Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rajeshkumar Kurunovelgal - Thoguthi 1
Rajeshkumar Kurunovelgal - Thoguthi 1
Rajeshkumar Kurunovelgal - Thoguthi 1
Ebook255 pages2 hours

Rajeshkumar Kurunovelgal - Thoguthi 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்புக்குரிய வாசக நெஞ்சங்களே!

வணக்கம்.

உங்களுடைய கைகளில் இடம்பிடித்து இருக்கும் இந்த புத்தகம் என்னுடைய ஆறு குறுநாவல்களின் தொகுப்பு. இது முதல் பாகம்.

இந்த குறுங்கதைகள் என்னால் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வார, மாத இதழ்களில் எழுதப்பட்டது. அனைவராலும் வரவேற்கப்பட்டன. பாராட்டப் பெற்றன. படித்து முடித்தபின்.. உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். அடுத்த தொகுப்பு.. வெகுவிரைவில்.

மிக்க அன்புடன்

ராஜேஷ்குமார்

Languageதமிழ்
Release dateJul 8, 2023
ISBN6580100410035
Rajeshkumar Kurunovelgal - Thoguthi 1

Read more from Rajeshkumar

Related to Rajeshkumar Kurunovelgal - Thoguthi 1

Related ebooks

Reviews for Rajeshkumar Kurunovelgal - Thoguthi 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rajeshkumar Kurunovelgal - Thoguthi 1 - Rajeshkumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ராஜேஷ்குமார் குறுநாவல்கள் – தொகுதி – 1

    (சிறுகதைகள்)

    Rajeshkumar Kurunovelgal - Thoguthi 1

    (Sirukathaigal)

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajeshkumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    எழுத்தாளரைப் பற்றி...

    தீர்க்கும் சுமங்கலி

    கொல்ல வல்லாயோ கிளியே?

    எடு ஆயுதம்!

    உன்னைத்தான்...

    இப்படிக்கு தமிழரசி

    ஒரு லட்சம் வினாடிகள்

    எழுத்தாளரைப் பற்றி...

    ராஜேஷ்குமார், 1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி கோவை மாநகரில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் கே.ஆர்.ராஜகோபால். எழுத்துக்காக ராஜேஷ்குமார் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். இவரின் முதல் சிறுகதை உன்னைவிட மாட்டேன் 1969ம் வருடம் மாலை முரசு கோவை பதிப்பில் வெளிவந்தது. 1980வது வருடம் இவருடைய முதல் நாவல் வாடகைக்கு ஓர் உயிர் மாலைமதி மாத இதழில் வெளிவந்தது. அதே வருடம் கல்கண்டு வார இதழில் ஏழாவது டெஸ்ட் ட்யூப் என்ற முதல் தொடர்கதை வெளியானது.

    கடந்த 53 ஆண்டுகளில், இதுவரை 1500 மேற்பட்ட நாவல்கள் 2000 மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இதைத்தவிர, நூற்றுக்கணக்காண அறிவியல், சமூக, ஆன்மிக மற்றும் வாழ்வியல் கட்டுரைகள் படைத்துள்ளார். அவற்றில் ஸார் ஒரு சந்தேகம்!, வாவ்! ஐந்தறிவு, எஸ் பாஸ், சித்தர்களா! பித்தர்களா!! முக்கியமானவை. என்னை நான் சந்தித்தேன் என்ற தலைப்பில் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை சுவராஸ்யமான நடையில் எழுதியுள்ளார். இது மிகச் சிறந்த சுயமுன்னேற்ற நூலாகவும் பார்க்கப்பட்டு பாராட்டப்படுகிறது.

    இவரது சில தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்கள் பிராந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய நாவல்கள் பல, திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன.

    தான் எழுதிய குற்ற புதினங்களில், நவீன அறிவியலையும் பல புதுமைகளையும் புகுத்தி தனிமுத்திரை பதித்ததால், வாசகர்களும் பதிப்பாளர்களும் இவரை ‘க்ரைம் கதை மன்னர்’ என்று அழைக்கிறார்கள். இந்த 2023 வருடத்திலும் பல முன்னணி அச்சிதழ்களிலும் மின்னிதழ்களிலும் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

    எழுத்துலகில் இவர் ஆற்றிய சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022ல் அங்கீகரித்துள்ளது. இவர்க்கு தமிழக அரசு, 2010ல் கலைமாமணி விருது வழங்கி சிறப்பு செய்துள்ளது.

    அன்புக்குரிய வாசக நெஞ்சங்களே!

    வணக்கம்.

    உங்களுடைய கைகளில் இடம்பிடித்து இருக்கும் இந்த புத்தகம் என்னுடைய ஆறு குறுநாவல்களின் தொகுதி. இது முதல் பாகம்.

    இந்த குறுங்கதைகள் என்னால் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வார, மாத இதழ்களில் எழுதப்பட்டது. அனைவராலும் வரவேற்கப்பட்டன. பாராட்டப் பெற்றன.

    படித்து முடித்தபின்... உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.

    அடுத்த தொகுதி... வெகுவிரைவில்.

    மிக்க அன்புடன்,

    தீர்க்கும் சுமங்கலி

    1

    ஆர்.எஸ்.புரம் திவான்பகதூர் ரோடு போக்குவரத்து நெரிசலால் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த காலை நேரம். பதினொரு மணி.

    ப்ளூபிரிண்ட் மேப்புகளை கம்ப்யூட்டரின் துணையோடு சரிபார்த்துக்கொண்டிருந்த சம்பத்குமார், ப்யூன் டேவிட் உள்ளே நுழைவதைப் பார்த்ததும் என்ன? என்றான்.

    ஃப்ளாட் பார்க்கிறதுக்காக ஒரு ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ஃப் வந்து இருக்காங்க ஸார்...

    கார்ல வந்தாங்களா... இல்ல நடந்தா?

    கார்ல ஸார்... ஸ்கார்ப்பியோ.

    வரச்சொல்லு...

    டேவிட் போனதும் கம்ப்யூட்டரை அணைத்தான் சம்பத்குமார். கழுத்திலிருந்த டையை இறுக்கி சரிபார்த்துக்கொண்டவன், கண்ணாடி முன்பாகப் போய் நின்று, தன் அடர்த்தியான சுருண்ட முடியைத் தேவையில்லாமல் வாரிக்கொண்டான்.

    ‘இன்றைக்கு எப்படியாவது ஒரு ஃப்ளாட்டை விற்றுவிட வேண்டும்!’ மனதுக்குள் சபதம் போட்டுக் கொண்டவன், மறுபடியும் நாற்காலிக்கு வந்து உட்கார்ந்தபோது,

    அவர்கள் உள்ளே வந்தார்கள்.

    அழகான இளஞ்ஜோடி.

    அந்த இளைஞன் சம்பத்குமாரின் கையைப் பற்றிக் குலுக்கினான். ஸார்! அயாம் சர்வோத்தமன். எக்ஸ்போர்ட் பிசினஸ். ஷி ஈஸ் மை ஒய்ஃப் பிரதிபா. இன்னிக்குக் காலையில பேப்பர்ல உங்க கோல்டன் கேட்ஸ் அபார்ட்மெண்ட்ஸ் விளம்பரம் பார்த்தோம். சிட்டிக்கு நடுவுல ஒரு ஃப்ளாட் வாங்கணும்னு ரொம்ப நாளாவே எனக்கு ஆசை. என்னைக் காட்டிலும் என்னோட மனைவிக்கு ஆசை... இங்கே ப்ரமோட்டர்ஸ் யாரு?

    நான்தான்... என்று சொன்ன சம்பத்குமார், தன் மேஜையின் இழுப்பறையைத் திறந்து வார்னிஷ் அட்டையோடு கூடிய ஒரு கேட்லாக்கை எடுத்து அந்த இளைஞனிடம் கொடுத்தான்.

    இதுல மூணு டைப் ஃப்ளாட்ஸ் இருக்கு... த்ரீ பெட் ரூம், டபுள் பெட் ரூம், சிங்கிள் பெட்ரூம் வித் மார்பிள், வித்தவுட் மார்பிள், ஒயிட் மொசைக், க்ரே மொசைக்குன்னு நிறைய டைப். மொதல்ல உங்களுக்கு பிடிச்சிது எதுன்னு செலக்ட் பண்ணுங்க... உடனே ஸ்பாட்டுக்குப் போய்ட்டு வந்துடலாம்.

    அந்த இளைஞன், கேட்லாக்கை வாங்கித் தன் மனைவியிடம் கொடுத்தான். நீயே பாரு பிரதிபா...!

    அந்தக் கால ஜெயப்ரதா போல் அழகாய் இருந்த அந்த பிரதிபா, கேட்லாக்கைப் புரட்டிப் பார்த்து விட்டு சம்பத்குமாரை ஏறிட்டாள்.

    இதோ... இந்த டைப் வேணும்.

    இது ரோஸ் பெட்டல்ஸ் மாடல்... த்ரீ பெட்ரூம், வித் மார்பிள் பார்ட்லி க்ரானைட்... வெரி எக்ஸ்பென்ஸிவ்...

    என்ன விலை...?

    தர்ட்டி லேக்ஸ்... வித் ஃபர்னிச்சர்ஸ்.

    நோ... ப்ராப்ளம்! ஃப்ளாட்டை இப்போ பார்க்கலாமா?

    வாங்க... சொன்ன சம்பத்குமார் வெளியே எட்டிப்பார்த்து குரல் கொடுத்தான்.

    டேவிட்!

    ஸார்...

    அந்த ரோஸ் பெட்டல்ஸ் கீ பன்ச்சை கொண்டுவா.

    டேவிட் கொண்டுவந்து கொடுத்த கீ பன்ச்சை வாங்கிக்கொண்ட சம்பத்குமார், அவர்களோடு நடந்தான். மே ஃப்ளவர் மரங்களுக்கு மத்தியில் ஏழு மாடிகளோடு நின்றிருந்த அபார்ட்மெண்ட்ஸ் முடிவடையும் தருவாயில் இருந்தது.

    அந்த இளைஞன் சர்வோத்தமன் கேட்டான். விலையில ஏதாவது சலுகை உண்டா?

    ஸாரி ஸார்... இன்னிக்கு ஆர்.எஸ்.புரத்துல ஒரு பிட் காலியிடம் இல்லை... ரேட் எங்கேயோ போயிட்டு இருக்கு.

    பிரதிபா குறுக்கிட்டுக் கேட்டாள்.

    உடனடியாய் கிரயம் பண்ணிக்கிறோம். அப்பவாவது ஏதாவது கன்செஷன் உண்டா?

    ஸாரி மேடம்! நாங்க மத்த ப்ரமோட்டர்ஸ் மாதிரி கிடையாது. எல்லாமே ஜென்யூன் ப்ராடக்ட்ஸைப் போட்டு பில்டிங்கை கன்ஸ்ட்ரக்ட் பண்ணியிருக்கோம். நீங்க மொதல்ல அபார்ட்மெண்ட்டை வந்து பாருங்க. அதுக்கப்புறம் நாங்க சொல்ற ரேட் சரிதான்னு உங்க மனசுக்கே படும்...

    கட்டிடத்தின் கீழ்தளத்துக்கு வந்தார்கள்.

    லிஃப்ட் ஒர்க் நடந்துட்டிருக்கு... இப்போதைக்கு நாம படிலதான் ஏறிப் போகணும்...

    நோ ப்ராப்ளம்...

    ஏறிக் கொண்டே பிரதிபா கேட்டாள்.

    மொத்தம் எத்தனை ஃப்ளாட்?

    ஒரு மாடியில மூணு ஃப்ளாட். ஏழு மாடிக்கு இருபத்தியோரு ஃப்ளாட் மேடம்...

    எத்தனை ஸேல் ஆகியிருக்கு?

    பதினாறு...

    க்ரௌண்ட் ஃப்ளோர்ல ஏதாவது காலியிருக்கா?

    இல்லை... முதல் மூணு மாடியும் ஸேல் ஆயிடுச்சு. இனிமே யார் வாங்கறதாயிருந்தாலும் நாலாவது மாடியிலிருந்து தான் ஃப்ளாட் கிடைக்கும்.

    பேசிக்கொண்டே மூன்று மாடிகளையும் ஏறி, நாலாவது மாடிக்கு வந்து ஒரு ஃப்ளாட்டுக்குள்ளே போனார்கள்.

    பளீரென்ற பால் நிற மார்பிளில் ஃப்ளாட் ஜொலித்தது. தேக்குக் கதவுகள் வார்னீஷ் உதவியோடு பளபளத்தது.

    எல்லாமே ஏஸ் பர் வாஸ்துப்படி கன்ஸ்ட்ரக்ட் பண்ணியிருக்கோம். ஃப்ளாட்டை யார் பேர்ல வாங்கப் போறீங்க மேடம்.

    என்னோட பேர்லதான்.

    உங்களுக்கு என்ன ராசி மேடம்?

    தனுசு ராசி...

    தனுசுன்னா... ராசியாதிபதி குரு உங்களுக்கு வடக்கு வாசல் நல்லபடியாய் ஒர்க் அவுட் ஆகும் மேடம். இந்த அபார்ட்மெண்ட் கூட வடக்கு பார்த்து கட்டினதுதான்...

    பரவாயில்லையே... உங்களுக்கு ஜோஸ்யம், ஜாதகம் கூட தெரியுது...

    ஆர்க்கிடெக்ட் படிக்கும் போதே, பார்ட்டைமில் வாஸ்து, ஜோஸ்யம், ஜாதகம் கத்துகிட்டேன் மேடம்.

    தன்னுடைய பொடிசு பொடிசான அழகான பற்களைக் காட்டிச் சிரித்தாள் பிரதிபா. அவளுடைய பார்வை ஃப்ளாட்டின் எல்லாப் பக்கமும் போயிற்று.

    சந்தன நிற ஆயில் பெயின்டை புதிதாய் உடுத்திக் கொண்ட சுவர்கள். ஆங்காங்கே சிவப்பு கார்பெட் விரிப்பு. ‘ப’ எழுதும் சோபாக்கள். உபரி நாற்காலிகள். டீபாய். கடல் நீல வண்ணத்தில் திரைச்சீலைகள். சிட் அவுட் சீலிங் பரப்பில் நைலான் கயிறுகளில் ஊஞ்சலாடும் காவி நிற மண் தொட்டிகள். அதில் பசேலென்று எட்டிப் பார்க்கும் மணி ப்ளான்ட் இலைகள்.

    ஃப்ளாட் எப்படியிருக்கு மேடம்?

    ஃபைன்... என்ற பிரதிபா, கணவனைப் பார்த்தாள். நீங்க என்ன சொல்றீங்க?

    அதே ஃபைன்...

    அஞ்சாவது மாடி ஃப்ளாட்டும் இப்படித்தான் இருக்குமா இல்லை... வேற டைப்பா?

    ஏறக்குறைய இதே மாதிரிதான் இருக்கும்.

    பார்க்கலாமா?

    தாராளமா...! அஞ்சாவது மாடி மட்டுமில்லை. ஆறாவது ஏழாவது மாடிகளைக்கூட பார்க்கலாம். வாங்க...! உங்களுக்கு எது பிடிக்குதோ அதை அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணிக்கலாம். அதுக்கப்புறம் ஆறுமாசத்துக்குள்ளே கிரையம் பண்ணிக்கலாம்.

    சம்பத்குமார் சொல்லிக் கொண்டே, அந்த ஃப்ளாட்டை விட்டு வெளியே வந்தான்.

    அதே விநாடி சர்வோத்தமனின் செல்போன் தன் ரிங்டோனை வெளியிட்டது. அவன் எடுத்து டிஸ்பிளேயில் யார் என்று பார்த்துவிட்டுப் பேச ஆரம்பித்தான்.

    சொல்லு ரமணி...!

    .....

    என்னது... சரியா கேட்கலையா? நான் இப்ப ஒரு அபார்ட்மெண்ட்குள்ளே இருக்கேன். ஒரு நிமிஷம்! லைன்லயே இரு. வெளியே வந்து பேசறேன். சொன்ன சர்வோத்தமன், செல்போனோடு மாடி வராந்தாவின் கோடியில் இருந்த வெளிப்புற சிட் அவுட்டை நோக்கிப் போனான்.

    அவன் நூறடி தூரம் போனதும்...

    சம்பத்குமார் பிரதிபாவின் வெண்ணெய் நிறத்தில் பளபளத்த இடுப்பில் கை வைத்து, ஒரு கிள்ளு கிள்ளி விட்டு கண் சிமிட்டினான்...

    என்ன... ஃப்ளாட் பக்கம்?

    அய்யாவைப் பார்க்காமே இருக்க முடியலை...

    ரெண்டு நாளைக்கு முன்னாடி தானே பார்த்தோம்.

    அது எவ்வளவு நேரத்துக்கு தாக்கு பிடிக்கும்? ஒரு ஃப்ளாட் வாங்கணும்னு ரொம்ப நாளா சொல்லிட்டிருந்தார். அதான் இங்கேயே கூட்டிட்டு வந்துட்டேன்...

    உனக்கு ரொம்பத்தான் தைரியம்

    எல்லாமே நீங்க கொடுத்ததுதான்.

    அதுசரி... அதென்ன கீழ் உதட்டுல லேசா வீக்கம் மாதிரி தெரியுது...

    தெரியாதாக்கும்...! ரெண்டு நாளைக்கு முன்னாடி பொட்டானிகல் கார்டன் இருட்டுல நீங்க பண்ணின கைங்கரியம்தான்.

    உன் புருஷன் அது என்னன்னு கேட்கலையா?

    அதையெல்லாம் கவனிக்க அவர்க்கு ஏது நேரம்?

    சரி! நான் சொன்னதை யோசிச்சயா?

    எதை?

    உன் வீட்டு ஹாலில் இருக்கிற உன் புருஷன் போட் டோவுக்கு சீக்கிரமே மாலை போடணும்னு சொன்னேன்... அதை?

    எனக்கு பயம்மாயிருக்கு சம்பத்...

    எதையுமே திட்டம் போட்டு பண்ணினா பயப்பட வேண்டியதே இல்லை.

    தொலைவில் முதுகைக்காட்டிக் கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்த கணவனை ஒரு பயப் பார்வை பார்த்துவிட்டு, சம்பத்குமாரிடம் நிமிர்ந்தாள். எச்சில் விழுங்கிவிட்டு கேட்டாள்.

    சரி... உங்க திட்டம்தான் என்ன?

    மொதல்ல சம்பத்குமார் பேச ஆரம்பித்த விநாடி - அவனுடைய சட்டைப் பையில் இருந்த செல்போன் கூப்பிட்டது. எடுத்து யார் என்று பார்த்தான். பிறகு எரிச்சலோடு சே என்றான்.

    போன்ல யாரு சம்பத்?

    என்னோட பிரியமான பொண்டாட்டி!

    2

    பிரதிபா கண்ணைச் சிமிட்டிக் கொண்டே சம்பத்குமாரிடம் சொன்னாள்.

    ம்... உங்க தீர்க்க சுமங்கலிகிட்டே பேசுங்க...

    அவன் செல்போனை தன் வலது காதுக்கு ஒற்றி தன் மனைவி பூங்கோதையை செல்லம் கொஞ்சினான்.

    என்னடா... கோதை?

    இப்ப நீங்க எங்கே இருக்கீங்க?

    ஃப்ளாட்லதான்! பார்ட்டி வந்திருக்காங்க... பேசிட்டி ருக்கேன்.

    என்னங்க?

    சொல்லுடா... என் செல்லம்...

    இன்னிக்கு சாயந்தரம்... நீங்க ஃப்ரியா?

    ஃப்ரீ பண்ணிக்கறேண்டா ராஜா... விஷயம் என்னன்னு சொல்லுடா...

    ஒண்ணும் இல்லீங்க... என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தி டெலி சீரியல் ப்ரொடியூசரா இருக்கானு உங்ககிட்டே சொல்லியிருக்கேன். ஞாபகம் இருக்கா?

    இருக்குடா. பேர் கூட குழலி.

    அவளேதான்...! அவ புதுசா ஒரு சீரியல் பண்ணிட் டிருக்கா. ‘தாயே! எல்லாம் நீயே!’ன்னு ஒரு பக்தி டெலி சீரியல். அதுல அம்பாள் வேடத்தில் நடிக்க என்னை கூப்பிடறா! ஒரு வாரம் கால்ஷீட் கொடுத்தா போதுமாம்.

    அம்பாள் வேஷம்தானே... நடியேண்டா...!

    இன்னிக்கு சாயந்தரம் அஞ்சு மணியிலிருந்து ஏழு மணி வரைக்கும் ரேஸ்கோர்ஸில் இருக்கிற ஒரு வீட்டுல ஷூட்டிங். நீங்க வர முடியுமா?

    இன்னிக்கு சாயந்தரமா?

    ஆமா...

    ஏண்டா ராஜா, இன்னிக்கு என்ன கிழமை? சனிக் கிழமை! வெள்ளையங்கிரி மலையடிவாரத்துல நாம கன்ஸ்ட்ரக்ட் பண்ணிட்டிருக்கிற சிறுவாணி நகர் ஸ்பாட்டுக்குப் போய் லேபர்ஸுக்குக் கூலிப் பணத்தைப் பட்டுவாடா செய்ய வேண்டிய நாள். உனக்கு மறந்து போச்சாடா செல்லம்?

    ஸாரிங்க மறந்துட்டேன்.

    இன்னிக்கு சாயந்தரம் நீ போய் ஷூட்டிங் ஷெட்யூலை முடிடா. நாளைக்கு சாயந்தரம் ஷூட்டிங் இருக்கா...?

    இருக்கு.

    பின்னே என்ன... நாளைக்கு வர்றேண்டா என் ராஜா. செல்போனை கிஸ் பண்ணி அணைத்து, ஷர்ட் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டான் சம்பத்குமார். பிரதிபா தன் அழகான முகத்தை அஷ்டகோணலாக்கிக் கொண்டு, சகிக்கலை என்றாள். அவன் சிரித்தான்.

    எனக்கும் சகிக்கலை தான்...! பெண்டாட்டி மேல பிரியம் இருக்கிற மாதிரி நடிச்சாத்தான் சில காரியங் களைச் சாதிக்க முடியுது... சரி இன்னிக்கு சாயந்தரம் வழக்கம்போல மாங்கரை காட்டேஜ்க்கு போயிடலாமா... இல்லை வாளையார் ஃபாரஸ்ட்ல இருக்கிற கெஸ்ட் ஹவுஸுக்குப் போயிடலாமா?

    அவர் வர்றார் சம்பத். அப்புறம் உங்களுக்கு போன் பண்ணி சொல்றேனே... பிரதிபா சொல்ல சம்பத் குமார் திரும்பிப்பார்த்தான். சர்வோத்தமன் வந்து கொண்டி ருந்தான்.

    உம் புருஷனோட நடையைப் பாரு... போண்டா கோழியாட்டம்...

    நடை மட்டும் கோழி இல்லை... எல்லா விஷயத்திலும் கோழிதான்.

    "சரி! கோழியோட கழுத்துக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1