Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iruttil Parakkum Paravaigal
Iruttil Parakkum Paravaigal
Iruttil Parakkum Paravaigal
Ebook128 pages39 minutes

Iruttil Parakkum Paravaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Iruttil Parakkum Paravaigal

Read more from Rajeshkumar

Related to Iruttil Parakkum Paravaigal

Related ebooks

Related categories

Reviews for Iruttil Parakkum Paravaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iruttil Parakkum Paravaigal - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    டெலிபோன் கூப்பிட்டதும் மதுரா - பார்த்துக் கொண்டிருந்த ஃபைலை தள்ளி வைத்துவிட்டு - ரிஸீவரை எடுத்தாள்:

    ஹலோ...

    மறுமுனையில் ஜெயில் சூப்பிரண்ட் சிகாமணியின் குரல் கரகரத்து கேட்டது.

    யாரு... மதுராவா...?

    நாந்தான் அங்கிள்...

    என்னம்மா... எனக்கு போன் பண்ணியிருந்தியாம்! நான் கமிஷனர் ஆபீஸ் வரைக்கும் போய்ட்டு இப்பத்தான் என்னோட ஆபீஸ் ரூமுக்கு வந்தேன். நீ போன் பண்ணியிருந்ததாக 'நோட்' எழுதி வெச்சிருந்தாங்க...! ரொம்ப நாள் கழிச்சு போன் பண்ணியிருக்கே... என்ன விஷயம்மா...?

    ஒண்ணுமில்ல அங்கிள்...! ஜெயிலிலிருந்து விடுதலையாகி வந்த படிச்ச கைதிகளுக்கு - தனியார் நிறுவனங்களில் வேலை கொடுக்க முன்வரணும்ன்னு நீங்க பேசியிருந்ததைப் பேப்பர்ல பார்த்தேன்... மத்த தனியார் கம்பெனியில வேலை கொடுக்க முன் வர்றாங்களோ, இல்லையோ... நான் முன் வந்துட்டேன். என் கம்பெனியில் கிளரிகல் போஸ்ட் ஒண்ணு காலியா இருக்கு. அதை நீங்க சிபாரிசு பண்ற கைதிக்கு குடுக்க முடிவு பண்ணிட்டேன்...

    மறுமுனையில் சிகாமணி அகில உலக சந்தோஷப்பட்டார்.

    ஈஸிட்...? ரியலி ஐயாம் ப்ரெளட் ஆஃப் யூ...! உனக்கு இருக்கிற துணிச்சல் மத்தவங்களுக்கும் வரணும்...

    கைதியை எப்ப இண்டர்வியூவுக்காக அனுப்பி வைக்கறீங்க அங்கிள்...?

    போஸ்ட்டுக்க என்ன க்வாலிஃபிகேஷன் வேணும்?

    ஏதாவது ஒரு டிகிரி...

    சாயந்தரத்துக்குள்ளே போன் பண்ணி சொன்னா போதுமில்லையா?

    போதும்... போதும், டேக் யுவர் வோன் டைம் அங்கிள்! நல்ல ஆளா பார்த்து அனுப்புங்க... தட்... ஈஸ்... வெரி இம்பார்ட்டெண்ட்...

    கம்பெனி எப்படி இருக்கம்மா...?

    ஆரோக்யமா... அமோகமாக இருக்கு...!

    கேள்விப்பட்டேன். அப்பா காலமான பின்னால கம்பெனியை நிர்வகிக்கிறதுக்காக நீ எடுத்து கிட்ட முயற்சிகளை மத்தவங்க கேலி பண்ணினப்ப எனக்கு மட்டும் உன்மேல் ஒரு அசாத்திய நம்பிக்கை இருந்தது. இன்னிக்கு அந்த நம்பிக்கை காப்பாற்றப்பட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்...

    எல்லாம்... உங்க மாதிரியான பெரியவங்க ஆசீர்வாதம்தான் அங்கிள். கூடிய சீக்கிரம் பெங்களூர்ல கம்பெனியோட ப்ராஞ்ச் ஒன்றை ஆரம்பிக்கப் போறேன்...

    குட்... குட்... விஷ் யு ஆல்...த... பெஸ்ட்

    தேங்யூ அங்கிள்...! உங்க போனை சாய்ந்தரம் ஆறு மணிக்குள்ளே நான் எதிர்பார்க்கலாமா...?

    ஷ்யூர்... ஷ்யூர்.

    அவர் ரிஸீவரை வைத்ததும் - மதுராவும் ரிஸீவரை அதனிடத்தில் அமர்த்திவிட்டு - நிமர்ந்தபோது -

    டொக்...டொக்...

    கதவு தட்டப்பட்டது.

    எஸ்... கம்மின்...

    மதுராவின் செக்ரட்ரி அஞ்சலா உள்ளே நுழைந்தாள். உயரத் தூக்கிப் போட்ட கொண்டை, ஸ்லீவ் லஸ் ஜாக்கெட், ஜரிகை இழைகள் மற்றும் ஆர் கண்டா சேலை.

    குட்மார்னிங் மேடம்...

    குட்மார்னிங்...

    ஒரு ஃபைலை நகர்த்திக் கொண்டே பால்பாயிண்ட் பேனாவை பிதுக்கிக் கொண்டாள் மதுரா.

    மேடம்...! 'புதுமைப்பெண்'ங்கிற வாரப் பத்திரிகையிலிருந்து உங்களை பேட்டி எடுக்கறதுக்காக வந்திருக்காங்க... ஆல்ரெடி வீ...ஹேவ் கிவன் த அப் பாயிண்ட்மெண்ட்...

    வரச்சொல்லு...

    அஞ்சலா நகரமுற்பட ஒரு நிமிஷம் என்றாள் மதுரா.

    எஸ்... மேடம்...

    அப்படி என் முன்னாடி வந்து நில்லு

    நின்றாள்.

    மதுரா தன்கையிலிருந்த பால்பாயிண்ட் பேனாவால் அஞ்சலாவின் சேலைத் தலைப்பை மெல்ல விலக்கினாள்.

    சேலை கட்டு அடிவயிற்றின் அபாயகரமான எல்லை வரைக்கும் பரவியிருக்க தொப்புள்சுழி பளிச் சென்று தெரிந்தது.

    ஆபிசுக்கு இப்படித்தான் ட்ரஸ் பண்ணிட்டு வர்றதா...? ஒரு டீஸன்ஸி வேண்டாம்...? நீ இந்த கோலத்திலே வந்தா... வேலை செய்யற ஆண்களோட கவனம் சிதறுமே...?

    ஸ... ஸாரி...மேடம்...

    அதுக்கு முந்தி... இதே காரணத்துக்காக... ஒரு தடவை ஸாரி சொல்லியிருக்கே... இது இரண்டாவது ஸாரி...! எதையுமே நான் ரெண்டு தடவைதான் பொறுத்துக்குவேன்... மூணாவது தடவையும் ஸாரி சொன்னா எனக்குப் பிடிக்காது

    அது வந்து...மேடம்...

    ஐ டோண்ட் வாண்ட் எனி எக்ஸ்பிளனேஷன் ஃப்ரம் யூ, போய் அந்த பத்திரிகை ரிப்போர்ட்டரை அனுப்பு... அனுப்பிட்டு குளியலறைக்குப் போய் சேலையை ஒழுங்கா கட்டிகிட்டு வேலையைப் பாரு...

    தலையாட்டிய அஞ்சலா - முகம் கவிழ்ந்து வெளியே போக அடுத்த நிமிடத்தின் ஆரம்பத்தில் - கதவைத் தட்டிவிட்டு ஒரு இளைஞன் உள்ளே வந்தான். ஜிப்பா, பைஜாமா மாதிரியான ட்ரஸ். தாடியும், மீசையும், முகத்தின் பாதி பரப்பை குத்தகைக்கு எடுத்து அகோரமாய் தெரிந்தது.

    வணக்கம்...! நான் 'புதுமைப் பெண்' பத்திரிகையோட ரிப்போர்ட்டர். பேரு...மஹி

    மஹி யா...?

    ஆமா... என்னோட முழுப்பேர் மஹேஸ்வரன்... அது கூப்பிடறதுக்கு நீளமா இருக்கிறதனால சுருக்கா 'மஹி'ன்னு வெச்சுகிட்டேன்...

    உட்கார்ங்க...

    நன்றி...

    மஹி அங்கிருந்த ஃபோம் நாற்காலியில் புதைய புதைய உட்கார்ந்தான்.

    "ஏதாவது சாப்பிடறீங்களா...? காப்பி... டீ... ஆர் எனி

    Enjoying the preview?
    Page 1 of 1