Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Good Night Krotham!
Good Night Krotham!
Good Night Krotham!
Ebook94 pages44 minutes

Good Night Krotham!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

A thriller novel from Rajesh Kumar.
Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580100402121
Good Night Krotham!

Read more from Rajesh Kumar

Related to Good Night Krotham!

Related ebooks

Related categories

Reviews for Good Night Krotham!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Good Night Krotham! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    குட் நைட் குரோதம்!

    Good Night Krotham!

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books
    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ***

    குட் நைட் குரோதம்!

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    ***

    1

    சமுத்திர அகலத்துக்குப் பரந்திருந்த ஃபோமில் மல்லாந்து படுத்து இருந்தார் அமைச்சர் வெற்றிச் செல்வன். அவரை நெருக்கியடித்துக் கொண்டு படுத்திருந்த மம்தா வலது முழங்கையை அவர் மார்பில் ஊன்றி, இடது கை விரல்களால் அவர் முகப்பரப்பில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

    தன் கேரட் துண்டம் உதடுகளைப் பிரித்துச் சொன்னாள்.

    இப்பல்லாம் நீங்க சீக்கிரம் டயர்ட் ஆயிடறிங்க…

    வெற்றிச் செல்வனின் முகத்தில் புன்னகை தோன் றியது. நேத்திக்கு நந்தனம் பொதுக் கூட்டத்தில் தொடர்ந்து ஆறு மணி நேரம் தொண்டை கிழியப் பேசினேன். நானா சீக்கிரத்தில் களைச்சுப் போற ஆளு…?

    மம்தா அவர் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டு கேட்டாள்.

    அப்படின்னா நான் சலிச்சுப் போய்ட்டேனா...?

    வெற்றிச் செல்வனின் கை விரல்கள் அவளின் கூந்தலுக்குள் பிரவேசித்தன. வாட் 69 வாசம் வீசும் குரலில் கேட்டார்.

    என்னாச்சு உனக்கு...? எப்பவும் உன்னோட மாடலிங் தொழிலைப் பத்திப் பேசுவே. இல்லைன்னா நான் கடைசியா விட்ட அறிக்கையைப் பத்தி ஏதாவது கமெண்ட் பண்ணுவே… இன்னிக்கு ரெண்டுமே இல்லாம புதுசா எதையோ பேசிட்டிருக்கே...?

    காரணமில்லாமப் பேசுவேனா...?

    காரணத்தைச் சொல்லு...

    கடைசியா உங்களை எப்ப சந்திச்சேன்...?

    போன வியாழக்கிழமை…

    அப்ப நாம என்ன பேசினோம்...?

    என்னென்னவோ பேசினோம்.

    முக்கியமான விஷயம் ஒண்ணு பேசினோம்.

    ஓ... பெண் எம்.எல்.ஏ. பாரிஜாதம் ஏன் இப்படிப் பெருத்திட்டே போறான்னு நான் கவலைப்பட்டேனே. அதைச் சொல்றியா...?

    மம்தா முறைத்தாள்.

    விளையாடாதீங்க… நான் கோபமாயிருக்கேன். கடைசி கடைசியா நாம பேசினது. நீங்க என்கிட்டே ப்ராமிஸ் பண்ணிட்டுப் போனிங்க. ஞாபகமில்லை…?

    அடக் கடவுளே… ஞாபகம் வந்திருச்சு. இன்னிக்கு உனக்கு பர்த்டேன்னு நீ சொன்னே. உனக்குப் பிடிச்ச சிவப்புக் கலர் வழிபான் புடவை வாங்கித் தர்றேன்னு நான் சொன்னேன்...

    சொன்னதைச் செஞ்சிங்களா...?

    சிரித்தார் வெற்றிச் செல்வன்.

    நான் பொது ஜனங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை வேணா நிறைவேத்தாமப் போவேன். என் செல்லக்குட்டி மம்தாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேத்தாமப் போயிடுவேனா...?

    இப்படி நான் வாயைத் திறந்து கேட்டதுக்கப்புறம் நீங்க வாங்கித் தந்தா அந்தப் பரிசுக்கு மதிப்பே இல்லை…

    நீ கேட்ட அந்த சிவப்புக் கலர் வழிபான் புடவையை நான் ஏற்கெனவே வாங்கி வெச்சுட்டேன். கொஞ்ச நேரம் உன்னோட கோபமான முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டேன். யப்பா... கோபச் சிவப்பில் நீ என்னமா அழகாயிருக்கே.

    சொல்லிக்கொண்டே அவளை வாரியிழுத்து அவள் முகத்தில் ஒரு முத்தத்தை அழுத்தினார்.

    மம்தா விலகினாள். நான் நம்ப மாட்டேன். நீங்க பொய் சொல்றீங்க…

    இதாய்யா பொம்பளை… அந்தப் புடவையைக் கண்ணுல பார்க்கறவரைக்கும் உம் மனசு அடங்காதே. இரு. புடவையைக் கொண்டு வரச் சொல்றேன். நீ புடவையைக் கட்டு… அப்புறமா நான் உன்னைக் கட்டிக்கறேன்...

    சொல்லிக் கொண்டே ஃபோமில் உருண்டவர் கட்டிலைத் தொட்ட மாதிரி இருந்த டீபாயில் கிடத்தப் பட்டிருந்த இன்டர்காமை அழுத்தினார்.

    ஹலோ… ரத்னமா...? என்னோட மேஜையறையில் ஒரு சிவப்புப் புடவை இருக்கும்... எடுத்துக்கிட்டு ரூமுக்கு வர்றியா...?

    ரிசீவரை வைத்தார்.

    மம்தா... கதவைத் திறந்து விடு…

    கட்டிலை விட்டு இறங்கியவள். கலைந்த புடவையைச் சரியாய்க் கட்டிக் கொண்டே நடந்து போய்த் தாழ்ப்பாளை விலக்கினாள்.

    மம்தா குஷன் நாற்காலியில் நிறையவும். ரத்னம்

    Enjoying the preview?
    Page 1 of 1