Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uravugal Pirivathillai
Uravugal Pirivathillai
Uravugal Pirivathillai
Ebook84 pages39 minutes

Uravugal Pirivathillai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.[1][2]

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Languageதமிழ்
Release dateJul 29, 2016
ISBN6580100401368
Uravugal Pirivathillai

Read more from Rajesh Kumar

Related to Uravugal Pirivathillai

Related ebooks

Reviews for Uravugal Pirivathillai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uravugal Pirivathillai - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    உறவுகள் பிரிவதில்லை

    Uravugal Pirivathillai

    Author :

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For other books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    உறவுகள் பிரிவதில்லை

    -ராஜேஷ்குமார்

    1

    பச்சை நிற பிரியதர்சினி சின்ன சிணுங்கலில் ஆரம்பித்து அடுக்கடுக்காய் ‘ட்ரிங்’ சொல்ல ஆரம்பித்த நேரம் - சரியாக ஓடும் இந்திய வாட்சுகள் எல்லாமே பதினொன்றிலிருந்து பதினொன்று ஐந்தைக் காட்டின நேரம்.

    கிச்சனுக்குள் பிரஷர் குக்கர் கிளப்பின நீராவிக்கிடையே –ப்ளக்கிலிருந்து ஒயர் வழியே வழிந்த மின்சாரத்தை எடுத்துக் கொண்டு ர்வொய்ங்… ங்… ஓசையோடு ஓடும் மிக்ஸியின் தலையைத் திறந்து விடாமல் பிடித்திருந்த சூர்யாவின் ‘சிங்கிள் ட்ராப்’ அணிந்திருந்த பவுன் நிற காதுகள் மிகக் கஷ்டப்பட்டு கிரகித்தன முன்னறையில் ஒலித்த டெலிபோன் ஓசையை.

    அவளின் பாலிஷ் போட்ட மாதிரியான நீள நீள விரல்களில் ஒன்று நீண்டுபோய் ஸ்விட்சைத் தட்டிவிட மிக்ஸிக்கு தொண்டை கட்டிப் போய்… கடைசியில் ஊமையாகி நின்றது கேஸ் ஸ்டவ்வை அடைந்து கறுப்பு நாபைத் திருப்பி SIM- ல் வைக்க – குக்கர் மெல்ல மெல்லத் தன்வால்யூமைக் குறைக்க ஆரம்பித்தது.

    டெலிபோன் சத்தம் தெளிவாய் வந்து விழுந்தது.

    யாராயிருக்கும்..? என்ற யோசிப்போடு நடந்து போன சூர்யா, கட்டியிருந்த பிரிண்டட் சைனா சில்க் மாதிரியே மினுமினுத்தாள். பிங்க் நிற ரப்பர் மோல்டட் பெரிய சைஸ் குழந்தை பொம்மைக்கு ஆர்வமாய் முத்தம் கொடுக்கும் - ஆசை நிரம்பிய சூர்யா நிஜமாகவே குழந்தையைக் கொஞ்ச காத்திருக்க வேண்டிய நாட்கள் - இன்னும் நூற்றி ஐம்பத்தி மூன்று நாட்கள் மட்டுமே!

    மிதமாய் வயிறு பம்மியிருந்த சூர்யா போனை அடைந்த போது, அது சலிப்போடு கடைசிக் கத்தலை வெளியிட நினைக்க – சட்டென ரிஸீவரைக் கையிலெடுத்தாள்.

    மேலே உயர்த்தி காதருகே கொடுத்த பின், ஹலோ சொன்னாள்.

    26222968- தானே அது…? கரகரப்பான அந்தக் குரல் கேட்க-

    ஆமா.. யாரு வேணும்…?

    யாரு… சூர்யாவா பேசறது?

    மறுமுனை கேட்டதுமே திகைத்தாள்.

    ரொம்பப் பழக்கப்பட்ட தொனியில் தன் பெயரைக் கேட்கும் அந்தப் பரிச்சயமில்லாத ஆண் குரலுக்கு வியந்து? நீங்க யாரு…? –கேட்டாள்.

    மறுபடியும் மறுமுனை. நீ சூர்யா தானே? என்றதும் கொஞ்சம் அளவில் எரிச்சல் வந்தது.

    ஆமா கோபத்தோடு சொன்னாள். போன் பண்ணினா முதல்ல இன்னார் பேசறேன், இன்னார் வேணும்னு கேட்டுப் பழகுங்க.

    குரல் ஒரு சின்னச் சிரிப்பை உதிர்த்துவிட்டு. அட்வைஸுக்கு தேங்க்ஸ் சூர்யா. இன்னும் உன்கிட்டே நான் ரசிச்ச பழைய சிறப்பம்சங்கள் எல்லாமே மாறாம அப்படியே இருக்கு!

    திகைப்போடு திடுக்கிடலும் சேர, விரல்கள் ரிஸீவரை இறுக்கப்படுத்தியது.

    என் குரல் தெரியல்லே…?

    சூர்யா யோசிப்பில் இறங்கின மறு விநாடியே எதிர்முனை சொன்னது.

    நான் ரதீஷ்… சூர்யா…!

    ர… தீ…ஷ்…?

    சட்டென ஞாபகம் சிலிர்த்துக்கொண்டது. பழைய நினைவுகள் ஸ்லோமோஷினில் பின்னோக்கி நழுவியது.

    2

    ……பாம்ப்…ப்..

    ஹாரன் ஓசை கேட்டதுமே, கை நிறைய புத்தங்களை மார்போடணைத்து நடந்து வந்த சூர்யா. புடவையின் பால்ஸ் சரசரக்க நடையில் வேகம் கொடுத்தாள்.

    ஐம்பதடி தூரத்தில் தெரிந்த மெயின் சாலையில் அலுமினிய மினுமினுப்போடு டவுன் பஸ் பதினாலு. பஸ்ஸின் அருகாமைக்கு வரவர கொஞ்சம் ஓட்டத்தையும் கலந்து.. பளபளத்த கம்பியை அவசரமாய்ப் பற்றி காலைப்

    Enjoying the preview?
    Page 1 of 1