Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthaithu Vaitha Nila
Puthaithu Vaitha Nila
Puthaithu Vaitha Nila
Ebook101 pages38 minutes

Puthaithu Vaitha Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100404223
Puthaithu Vaitha Nila

Read more from Rajesh Kumar

Related to Puthaithu Vaitha Nila

Related ebooks

Related categories

Reviews for Puthaithu Vaitha Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthaithu Vaitha Nila - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    புதைத்து வைத்த நிலா

    Puthaithu Vaitha Nila

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    ராஜநாயகம் தனக்கு முன்னால் கைகட்டி நின்றிருந்த தன்னுடைய நான்கு பி.ஏ.க்களையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு தன் பெரிய நரை மீசைக்குக் கீழே மறைத்து இருந்த உதடுகளை அசைத்தார்.

    இது ஒரு வார கல்யாணம். தினசரி பாட்டு, கச்சேரின்னு இந்தக் கோயமுத்தூரே அமர்க்களப்படணும். ஊர்ல இருக்கிற எல்லா ஜனமும் என்னோட மகள் தமயந்தியோட கல்யாணத்தைப் பத்தி வாய் வலிக்கப் பேசியாகணும். தினசரி பத்தாயிரம் பேர் கல்யாண விருந்தை சாப்பிட்டாகண்ணும்.

    எஸ்...ஸார்...

    வேண்டிய பணத்தை வவுச்சரில கையெழுத்து போட்டு கேஷியர்கிட்டயிருந்து வாங்கிக்கலாம். பணம் கல்யாணத்தோட எந்தக் காரியத்துக்காக செலவு செய்யப்பட்டதோ அதுக்கான பில்லை ப்ராப்பரா ப்ரொட்யூஸ் பண்ணி அக்கவுண்ட்ஸை செட்டில் பண்ணணும்...

    எஸ்... ஸார்.

    இந்தக் கல்யாணத்துக்காக செலவு பண்ண ரெண்டு கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கேன். இந்த ரெண்டு கோடி ரூபாயில் ஒவ்வொரு பைசாவுக்கும் சரியான கணக்கு காட்டப்படணும்.

    எஸ்... ஸார்...

    என்னோட டாட்டர் தமயந்தியோட கல்யாணம் எப்படி நடக்கணும்... என்னென்ன ஏற்பாடுகள் செய்யணும். இதைப் பத்தியெல்லாம் பேசி முடிவு செய்ய இன்னும் ஒரு மணி நேரத்துல கம்பெனி ஜி. எம். வருவார். அவர்கிட்ட பேசிட்டு மறுபடியும் உங்களை காண்டாக்ட் பண்றேன். யார் யார்க்கு என்னென்ன போர்ட்போலியோன்னு பிரிச்சுக் கொடுத்த பின்னாடி உங்க வேலையை நீங்க கவனிக்க ஆரம்பிக்கலாம்...

    எஸ் ஸார்...

    நவ் யூ மே கோ...

    நான்கு பி, ஏக்களும் பவ்யமாய் விஷ் செய்து விட்டுப் பின்வாங்கிப் போக, ராஜநாயகம் சிகரெட் பைப்பை சிரத்தையாய் பற்ற வைத்துக் கொண்டு மெலிதாய் புதை விட்டபடி லானுக்கு வந்தார்.

    ஐந்து செண்ட் நிலப்பரப்பில் கொரியன் க்ராஸ் பச்சை நிறப் பாய்களை விரித்திருக்க, கார்டனர் ஹோஸ்பைப் வைத்துக் கொண்டு நீர் பாய்ச்சியபடி தெரிந்தான். லானைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த ரோஜாத் தொட்டிகளில் பூக்களோடு மொக்குகளும் சிரித்தன.

    கோவைக்கே உரிய சாயந்தர நேர ஐஸ் காற்று தயங்கித் தயங்கி வீசிக் கொண்டிருந்தது.

    அப்பா...

    முதுகுக்குப் பின்னால் குரல் கேட்க, திரும்பினார்.

    தமயந்தி ஊதாநிற மேக்ஸியோடு தோளில் ஒரு வானிடி பேக் கை மாட்டிக் கொண்டு நின்றிருந்தாள்.

    இருபத்தியோரு வயது. லேசாய் ஐஸ்வர்யாராயின் சாயல். அந்த தேன்நிற கண்களுக்குப் பதிலாய் திராட்சை விழிகள்.

    என்னம்மா...! எங்கேயோ கிளம்பிட்டே போலிருக்கு

    கொஞ்சம் ஷாப்பிங் அப்பா...

    கல்யாணப் பொண்ணு இப்படியெல்லாம் வெளியே போகக்கூடாதம்மா... மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பார்த்தா தப்பா நினைச்சுக்குவாங்க...

    அப்பா...! நீங்க ஒரு விஷயத்தை மறந்துட்டீங்க...

    என்ன?

    என் கழுத்துல மாப்பிள்ளை தாலி கட்டறவரைக்கும் நான் ஒரு சுதந்திரப் பறவை. எங்கே வேணும்ன்னாலும் வருவேன் போவேன். யாரும் என்னை எதுவும் கேட்க முடியாது...

    தமயந்தி சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஹாலின் ஒரு கோடியில் இருந்த பூஜையறையிலிருந்து வெளிப்பட்டாள் பாரிஜாதம்.

    பாரிஜாதம்?

    ராஜநாயகத்தின் மனைவி,

    இரட்டை நாடி சரீரத்தைத் தூக்கிக் கொண்டு மூச்சிரைக்கக் கோபமாய் வந்தாள்.

    என்னடி சொன்னே?

    தமயந்தி தன் தலையில் நோகாமல் அடித்துக் கொண்டாள். ஓ...! நீ பூஜை ரூமுக்குள்ளேதான் இருந்தியாம்மா, நான் கவனிக்காமே பேசிட்டேன்.

    ஏண்டி! ஷாப்பிங் போக இதுவா நேரம்? கோயமுத்தூர் முன்னே மாதிரி கிடையாது. ஊர் ரொம்பவும் கெட்டுப் போச்சு. ஏதாவது ஷாப்பிங் போகணும்ன்னா அஞ்சு மணிக்குள்ளே போய்ட்டு வந்துடணும்...

    சரிம்மா... நாளையிலிருந்து நீ சொல்ற மாதிரியே போறேன்... இன்னிக்கு மாத்திரம் போய்ட்டு வந்துடறேன்.

    ஊஹும்! போகக்கூடாது.

    போவேன்...

    போகக் கூடாது.

    அப்பா! பாருங்கப்பா... இந்த அம்மாவை...

    ராஜநாயகம் சிரித்தார். பாரிஜாதம்! பொண்ணை சும்மா விரட்டாதே... அவ ஷாப்பிங் தானே போறா. கார்ல போய்ட்டு ஒரு மணி நேரத்துக்குள்ளே வந்துடப் போறா.

    "எல்லாமே... நீங்க தர்ற செல்லம்தான். இவளுக்கு சின்னவளை ஃபாரீன்ல படிக்கிறதுக்காக அனுப்ப வேண்டாம்ன்னு சொன்னேன். நீங்க

    Enjoying the preview?
    Page 1 of 1