Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Patchainira Echarikkai
Oru Patchainira Echarikkai
Oru Patchainira Echarikkai
Ebook199 pages7 hours

Oru Patchainira Echarikkai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்புக்குரிய வாசக நெஞ்சங்களே!

வணக்கம்.

இப்போது உங்களுடைய கைகளில் இடம்பிடித்து இருக்கும் ஒரு பச்சை நிற எச்சரிக்கை - சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடித்ததும் உங்களுடைய இதயங்களிலும் இடம் பிடிக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. என் ஐம்பத்திமூன்று ஆண்டுகால எழுத்துலக வாழ்க்கையில் 2000-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா வார, மாத, தின இதழ்களிலும் வெளிவந்து என்னுடைய எழுத்துப் பசியை தணிய வைத்தன.

மலர்கள் உதிரிகளாக இருப்பதைக் காட்டிலும் மாலையாய் மாறி இருக்கும்போதுதான் அவைகளின் அழகு பன்மடங்காகத் தெரியும். பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பதிப்பகத்தாரால் என் சிறுகதை மலர்கள் மாலைகளாய் வெளிவந்து வாசகர்களை மகிழ வைத்தது. இந்த புத்தகத்தில் 16 சிறுகதைகளும் என்னால் கவனமாகப் படிக்கப்பட்டு தேர்ந்து எடுக்கப்பட்டவை. வெகுஜன இலக்கியம் என்ற பிரிவில் சிறுகதைகள் எழுதப்பட்டிருந்தாலும், கதையைப் படித்து முடிக்கும்போது அதன் இறுதி வரிகளில் ஒரு பயனுள்ள செய்தியை இந்த சமூகத்துக்கு சொல்பவையாகவே சித்தரிக்கப்பட்டு இருப்பதை படிக்கும் வாசகர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

மிக்க அன்புடன்

ராஜேஷ்குமார்

Languageதமிழ்
Release dateJul 8, 2023
ISBN6580100410040
Oru Patchainira Echarikkai

Read more from Rajeshkumar

Related to Oru Patchainira Echarikkai

Related ebooks

Reviews for Oru Patchainira Echarikkai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Patchainira Echarikkai - Rajeshkumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஒரு பச்சைநிற எச்சரிக்கை

    (சிறுகதைகள்)

    Oru Patchainira Echarikkai

    (Sirukathaigal)

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajeshkumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இந்தப் பூவின் நிறம் புதிது

    இதையும் ஒரு முறை...

    நிழலின் நிழலில்…

    தேர்டு அம்பயர்

    ஒரு சுட்டபழமும் சுடாத பழமும்

    முகம் இல்லாத நிழல்கள்!

    பொக்கிஷம்

    ஒரு பச்சை நிற எச்சரிக்கை

    நெஞ்சமெல்லாம் ஒரு தவிப்பு

    சுமந்தவள்

    கோணல் கோடுகள்

    கனகதாரா

    கோயிலில் ஒரு குற்றம்

    பூ பூக்கும் ஓசை

    ஒரு தாஜ்மஹால் குற்றம்

    ஒரு விடியற் காலையில்...

    அன்புக்குரிய வாசக நெஞ்சங்களே!

    வணக்கம்.

    இப்போது உங்களுடைய கைகளில் இடம்பிடித்து இருக்கும் ஒரு பச்சை நிற எச்சரிக்கை - சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடித்ததும் உங்களுடைய இதயங்களிலும் இடம் பிடிக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. என் ஐம்பத்திமூன்று ஆண்டுகால எழுத்துலக வாழ்க்கையில் 2000-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா வார, மாத, தின இதழ்களிலும் வெளிவந்து என்னுடைய எழுத்துப் பசியை தணிய வைத்தன.

    மலர்கள் உதிரிகளாக இருப்பதைக் காட்டிலும் மாலையாய் மாறி இருக்கும்போதுதான் அவைகளின் அழகு பன்மடங்காகத் தெரியும். பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பதிப்பகத்தாரால் என் சிறுகதை மலர்கள் மாலைகளாய் வெளிவந்து வாசகர்களை மகிழ வைத்தது.

    இந்த புத்தகத்தில் 16 சிறுகதைகளும் என்னால் கவனமாகப் படிக்கப்பட்டு தேர்ந்து எடுக்கப்பட்டவை. வெகுஜன இலக்கியம் என்ற பிரிவில் சிறுகதைகள் எழுதப்பட்டிருந்தாலும், கதையைப் படித்து முடிக்கும்போது அதன் இறுதி வரிகளில் ஒரு பயனுள்ள செய்தியை இந்த சமூகத்துக்கு சொல்பவையாகவே சித்தரிக்கப்பட்டு இருப்பதை படிக்கும் வாசகர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

    மிக்க அன்புடன்,

    E:\Priya\Book Generation\Everest\3-min.jpg

    இந்தப் பூவின் நிறம் புதிது

    காலை ஏழு மணி. வழக்கம் போல் ராஜத்துக்கும், பூக்காரி செல்விக்கும் சண்டை ஆரம்பமாகிவிட்டது.

    என்னாது! மல்லிப்பூவு மொழம் அம்பது ரூபாயா...? நீ பூவுக்கு வெல சொல்றியா... இல்ல உனக்கும் சேர்த்து வெல சொல்றியா?

    இதோ பாரு பெரிசு... உன்கூட தெனமும் இதே ரோதனையா போச்சு...? நேத்து சாயந்தரம் வரைக்கும் மல்லிப்பூ என்னா வெல வித்தது தெரியுமா?

    சொல்லு.

    மொழம் எழுபது ரூபா...

    பொய் சொல்றதுதான் சொல்றே... மொழம் நூறு ரூபான்னே சொல்லேன்.

    அப்படியெல்லாம் பொய் சொல்லி பூ விக்க மாட்டா இந்தச் செல்வி... உனக்கு இப்ப பூ வேணுமா வேணாமா?

    வேணும்... அம்பது ரூபாய்க்கு ரெண்டு மொழம் குடுத்துட்டு போ...

    நீ சொல்ற வெலைக்கு மல்லி கெடைக்காது. சாமந்தி தரட்டுமா...?

    நான் உன்கிட்ட சாமந்தி கேட்டேனா...?

    சமையலறையில் காலை நேர உணவைத் தயாரிப்பதில் மும்முரமாய் இருந்த தன்யா வெளியே வந்து குரல் கொடுத்தாள்.

    அத்தே... காலங்கார்த்தால அவகிட்ட என்ன சண்டை? சொன்ன விலையைக் குடுத்துட்டு பூவை வாங்கிட்டு வாங்க.

    பதிலுக்கு ராஜம் கத்தினாள். நீ உன்னோட வேலையைப் பாரு தன்யா...! இதுகிட்ட நான் பேசிக்கிறேன்.

    என்னமோ பண்ணுங்க... வாக்கிங் போயிருக்கிற உங்க மகன் வீட்டுக்கு வர்ற நேரம்... பார்த்தா சத்தம் போடுவாரு.

    சத்தம் போட்டா போடட்டும்... என்று சொன்ன ராஜம், பூக்காரி செல்வியிடம் திரும்பினாள்.

    முடிவா வெல சொல்லி...

    சரி மொழம் நாப்பது ரூபா.

    நான் ஒரு வெல சொல்லட்டுமா?

    சொல்லேன்.

    மொழம் முப்பது ரூபா... ரெண்டு மொழம் குடுத்துட்டு போ. வலிப்பு வந்த மாதிரி கையை வெச்சுகிட்டு மொழம் போடக்கூடாது. கையை நல்லா நீட்டிப் போடணும்...!

    பூக்காரி செல்வி வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தபடி நெருக்கமாய் கட்டிய மல்லிகை சரத்தை முழம் போட்டுக்கொண்டு இருக்கும்போதே காம்பௌண்ட் கேட்டைத் திறந்தபடி ஜாக்கிங் சூட்டோடு ப்ரணவ் உள்ளே வந்தான்.

    என்னம்மா... சண்டையெல்லாம் முடிஞ்சு பூ பேரம் முடிஞ்சுதா?

    இப்பத்தாண்டா முடிஞ்சுது... என்னா விலை சொல்றா தெரியுமா? அந்தக் காலத்துல பொன்னை வெக்கற இடத்துல பூவே வெக்கறேன்னு சொல்லுவாங்க. ஆனா இது சொல்ற விலையைப் பார்த்தா, பூவே வெக்க வேண்டிய இடத்துல பொன்னை வெக்கணும் போலிருக்கு... இவளுக்கு ரொம்பவும்தான் பேராசை.

    செல்வி பூவை முழம் போட்டுக்கொண்டே சிடுசிடுத்தாள். ஆமா பெரிசு... இந்தப் பூவை வித்து சம்பாதிச்சு மைசூர்ல மகாராஜா கட்டியிருக்கிற ஒரு அரண்மனை மாதிரி கட்டப் போறேன். கிரகப்பிரவேசத்துக்கு உன்னையும் கூப்பிடறேன்... மறக்காமே வந்துடு...

    உனக்கு வாய் ஜாஸ்தி.

    உன்னைய விட எனக்குக் கொஞ்சம் கம்மிதான்.

    இன்னிக்குத்தான் கடைசி... இனிமே உன்கிட்ட பூ வாங்கமாட்டேன்.

    தெனமும் இதையேதான் சொல்றே. ஆனா, ஒரு நாள்கூட நீ என்கிட்ட பூ வாங்காமே இருந்தது இல்லயே... செல்வி இரண்டு முழம் பூவை ராஜத்திடம் கொடுத்துவிட்டு அப்புறம் பெரிசு... ஒரு விஷயம் என்றாள்.

    என்ன?

    ஒரு பத்து நாளைக்கு பூ வியாபாரம் கிடையாது. மதுரையில் இருக்கிற என்னோட அக்கா வூட்டுக்குப் போய் ஒரு வாரம் பத்துநாள் இருந்துட்டு வரலாம்னு இருக்கேன்...

    அட... என்ன திடீர்னு?

    சித்திரைத் திருவிழா வருதுல்ல...?

    "சரி... போயிட்டு வா... எனக்கும் ஒரு பத்து நாள் உன்கூட சண்டை போட வேண்டிய வேலையில்லை... நிம்மதியா இருப்பேன்.

    எனக்கு அதைவிட நிம்மதி…

    பூக்கூடையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் செல்வி ப்ரணவ் ராஜத்தைப் பார்த்துச் சிரித்தான்.

    ஏம்மா... உனக்கும் அந்தப் பூ விக்கற பொண்ணுக்கும் என்னம்மா பிரச்சினை...? பொழுது விடிஞ்சா போதும்... சண்டை... ஒரு பத்து நிமிஷமாவது பேரம் போட்டுத்தான் பூ வாங்கறே... அவ கேக்கற விலையைக் குடுத்துட்டாதான் என்ன?

    நீ சும்மாயிருடா... உனக்கு அவளைப்பத்தித் தெரியாது. நம்ம வீட்டுக்குன்னு ஒரு விலை வெச்சு பூ விக்கிறா...! இன்னிக்கு வந்ததுமே மல்லிப் பூ முழம் அம்பது ரூபான்னு சொன்னா... நான் பேரம் பேசுன பின்னாடி முழம் முப்பது ரூபாய்க்கு குடுத்துட்டுப் போறா... கொஞ்சம் ஏமாந்தா போதும், உட்கார வெச்சு தலையில் மிளகாய் அரைச்சுட்டுப் போயிடுவா...

    அவளையும் திருத்த முடியாது. உன்னையும் திருத்த முடியாது. எப்படியோ போங்க...! ப்ரணவ் நோகாமல் தலையில் அடித்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான்.

    ***

    இரண்டு வார காலம் கரைந்து போயிருக்க, அன்றைக்குக் காலை ஏழு மணி.

    வாசலில் அழைப்பு மணிச் சத்தம் கேட்டு. தன்யா எழுந்து போய் கதவைத் திறந்தாள்.

    பூக்காரி செல்வி ஒரு எளிய நந்தவனம் பூத்த மாதிரி கூடை நிறைய பூவோடு நின்றிருந்தாள். தன்யாவைப் பார்த்ததும் மெல்லச் சிரித்தபடியே சொன்னாள்.

    மதுரையிலிருந்து நேத்து ராத்திரிதாம்மா வந்தேன். அக்கா விடலை. ரெண்டு நாள் இருந்துட்டுப் போன்னு ஒரே பிடிவாதம். மறுத்துப் பேச முடியலை...

    அதுவும் ஒரு சந்தோஷம்தானே... சரி ரெண்டு முழம் ஜாதிமல்லி குடு...

    செல்வி வீட்டுக்குள் எட்டிப் பார்த்துவிட்டு கேட்டாள்.

    ஏம்மா... அந்தப் பெரிசு... அதான் உங்க மாமியா வூட்ல இல்லியா?

    அத்தை தூங்கிட்டிருக்காங்க. அவங்க வர்றதுக்குள்ளே பூ குடுத்துட்டு போயிடு. முழம் எவ்வளவு?

    இருபத்தஞ்சு ரூபாம்மா.

    ரெண்டு முழம் குடு.

    வெற்றிலைக் காவியேறிய பற்களோடு செல்வி சிரித்தாள்.

    என்ன சிரிக்கிறே?

    ஒண்ணுமில்லேம்மா... சண்டை போடாம பேரம் பேசாம இன்னிக்குத்தாம்மா இந்த வீட்ல ஒரு வியாபாரம் நடக்குது. ஆனா இந்த வியாபாரம் எனக்குப் புடிக்கலை. அந்தப் பெரிசைக் கூப்பிடுங்கம்மா. நான் அதுகிட்ட சண்டை போட்டு பேரம் பேசி பூவை வித்துட்டுப் போனாத்தான் எனக்குச் சந்தோஷம்.

    தன்யா எதுவும் பேசாமல் மௌனமாய் இருக்க, ப்ரணவ் வீட்டின் உள்ளேயிருந்து வெளிப்பட்டான். மொட்டை போட்ட தலையில் கருமையாய் ரோம வளர்ச்சி தெரிய கம்மிப் போன குரலோடு செல்வியை ஏறிட்டான்.

    அம்மா இனிமே உன்கூட சண்டை போட மாட்டாங்க. பேரம் பேசமாட்டாங்க.

    செல்வி திடுக்கிட்டாள்.

    அ... அ... அய்யா... நீங்க என்ன சொல்றீங்க?

    பத்து நாளைக்கு முன்னாடி அம்மா இறந்துட்டாங்க. நெஞ்சுவலின்னு சொன்னாங்க. பக்கத்திலிருக்கிற ஹாஸ் பிட்டலுக்குக் கொண்டு போறதுக்குள்ளே எல்லாம் முடிஞ்சுடுச்சு.

    ப்ரணவ் சொல்லச் சொல்ல செல்வியின் இரண்டு கண்களும் உயிரற்றவைப் போல் உறைந்து போயிற்று. அப்படியே உடம்பு மடங்கி முழந்தாளிட்டு உட்கார்ந்து, கண்களை விரித்தபடி பெரிய குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.

    தாயீ... மவராசி... போயிட்டியா...? என்கிட்ட சண்ட போட்டுபேரம் பேசறப்பக்கூட அந்தப் பேச்சுல ஒரு பாசம் தெரியுமே தாயி. தெனமும் காலையில குளிச்சு, நெத்தியில குங்குமம் வெச்சுகிட்டு மகாலட்சுமி மாதிரி வாசற்படியில் உட்கார்ந்துட்டிருப்பியே? என்ன பெத்த அம்மாவோட மொகம் எப்படியிருக்குமின்னுகூட எனக்குத் தெரியாது தாயி. ஆனா உன்னத்தான் என்னோட அம்மாவா நெனைச்சுகிட்டேன். உன்கிட்ட நெறைய நேரம் பேசிட்டிருக்கிறதுக்காகவே சண்ட போட ஆரம்பிச்சேன். இப்ப அந்த சந்தோஷத்தையும் எனக்குக் கிடைக்காம பண்ணிட்டியே.

    கண்களில் தாரை தாரையாய் நீர் கொட்ட, அழுது புலம்பிய செல்வியை ஆறுதல்படுத்த முயன்று தன்யாவும் ப்ரணவும் தோற்றுப் போனார்கள். பக்கத்து, எதிர்வீடுகளிலிருந்து தலைகள் எட்டிப் பார்க்க ஆரம்பித்தன. தெருவில் போய்க் கொண்டிருந்தவர்களும் நின்று பார்த்துவிட்டு நகர்ந்தார்கள்.

    கிட்டத்தட்ட பதினைந்து நிமிடம்.

    அழுது அழுது வறண்டு போன கண்களோடு தடுமாறி எழுந்து நின்ற செல்வி, தன்னுடைய சேலைத் தலைப்பால், ராஜம் வழக்கமாய் உட்காரும் வாசற்படியைச் சுத்தமாகத் துடைத்தாள். பிறகு கூடையில் இருந்த ஒட்டுமொத்த பூக்களையும் எடுத்து வாசற்படியில் பரப்பி வைத்துவிட்டு கும்பிட்டாள்.

    தாயி...! நீ பேரம் பேசாமே எல்லா பூவையும் இப்ப வாங்கிக்க... நான் உன்கிட்ட வர்றப்ப பேரம் பேசிக்குவோம்.

    நீர் நிரம்பிய விழிகளோடு தன்யாவும், ப்ரணவும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே செல்வி காலி கூடையோடு காம்பௌண்ட் கேட்டைத் திறந்துகொண்டு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

    ‘இனிமேல் செல்வி அந்தத் தெருவுக்கே வரப்போ வதில்லை’ என்கிற உண்மை அந்தத் தளர்வான நடையிலேயே தெரிந்தது.

    இதையும் ஒரு முறை...

    மும்பை விக்டோரியா டெர்மினல்ஸ் ரயில்வே ஸ்டேஷன்.

    மாலை ஏழு மணி. ஸ்டேஷனின் எல்லா ப்ளாட்பா ரங்களிலும் ஜனவெள்ளம் அலையடித்தது. கோவைக்குப் புறப்பட்டுச் செல்ல விநாடிகளை எண்ணிக் கொண்டிருந்த அந்த எக்ஸ்பிரஸ் ட்ரெய்ன் இரண்டாவது பிளாட்பாரத்தை விழுங்கியிருந்தது. காசி, தன் ரோலர் சூட்கேஸைத் தள்ளிக்கொண்டு மோதுவது போல் வந்த ஜனங்களைத் தவிர்த்தபடி தான் ஏறி அமர வேண்டிய ஏ-1 கோச்சைத் தேடினான். இரண்டு நிமிஷத் தேடலுக்குப் பின்

    Enjoying the preview?
    Page 1 of 1