Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aabathu Ingey Aarambam
Aabathu Ingey Aarambam
Aabathu Ingey Aarambam
Ebook172 pages1 hour

Aabathu Ingey Aarambam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100402927
Aabathu Ingey Aarambam

Read more from Rajesh Kumar

Related to Aabathu Ingey Aarambam

Related ebooks

Reviews for Aabathu Ingey Aarambam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aabathu Ingey Aarambam - Rajesh Kumar

    www.pustaka.co.in

    ஆபத்து இங்கே ஆரம்பம்

    Aabathu Inge Aarambam

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajeshkumar

    For other books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆபத்து இங்கே ஆரம்பம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    ஆபத்து இங்கே ஆரம்பம்

    1

    சூரியனைப் பிரசவிக்கும் முயற்சியில் பம்பாயின் கிழக்குத் திசை ரத்தமாகியிருந்தது.

    நட்சத்திரங்கள் கும்பல் கும்பலாய்ச் செத்துக் கொண்டிருக்க, மலபார் ஹில்சின் உயரமான கட்டடத் தலைகளில் நிர்மாணித்திருந்த விளம்பர நியான் எழுத்துக்கள் ஊதாவிலும் பச்சையிலும் இன்னமும் உயிரோடு இருந்தது.

    நீலேஷ் கடற்கரையையொட்டிப் போடப்பட்டிருந்த சிவப்பு நிற பேவ்மெண்ட்டில் வியர்க்க வியர்க்க நடந்தான். காலை நேர வாக்கிங்கில் வெள்ளை நிற ஸ்கர்ட்டும், பனியனும் சொற்ப வியர்வையில் ஈரமாகியிருக்க, அனுடைய சிவந்த உடம்பு, சூரியனின் காரட் நிரக் கதிர்களில் மினுமினுப்பாய்த் தெரிந்தது

    ஹலோ நீலேஷ், குட்மார்னிங்.

    கைகளை வீசி வீசி நடந்து கொண்டிருந்த நீலேஷ்ம் தனக்குப் பின்புறமாய் எழுந்த குரல் கேட்டுத் திரும்பினான்.

    ஒரு பெரிய சைஸ் பூசணிக்காயை வயிற்றோடு சேர்த்துக் கட்டிக் கொண்ட மாதிரி தொப்பையோடு ஓடி வந்து கொண்டிருந்த மல்ஹோத்ரா நின்றார்.

    நீலேஷ் தங்கியிருக்கும் 'ஹோட்டல் ஹெவன்ஸ் கேட்'டின் மானேஜர் அவர். பெரிதாய் மூச்சிரைத்துக் கொண்டே நீலேஷ் தோளைப் பற்றினார்.

    உன்னைப் பார்க்கிறதுக்காக ரொம்ப நேரமா ஒருத்தர் நம்ம ஹோட்டல் ரிசப்ஷன்ல காத்திட்டிருக்கார்.

    என்னைப் பார்க்கவா…?

    உன்னைப் பார்க்கத்தான்.

    நீலேஷ் நெற்றியில் சின்னதாக ஆச்சரியப்பட்டான்.

    வந்தவர் எப்படியிருந்தார்…?

    ஏறக்குறைய என் வயசு…!

    நீலேஷ் ஸ்கர்ட்டின் பாக்கெட்டில் இருந்த கர்ச்சீப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டான். கேட் வே ஆப் இண்டியாவுக்கு எதிரே பென்சிலைச் சீவி நிற்க வைத்த மாதிரி தெரிந்த ஹோட்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

    வரவேற்பறை சோபாவில் உட்கார்ந்திருந்தவர் எழுந்தார்.

    நீலேஷ் அவரை ஏறிட்டான்.

    ஐம்பது வயதைத் தொட்டுக் கொண்டிருந்தார். எழுபத்தைந்து சதவீதம் வழுக்கைத் தலை.

    ஒழுங்கான பல் வரிசையில் மெலிதாய்ச் சிரித்தார் அவர்.

    ஐயாம் வித்யாசங்கர்… என்றார் கனமான குரலில்.

    நீலேஷ் கையை நீட்டி அவருடைய கையைப் பற்றிக்கொண்டு, ப்ளீஸ்ட் மீட் யூ. பை த பை யூ ஆர் கம்மிங் ஃப்ரம்…? - மெல்லிய குரலில் கேட்டான்.

    வித்யாசங்கர் தன் ஆட்காட்டி விரலாலும் நடு விரலாலும் மீசையை ஒரு முறை வாரிக் கொண்டு சிரித்தார். பட்டென்று தமிழில் பேச ஆரம்பித்தார்.

    மிஸ்டர் நீலேஷ், உங்ககிட்டே நான் ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் வந்திருக்கேன். உங்க ரூம்ல போய்ப் பேசலாமா…?

    ஷ்யூர்… ஷ்யூர்…

    லிஃப்ட் பையன் லிஃப்ட்டின் கம்பிக் கதவைத் தள்ளி வழி ஏற்படுத்திக் கொடுக்க, இருவரும் லிஃப்ட்டுக்குள் நுழைந்தார்கள்.

    கதவைச் சாத்திக் கொண்டு பையன் தட்டிவிட, லிஃப்ட் ஊஞ்சலாய் மேலே ஏறியது

    பதினைந்து விநாடிகளில் ஐந்தாவது ஃப்ளோரைத் தொட்டார்கள்.

    நீங்க எந்தக் கம்பெனியிலே இருக்கீங்க நீலேஷ்…?

    கார்டிகா வெகின்ஸ்.

    அதுல என்னவாயிருக்கீங்க…?

    எஸ்.ஈ.யாக இருக்கேன்.

    சாலரி…?

    நாற்பது சொச்சம்.

    '545' பித்தளை எண்களில் சிரித்த அறைக்கு முன்னால் நின்று பூட்டைப் பிளந்து கதவைத் தள்ளினான் நீலேஷ்.

    வாங்க மிஸ்டர் வித்யாசங்கர்.

    வந்தவர்; தன் கோட் பாக்கெட்டுக்குள் நுழைத்து ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை நீலேஷிடம் நீட்டினார்.

    இந்தப் போட்டோவைப் பாருங்க நீலேஷ்.

    நீலேஷ் வாங்கிப் பார்த்தான்.

    உடம்பின் சகல செல்களிலும் அதிர்ந்தான்.

    2

    வித்யாசங்கர் இடது கையால் மீசையை வாரிக் கொண்டு மெலிதாய்ச் சிரித்தார்.

    என்ன நீலேஷ், அதிர்ந்து போய் உட்கார்ந்துட்டீங்க…?

    நீலேஷ் இன்னமும் தன் கையிலிருந்த போட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

    அதிர்ச்சியான அந்த விநாடிகள் கழிந்ததும், நடுங்கும் குரலில் கேட்டான்.

    வித்யாசங்கர், யார் இந்த யூத்…? அசப்பில் என் மாதிரியே இருக்கானே…! தலை முடியைச் சீவியிருக்கிற விதம்தான் கொஞ்சம் டிஃபரன்ட்டாய் இருக்கு.

    யூ ஆர் கரெக்ட் நீலேஷ். இந்த போட்டோவில் இருக்கிற இளைஞன் தொண்ணூறு சதவீதம் உங்க சாய்லாத்தான் இருக்கான். இவன் பெயர் கமலகுமார். ஒரு குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்த பையன். டாக்டர் படிப்புப் படிச்சிருக்கான்.

    நீலேஷ் போட்டோவைப் பார்த்து மறுபடியும் ஆச்சரியப்பட்டான்.

    சினிமாவிலேதான் இப்படியெல்லாம் உருவ ஒற்றுமை வரும்னு நினைச்சிட்டிருந்தேன். பட், இன்னிக்குக் கண்கூடாப் பார்க்கிறேன். ரியலி இட் ஈஸ் த்ரில்லிங் ஒன். இந்தக் கமலகுமாரை நான் உடனடியா பார்க்கணும் மிஸ்டர் வித்யாசங்கர். இவன் இப்போ எங்கே இருக்கான்…?

    வித்யாசங்கர் ஒரு மெலிதான புன்னகையோடு வானத்தை நோக்கிக் கையைக் காட்டினார்.

    போயிட்டான். மூணு மாசத்துக்கு முன்னாடி ஸீமென் ஹாஸ்டல் ரோட்டில் ஸ்கூட்டரிலே வேகமாப் போய் ஒரு லாரிக்கு ரத்த அபிஷேகம் பண்ணி செந்தான்

    நீலேஷ் முகம் கறுத்தான்.

    ஓ…! ஹாரிபிள்…! என்று உதடுகளுக்குள் முனகிக்கொண்டான்.

    வித்யாசங்கர் தன் கோட்டின் இடது பக்கப் பையிலிருந்து ஓர் ஆங்கிலப் பத்திரிகையின் பேப்பர் கட்டிங்கை எடுத்தார்.

    இந்த மேட்ரிமோனியல் விளம்பரத்தைப் படிச்சுப் பாருங்க நீலேஷ்.

    அந்தப் பேப்பர் கட்டிங்கை ஆவலாய் வாங்கினான் நீலேஷ்.

    விளம்பரத்தைப் பார்த்தான்.

    விளம்பரத்தின் ஓரத்தில் சற்றுமுன் போட்டோவில் பார்த்த கமலகுமாரின் முகம் தெரிய, கீழ் வாசகங்கள் தெரிந்தன.

    இருபது வயது நிரம்பிய ஒரு அழகான பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. மாப்பிள்ளையின் முக்கிய யோக்யதாம்சம்

    Enjoying the preview?
    Page 1 of 1