Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ini... Iniya...
Ini... Iniya...
Ini... Iniya...
Ebook70 pages40 minutes

Ini... Iniya...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

பரத், சுசிலா இவர்களது டிடெக்டிவ் தொழிலில் இரண்டு வகையான சவால்கள் ஏற்படுகின்றன. ஒன்று விக்டர், ஜெயந்தி விக்டர் இவர்களின் மீது பொறாமை கொண்ட ஒரு மர்ம நபரால் இவர்களுக்கு ஏற்படும் சிக்கல் என்ன?

இரண்டாவது இனியா இவளது காதலனை காணவில்லை என்றும் அவனை கண்டுபிடித்து தருமாறு பரத்திடம் சொல்கிறாள். இனியா - காதலனின் நிலை என்ன?

பரத் இந்த இரண்டு சவால்களையும் வெற்றி கண்டானா பார்ப்போம் பரபரப்பான திருப்பங்களுடன்...

Languageதமிழ்
Release dateFeb 19, 2022
ISBN6580100908043
Ini... Iniya...

Read more from Pattukottai Prabakar

Related to Ini... Iniya...

Related ebooks

Reviews for Ini... Iniya...

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ini... Iniya... - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    இனி... இனியா...

    Ini... Iniya...

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    டாக்டரின் குப்பைத் தொட்டியில் ரத்தப் பஞ்சுகளைப் போல மேற்கு சூரியனை நோக்கி மாலை மேகத் துணுக்குகள் மிதந்தன.

    மொட்டை மாடியில் கர்லாக் கட்டைச் சுற்றிக் கொண்டிருந்தான் பரத். அருகே தரையில் டிரான்சிஸ்டர் கருத்தடை செய்யச் சொல்லிக் கொண்டிருந்தது.

    நேர், மேலே பறந்த மஞ்சள் பட்டம் தற்கொலை முயற்சியில் இருக்க, மூன்றாவது மொட்டை மாடியில் அதைக் காப்பாற்ற சின்னப் பையனுக்கு உதவிக் கொண்டிருந்தாள் அந்த சிவப்பு தாவணி.

    கழற்றி வைத்திருந்த வாட்ச் கிக், கிக் என்றதும் கட்டையை ஓரமாக வைத்துவிட்டு, டிரான்சிஸ்டரை எடுத்துக் கொண்டு கிளம்பி முன்னர் எதிரே பார்த்தான்.

    அவள் இவனைப் பார்த்துக் கையாட்டுகிறாளா, இல்லை பட்டத்தைப் பார்த்தா என்று தீர்மானிக்க இயலவில்லை.

    இறங்கி கீழே வந்தபோது டெலிபோன் மணி அடித்துக் கொண்டிருந்தது.

    ஹலோ, பரத் ஹியர்.

    போனை எடுக்க ஆள் இருக்க மாட்டிங்கன்னு நினைச்சேன். இன்னும் புறப்படலையா?

    எங்கே சுசி?

    சரியாப் போச்சு. இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை பரத்.

    யெஸ். நேத்து சனி. நாளைக்கு திங்கள்.

    இன்னிக்கு மேட் ஃபார் ஈச் அதர் போட்டில நீங்க ஒரு ஜட்ஜ் இல்லையா?

    கரெக்ட்தான். ஏழு மணிக்கு விழா, போகணும். நீ ஏன் துடிக்கிறேன்னுதான் தெரியலை.

    நானும் வர்றேன் பரத்.

    என்... கள்ளக்காதலின்னு அறிமுகப்படுத்துவேன். சம்மதமா?

    சம்மதம். அப்படியும் சரக்கு பத்தாதுன்னு நான் சொல்வேன். பரவாயில்லையா?

    சுசி, எல்லாத்திலேயும் பிடிவாதம் பிடிக்காதே. உன்னை எப்படி நான் அழைச்சுகிட்டு போவேன்?

    ஏன், மோட்டார் பைக் என்னாச்சி?

    அதில்லை. ஓக்கே. வந்து தொலை எங்கேர்ந்து பேசறே?

    ஒன் மினிட். இந்த கடை பேரென்னப்பா? ம். ராதா மெடிக்கல்ஸ்.

    அங்கே எங்கே போனே? எந்த ஏரியா?

    தாசப்பிரகாஷ் ஹோட்டலுக்குப் பக்கத்திலே. நான் நீட்டா டிரெஸ் பண்ணிட்டு லூனாவிலே வந்துக்கிட்டிருந்தேனா... டப்! டயர் பஞ்ச்சர். பக்கத்திலே இந்த மருந்துக்கடை இந்தப் பையன் ரொம்ப சுறுசுறுப்பு. கடை ஆளைவிட்டு வொர்க் ஷாப்புக்கு லூனாவை அனுப்பி வச்சான். என்னப்பா ப்ளஸ் டூ படிக்கிறியா?

    சரி. அங்கேயே இரு. சீக்கிரம் வர்றேன். பிக்கப் பண்ணிக்கிறேன்.

    ஒண்ணும் அவசரமில்லை. நிதானமா வாங்க. எத்தனை வகையான கான்ட்ராசெப்டிவ்ஸ் இருக்குன்னு நாங்க சுவாரசியமா பேசிக்கிட்டிருக்கோம். இல்லைப்பா? பேரென்ன சொன்னே, ராஜுவா?

    சுசி பாவம் அவன். கெடுத்துடாதே!

    நானா? என்றவள் தணிந்த குரலில், பையன் கண்ணு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அசையலை, திருப்பி திருப்பி படிச்சிக்கிட்டிருக்கான் என்றாள்.

    படிக்கிறானா? எதை?

    என் பனியனைத்தான்.

    சுசி, உனக்கு அறிவே தொலைஞ்சு போச்சா? எந்த மாதிரி டிரெஸ்ல போகணும்னு ஒரு முறையே இல்லையா? பாண்ட்டையும், பனியனையும் மாட்டிக்கிட்டு வர்றதானா, நான் உன்னை அழைச்சிக்கிட்டுப் போகலை!

    "அதையும் கழட்டிட்டு வர்றதுக்கு இதென்ன கோவா பீச்சா? இல்லை கர்நாடகா

    Enjoying the preview?
    Page 1 of 1