Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vibareethathin Vilai Vidhya
Vibareethathin Vilai Vidhya
Vibareethathin Vilai Vidhya
Ebook213 pages1 hour

Vibareethathin Vilai Vidhya

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

வாழ்க்கை பயணத்தில் இளைமை பருவத்தின் நாம் விளையாட்டாய் போடும் சுருக்குகள் அச்சமயம் சுவாரஸ்யத்தைக் கொடுத்தாலும் கால ஓட்டத்தில் சூழல் இறுக இறுக நாம் சற்றும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாய் மாறி நம் நிம்மதியை, சந்தோஷத்தை, எதிர்காலத்தைக் காவு கேட்க்கும்.

மனோகரின் இளமைக்காலக் காதல், தொழில் வகையில் தெய்வநாயகத்துடனான மோதல், அவனது அன்பு மனைவி வித்யாவின் விபரீதமான குறும்புகள் ஆகிய சுறுக்குகள் எப்படி ஒரே புள்ளியில் இறுகி மனோகரின் வாழ்கையைப் புரட்டிப்போடும் மர்ம முடிச்சாய் மாறுகிறது என்பதுதான் இக்கதையின் சிறப்பம்சம். தன் துப்பறியும் கதைகளின் விறுவிறுப்பான கதையம்சத்திற்காகப் பெயர்போன ப.கோ.பி எப்படி அந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறார் என்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது.

Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580100905038
Vibareethathin Vilai Vidhya

Read more from Pattukottai Prabakar

Related to Vibareethathin Vilai Vidhya

Related ebooks

Related categories

Reviews for Vibareethathin Vilai Vidhya

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vibareethathin Vilai Vidhya - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    விபரீதத்தின் விலை வித்யா

    Vibareethathin Vilai Vidhya

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    மேற்கில் ஜுரம் குறைந்த சூரியன். ரப்பர் பந்துகளாய்த் துள்ளும் கடல் அலைகள். அவற்றின் ஈரமான செய்தியைச் சுமந்து திரியும் சமதர்ம சிந்தனை கொண்ட தென்றல் என்னும் தூதுவன் மற்றும் ஒரு சென்னையின் உல்லாச மாலையை அர்த்தமுள்ளதாக அமைக்கத் துடித்துப் புறப்பட்ட மக்கள். அவர்களை ஏந்தின வாகனங்களின் விர்விர், விர்ர்! சத்தம் சைதாப்பேட்டை அண்ணா சாலை அருகில்....

    "மனோ பாலிதீன் இண்டஸ்ட்ரீஸ்' காம்பவுண்ட் சுவர் கரை அமைத்த நீள செவ்வகத்தின் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த மூன்று கட்டிடங்கள் தவிர, இரண்டாவது மாடிக்கான முஸ்தீபுகளுடன் புதிய அலுவலகக் கட்டிடத்தின் போர்ட்டிகோவில் தந்த நிற அம்பாசிடர் மவுனமாகக் காத்திருந்தது.

    டிரைவர் சற்றுத் தள்ளி மர நிழலில் அமர்ந்து மங்கின வெளிச்சத்தில் கண்களைக் குறுக்கி சுகந்தியைக் கொன்றவன் யார் என்ற கேள்வி மண்டையைச் சுரண்டப் படுத்துக் கொண்டிருந்தான்.

    உள்ளே ஒரே ஒரு நீளமான ஹால். பத்துப் பனிரெண்டு மேஜைகள், நாற்காலிகள். இரண்டு மேஜைகளில் டைப்ரைட்டர்கள். ஒரு மேஜை மேல் டெலிபோன் மற்றும் இன்டர்காம்.

    ஒரே ஒரு நோஞ்சான் ஆசாமி விதியே என்று அந்தப் பக்கம், இந்தப் பக்கம் பார்க்காமல் தங்கை கல்யாண கடன் அடைப்பு, பெண்டாட்டிக்கு ஷிஃபான் சேலை, சொந்தமாக ஒரு மொபட் வண்டி, பள்ளிக்கூட சுற்றுலாவில் மகனின் பங்கேற்பு என்கிற லட்சியங்களுடன் ஓவர் டைமில் டைப் செய்து கொண்டிருந்தான்.

    ஹாலை ஒட்டி ஒரு தனி அறை. தனியறைக்கு ஒற்றைக்கதவு. கதவுக்கு நடுவில் ஒரு சதுரக் கண்ணாடி பதிப்பு. அந்தப் பக்கத்தில் இருந்து எல்லோரும் அரட்டை அடிக்காமல் வேலை பார்க்கிறார்களா என்று பார்க்க இந்தப் பக்கத்தில் இருந்து முதலாளி அறையில் இருக்கிறாரா என்றும் பார்க்க.

    தற்சமயம் முதலாளி ஆகிய மனோகர் அறைக்குள் இருந்த பாத்ரூமில் முகம் கழுவித் துடைத்து, கண்ணாடிப் பார்த்து தலைசீவிக் கொண்டு அறைக்குள் வந்தான்.

    அவன் புறப்பட்டதும், அவனுடையச் சிறிய சூட்கேஸை எடுத்துக் கொண்டு வந்து காரில் வைப்பதற்காகக் காத்திருந்த பியூன் தன் கையின் விரல்களை மீண்டும், மீண்டும் எண்ணிச் சரிபார்த்துக் கொண்டிருந்தான்.

    மனோகருக்கு வயது முப்பத்தி ஒன்று. மிக லேசாக தொந்தியின் அறிகுறி. புஸு புஸு என்று சீப்புக்கு அடிமையாகாதச் கேசம். தீர்க்கமான நாசி. மீசையும் புருவங்களும் மழித்து ஒரு சவுரி செய்யலாம் போல அடர்த்தி. தாடை மத்தியில் ஆஸ்ட்ரேயின் இருப்பதைப் போன்ற லேசான பள்ளம். சிகரெட் சுமந்து சுமந்து கெட்டியாகிப் போன உதடுகள். அவற்றின் மேல் ஒரு நாளின் ஆயிரத்தி நானூற்றி நாற்பது நிமிடங்களும் மாறாத புன்சிரிப்பு.

    பிரவுன் நிறத்தில் ஸஃபாரி உடை அணிந்திருந்த மனோகர் அவசரமாக மணி பார்த்தான். 5.20. புறப்பட வேண்டும். வீட்டில் வித்யா தவிப்புடன் காத்திருப்பாள் ரிசர்வ் செய்த சினிமா டிக்கெட்டுகளோடு.

    வித்யா - கதைத் தலைப்பில் உரிமையாய் அமர்ந்திருக்கும் அதே வித்யா. மனோகரின் நான்கு மாத புத்தம் புது மனைவி. இளமை சிம்மாசனமிட்டு அரசோட்சும்... வர்ணிக்க நேரமில்லை. சினிமாவுக்கு நேரமாகி விட்டது.

    ஃபேனை அணைச்சிடுப்பா என்ற மனோகர் கழற்றி வைத்திருந்த ஷூவை அணிந்து கொண்டபோது, கதவைத்தட்டி விட்டு உள்ளே வந்தார்கள் யூனிஃபார்ம் அணிந்த எட்டு தொழிலாளர்கள்.

    என்ன எல்லாரும் கூட்டமா வந்திருக்கீங்க? வீட்டுக்குப் போகலை?

    வந்து ஐயாகிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசலாம்னு வந்தோம்.

    கைக் கடிகாரத்தை பார்த்துக்கொண்டு, என்ன சொல்லுங்க.

    அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

    "கண்ணப்பா, சொல்லேண்டா.'

    கார்த்தி நீயே சொல்லு.

    வெங்கட்தான் தெளிவா சொல்வான்.

    யாராச்சும் ஒருத்தர் சொல்லுங்களேன்.

    அய்யா அது வந்து நீங்க தப்பா நினைக்கக்கூடாது. நீங்க எங்களுக்கு எல்லா சலுகைகளும் தர்றீங்க. கேட்காமலேயே எங்க தேவைகளை பூர்த்தி செய்றீங்க. ஆனா...

    மனோகர் யோசித்தான், ஏதோ பெரிய விஷயமா வந்திருக்கிறார்கள், உடனே பேசி அனுப்பிவிட முடியாது. பேசி அனுப்பி விட்டு பிறகு வீட்டிற்குப் போய் தியேட்டருக்குப் போய் சாத்தியமில்லை. நேரமாகிவிடும்.

    ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டு போனை எடுத்து தன் வீட்டு எண்ணைச் சுற்றி, 'ஹலோ வித்யாவா? வந்து... கோவிச்சுக்காதே. இங்கே தொழிலாளர்களோடக் கொஞ்சம் முக்கியமாய்ப் பேசிக்கிட்டிருக்கேன். நான் வர லேட்டாயிடும். நாளைக்குப் போகலாம். என்ன? என்றான்.

    காலையில் நான் கேட்டதும், ரெடியா இரு. போகலாம்னு மறுப்பே சொல்லாம உடனே ஒத்துக்கிட்டப்பவே எனக்கு ஆச்சர்யம்தான்.

    ஸாரி வித்யா. நிச்சயமா நாளைக்கு...

    ஓடற தண்ணியிலதான் எழுதணும் உங்க பேச்சை.

    சிரித்து விட்டு போனை வைத்துவிட்டு, ம்... சொல்லுங்க, என்ன? என்றான் மனோகர்.

    மொத்தம் ஏழு மிஷினுக்கும் சேர்த்து முப்பத்தி ஏழு பேர் வேலை செய்றோம்.

    ஆமாம்

    எங்களுக்குள்ளே ஒரு யூனியன் இருந்தாத் தேவலைன்னு அபிப்பிராயப்படறோம்

    அப்படியா? அவசியம்னு நினைச்சா ஆரம்பிங்க. எனக்கு ஒண்ணும் மறுப்பில்லை. ஆனா என்னை பொறுத்த வரைக்கும் நான் உழைப்பை உணர்ந்தவன். அதோட மதிப்பு தெரிஞ்சவன். அப்பா என்கிட்டே இண்டஸ்ட்ரியை ஒப்படைச்சிட்டு இறந்தப்போ ஒரே ஒரு மெஷினும், ஏராளமா கடனும் இருந்திச்சி. அந்த நிலைமை எல்லாம் மாறி இன்னைக்கு ஓரளவு வளர்ந்து வசதியா இருக்கேன்னா அதிலே என் தனி முயற்சி மட்டும் இல்ல. உங்க அத்தனை பேரோட உண்மையான உழைப்பும் இருக்கு. அரசாங்க விதிப்படி முறையா நடந்துக்கிட்டு வர்றேன் நான். உங்களுக்கு இன்னும் ஏதாச்சும் குறைகள் இருந்தா யார் வேணாலும், எப்ப வேணாலும் சொல்லலாம். நியாயமானதா இருந்தா அவசியம் செயல்படுத்துவேன். உங்க குறைகளைச் சொல்றதுக்காக ஒரு யூனியன் அமைக்கணும்னு நினைச்சா, அது தேவையில்லையிங்கறது என் கருத்து.

    அய்யா, நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை. பாதிபேர் உங்க அப்பா காலத்திலேர்ந்து வேலை பார்க்கிறோம். ஆனா புதுசா சேர்ந்த சில பேர் யூனியன் ஒண்ணு இருக்கணும்னு விரும்பறாங்க.

    மனோகர் எதையோ சொல்ல வாயெடுத்தபோது, டெலிபோன் மணி ஒலித்தது.

    ஹலோ, மனோகர் ஹியர்.

    வணக்கம் சார் என்றது ஒரு கரகரப்பான ஆண் குரல்.

    வணக்கம்

    நான் வெற்றிச் செல்வன். வருமான வரி அதிகாரி. உங்க வீட்லேர்ந்து பேசறேன். உங்க வீட்டை சோதனை செய்யறதுக்காக ஒரு குழுவா வந்திருக்கோம். நீங்க உடனே புறப்பட்டு வர்றீங்களா? நீங்க வர்ற வரைக்கும் காத்திருக்கோம்.

    மனோகருக்கு உடனே வியர்த்தது.

    இ... தோ வந்துட்டேன் சார் என்று போனை வைத்துவிட்டு பதட்டமாக நாற்காலியை விட்டு எழுந்தான்.

    தொழிலாளர்களைப் பார்த்து நான் அவசரமா வீட்டுக்குப் போயாக வேண்டியிருக்கு. இந்த விஷயத்தை நாளைக்குப் பேசி முடிவு செய்யலாம், வர்றேன்" என்றான்.

    வேகமாக வெளியேறி வாசலுக்கு வருவதைப் பார்த்த டிரைவர் கிட்டத்தட்ட ஓடியே வந்து கதவைத் திறந்து விட்டான்.

    கொஞ்சம் வேகமாப் போ ராஜு.

    கார் புறப்பட்டு, வாச்மேனின் துரிதமான செயல்பாடுகளில் கதவு திறக்கப்பட்டதும் சாலைக்கு வந்து நந்தனம் நோக்கி விரைந்தது.

    மனோகருக்குள் சின்ன பயப்பந்து துள்ளிக் கொண்டிருந்தது.

    வருமான வரிச் சோதனையைச் சந்திப்பது இதுதான் வாழ்க்கையில் முதல் முறை. என்னதான் நேர்மையாக அரசாங்கத்தை ஏய்க்காமல் வரிகள் கட்டினாலும், ஓரளவு மறைக்காமல் இருக்க முடியாது. கறுப்பு பணம் என்று தனியாகக் கொஞ்சம் ஒதுக்காமல் தவிர்க்க முடியாது.

    மனோகரின் கார் நந்தனத்தில் இருந்த தனியான நவீன ரக வீட்டை நெருங்க, நெருங்க அவனது படபடப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது.

    கார் போர்டிகோவில் நின்று, மனோகர் அவசரமாக இறங்கி உள்ளே வந்தபோது, ஹாலின் ஷோபாவில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த வித்யா நிமிர்ந்து பார்த்து பரவசமானாள்.

    வர லேட்டாகும்னு சொன்னீங்க. வந்துட்டீங்களே?

    வித்யா அவங்க எங்கே? என்றான் புரியாதவனாய்.

    அவங்கன்னா? யாரு?

    இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்டலேந்து யாரும் வரலை இப்போ?

    "இப்போ என்னாச்சு உங்களுக்கு? கனவு ஏதும் கண்டீங்களா?

    மனோகருக்கு ஆச்சரியமாய் இருந்தது. சற்று முன் தானே பேசினேன்? என்ன இது? பிறகு என்னிடம் பேசியது யார்? இதென்ன குழப்பம்?

    இல்லை வித்யா இப்போ வெற்றிச் செல்வன்னு ஒரு வருமான வரி அதிகாரி எனக்கு போன் செஞ்சார். நம்ம வீட்டுக்கு சோதனைக்காக வந்திருக்கிறதா, இங்கே இருந்துதான் பேசறதா சொன்னார். என்னை உடனே புறப்பட்டு வரச் சொன்னார்.

    நாலரை மணிக்கெல்லாம் நான் மேக்கப் செஞ்சிகிட்டு தயாராயிட்டேன். இங்கேயேதான் உட்கார்ந்து புத்தகம் படிச்சிக்கிட்டிருக்கேன். யாருமே வரலையேங்க.

    அப்படியா? ஆச்சரியமா இருக்கு.

    சரிவந்தது வந்துட்டீங்க. இன்னும் நேரம் இருக்கு. சினிமாவுக்குப் போகலாமா? இல்லை நீங்க மறுபடி ஆபீஸ் போகனுமா?

    மனோகர் நேரம் பார்த்து, சரி, திட்டம் போட்ட மாதிரியே சினிமாவுக்குப் போய்ட்டு வந்துடலாம் என்றான்.

    வீட்டோடு இருக்கும் வேலைக்காரி சொர்ணத்தை அழைத்து வீட்டை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டுப் புறப்பட்ட வித்யாவைப் பகுதி, பகுதியாக வர்ணித்தல் மாற்றான் மனைவி என்ற காரணத்தால் தப்பு.

    வித்யா வானத்தில் இருந்து மேகத்தைக் கிழித்துக் கொண்டு இறங்கின தேவதை என்று சொல்ல முடியாது. அவளின் அழகுக்காக இந்த உலகத்தையேப் பத்திரம் எழுதி அவள் காலடியில் வைக்கலாம் என்று மிகையாகக் கதைக்க முடியாது. ஆனால் கவரும் முகம், வாளிப்பான உடல். திருமணமானவர்கள் பார்க்கும்போது தத்தம் பெண்டாட்டிகளுக்கு ஒருசில வினாடிகள் துரோகம் நினைக்க வைக்கும் அழகு.

    காரில் தியேட்டர் வந்து இறங்கினதும் சாவியை வாங்கிக் கொண்டு டிரைவரை வீட்டுக்குப் போகச் சொன்னான் மனோகர். இருவரும் உள்ளே வந்து தங்கள் இருக்கைகளில் அமர்ந்தபோது திரையில் ஒரு பெண் முழு சோப்பும் கரைத்து, குளித்துவிட்டு காதலனின் முதல் முத்தத்திற்குப் போல உடம்பெல்லாம் சிலிர்த்துக் கொண்டாள். அடுத்த விளம்பரத்தில் மற்றொரு பெண், மற்றொரு சோப்.

    என்னங்க என்றாள் வித்யா.

    ம்...?

    ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க? பேசவே இல்லையே.

    நான் அந்த போனையே நினைச்சிக்கிட்டிருக்கேன் வித்யா.

    சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே.

    என்ன?

    ரிசீவர் மேலே கர்ச்சிப் போட்டு குரலை மாத்தி அப்படிப் பேசினது நான்தான். அப்பதான் நீங்க உடனே புறப்பட்டு வருவீங்கன்னு...

    என்னது? என்று ஆச்சரியமாய் வினவிய மனோகர் சுறு சுறுவென்று அடுத்த வினாடியே ஆத்திரமானான். உள்ளே உற்பத்தியான கோபம் மூர்க்கமாக உலவி, முட்டி மோதி உதடுகளின் வழியே வெளியேறியது.

    அறிவு இருக்கா உனக்கு? வா வெளில.

    மனோகர் உடனே எழுந்து தன் வரிசையில் இருந்து வெளியேறி தியேட்டருக்கு வெளியே தன் காருக்கு விரைந்தான். பதட்டமாகத் தொடர்ந்தாள் வித்யா.

    டிரைவிங் ஆசனத்தில் அமர்ந்து காத்திருந்த மனோகர்,

    Enjoying the preview?
    Page 1 of 1