Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ainthaam Pirai
Ainthaam Pirai
Ainthaam Pirai
Ebook112 pages49 minutes

Ainthaam Pirai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403573
Ainthaam Pirai

Read more from Rajesh Kumar

Related to Ainthaam Pirai

Related ebooks

Related categories

Reviews for Ainthaam Pirai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ainthaam Pirai - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    ஐந்தாம் பிறை

    Ainthaam Pirai

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    சாய்பிரசாத் தன்னுடைய லாப்ரட்ரிக்குள் லுங்கி பனியனோடு உட்கார்ந்து மேஜையின்மேல் பரப்பி வைக்கப் பட்டிருந்த அந்த பழைய ஓலைச் சுவடிகளைப் புரட்டி கையில் வைத்து இருந்த லென்ஸ் வழியாக உன்னிப்பாய்ப் பார்த்து படித்துக் கொண்டிருந்தபோது அவருடைய வாக்கி டாக்கி கூப்பிட்டது.

    எடுத்து காதுக்குப் பொருத்த, மறுமுனையில் அவருடைய பர்சனல் செக்ரட்ரி மந்த்ரா பேசினாள்.

    ஸார்...! ஜூபிடர் டி.வி. பீப்பிள் வந்துட்டாங்க.

    டி.வி. பீப்பிளா...? அவங்க எதுக்கு வந்திருக்காங்க...?

    என்ன ஸார் மறந்துட்டீங்களா...? ஜூபிடர் டி.வி.க்கு நீங்க இன்னிக்கு ஒரு எக்ஸ்க்ளூஸிவ் பேட்டி கொடுக்க வேண்டிய நாள்...

    அப்படியா...?

    என்ன ஸார் அப்படியான்னு சாவகாசமா கேட்கறீங்க...? இது போன மாசமே ஃபிக்ஸ் பண்ணின அப்பாய்ண்ட்மென்ட். காலையில கூட உங்களுக்கு ரிமைண்ட் பண்ணினேனே...?

    ஓ! ஸாரி... மந்த்ரா ... மறந்துட்டேன்...

    டி.வி. பீப்பிள் வந்து வெயிட் பண்ணிட்டிருக்காங்க ஸார்...

    மொத்தம் எத்தனை பேர்?

    அஞ்சு பேர்...

    எதுக்கு மந்த்ரா... இந்த பேட்டியெல்லாம்...? வேஸ்ட் ஆப் டைம்... அவாய்ட் பண்ணியிருக்கலாமே? சாய்பிரசாத் 'உச்' கொட்டினார்.

    இனிமே முடியாது ஸார்... டேட் ஃபிக்ஸ் பண்ணி அப்பாயிண்ட்மென்ட் கொடுத்துட்டோம். டி.வி. பீப்பிளும் ஏதோ அவுட்டோர் ஷூட்டிங்குக்குப் புறப்பட்டு வர்ற மாதிரி வந்துட்டாங்க... தே ஆர் வெயிட்டிங் ஃபார் யூ...

    பேட்டி எடுத்து முடிய எவ்வளவு நேரமாகும்?

    எப்படியும் ஒரு மணி நேரமாயிடும் ஸார்...

    க்ரிமினல் வேஸ்ட்...! அடுத்த வாரம் க்ரிஸ்டல் எக்ஸிபிஷன் வேற இருக்கு... அதுக்கு வேண்டிய பிரிப்ரேஷனை இன்னும் ஆரம்பிக்கவேயில்லை... இந்த பேட்டியெல்லாம் எதுக்கும்மா...? ஏதாவது சொல்லி அவங்களை பேக்-அப் பண்ண முடியாதா...?

    ஸாரி ஸார்..! ஜூபிடர் டி.வி... சாதாரண டி.வி. சானல் கிடையாது. வோர்ல்ட் பூராவும் நெட்வொர்க் இருக்கு... பேட்டி எடுக்கிறதுக்காக வீடு தேடி வந்த பிறகு... அதுவும் நாம அப்பாய்ண்ட்மென்ட் குடுத்துட்டு இப்ப வேண்டாம்ன்னு சொன்னா நல்லாயிருக்காது...

    ஒரு மணி நேரத்துக்கு மேல் லேட்டாயிடாதே...?

    ஆகாது... ஸார்... நான் அவங்ககிட்ட சொல்லிடறேன்.

    "சரி... நான் வர்றேன்...! அவங்களுக்கு ஏதாவது ட்ரிங்க்ஸ் கொடு...

    கொடுத்தாச்சு ஸார்... காப்பி சாப்பிட்டுகிட்டு இருக்காங்க...

    சாய்பிரசாத் பார்த்துக் கொண்டிருந்த ஓலைச் சுவடிகளை தள்ளி வைத்துவிட்டு எழுந்தார். லேபையொட்டியிருந்த குளியலறைக்குள் நுழைந்தார். குளித்து ஃப்ரெஷ்ஷாக ஓவர் கோட்டுக்குள் நுழைந்து கண்ணாடிக்கு முன் நின்றவர் முடி கொட்டியிருந்த மண்டையில் சிலும்பிக் கொண்டிருந்த ரோம இழைகளை சீப்பால் ஜாக்ரதையாக சீவி படிய வைத்தார். கொஞ்சம்போல் செண்ட்டை அக்குளில் பீய்ச்சிக் கொண்டு வெளியே வந்தார். இரண்டு மாடி வராந்தாக்களைக் கடந்து க்ரௌண்ட் ஃப்ளோரில் இருந்த ஹாலுக்கு வர மூன்று நிமிஷ நேரம் பிடித்தது. ஹாலில் டி.வி. யூனிட்காமிராக்களோடு காத்துக் கொண்டிருந்தது. மந்த்ரா எதிர்கொண்டாள்.

    வாங்க ஸார்...

    சோபாக்களில் உட்கார்ந்திருந்த டி.வி. யூனிட்டைச் சேர்ந்த அந்த ஐந்து பேரும் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள்.

    ஐந்து பேர்களில் ஒருத்தி பெண். அழகாய் - சினிமா ஹீரோயின் மாதிரி தோற்றம் காட்டினாள். அழகான பல் வரிசையைக் காட்டி புன்னகைத்துக் கொண்டே சாய் பிரசாத்தை நெருங்கினாள்.

    ஸார்...! என் பேர் விஜயலட்சுமி... ஜூபிடர் டி.வி.யில் காம்பியரர் ஒர்க் பண்றேன். இன்னிக்கு நான்தான் உங்களைப் பேட்டி எடுக்கப் போறேன்... இவங்க காமிராமென். பாபு அண்ட் ஷ்யாம். அவங்க லைட் மென் ராக்கேஷ் அண்ட் அஹ்மது...

    சாய்பிரசாத் விஜயலட்சுமியைப் பார்த்து புன்னகைத்தார்.

    "ஒரு சினிமா நடிகையை பேட்டி எடுத்து ஒளிபரப்பினா அதைப் பார்க்க லட்சக் கணக்குல வ்யூவர்ஸ் இருப்பாங்க. இந்த அறுபது வயதான ரிடையர்ட் ஆர்க்கியாலஜிஸ்ட்கிட்டே பேட்டி எடுத்து ஒளிபரப்பினா யார் பார்ப்பாங்க... டி.வி. ஸ்க்ரீன்ல என்னோட முகத்தை பார்த்ததுமே ரிமோட் கண்ட்ரோலில் இருக்கிற பட்டனைத் தட்டி வேற சானலுக்குப்

    போயிடுவாங்க."

    யூ… ஆர் ராங்க் ஸார்... ஜூபிடர் டி. வி. வ்யூவர்ஸ் எப்பவுமே வித்தியாசமான பேட்டிகளை ரசிக்கிற ரகம். இப்பல்லாம் நடிகைகளின் பேட்டிகளை யாரும் விரும்பிப் பார்க்கிறது கிடையாது. நாங்களும் நடிகைகளை விட்டுவிட்டு வெவ்வேறு துறையில் இருக்கிற வி.ஐ.பி.க்களை பேட்டி எடுத்து ஒளிபரப்பிட்டு வர்றோம். 'வித்தியாசமான முகங்கள்' என்கிற பெயரில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சாயந்தரம் ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரைக்கும் டெலிகாஸ்ட் பண்ணிட்டு வர்றோம். நீங்க பார்க்கிறது இல்லையா ஸார்?

    வீட்ல ரெண்டு டி.வி. இருக்கு. டிஷ் ஆண்ட்டெனாகனெக்ஷனும் இருக்கு…ஆனா டி.வி. பார்க்கத்தான் நேரம் இல்லை... என்னதலைப்பு சொன்னேம்மா... வித்தியாசமான முகங்களா?

    ஆமா ஸார்...

    "சன் டி.வி.யில் வர்ற 'வணக்கம்

    Enjoying the preview?
    Page 1 of 1