Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nandhini 440 Voltz
Nandhini 440 Voltz
Nandhini 440 Voltz
Ebook112 pages52 minutes

Nandhini 440 Voltz

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580100404630
Nandhini 440 Voltz

Read more from Rajesh Kumar

Related to Nandhini 440 Voltz

Related ebooks

Related categories

Reviews for Nandhini 440 Voltz

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nandhini 440 Voltz - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    நந்தினி 440 வோல்ட்ஸ்

    Nandhini 440 Voltz

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    ஒரு சின்ன குங்குமப் பொட்டாய்... வழுக்குப் பாறை எஸ்டேட் பூராவும் கனமாய்ப் பரவியிருந்த பனிப்புகையைப் பார்த்து மலைத்துப் போயிருந்தது.

    நேற்று சாயந்தரம் வரைக்கும் மலைச் சிகரங்களின் மேல் தூங்கிக் கொண்டிருந்த பஞ்சு மேகங்கள் கொத்துக் கொத்தாய் கீழே இறங்கிப் பள்ளத்தாக்கின் சரிவுகளில் மேய்ந்து கொண்டிருந்தன.

    எஸ்டேட்டின் மையத்திலிருந்த பிரமாண்டமான டீ ஃபாக்டரியின் புகை போக்கியிலிருந்து தேயிலை வறுபடும் மணம் சுகமாய்க் காற்றில் பரவியிருந்தது.

    தொலை துாரத்தில் மலைகளின் இடுப்புகளில் ஒட்டியிருந்த சின்னச் சின்னத் தேயிலைத் தோட்டங்களை நோக்கி...

    தலையில் கவிழ்த்த கூடையோடு பெண்களின் வரிசையொன்று போய்க் கொண்டிருக்க...

    பாரி தன்னுடைய அதிகாலை நேர வாக்கிங்கை முடித்துக்கொள்ள எண்ணித் திரும்பினான்.

    வெள்ளை நிறப் பனியனிலும் வெள்ளை நிற ஷார்ட்ஸிலும் ஒரு ஹை-மேன் மாதிரித் தெரிந்த பாரிக்கு முப்பது வயது.

    எப்படிச் சீவினாலும் நெற்றியின் பரப்பில் பிடிவாதமாய் வந்து விழுகிற அந்தக் கிராப்பின் முடிக்கற்றை ஒரு விசேஷ அம்சம்.

    அவனுடைய கூர்மையான சிறிய கண்களுக்கு எதிராளியைச் சீவுகிற பார்வை உண்டு. மேல் உதட்டுப் பரப்பு பூராவையும் அடைத்துக் கொண்டு பதிவாகியிருந்த அந்தக் "கரு கரு' மீசை, அவனுடைய மனைவி நந்தினிக்கு நிரம்பவே பிடிக்கும்.

    ராத்திரி நேரங்களில் அவனுடைய மார்பின் மேல் கவிழ்ந்து கொண்டு வலது கையின் மோதிர விரலால் அந்த மீசையை நெருடிக் கொண்டிருப்பதில் அவளுக்கு ஒரு கிறக்கம். அப்புறம்... -

    ஹலோ...! குட் மார்னிங் பாரி...!

    தேயிலைத் தோட்டச் சரிவில் இறங்கிக் கொண்டிருந்த பாரி நிமிர்ந்தான்.

    ப்ளூ ஸ்கை எஸ்டேட்டுக்குச் சொந்தக்காரனான வாசு, ரத்தநிற ஸ்வெட்டரிலும் க்ரே நிற பேண்டிலும் நின்றிருந்தான்.

    ஹலோ...! குட் மார்னிங் வாசு. கோயம்புத்தூரில் இருந்து எப்போ வந்தே...?

    நேத்தைக்கு ராத்திரி...

    புதுசா வாங்கின மில் எப்படி ஓடுது...?

    வாசு 'ப்ச்...' என்று சொன்னபோது வாயிலிருந்து பனிப்புகை பறந்தது.

    ஒண்ணும் சரியில்லை பாரி... ஆமா.. இன்னிக்கென்ன... இந்நேரத்துக்கே வாக்கிங்கை முடிச்சுக்கிட்டே...?

    இன்னிக்கு மத்தியான ஃப்ளைட்ல பாம்பே போறேன்...

    இஸிட்... பிசினஸ் டூரா...?

    "நோ... நோ... ஜாலி டூர்...? என்னோட ஒய்ஃப் நந்தினிக்கு ரொம்ப நாளாவே டூர் கிளம்பணும்னு ஆசை.. இந்த ஆஃப் சீசன்ல பாம்பே நல்லாயிருக்கும்.

    புனாவுக்குப் பக்கத்துல லோனாவாலான்னு ஒரு இடம். நம்ம ஊட்டி மாதிரியான க்ளைமேட்.

    என்னோட பிசினஸ் தோஸ்த் மாணிக்லாலுக்குச் சொந்தமான பங்களா ஒண்ணு இருக்கு.

    பாம்பேயிலிருந்து திரும்பறப்போ லோனாவாலாவில் இறங்கி ஒரு வாரம் தங்கிட்டு வரலாம்னு திட்டம்."

    ம்... ம்... ஜமாய்...! கல்யாணமான இந்த ரெண்டு வருஷத்துல இப்பத்தான் மொதல் தடவையா டூர் போறீங்க போலிருக்கு..

    ஆமா...!

    கோயமுத்தூர் போய்... ஃபிளைட்ல போறீங்க...?

    ஆமா...!

    விஷ் யூ ஏ ஹேப்பி ஜர்னி...

    தேங்க்யூ...!

    பாரியும் வாசுவும் புன்னகைகளோடு விலகி நடந்தார்கள்.

    பாரி எதிரே தெரிந்த மலைச்சரிவில் வெளேரென்று தெரிந்த தன்னுடைய எஸ்டேட் பங்களாவை நோக்கி இறங்கினான். சில நிமிஷ நடைக்குப் பின் பங்களாவை நெருங்கி வாட்ச்மேனின் ரெண்டாவது சல்யூட்டைத் தலையசைப்பால் வாங்கிக் கொண்டு உள்ளே போனான்.

    லேசாய் ஆச்சரியப்பட்டான்.

    மிஸ் வயலெட் - அவனுடைய பர்சனல் செக்ரட்டரி - அந்நேரத்துக்கே வந்து வரவேற்பறையில் காத்திருந்தாள். வெளிர் மஞ்சள் நிற கவுனில் அப்போது பறித்த ஒரு சூரியகாந்தி மாதிரி தெரிந்தாள்.

    ஆங்கிலோ - இந்தியப் பெண்களுக்கே உரித்தான ஆப்பிள் நிறம். அந்த உயரம், அந்தச் செழுமை, அந்த மார்புகள் இவளிடமும் இருந்தன. தமிழைக் குதறிக் குதறிப் பேசாமல் முழுசாய்ப் பேசினாள்.

    குட் மார்னிங் ஸார்.

    "குட் மார்னிங் மிஸ் வயலெட். என்ன இந்நேரத்துக்கே வந்துட்டிங்க... வயலெட் காலையில் தேய்த்த ஒழுங்கான பல்வரிசையைக் காட்டிச் சிரித்தாள்.

    இன்னிக்கு நீங்க நிறைய ஃபைல்ஸ்ல கையெழுத்தைப் போட வேண்டியிருக்கு ஸார். நீங்க பாம்பே புறப்பட்டுப் போயிட்டீங்கன்னா எல்லாமே பெண்டிங் விழுந்துடும்... ஸோ, இன்னிக்கு நான் என்னோட ஒரு மணி நேரத் தூக்கத்தைத் தியாகம் பண்ணிக் குளிச்சு முடிச்சுப் புறப்பட்டு வந்துட்டேன். நீங்க எத்தனை மணிக்குக் கோயமுத்தூர் புறப்படறீங்க ஸார்...?

    பை நைன்...

    எனஃப்... அதுக்குள்ளே நீங்க ஃபைல்ஸ் முழுவதையுமே பார்த்துக் கையெழுத்துப் போட்டுடலாம்...

    "ஃபைல்ஸை எடுத்து வையுங்க

    Enjoying the preview?
    Page 1 of 1