Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thoorathil Theriyum Sorgam
Thoorathil Theriyum Sorgam
Thoorathil Theriyum Sorgam
Ebook103 pages56 minutes

Thoorathil Theriyum Sorgam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கல்லூரியில் பயிலும் திலகா அண்ணன் - அண்ணியுடன் வாழ்கிறாள். சதீஷுடன் காதல் வயப்படுக்கிறாள். வீட்டில் அண்ணன் எதிர்க்க, அண்ணியின் உதவியுடன், இவர்களின் காதல் கைக்கூடுமா? அண்ணி உதவியதின் சதி என்ன? திலகாவிற்கு தூரத்தில் தெரியுமா சொர்க்கம்?... ராஜேஷ்குமாரின் விறுவிறு எழுத்துநடையில்... படியுங்கள்.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580100406666
Thoorathil Theriyum Sorgam

Read more from Rajesh Kumar

Related to Thoorathil Theriyum Sorgam

Related ebooks

Related categories

Reviews for Thoorathil Theriyum Sorgam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thoorathil Theriyum Sorgam - Rajesh Kumar

    https://www.pustaka.co.in

    தூரத்தில் தெரியும் சொர்க்கம்

    Thoorathil Theriyum Sorgam

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author. All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    அந்த தினம்... ஒரு திங்கட்கிழமை.

    புதிதாய் பிறந்த சூரியன் பூமியை வெளிச்சமாய் பார்க்க ஆரம்பித்திருந்தான். ரேஸ் கோர்ஸ் ரோட்டில் இருந்த 'திலக் நிவாஸ்' பங்களா காலை வெய்யிலில் மினு மினுப்பாய் தெரிந்தது. சுற்றிலும் கார்டன் புதுப்பச்சையில் மிளிர்ந்தது. ஐந்தடி இரும்பு கேட்டிலிருந்து கால் வட்டம் போட்டுப் போன சிமெண்ட் பாதை வெண்ணிற சூப்பர்செம் டிஸ்டம்பரில் குளித்திருந்த போர்டிகோவோடு சங்கமித்திருந்தது. மூன்று மொசைக் படிகளில் ஏறி நாலடி நடந்தால் ஆஷ்ட்ரே, பத்திரிகைகள் சுமக்கும் உபாய், கெட்டித் துணியைத் தைத்துப் போட்டுக்கொண்ட சோபா, பாலிமர் நாற்காலிகளோடு டிராயிங் ரூம். வயலெட் ஜிகினாக்களில் 'வெல்கம்' சொல்லிச் சிரிக்கும் திரையை, விலக்கிப் போனால் ஹால். தரை முழுசும் கார்ப்பெட் வைத்திருந்தது. வலது பக்கம் சுவரோரம் டெலிபோன் தாங்கிய மேஜை, பக்கத்தில் ஜாடிக்குள்ளிருந்து தண்ணீரின் தயவில் வாடாமல் எட்டிப் பார்க்கும் மஞ்சள் பூக்கள், பச்சை இலைகள்.

    அருகே இருந்த அறைக்குள்ளிலிருந்து குரல் வந்தது.

    அண்ணி... நான் ரெடி...

    ஆளுயர கண்ணாடி முன் சின்ன ஸ்டூலில் அமர்ந்து கொண்டு பௌடரால் கடைசி டச்சப் செய்து கொண்டே கத்தின திலகாவில் குரல். தேன் தடவின பலாச்சுளை குரல்.

    எழுந்து கிச்சனை நோக்கி நடந்த திலகா மிதமான உயரத்திலிருந்தாள். நிறம் ஏறக்குறைய ரோஸ். நெற்றியோரம் சிலும்பி நிற்கும் அந்த இரண்டொரு முடி வளையங்களை தினமும் கண்ணாடி முன் நின்று காதோரம் வழித்து விடுவாள். கண்ணாடியை விட்டு அவள் விலக விலகவே காதை விட்டு அதுவும் விலகி விடும்! பெரிசு பெரிசான கண்கள் ப்ளஸ் பாயிண்ட். அதில் நிறைய காந்தம்.

    போகாத பொழுதை காலேஜில் பி.எஸ்.ஸி மூன்றாம் வருடத்தில் கழித்துக் கொண்டிருப்பவள்.

    ஹாலைக் கடந்து போகிற கையோடு காலண்டர் தாளைக் கிழித்தவள் கசக்கியபடியே கிச்சனுக்குள் நுழைந்தாள்.

    அண்ணி கார்த்திகா தட்டில் பூ மாதிரியான இட்லிகளை வைத்துக் கொண்டிருந்தாள்.

    கார்த்திகாவுக்கு அசப்பில் ஜெயப்பிரதாவை ஜெராக்ஸ் எடுத்த மாதிரி தோற்றம். இடுப்பு வரை புரளும் கூந்தலில் அலை பாய்ந்திருந்தது. கட்டியிருக்கும் கார்டன் சில்க் புடவை துளி கசங்காமல் சமையலை முடிக்கும் கார்த்திகாவைப் பார்த்து திலகா நிறைய வியப்பாள் என்றால் சமையலில் அவள் ப்ரிப்பரேஷனுக்காக நிறையவே பொறாமையும் படுவாள்.

    டைனிங் டேபிளை அடைந்து சேரில் அமர்ந்தபடி கேட்டாள் திலகா.

    இன்னும் அண்ணன் வரலியா அண்ணி?

    இட்லியைத் தட்டில் போட்டுக் கொண்டே சொன்னாள் கார்த்திகா.

    அப்பவே மாடிக்கு போய் சொல்லிட்டு வந்தாச்சு...

    சொன்ன கார்த்திகாவிடமிருந்து பாத்திரத்தைப் பிடுங்கினாள் திலகா.

    ஏய்... ஏய்... நான்தான் போடறேனே...

    கத்தின கார்த்திகாவின் கைகளை விலக்கின திலகா, சொன்னா பத்தாது போய் கையோட இழுத்துட்டு வாங்க... எனக்கு காலேஜுக்கு டயமாச்சு

    சிரித்தாள் கார்த்திகா.

    உங்க காலேஜையும் டயத்தையும் பத்தி எனக்குத் தெரியாதா என்ன..!

    உதட்டைப் பிதுக்கி தலையாட்டிய படியே சேரை விட்டு எழுந்தாள் திலகா.

    போங்க அண்ணி... நீங்க ஒண்ணும் சரியில்லே. நானே போய் அண்ணனை இழுத்துட்டு வர்றேன்...

    வேகமாய் வெளியேறி ஹாலுக்கு வந்தபோது, படிகளிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான் பாஸ்கர்.

    அப்பா! வந்துட்டியேண்ணா டெய்லி எனக்கு இது ஒரு போராட்டமா போச்சு... என்னைக் கொண்டு போய் காலேஜில் விட்டுட்டுப் போகணும்ற நினைப்பு கொஞ்சமாவது இருக்காண்ணா?

    ஒழுங்கான பல்வரிரையில் சிரித்தான் பாஸ்கர்.

    "ஆரம்பிச்சுட்டியா...? தினமும் இதையே

    Enjoying the preview?
    Page 1 of 1