Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Newyork Nila
Newyork Nila
Newyork Nila
Ebook190 pages1 hour

Newyork Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Newyork Nila

Read more from Rajeshkumar

Related to Newyork Nila

Related ebooks

Related categories

Reviews for Newyork Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Newyork Nila - Rajeshkumar

    14

    1

    ஜோசியர்: இந்த ஜாதகப்படி உங்களுக்கு ஒரு பெரிய கண்டம் இருக்கணுமே?

    ஜோசியம் பார்க்க வந்தவர்: ஏன் ஜோசியரே பொய் சொல்றீங்க? எனக்கு சொந்தமா ஒரு பிட் நிலம் கூடக் கிடையாது.

    பத்திரிகையில் வெளியாகியிருந்த மேற்கண்ட ஜோக்கை படித்துவிட்டு வாய்விட்டு சிரிக்க கோபிக்கண்ணன் முயன்ற விநாடி - அவனுக்கு இடப்புறம் பீட்ரூட் நிறத்தில் இருந்த டெலிபோன் காற்றைக் காயப்படுத்தாத தொனியில் கூப்பிட்டது.

    ஜோக்குக்கு அப்புறம் சிரித்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு ரிஸீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தான்.

    ஹலோ...

    எக்கோ டிடெக்டிவ் ஏஜென்ஸி? ஒரு பெண் குரல் கேட்டது.

    எஸ்...

    ஏஜென்ஸியோட ப்ரொப்ரைட்டர் மிஸ்டர் கோபிக்கண்ணன் இருக்காரா..?

    கோபிக்கண்ணன் தான் பேசறேன்...

    இப்ப நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா...?

    ஆல்மோஸ்ட் ஃப்ரீதான்...

    உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்...

    நீங்க யார்ன்னு சொல்லலையே...?

    போன்ல எதையும் நான் சொல்ல விரும்பலை. நேர்ல வாங்க...

    எங்கே வரணும்...?

    மெரீனா பீச்... அண்ணா ஸ்கொயர்க்குப் பக்கத்தில் ஒரு ஒயிட் அம்பாஸிடர் நின்னுட்டிருக்கும். அந்த அம்பாஸிடர் கார்ல நான் வெயிட் பண்ணிட்டிருப்பேன்.

    எத்தனை மணிக்கு வரணும்...?

    ராத்திரி எட்டு மணிக்கு...

    கோபிக்கண்ணன் தயக்கமான குரலில் கேட்டான்: விஷயம் என்னான்னு ஒரு கோடிகாட்டினா பரவாயில்லை.

    ஸாரி.. போன்ல நான் எதையுமே சொல்லமாட்டேன். நீங்க பிரியப்பட்டா வரலாம். பயமாயிருந்தா வேண்டாம். நான் வேற டிடெக்டிவ் ஏஜென்ஸியை பார்த்துக்கிறேன்...

    நோ.. நோ.. பயமா? எனக்கா...? நெவர்..! உடம்பில் இருக்கிற பயத்தை எல்லாம் ஒரு ஓரமா உதறி வெச்சுட்டுத்தான் இந்த எக்கோ டிடெக்டிவ் ஏஜென்ஸியை ஆரம்பிச்சேன். அண்ணா ஸ்கொயர்க்குப் பக்கத்துல ஒயிட் கலர் அம்பாஸிடர்ல வெயிட் பண்றீங்க இல்லையா...?

    ஆமா...

    கார் நெம்பர்...?

    எதுக்கு...?

    பீச்சுக்கு எத்தனையோ ஒயிட் அம்பாஸிடர் கார் வரும். அதுல உங்க கார் எதுன்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது...?

    கார் நெம்பரெல்லாம் வேண்டாம்... வேற ஒரு அடையாளம் சொல்றேன் கேட்டுக்குங்க...

    சொல்லுங்க...

    காரின் பின்பக்கக் கண்ணாடியில் ‘ஜீஸஸ் நெவர் ஃபெயில்ஸ்’ (’JESUS NEVER FAILS’) ங்கிற வாசகத்தோடு ஒரு ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும்...

    இந்த அடையாளம் போதும்...

    கார்க்குள்ளே நான் மட்டும்தான் இருப்பேன். நாம பேசப்போறதும் காருக்குள்ளேயேதான்.

    ஒரு ரிக்வெஸ்ட்.

    என்ன..?

    நான் உங்களைப் பார்க்க வர்றப்ப என்னோட அஸிஸ்டெண்ட்டையும் கூட்டிட்டு வரலாமா...? அஸிஸ்டெண்ட் எனக்கு மூணாவது கை மாதிரி.

    மூணாவது கையா...?

    ஆமாங்க.. நம்பிக்கை...

    அஸிஸ்டெண்ட் ஆணா.. பெண்ணா...?

    பெண்...

    சரி... கூட்டிட்டு வாங்க...! ஷார்ப்பா எட்டு மணிக்கெல்லாம் என்னோட கார்க்குப் பக்கத்துல இருக்கணும்.

    இருப்போம்...

    கோபிக்கண்ணன் ரிஸீவரை வைத்துவிட்டு பக்கத்து கார்ட்போர்ட் கதவை ‘டொக்டொக்’ என்று தட்டினான். குரல் கொடுத்தான்.

    மதுரா...

    எஸ் பாஸ்...

    வா.. இந்தப் பக்கம்...

    வந்தேன்.

    கார்ட்போர்டு கதவைத் திறந்து கொண்டு எட்டிப் பார்த்த மதுராவுக்கு வயது இருபத்தைந்துக்குள். பழைய வைஜெயந்திமாலாவின் முகம். உடம்பு தேவையான இடங்களில் பசுமைப் புரட்சி செய்திருக்க மெலிதான ரோஸ் நிற சல்வார் கம்மீஸுக்குள் நுழைந்திருந்தாள்.

    கோபிக்கண்ணன் கேட்டான்.

    இப்ப மணி என்ன மதுரா...?

    ஆறு பத்து...

    நோட் பண்ணிக்க...! சரியா எட்டு மணிக்கு.. பீச் ரோட்ல நாம அண்ணா ஸ்கொயர்கிட்ட இருக்கணும்...

    எதுக்கு பாஸ்...?

    ஒரு புதுக்கேஸ்..

    பார்ட்டி யாரு...?

    ஜீஸஸ் ஒன்லி நோஸ்.. போய் பார்த்தாதான் தெரியும்...

    ஆணா.. பெண்ணா...?

    பெண்...

    குரலை வெச்சே அவளுக்கு வயசு எவ்வளவு இருக்கும்ன்னு இந்நேரம் கெஸ் பண்ணியிருப்பீங்களே...?

    அதான் முடியலை...

    ஏன்...?

    வேணும்ன்னே குரலை மாத்திப் பேசறா.. டெலிபோனோட மவுத் பீஸுக்கு கர்ச்சீப்பைப் போர்த்தி பேசியிருக்கிறா...

    எட்டு மணிக்கா போகணும்...?

    ஆமா...

    போச்...

    என்னாச்சு..?

    இன்னிக்கு என்ன கிழமை பாஸ்...?

    வெள்ளிக்கிழமை...

    க்ளோப் டி.வி.யில் இன்னிக்கு ஏழரை மணியிலிருந்து எட்டு மணி வரைக்கும் என்ன ப்ரோக்ராம் தெரியுமா...?

    என்ன ப்ரோக்ராம்...?

    "உங்க அபிமான டென்னீஸ் வீராங்கனை ‘நிலா’வோட பேட்டி.

    அட.. ஆமாம்..!

    தலையே போனாலும் நிலாவோட பேட்டியை மிஸ் பண்ணமாட்டீங்களே...?

    இன்னிக்கும் மிஸ் பண்ணப் போறதில்லை மதுரா.

    அப்படின்னா...?

    நீ மட்டும் போய் அந்த புதுக்கேஸை அட்டெண்ட் பண்ணப் போறே... நான் நிலாவோட பேட்டியைப் பார்த்துட்டு ஸ்பாட்டுக்கு வந்துடறேன். அதுக்குள்ளே நீ பார்ட்டிகிட்ட பேசி கேஸோட விபரத்தை கலெக்ட் பண்ணிக்கோ.

    அது சரியில்லை பாஸ்...

    எது...?

    என்னை மட்டும் போய் தனியா கேஸை அட்டெண்ட் பண்ணச் சொல்றது...!

    ஏன்..? பண்ணினா என்ன...?

    நோ..! பகலாய் இருந்தாலும் பரவாயில்லை.

    வர... வர.. நீ ரொம்பவும் பயப்படறே.. இந்த வருஷம் உனக்கு இன்க்ரிமெண்ட் கிடையாது.

    பெரிய இன்க்ரீமெண்ட்...? பிசாத்து காசு பத்து ரூபாய் இன்க்ரிமெண்ட் தருவீங்க.. அது கர்ச்சீப் வாங்கக் கூட காணாது. ஏதோ அபூர்வமா ரொம்பநாள் கழிச்சு ஒரு கேஸ் வந்திருக்கு. அதைப் போய் அட்டெண்ட் பண்ணினா.. சில ஆயிரங்களைக் கண்ணால பார்க்கலாம். அதை விட்டுட்டு நிலாவோட பேட்டியைப் பார்த்துட்டுதான் வருவேன்னு சொல்றீங்களே... நீங்க ஒரு பி.ஜே.பி...

    பி.ஜே.பி.யா..?

    ம்..

    நான் எந்தக் கட்சியிலும் இல்லையே மதுரா?

    நான் சொன்ன பி.ஜே.பி. - கட்சி கிடையாது.

    பின்னே.?

    பயங்கர ஜொள்ளு பார்ட்டி.

    சேச்சே.. நிலாவைப் பார்த்து நான் ஜொள்ளு விடறதா நீ நினைக்கிறது தப்போ தப்பு.. அவளோட டென்னீஸ் ஆட்டத்துக்கு நான் அடிமை. குட்டைப் பாவாடையைப் போட்டுக்கிட்டுக் கையில் டென்னீஸ் மட்டையோட நிலா கோர்ட்ல குதிச்சு குதிச்சு ஆடும் போது... ஆஹா...

    வழியுது...! துடைச்சுக்கிங்க பாஸ்...

    ப்ளீஸ்.. மதுரா.. இன்னிக்கு நீ மட்டும் போய் அந்த அண்ணா ஸ்கொயர் அம்பாஸிடர் கார் பார்ட்டியை அட்டெண்ட் பண்ணு. நான் பேட்டியைப் பார்த்துட்டு உடனே வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்.

    நத்திங் டூயிங்...

    ப்ளீஸ் மதுரா...

    கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

    ப்ளீஸோ ப்ளீஸ்...

    நோவோ.. நோ...

    கிராதகி!

    இருந்துட்டு போறேன்.

    பாதகி!

    பரவாயில்லை.

    ஏழரை மணி வரைக்கும் சண்டை போட்டுக் கொண்டிருந்துவிட்டு இருவரும் ஸ்கூட்டரில் அண்ணா ஸ்கொயர்க்கு புறப்பட்டார்கள்.

    ஸ்கொயர் போய்ச் சேர்ந்த போது மணி ஏழே முக்கால். ஸ்கூட்டரை பார்க் செய்து விட்டு பேவ்மெண்ட்டில் நடந்தார்கள்.

    பாஸ்.. வேர்க்கடலை.

    இன்னிக்கு உனக்கு நொறுக்கு தீனி எதுவும் கிடையாது. கடல் காத்து மட்டும்தான்.

    பசிக்குது பாஸ்.. ஒரே ஒரு மாங்காய் பத்தை.

    நோ.. முதல்ல ட்யூட்டி..! ஒயிட் அம்பாஸிடர் கார் எங்கேயாவது தெரியுதான்னு பார்...

    மதுரா பார்த்தாள்.

    தட்டுப்படவில்லை.

    "போன் மெஸேஜை ஒழுங்கா

    Enjoying the preview?
    Page 1 of 1