Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

New Delhi 2001
New Delhi 2001
New Delhi 2001
Ebook153 pages53 minutes

New Delhi 2001

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
New Delhi 2001

Read more from Rajeshkumar

Related to New Delhi 2001

Related ebooks

Related categories

Reviews for New Delhi 2001

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    New Delhi 2001 - Rajeshkumar

    19

    1

    ஜனவரி 23.

    வருஷம் 2001. பனி பெய்யும் சாயந்தர வேளை.

    டெல்லி ரீகல் ஸ்கொயர்க்கு எதிரே இருந்த பாலிகஞ்ச் அண்டர் க்ரௌண்ட் ஷாப்பிங் மார்க்கெட்டுக்கு முன்பாக டாக்ஸியை நிறுத்தி இறங்கிக் கொண்ட விவேக்கும் ரூபலாவும் பேவ்மெண்டில் நடை போட்டார்கள்.

    என்னங்க...

    ம்...

    ஸ்வெட்டர் எடுத்து வந்திருக்கலாம். இது என்ன டெல்லியா...? இல்லை ப்ரிஜ்ஜா...? இந்தக் குளிர் குளிருது. அம்மாடி!

    விவேக் உள்ளங்கைகளைத் தேய்த்துக் கொண்டே ரூபலாவைப் புன்னகையோடு பார்த்தான்.

    இதுக்காகத்தான் நீ டெல்லிக்கு வராதே, உன்னோட அம்மா வீட்டுக்குப் போயிருன்னு சொன்னேன். நீ கேட்கலை. டெல்லியில எவ்வளவு குளிராயிருந்தாலும் சரி... அதைப்பத்தி எனக்கு கவலையே கிடையாதுன்னு சொன்னே...! இப்ப இங்கே வந்து இது டெல்லியா இல்ல ப்ரிஜ்ஜான்னு கேட்கறே...?

    இதுக்கு முந்தியெல்லாம் டெல்லி வந்திருக்கேனே. இப்படி ஒரு குளிர் இருந்ததே இல்லை என்னமோ அண்டார்டிகா பனிப் பிரதேசத்தில் நடந்து போற மாதிரி இருக்கு.

    உனக்கு இப்போ குளிரக்கூடாது. அவ்வளவு தானே?

    ஆமா...

    அதுக்கு ஒரே வழிதான் இருக்கு...

    என்ன வழி...?

    என் இடுப்புல கையைப் போட்டு கெட்டியா கட்டிப் பிடிச்சுக்க.

    அப்படி பிடிச்சுகிட்டா...?

    குளிர் ஓடிப்போயிடும்...

    தமிழ் சினிமா நிறைய பார்த்து பார்த்து கெட்டுப் போயிட்டீங்க... பேசாமே நடங்க...

    நீ எதுக்கும் மசியமாட்டியே. அங்க பாரு, எல்லாரும் எப்படி ஜோடி ஜோடியா போறாங்கன்னு. புருஷனோட இடுப்பைப் பிடிச்சுகிட்டா கூட தப்பா...?

    இந்த ரோட்டு ரொமான்ஸ் எல்லாம் நமக்கு வேண்டாம்.

    உனக்கு வயசாயிருச்சு ரூபி. அதான் இப்படி ரொமான்ஸ் விஷயத்துல பேக் அடிக்கிறே...

    என்ன சொன்னீங்க...? எனக்கு வயசு ஆயிடுச்சா...?

    ஆமா.

    உங்களுக்கு...?

    அய்யா என்னிக்குமே இளமைதான்! நித்ய மார்கண்டேயன்.

    அய்யே...! ரொம்பவும் பீத்திக்காதீங்க...!

    ரூபலா விவேக்கின் காதைப் பிடித்துத் திருகிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய சஃபாரி சர்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் மெலிதாய் ஒரு எலக்ட்ரானிக் இசை கொடுத்துக் கூப்பிட்டது.

    செல்போனை எடுத்து இடது காதுக்கு வைத்தான் விவேக்.

    ஹலோ...

    ........

    எஸ் ஸார், ஐயாம் விவேக்...!

    .......

    ஞாபகம் இருக்கிறது ஸார்| இரவு பத்து மணிக்குத்தானே...?

    .......

    வந்துவிடுவேன் ஸார். டெல்லிக்கு வந்ததே அந்தப் பணிக்காகத்தானே...?

    ......

    இப்போது நான் என் மனைவியோடு பாலிகஞ்ச் அண்டர் க்ரௌண்ட் ஷாப்பிங் காம்ப்ளக்ஸுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன், என் மனைவியின் ஹாபி வெளியூர்களுக்குப் போனால் ஷாப்பிங் செய்வதுதான்.

    ...............

    ஷாப்பிங் ஒரு மணிநேரத்தில் முடிந்துவிடும் ஸார். நான் சரியாய் பத்து மணிக்கெல்லாம் உங்களுக்கு முன்பாய் நின்றிருப்பேன்.

    .......

    எஸ் ஸார்...! பேசிவிட்டு செல்போனை அணைத்தான் விவேக்.

    ரூபலா கேட்டாள்.

    போன்ல யார்ங்க...?

    ஆர்.ஏ.எஃப். கமிஷனர்.

    ஆர்.ஏ.எஃப்ன்னா...?

    RAPID ACTION FORCE... தமிழ்ல சொல்லணும்ன்னா அதி விரைவுப் படை...

    பாலிகஞ்ச் அண்டர் க்ரௌண்ட் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் சுரங்கப் படிகளோடு வர, விவேக்கும் ரூபலாவும் இறங்கி நடந்தார்கள்.

    ஜனக்கூட்டம் உள்ளே அலைமோதியது.

    என்னங்க...

    ம்...

    நாம் டெல்லி மண்ணை மிதிச்சு ரெண்டு நாளாகப் போகுது...

    ஆமா...

    இப்பவாவது சொல்லுங்க... நீங்க டெல்லிக்கு என்ன காரியமா வந்திருக்கீங்க...?

    வெங்காயத்தை ஒட்டு மொத்தமா கொள்முதல் பண்ணி மெட்ராஸ் கொத்தவால் சாவடிக்குக் கொண்டு போய் வியாபாரம் பண்ணத்தான்...

    நான் சீரியஸா கேட்டுக்கிட்டு இருக்கேன்.

    ரூபி ஒரு விஷயம் சொன்னா உனக்கே ஆச்சர்யமாயிருக்கும்.

    என்ன...?

    'டெல்லி அழைப்பு எதுக்காகன்னு எனக்குத் தெரியாது. ஆனா ரெட் டாட்ஸ் மேட்டர்..."

    ரெட் டாட்ஸ் மேட்டரா...? அப்படின்னா என்ன அர்த்தம்...?

    ரெட் டாட்ஸ் மேட்டர் என்கிற வார்த்தை ஒரு கோட் வேர்ட் மாதிரி. ரெட் டாட்ஸ்ன்னா ரத்தத் துளிகள்ன்னு அர்த்தம். ரத்தத் துளிகள் சிந்தப் போகிற ஒரு சம்பவம் டெல்லியில் நடக்கலாம். அதைப் பத்திப் பேசி ஒரு முடிவு எடுக்கத்தான் எனக்கு இந்த அவசர அழைப்பு. மொத்தம் ஏழு பேர்க்கு மட்டுமே அழைப்பு. அதுல அடியேனும் ஒருத்தன்...

    ரூபலாவின் முகம் இப்போது மாறியிருந்தது. கண்களில் லேசாய் திகில்.

    என்னங்க... நீங்க சொல்றதை கேக்கும்போதே எனக்கு வயித்தைக் கலக்கற மாதிரி இருக்கு. ரத்தம் சிந்தற மாதிரி டெல்லியில் என்ன சம்பவம் நடக்கப் போகுது?

    தெரியாது. இன்னிக்கு ராத்திரி பத்து மணிக்கு ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் டிபார்ட்மெண்டைச் சேர்ந்த ஹை அபீஷியல்ஸோடு பேசிப் பார்த்தாத்தான் தெரியும்...

    நடந்து கொண்டிருந்த ரூபலா நின்று விட்டாள்.

    என்ன நின்னுட்டே...?

    வாங்க... ஹோட்டல் ரூமுக்கே போயிடலாம்.

    ஷாப்பிங்...?

    வேண்டாம்...

    ஏன்...?

    ஷாப்பிங் பண்ற 'மூடு' இப்போ இல்லை.

    பயந்துட்டியா...? இதுக்குத்தான் உன்கிட்ட எதையுமே சொல்றதில்லை.

    ரெட் டாட்ஸ் மேட்டர் என்னவாயிருக்கும்ன்னு போன நிமிஷத்தில் இருந்தே என்னோட இருதயம் எக்ஸ்ட்ராவா துடிக்க ஆரம்பிச்சிருச்சு... வாங்க, ஹோட்டல் ரூமுக்கு போயிடலாம். ரூபலா சொல்லிக் கொண்டே திரும்ப முயல, விவேக் அவளுடைய தோள் மேல் கையை வைத்தான்.

    ரூபி உடனடியா நாம் ஹோட்டல் ரூமுக்கு திரும்ப முடியாது.

    ஏன்?

    ஒரு பொண்ணு உன்னையும் என்னையும் கடந்த அரைமணி நேரமா ஃபாலோ பண்ணிட்டிருக்கா. இப்பக்கூட நமக்குப் பின்னாடி ஐம்பதடி தூரத்துல ஒரு ரெடிமேட் துணிக் கடைக்குப் பக்கத்துல ஏதோ பராக்குப் பார்க்கிற மாதிரி நின்னுட்டிருக்கா! நீ திரும்பிப் பார்த்துராத. அவ உசாராயிடுவா... டென்ஷன் படாம இயல்பா நட. இதே பாலிகஞ்ச் காம்ப்ளக்ஸ் கட்டிடத்துக்குள்ளேயே அவளை மடக்கிடலாம்.

    Enjoying the preview?
    Page 1 of 1