Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idathu Purame Kolga
Idathu Purame Kolga
Idathu Purame Kolga
Ebook76 pages52 minutes

Idathu Purame Kolga

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அழகான ஆங்கிலோ இந்தியப்பெண் வயலட், இந்தியாவிற்கு வருகிறாள். இவளை பிடிக்க இரண்டு குழுவினர் துரத்துகின்றனர். எதற்காக...? இதில் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள்...? இறுதியில் அவள் நிலை என்ன ஆனது?

வாசிப்போம்... ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான பாணியில்...

Languageதமிழ்
Release dateSep 6, 2021
ISBN6580100406663
Idathu Purame Kolga

Read more from Rajesh Kumar

Related to Idathu Purame Kolga

Related ebooks

Related categories

Reviews for Idathu Purame Kolga

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idathu Purame Kolga - Rajesh Kumar

    https://www.pustaka.co.in

    இடது புறமே கொல்க...!

    Idathu Purame Kolga...!

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    அமெரிக்காவின் முக்கிய நகர பிரதான தெருக்கள் ‘சோடியம் மிஸ்ட் லாம்ப்’களிடம் வெளிச்சத்தை இரவல் வாங்க ஆரம்பித்திருந்த சாயந்தர 6-05 (அமெரிக்கநேரம்), மியார் கடற்கரையோர பகுதிகளின் ஒவ்வொரு சதுர மில்லி மீட்டர் பரப்பையும் கனமான குளிர் ஆக்ரமிக்கத் துவங்கியிருக்க.

    சாண்டாள் பீச் ரோடை ஒட்டிய ஜாக்கன் வில்லி ஸ்ட்ரீட்டில் ஓரப்பட்டிருக்கும் டிஸ்டெம்பர் உதிர்ந்துபோன பழைய டைப் பங்களாவில் இந்த நாவல் ஆரம்பமாகிறது.

    ஒன்றரை ஆள் உயரத்துக்கு இரும்பு ‘கப்’பென மூடிக்கிடக்க போர்டிகோ அனுப்பிய பலஹீன வெளிச்சம் ‘கேட்’டால் தடுக்கப்பட்டு வீதிக்கு வர மறுப்பு தெரிவித்தது.

    கேட் அருகாமையில் விறைப்பாய் ராணுவத்தனமாய் நின்றிருந்த அந்த ஆசாமியைத் தாண்டிப் போன சிமெண்ட் பாதை பனி படிந்து நனைந்திருந்தது.

    வராந்தா ஃப்ளோரஸண்ட் விளக்கின் பளீரிடலில் தெரிய,

    ப்ரெட்ரிக்கும், ஜேம்ஸும் டாக்... டாக்... என்ற ஒர் சப்தித்தலோடு நடந்து கொண்டிருந்தார்கள். சுத்தமான அமெரிக்க அஸண்ட் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டே நடந்தார்கள்.

    ப்ரெட்ரிக் அவனிஸ் இருபத்தியிரண்டு காதுக்கு அதிகப்படியாய் 'திண்’ணென்று வளர்ச்சி பெற்றிருந்தான். கோபால்ட் நீல நிறத்தில் கண்கள். பிளேடு கிழித்த மாதிரி உதடுகள்.

    ஜேம்ஸ் வழுக்கை வாங்க ஆரம்பித்திருந்தான் தேவைக்கு மேற்பட்ட சதையில்லாமல் இருந்தான். மீசை, தலை முடி எல்லாமே தங்க மஞ்சள் மினு மினுக்க தெரிந்தது. இரண்டு பேருமே ஜீன்ஸ் பேண்ட்டிலிருந்தார்கள். மேலே உல்லன் சமாச்சாரங்களைக் கொடுத்திருந்தார்கள்.

    ப்ரெட்ரிக்…

    ஜேம்ஸ் அழைத்ததும் திரும்பினான் ப்ரெட்ரிக்.

    ஜெய்... அறையில் காத்திருக்கிறாரா?

    ஆமாம்.

    அவருடைய முழுப் பெயரென்ன ஜேயனந்தாவா? வாயில் நுழையமாட்டேனென்கிறது.

    ப்ரெட்ரிக் சிரித்தான்.

    ஜேயனந்தனில்லை. ஜெயானந்தன்!

    வயலெட் அங்கேதான் இருக்கிறாளா?

    பக்கவாட்டில் தலையசைத்தான்.

    ம்ஹும் ஏழு மணிக்கு வருவதாக சொல்லிவிட்டு போயிருக்கிறாள்.

    டயன மைட்டை இந்தியாவரை பத்திரமாக கொண்டுபோய் சேர்ப்பாளா ப்ரெட்ரிக்?

    நிச்சயமா!

    அறை வந்திருக்கு.

    திறந்திருந்த கதவுக்குள் நுழைந்தார்கள் சின்ன சைஸ் அறை, ஸ்டீல் மேஜைக்குப் பக்கத்து இருக்கையில் நிறைந்து தெரிந்தான் ஜெயானந்தன். வழுக்கை அத்தியாயத்தை எட்டிப் பார்த்திருக்காத தவப்பிரதேசம். பிசகாத இந்திய நிறம். ஸ்டோனவாஷ் பேண்ட் சர்ட்டை உடல் பரப்பில் படியவிட்டிருந்தான். உள்ளே நுழைந்த ஜேம்ஸையும் ப்ரெட்ரிக்கையும் பார்த்ததும் கொஞ்சமாய் தடித்திருந்த உதடுகளை புன்னகைக்குக் கொண்டு போனான்.

    குட் ஈவ்னிங்...

    பரஸ்பரம் புன்னகைத்தார்கள்.

    குட் ஈவ்னிங் ஜெய்...

    சொன்ன ஜேம்ஸே மறுபடியும் கேட்டான்.

    ரொம்ப நேரமா வெயிட்பண்றீங்களா ஜெய்?

    ஜெயானந்தன் புன்னகையை விலக்காமல் மறுத்துத் தலையசைத்தான்.

    நோ... நோ... ஜஸ்ட் அரைமணி நேரம்.

    "என் வீட்டு போன்ல

    Enjoying the preview?
    Page 1 of 1