    தன் கையில் வைத்திருந்த கார் சாவியை ஆராய்ந்தாள்.

    பெங்களூர் போயிட்டு வந்தது என்ன ஆச்சு கிறிஸ்டோ?

    நேத்தே போன்ல சொன்னனே சத்யா. பெரிய கம்பெனி போக்குவரத்து செலவை ஒத்துக்கிறதா இண்டெர்வியூ கார்ட்ல போட்டிருந்ததாலேதான் போனேன். பத்து போஸ்ட். இண்ட்டெர்வியூக்கு வந்தது நூத்தி நாப்பத்திரெண்டு பேர். வழக்கம்போல கதைக்குதவாத கேள்விகள், வி ரிக்ரெட்டு இன்ஃபார்ம்ன்னு ஆரம்பிச்சி ஒரு கார்டு வரும். அது நிச்சயம். சொல்லு. நீ வரச் சொன்னது எதுக்கு? அதைச் சொல்லு.

    சத்யா புல் பிடுங்கினாள்.

    அவனை நேராகப் பார்க்காமல் சொன்னாள்.

    நாளைக்கு...

    நாளைக்கு என்ன?

    நாளைக்கு என்னைப் பெண் பார்க்க வர்றாங்க கிறிஸ்டோ.

    சத்யா விளையாடுறியா?

    இல்லை நிஜமாத்தான்.

    எப்படி சம்மதிச்சே?

    என் சம்மதத்தை எங்கப்பா கேக்கலையே.

    போதும் சத்யா. இனிமேயும் மறைச்சி வைக்க முடியாது.

    எனக்கு பயமா இருக்குங்க.

    எதுக்கு?

    எப்படி ஆரம்பிக்கிறதுன்னு புரியலை.

    நேரா போ. அப்பா இந்த கல்யாணத்திலே எனக்கு இஷ்டமில்லைன்னு சொல்லு. ஏன்னு கேட்பாரு. நான் கிறிஸ்டோவை விரும்புறேன்னு சொல்லு.

    அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு உறுதியாச் சொல்லு. அவர் பதில் தெரிஞ்சதும் நான் வந்து அவரைச் சந்திக்கிறேன். ஒக்கே?

    ம் என்றாள் அவளுக்கே கேட்காமல்.

    2

    கிருஷ்ணராஜ் தலையின் வழுக்கை, தரையின் மொசைக் போல வழவழப்பாய் இருந்தது. ஜிப்பா, வேஷ்டி. சோபாவில் அமர்ந்து இவர் ஒரு பிஸ்கெட், நாய்க்கு ஒரு பிஸ்கெட் என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஒவ்வொரு துண்டையும் குதித்துக் குதித்துக் கவ்விக் கொண்டிருந்தது நாய்.

    அருகில் டெலிபோன் ஒலித்து, எடுத்து....

    சொல்லுங்க நான்தான் பேசறேன். சேச்சே! அது நம்ம காரா இருக்காதுங்க. ஆமாம், அறுபத்தேழு எண்பத்தேழுதான். அப்படியா? சரி, அங்கே எதுவும் வேலை கிடையாதே. நான் பார்த்துக்கறேன்.

    கிருஷ்ணராஜ் வெற்றிலைப் பெட்டியை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு,

    Enjoying the preview?
    Page 1 of 1