Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthithai... Oru Sathi Seivom
Puthithai... Oru Sathi Seivom
Puthithai... Oru Sathi Seivom
Ebook93 pages1 hour

Puthithai... Oru Sathi Seivom

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரஷ்மி ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் படித்த புத்திசாலி பெண். இண்டியன் ஏர்லைன்ஸில் பணிபுரியும் அவளின் அண்ணன் ஜெகனுக்கு நேரும் கொடூரமான செயல் நடக்கிறது. அதை துப்புத் துலக்க போலீஸ் விசாரணையில் இறங்குகின்றனர்.

இதற்கிடையிலேயே விமானத்தில் பயணிக்கும் முக்கிய பிரமுகர்களுக்கு நேரும் விபரீதம். அதற்கும் இதற்கும் என்ன தொட‌ர்பு?இந்த சதிச்செயல்களுக்குப் பின்னால் இருக்கும் மர்ம நபர்கள் யார்?

அதற்கான காரணம் என்ன? இந்த முடிச்சுகளை அவிழ்க்க ரஷ்மி என்ன செய்கிறாள்...?

வாசிப்போம் ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான பாணியில்...

Languageதமிழ்
Release dateSep 6, 2021
ISBN6580100406684
Puthithai... Oru Sathi Seivom

Read more from Rajesh Kumar

Related to Puthithai... Oru Sathi Seivom

Related ebooks

Related categories

Reviews for Puthithai... Oru Sathi Seivom

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthithai... Oru Sathi Seivom - Rajesh Kumar

    https://www.pustaka.co.in

    புதிதாய்... ஒரு சதி செய்வோம்

    Puthithai... Oru Sathi Seivom

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    ரஷ்மி கண்ணாடித்தனமான கிரானைட் தரையில் ஹைஹீல்ஸ் கால்களுடன் கவன நடை நடந்தாள்,

    கிசுகிசுப்பான ஆங்கிலத்தைக் காற்றில் கரையவிட்டபடி அலுவலக ஆண்களும் பெண்களும் அவ்வப்போது கடந்து சென்றார்கள். மிகப்பிரம்மாண்டமான அலுவலகக் கட்டிடம், சிவில் ஆர்க்கிடெக்ட்களின் கைவரிசையில் உயரஉயரமான தூண்களும், அவற்றில் வளைசல் நெளிசலான என்கிரேவ்மென்ட் வேலைப்பாடுகளும் கண்ணைப் பறித்தன.

    மேக்கப் சாதனங்களைக் குத்தகைக்கு எடுத்திருந்த வரவேற்புப் பெண்ணை நெருங்கினாள்.

    எக்ஸ்க்யூஸ் மீ...

    எஸ் ப்ளீஸ்...

    ரெடிமேட் புன்னகையுடன் ரஷ்மியை ஏறிட்டாள் அவள், ரஷ்மி ஆங்கில வார்த்தைகளை உதிர்த்தாள்.

    மிஸ்டர் காந்த்தை பார்க்க வேண்டும்

    ப்ளீஸ்... என்று ஆளை விழுங்கும் சோபாவைக் காட்டினாள். இன்ட்டர்காம் பொத்தான்களை நெயில்பாலீஸ் விரல்களால் தடவ ஆரம்பித்தாள்.

    ரஷ்மி சோபாவில் தன்னை இருத்திக்கொண்டு உயரமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த டி.வி. திரையில் வண்ணங்களைக் கொட்டிக் கொண்டிருந்த டிஸ்கவரி சேனலை அசிரத்தையாய் பார்வையில் வாங்கினாள்,

    ஐந்தாவது நிமிஷம் வரவேற்புப் பெண் கூப்பிட்டாள்.

    மிஸ் ரஷ்மி."

    "எஸ்.

    காந்த் இங்கேவர இயலாத நிலையில் இருக்கிறார்... உங்களை பின்பக்க யார்டுக்கு வரச் சொன்னார்...

    நன்றி...

    மனசுக்குள் காந்த்துக்கு அர்ச்சனை செய்தபடியே நீளமான வராந்தாவைக் கடந்து செல்ல ஆரம்பித்தாள்.

    இவருக்குக் காதலிக்கவே தெரியாதா...?

    அவனவன் காதலி தேடி வந்தால் சந்தோஷத்தில் வானத்துக்கும் பூமிக்கும் பத்துத் தடவையாவது குதிக்கிறான்...

    வர இயலாத நிலைமையாம்...

    பின்பக்கக் கோடியில் இருக்கிற யார்டுக்கு நான் தேடிக் கொண்டு செல்ல வேண்டுமாம்...

    செர்ரி உதடுக்குள் முணுமுணுத்தபடியே நான்கு நிமிஷ நடை நடந்தாள்.

    கட்டிடம் முடிந்து பெரிய மைதானப்பரப்பு கண்ணில் விரிந்தது. அதன் மையத்தில் வைக்கப்பட்டிருந்த ஹெலி பேடின் மேல் கம்பீரமாய் நின்றிருந்தது அந்த ஹெலிகாப்டர்,

    அதன் மெகா சைஸ் உடம்புக்கருகே சின்னச்சின்ன உருவங்களாய் சிலமனிதர்கள் தெரிந்தார்கள். அந்த மைதானத்தில் கால் வைத்ததுமே ஒரு பேட்டரி கார் சத்தமில்லாமல் அவள் அருகில் வந்து நின்றது.

    ஸ்டியரிங்கைப் பிடித்திருந்தவன் ஜன்னலில் தலை நீட்டினான்,

    சிஸ்டர். காரில் ஏறுங்க... காந்த் அனுப்பினார்...

    இந்த அளவுக்காவது அவருக்கு என் மேல கரிசனம் இருக்கே... ரஷ்மியின் முணுமுணுப்பு அவன் காதில் சுத்தமாய் விழவில்லை, அவள் அந்தக் குட்டையான பாட்டரி காரில் அமர்ந்ததும் ஸ்டார்ட்டர் பொத்தானை அழுத்தினான். புகை இல்லாமல் ஓசை எழுப்பாமல் வெண்ணெய் துண்டமாய் வழுக்கிச் சென்றது.

    ஹெலிகாப்டருக்குப் பக்கத்தில் போய் இயக்கத்தை கத்தரித்துக் கொண்டது.

    கீழே இறங்கினாள் ரஷ்மி.

    ஏராளமான இரைச்சலேராடு ஹெலிகாப்டரின் ராட்சத இறக்கை சுழன்று கொண்டிருக்க, ரஷ்மியின் கூந்தல் காற்றில் அலைமோதியது.

    ஹெலிகாப்டருக்குள்ளே கண்ட்ரோல் பேனலை கழற்றிப் போட்டு சிக்கலான வயர்களுக்கிடையே தெரிந்தான் காந்த். அவனருகே நல்ல உயர அகலங்கோடு ரோஜா நிறத்தில் ஒரு வயதான மனிதர் நின்றிருந்தார்.

    சீப் என்ஜினியர் பரசுராம்,

    ரோட்டார் சுவிட்ச்சில் சிக்னல் வருகிறதா பார் காந்த்...

    அவர் அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது ரஷ்மி அந்த ஹெலிகாப்டருக்குள் நுழைந்தாள்,

    ஹாய் காந்த்...

    வா ரஷ்மி...

    வேஸ்ட் க்ளாத்தால் கையைத் துடைத்துக்கொண்டு புன்னகைத்தான் காந்த்.

    அவர் குறுக்கிட்டார்.

    "காந்த்... சேர்மன் இரவு ஏழரை மணிக்கெல்லாம் பெங்களூர் கான்பரன்சில் இருக்க வேண்டும்... முதலில் வேலையை

    Enjoying the preview?
    Page 1 of 1