Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Nizhalukkum Urakkamillai
En Nizhalukkum Urakkamillai
En Nizhalukkum Urakkamillai
Ebook97 pages34 minutes

En Nizhalukkum Urakkamillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
ISBN9781043466176
En Nizhalukkum Urakkamillai

Read more from Rajeshkumar

Related to En Nizhalukkum Urakkamillai

Related ebooks

Reviews for En Nizhalukkum Urakkamillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Nizhalukkum Urakkamillai - Rajeshkumar

    19

    1

    ஆபிஸின் பெரிய லெட்ஜரில் ஆழ்ந்திருந்த வைகுந்த்தை ஒரு ஜாங்கிரி குரல். கலைத்தது.

    எக்ஸ்க்யூஸ் மி...

    நிமிர்ந்தான் வைகுந்த்.

    மேஜைக்கு அப்பால் இறக்கை இல்லாத தேவதை மாதிரி அவள் நின்றிருந்தாள்.

    ரோஜா நிறத்தில் ப்ளெயின் ஸாரி உடுத்தியிருக்க படிய வாரப்பட்ட அடர்த்தியான கூந்தல். புருவ மையத்தில் இடப்பட்ட சிங்கார் பொட்டைத் தவிர வேறு மேக்கப் சிரத்தைகள் எதுவும் அவள் எடுத்துக் கொண்டிருக்கவில்லை. இருந்தாலும் அசர வைத்தாள். வேலை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஆபீஸ்க்கு தன் பங்குக்கு ஒரு எக்ஸ்ட்ரா வெளிச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

    அவளையே - இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த வைகுந்த் சுதாரிப்புக்கு வந்து எஸ்... என்று சொல்ல கிட்டத்தட்ட முப்பது விநாடிகள் பிடித்தது.

    அவள் மீண்டும் ஜாங்கிரி குரலைக் கொட்டினாள்...

    நான் இந்திரா அநாதை இல்லத்தில் இருந்து வர்றேன்... ஆபீஸ் கவர்கள் கொண்டு வந்திருக்கேன்... இங்கே மிஸ்டர் வைகுந்த்ங்கறது நீங்கதானே...?

    எஸ்! நீங்க இந்திரா இல்லத்திலிருந்து வர்றீங்களா... நான் யாரோ, என்னவோன்னு யோசனை பண்ணிட்டிருக்கேன்... வழக்கமா வேற ஒரு பொண்ணுதானே வரும்...?

    அவளுக்கு உடம்பு சரியில்லை. அதனாலதான் நான் வந்தேன். நான் இன்னிக்குதான் முதன்முதலா இந்த ஆபீஸ்க்கு வர்றேன்.

    உட்கார்ங்க.

    அவள் நாற்காலி நுனியில் அமர்ந்தாள்.

    வைகுந்த் பஸ்ஸரை அழுத்தினான்.

    பெஞ்ச்சில் உட்கார்ந்து பிடரியை சொறிந்து கொண்டிருந்த அட்டெண்டர் பையன் எழுந்து வந்தான்.

    ஸார்...?

    ஸ்டேஷனரி பால்ராஜை கூப்பிடு

    சரி ஸார்... தலையாட்டி விட்டு நகர்ந்தான்.

    வழக்கமா லதான்னு ஒரு பொண்ணு வரும்.

    ஆமா... அவளுக்குத்தான் உடம்பு சரியில்லை.

    என்னாச்சு?

    காய்ச்சல்.

    உங்க பேரு...

    என் பேர் மோகனா.

    நீங்க புதுசா அந்த இல்லத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கீங்களா...?

    வேலைக்கு சேர்றதா?

    கேட்டுவிட்டு மெலிதாய்ப் புன்னகைத்தாள் அந்த மோகனா. நாங்க எல்லோருமே அநாதைப் பெண்கள். எல்லாருமா சேர்ந்து உழைக்கறோம். இந்த மாதிரி ஆபீஸ் கவர்கள்... வீட்டு உபயோகப் பொருட்கள் எல்லாத்தையும் செய்யறோம். பகல் பொழுது பூராவும் ஆபீஸ் வீடுன்னு ஏறி செஞ்ச பொருட்களை விற்க முயற்சி பண்றோம்.

    இதில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

    ஏதோ கிடைக்கும்! இதில் கிடைக்கிற வருமானம் அநாதை இல்லத்தோட செலவுக்குப் போதாது. இந்திராம்மாதான் சொந்த பணத்திலிருந்து தர்றாங்க. பணம் ஒரு பெரிய பிரச்சனைதான். நாங்க எல்லாருமா சேர்ந்து ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அவங்க பாரத்தைக் குறைக்க முயற்சி பண்றோம். அவ்வளவுதான்.

    அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே - ஸ்டேஷனரி பால்ராஜ் தொப்பையைத் தள்ளிக் கொண்டு அங்கே வந்து நின்றார். சோடாப்புட்டிக் கண்ணாடிக்குள் உருண்ட விழிகள் பயமுறுத்தின.

    கூப்பிட்டிங்களா ஸார்?

    இந்திரா அநாதை இல்லத்திலிருந்து கவர் வந்திருக்கு.

    லதா வரலியா?

    வரலே ஸார் என்றாள் மோகனா.

    கவர் தீரப்போகுதுன்னு சொல்லி நாலு நாளாச்சு. சாவகாசமா இன்னிக்கு வர்றியே?

    வழக்கமா லதாதான் இங்கே வருவா. நான் வேற ஏரியா ஸார். அவளுக்கு உடம்புக்கு முடியாமப் போயிடுச்சு. அதனாலதான் டிலே. இந்த தடவை அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க ஸார்.

    பால்ராஜ்! சும்மா வம்படிச்சிட்டிருக்க வேண்டாம். அதான் கொண்டு வந்துட்டாங்களே. என்னென்ன கவர் வேணும்? கேட்டு வாங்கிக்க.

    பென்சிலால் காதைக் குடைந்து கொண்டே - மோகனாவிடம் அதிகாரக் குரலை செலுத்தினார் பால்ராஜ்

    ஆறுக்கு நாலு சைஸ்ல முந்நூறு கவர் எடுத்து வை. பதினொண்ணுக்கு நாலு சைஸ்ல ஆயிரம் கவர் வேணும். புக் சைஸ் கவர் கொண்டாந்திருக்கியா?

    கொண்டு வந்திருக்கேன் ஸார்.

    அதுல ஒரு ஐநூறு கவர் போடு.

    பால்ராஜ் சொல்லச் சொல்ல - தான் கொண்டு வந்திருந்த பெரிய ரெக்சின் பையிலிருந்து ரகம் வாரியாகக் கவர்களை எடுத்து வைத்தாள் மோகனா.

    அட்டெண்டர் பையனின் உதவியோடு கவர் பண்டல்களைத் தூக்கிக் கொண்டு செக்ஷனைத் தாண்டிச் சென்றார் பால்ராஜ்.

    மோகனா ரசீது புத்தகத்தை விரித்து - பால்பாயிண்ட் பேனாவை அதன் மேல் ஓட்டினாள். என்ன சைஸ் கவர்... எண்ணிக்கை எத்தனை? என்ன விலை? எல்லாம் நிரப்பி கூட்டுத் தொகையைக் கீழே எழுதி - வைகுந்திடம் நீட்டினாள்.

    This bill may be passed - என்று கிறுக்கி - கையெழுத்திட்டு சீல் வைத்துக் கொடுத்தான் வைகுந்த்.

    ரொம்ப தாங்க்ஸ் ஸார்.

    எழ முயன்றாள்.

    வைகுந்துக்கு ஏனோ அவளை இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் திரும்பத் திரும்ப தோன்றிக்

    Enjoying the preview?
    Page 1 of 1