Vetri Endraal Vivek
By Rajeshkumar
4.5/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsIrandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Saagaavaram Rating: 4 out of 5 stars4/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Uchi Nila Rating: 0 out of 5 stars0 ratingsUn Naanum En Neeyum Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5
Related to Vetri Endraal Vivek
Related ebooks
Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Vivek Never Out Rating: 5 out of 5 stars5/5Pooja, PuthuDelhi, Boogambam Rating: 5 out of 5 stars5/5Poovey… Poovey! Rating: 5 out of 5 stars5/5Paainthu Vaa Vivek Rating: 0 out of 5 stars0 ratingsRatthathil Oru Kelvikuri! Rating: 4 out of 5 stars4/5Kuttrangal Kuraivathillai Rating: 4 out of 5 stars4/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Avenue Marangal Rating: 5 out of 5 stars5/5Sinnaj Siru Kiliye Rating: 0 out of 5 stars0 ratingsWelldone Vivek Rating: 0 out of 5 stars0 ratingsMonday Murder Day Rating: 0 out of 5 stars0 ratingsUn Nizhalum Naanthane Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Asha - 60 Naal Rating: 5 out of 5 stars5/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Ainthaam Pirai Rating: 0 out of 5 stars0 ratingsVivek VS Vivek Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Parappatharku Oru Vanam Vendum Rating: 4 out of 5 stars4/5Thedu Kidaikathu..! Rating: 0 out of 5 stars0 ratingsNewyork Nila Rating: 0 out of 5 stars0 ratingsAndha October 14 Rating: 5 out of 5 stars5/5Meendum Vivekin Visparoopam Rating: 3 out of 5 stars3/5Kolai Vallal Rating: 0 out of 5 stars0 ratings1+1=0 Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Singapore Vinaadigal and Thigil Kaalam Rating: 4 out of 5 stars4/5Maaya Hospital, Marupadiyum Iranthavan and Oru latsam Vinaadikal Rating: 2 out of 5 stars2/5Thalai Illaatha Silai Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Vetri Endraal Vivek
2 ratings0 reviews
Book preview
Vetri Endraal Vivek - Rajeshkumar
18
1
ஜப்பான் நாட்டில் ஜப்பானிய மொழிக்குத் தான் முதல் இடம். அந்த நாட்டு மக்கள் ஆங்கிலத்தைக் கண்டு கொள்வது இல்லை. ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் ஜப்பானிய மக்களிடம் அறவேயில்லை. ஆங்கிலம் மட்டும் தெரிந்தவர்கள் போய் அங்கே குப்பை கொட்ட முடியாது. ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேஷன், ஹோட்டல் இப்படி எங்கே போனாலும் ஜப்பானிய மொழிதான். வெளிநாட்டுப் பயணிகளுக்கு இதனால் ஏகப்பட்ட சிரமம். இந்த சிரமத்தைப் போக்க இப்போது ஒரு அமெரிக்க கம்பெனி ஒரு மொழிபெயர்ப்புக் கருவியைக் கண்டுபிடித்து விட்டது. அந்தக் கம்பெனியின் பெயர்: அட்வான்ஸ்ட் ப்ராடக்ட்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ். மொழிபெயர்ப்புக் கருவியின் பெயர் வாய்ஸ் (VOICE). இந்தக் கருவியைக் கையில் வைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் பேசினால், அதனுள் இருக்கும் மைக்ரோ கம்ப்யூட்டர் அதை உடனே ஜப்பான் மொழியில் மொழிபெயர்த்து எதிரில் இருக்கும் நபர்க்குச் சொல்லும். அந்த நபர் ஜப்பான் மொழியில் பேசினால் அதை VOICE கருவி கிரகித்து ஆங்கிலத்தில் பதில் சொல்லும்.
"ஒன்பது..." என்றாள் ரூபலா.
பூரியைப் பிய்த்து குருமாவில் குளிப்பாட்டி உள்ளே தள்ளிக் கொண்டிருந்த விஷ்ணு, ரூபலாவிடம் நிமிர்ந்தான். என்ன மேடம்...! திடீர்ன்னு ‘ஒன்பது’ன்னு சொல்றீங்க...?
அதுவா...! நீ இப்போ சாப்பிட்டுக்கிட்டு இருக்கிற பூரி ஒன்பதாவது பூரின்னு சொன்னேன்... எப்போ வாஷ்பேசினுக்குப் போய் கை கழுவுறதா உத்தேசம்...?
கண்ணு வெக்காதீங்க மேடம்...! போன வாரம் பூரி பெரிசு பெரிசா இருந்தது. இந்த வாரம் சின்னது பண்ணிட்டீங்க... அதான் ‘ஸ்கோர்’ ஏறிட்டே போகுது...
பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த விவேக் சிரித்தான். போதுண்டா... ஒன்பதோடு நிறுத்திக்க... வயிறு கெட்டுடப் போகுது... இன்னிக்கு நாம ரெண்டு பேரும் ஒரு கேஸ் விஷயமா மதுராந்தகம் வரைக்கும் போக வேண்டியிருக்கு... ஞாபகம் இருக்கா... இல்லையா...?
மறப்பேனா பாஸ்! பாஸ்... எனக்கு இந்த ஒற்றைப்படை எண் ராசி கிடையாது. பனிரெண்டோடு நிறுத்திக்கறேன்... மேடம்! இன்னும் மூணே மூணு பூரி... போதும்...
ரூபலா, விஷ்ணுவை முறைத்துவிட்டு சமையலறைக்குள் நுழைய- விஷ்ணு, விவேக்கிடம் பூரி திணித்த வாயோடு திரும்பினான். ரூபலா சமையலறைக்குள் நுழைந்து விட்டதை ஊர்ஜிதம் செய்து கொண்டவன் குரலை மெல்லத் தாழ்த்தினான்.
பாஸ்...
என்னடா...?
உங்க பொது அறிவுக்கு ஒரு டெஸ்ட் வைக்கட்டுமா...?
வைய்யி...
எத்தனையோ நம்பர்கள் இருக்க, அரவாணிகளை ‘9’-ன்னு ஏன் சொல்றாங்க, தெரியுமா...?
சொல்லிவிட்டு கண் சிமிட்டினான் விஷ்ணு.
ஏண்டா... என்னோட பொது அறிவை சோதிக்க உனக்கு வேற கேள்வியே கிடைக்கலையா...?
என்ன பாஸ்... இப்படி சொல்லிட்டீங்க? இது இண்ட்டர்நேஷனல் இண்ட்டலிஜென்ட் கேள்வி... பாஸ்...
எனக்கு இந்த மாதிரியான கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியாது... சமையலறையிலிருந்து ரூபலா வர்றதுக்குள்ளே நீயே சொல்லிடு...
பதில் தெரியாதுன்னு சொல்லி பெருந்தன்மையா தோல்வியை ஒத்துக்கிட்டதுக்கு என்னோட நன்றி பாஸ்! யானைக்கும் அடிசறுக்கும்ன்னு சொன்னது எவ்வளவு பெரிய... ஸாரி... சரியான பழமொழி...!
டேய்... பேத்தாமே உன்னோட பதிலைச் சொல்லு...
பாஸ்... அரவாணிகளை ‘9’ன்னு ஏன் சொல்றாங்க தெரியுமா...? எந்த ஒரு நம்பரையும் தலைகீழா திருப்பிப் போட்டுப் பார்த்தா இன்னொரு நம்பர் மாதிரி தெரியாது. ‘9’ஐ திருப்பிப் போடுங்க. என்ன நம்பர் வரும்...?
6
இப்படி ஒரே நம்பர்ல ரெண்டு நம்பர் இருக்கிறதால...
புரியுதுடா, புரியுது...! எங்கிருந்துடா இதுமாதிரியான விஷயமெல்லாம் உனக்கு கிடைக்குது...?
‘எஸ்.எம்.எஸ்.’ல வருது பாஸ்...
இந்தக் கண்ராவியையெல்லாம் யார்ரா அனுப்பறாங்க...?
ஜெயலட்சுமி பாஸ்...
என்னது, ஜெயலட்சுமியா...?
ஏன் பாஸ் டென்ஷனாகறீங்க...? செய்ண்ட் மேரீஸ் காலேஜில் பி.எஸ்சி. செக்கண்ட் இயர் படிக்கிறா பாஸ்... அவ என்னோட மஹிளா தோஸ்த்...
மஹிளா தோஸ்தா...?
இந்தியில் மஹிளா தோஸ்த்ன்னா... கேர்ள் ஃப்ரண்ட்ன்னு அர்த்தம் பாஸ். இதுக்குத்தான் இந்தி தெரியாதவங்க கிட்டே பேசக் கூடாதுங்கறது...
என்னடா சொன்னே...?
ஒண்ணுமில்ல பாஸ்... என்னை நானே திட்டிக்கிட்டேன்...!
ரூபலா சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள். கையில் வெறும் தட்டு.
எங்கே மேடம் பூரி...?
காக்கா தூக்கிட்டு போயிடுச்சு...
என்னது...! காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சா?
ஆமா...
மேடம்... இது அநியாயம்...
உன்னோட ‘9’-ம் நம்பர் கேள்வி மட்டும் நியாயமா?
கேட்டுட்டீங்களா மேடம்...? உங்களுக்கு பாம்புக் காது மேடம்...
நீ என்னதான் எனக்கு ஐஸ் வெச்சாலும் சரி, நோ பூரி...
ப்ளீஸ் மேடம்...
வாஷ்பேஸின் அந்தப் பக்கம்...
சாரி... மேடம்...! நான் அந்தக் கேள்வியைக் கேட்டதுக்காக ஒரு பூரியை வேணும்னா மைனஸ் பண்ணிக்குங்க...
நோ...
ரெண்டு பூரியை மைனஸ் பண்ணிட்டு ஒண்ணாவது...
அரை பூரி கூடக் கிடையாது...
ரூபலாவும், விஷ்ணுவும் சண்டை போட்டுக் கொண்டு இருப்பதை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்த விவேக்கை அவனுடைய சர்ட் பாக்கெட்டில் இடம் பிடித்து இருந்த செல்போன் அழைத்தது.
எடுத்து காதுக்கு ஒற்றினான்.
எஸ்...
மறுமுனையில் குரல் ஒலித்தது.
ஸார்... நான் டி.எஸ்.பி. செல்வகிருஷ்ணன் பேசறேன்...
சொல்லுங்க செல்வகிருஷ்ணன். எப்படி இருக்கீங்க?
ஃபைன் ஸார்...
ஓகே...! திடீர்ன்னு போன் பண்ணியிருக்கீங்க... பர்சனலா... இல்லை ப்ரொபஷனலா...?
ப்ரொபஷனல் ஸார்...
சொல்லுங்க...
ஸார்...! இந்த கேள்வியை உங்க கிட்டே கேட்க கஷ்டமாய் இருந்தாலும் கேட்டே ஆக வேண்டிய நிலைமை...
நோ... ப்ராப்ளம்... கேளுங்க...
ஸ... ஸார்... வந்து... உங்களுக்கு ‘ஸ்வப்னா’ங்கிற பெண்ணைத் தெரியுமா...?
ஸ்வப்னா...?
எஸ்...
அந்தப் பேர்ல யாரையும் எனக்குத் தெரியாதே?
அந்தப் பெண் கிண்டியில் இருக்கிற மைக்ரோ பயலாஜிகல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் ரிசர்ச் ஸ்காலரா ஒர்க் பண்ணிட்டிருக்கா ஸார்...
"ஸாரி... மிஸ்டர்