Uyir Veelchi
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsIrandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsSaagaavaram Rating: 4 out of 5 stars4/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Uchi Nila Rating: 0 out of 5 stars0 ratingsUn Naanum En Neeyum Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5
Related to Uyir Veelchi
Related ebooks
Maaya Hospital, Marupadiyum Iranthavan and Oru latsam Vinaadikal Rating: 2 out of 5 stars2/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Newyork Nila Rating: 0 out of 5 stars0 ratingsAinthaam Pirai Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Pournamigal Rating: 5 out of 5 stars5/5Veebareethaththirku Oru Visa! Rating: 5 out of 5 stars5/5Thirakkaatha Kathavugal! Rating: 5 out of 5 stars5/5Avan Aval Avargal Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Yethiri Rating: 0 out of 5 stars0 ratingsInbavin Irandavathu Nizhal Rating: 5 out of 5 stars5/5Aayul Aare Naal Rating: 5 out of 5 stars5/5Xerox Kathali Rating: 5 out of 5 stars5/5Netru Naragam Indru Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsKolai Vallal Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsThalai Illaatha Silai Rating: 5 out of 5 stars5/5Muththam Thedum Mugam! Rating: 4 out of 5 stars4/5Velvet Kutrangal... Rating: 5 out of 5 stars5/5Inimeal Charumathi Rating: 0 out of 5 stars0 ratingsMaranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsVivek Never Out Rating: 5 out of 5 stars5/5Monday Murder Day Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Paainthu Vaa Vivek Rating: 0 out of 5 stars0 ratingsAthe Nila Athe Kala Rating: 0 out of 5 stars0 ratingsUyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsVida Maattan Vivek Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Vivekin Visparoopam Rating: 3 out of 5 stars3/5Manjal Diary Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Uyir Veelchi
0 ratings0 reviews
Book preview
Uyir Veelchi - Rajeshkumar
19
1
"வெற்றி நிச்சயம்" என்றார் புரபசர் தயா.
டி.வி. ஸ்டேஷனின் ரெக்கார்டிங் அறை. ஏராளமான ‘வாட்ஸ்’ களைத் தின்று – உஷ்ணமான வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருக்கும் ஃபிளட் லைட்டுகள். கொஞ்சம் தள்ளி ‘ர்ர்ர்ர்’ ரென்று வெறிநாயாய் உறுமும் காமிரா – நீளமான சோளக்கதிர் போன்ற அமைப்பில் – நான்கு திசைகளிலிருந்து எட்டிப்பார்க்கும் அஹுஜா மைக்குகள். ஏர்கண்டிஷன் கசிந்த அந்த அறையிலும் கொஞ்சம் வியர்வை, கொஞ்சம் டென்ஷன். நிறைய சந்தோஷத்தோடு புரபசர் தயா பேசிக் கொண்டிருந்தார். நீரோட்டமான ஆங்கிலம். வார்தைகள் கடிபடாமல் மைக்கின் முகத்தில் மோதியது. கல்லோடு கல் மோதிக் கொண்ட மாதிரி கணீரென்று உச்சரிப்பு
இந்த யுரேனியத் தாதுப் படிவங்களின் ஆராய்ச்சியை, கடந்த ஆறு ஆண்டு காலமாக செய்து வருகிறேன். யுரேனியம் அற்புதமான ஒரு மூலகம். இந்த பூமிப்பரப்பில் ஐந்து சதவீதம் மட்டுமே அது ஒளிந்திருப்பதாக – ஜியாலஜி சம்பந்தப்பட்ட எமினென்ட்ஸ் புள்ளி விவரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அந்த ஐந்து பர்சன்ட்டில் – ஒரு பர்சன்ட்டுக்கும் குறைவான சாத்தியக் கூறுகளோடு அட்டகட்டி பாரஸ்ட்டின் பாறைப் படிவுகளை நான் ஆராய்ந்தபோது – சந்தோஷத்தில் அதிர்ந்து போனேன். யுரேனியம் ‘ஓர்’ அந்த பாரஸ்ட்டின் பாறைப் படிவுகளில் கணிசமாய் இருந்தது.
பேட்டி எடுப்பவர் – மைக்கை தன் உதட்டை நோக்கி சாய்த்துக் கொண்டார். யுரேனிய தாதுப் படிவங்களைக் கண்டுபிடித்ததும் – அரசாங்கத்துக்கு அதைத் தெரிவித்தீர்களா?
முறைப்படி ஒரு ‘சம்மரி’ எழுதி கனிவளத்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்தேன். அரசு அதை தாமதமாக பரிசீலனை செய்தாலும் – ஒரு நல்ல முடிவுக்கு வந்து – ஆராய்ச்சியை நான் தொடர சம்மதமளித்து – ஆராய்ச்சிக்கு உதவியாக ஒரு கணிசமான தொகையையும் ஒதுக்கியிருக்கிறது..
அட்டகட்டி பாரஸ்ட் எங்கேயிருக்கிறது…?
கோவை மாவட்டம்….தொண்டாமுத்தூர் தாலுக்காவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் இருக்கிறது. கொஞ்சம் அடர்த்தியான பாரஸ்ட்…
நீங்கள் அங்கே எத்தனை முறை போயிருக்கிறீர்கள்?
வருடத்திற்கு ஒரு தடவை மழை பெய்யாத காலங்களில் அங்கே நான் போய்விடுவது வழக்கம். பத்து பதினைந்து நாட்கள் தங்கி – பாறைப் படிவுகளை செதுக்கி ஆய்வுகள் நடத்துவேன்….அந்த ஆய்வுகள்தான் இப்போது முழு வெற்றியை அளிக்க ஆரம்பித்துள்ளன.
பாறைப் படிவுகளில் இருக்கும் யுரேனியத் தாதுவை அதன் ‘ஓர்’களில் இருந்து எப்படி பிரித்தெடுப்பீர்கள்?
புரபசர் தயா அமெரிக்கா போனபோது – ஏகப்பட்ட டாலர் கொடுத்து பொருத்திக் கொண்ட பல்செட்டின் உபயத்தால் அழகாகச் சிரித்தார். மன்னிக்கவும். நாட்டின் ராணுவ ரகசியங்களை ஒரு தளபதி எப்படி வெளியிடக் கூடாதோ… அதே போல்தான் இந்த ஆய்வின் சில முக்கியமான சந்திப்புகளை நான் மறைத்தாக வேண்டிய கட்டாயம். அதை நான் வெளியிடும் பட்சத்தில் – சில சமூக விரோத சக்திகளுக்கு அதுவே சர்க்கரைப் பொங்கலாகி விடும்.
அட்டகட்டி பாரஸ்ட்டுக்கு எப்போது புறப்பட்டு போகப் போகிறீர்கள்?
பேட்டி எடுப்பவர் ஓரக்கண்ணால் – காமிராவைப் பார்த்துக் கொண்டே ஆர்வமில்லாமல் கேள்வியை கேட்டார். நேரத்திற்குள் பேட்டியை முடிக்க வேண்டுமே என்கிற தவிப்பு அவருக்கு.
அடுத்த புதன் கிழமை...
உங்களோடு மொத்தம் எத்தனை பேர் வருகிறார்கள்?
பத்துப்பேர்…. ஐந்து பேர் ஆண்கள், ஐந்து பேர் பெண்கள். ஆரம்பத்திலிருந்து என் ஆராய்ச்சியில் பங்கு கொண்டவர்கள்…
அரசாங்கம் உங்கள் ஆராய்ச்சிக்காக என்னென்ன உதவிகளைச் செய்திருக்கிறது என்பதைச் சொல்ல முடியுமா…?
புத்தம் புதிய ஜியாலஜிகல் ஆய்வுக் கருவிகளைக் கொண்ட லேப் வேன் ஒன்றையும், கிச்சன் கார் ஒன்றையும் கொடுத்துள்ளது. பாறைப் படிவுகளைச் செதுக்கிக் கொண்டு வந்த உடனே, லேப் வேனிலேயே, ஆய்வுகளை நடத்தி – ரிப்போர்ட்களைத் தயாரிக்க முடியும்.
உங்களின் முயற்சிகள் வெற்றி பெற டி.வி நிலையத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்… புரபசர் தயா அவர்களே | பேட்டி கொடுத்த உங்களுக்கு என் நன்றி..
நன்றி | வணக்கம்…
காமிரா உறுமுவதை நிறுத்திக் கொள்ள, புரபசர் தயா, தான் உட்கார்ந்திருந்த நாற்காலியினின்றும் எழுந்தார். ரிக்கார்டிங் அறைச் சுவர்களில் இருந்த ஃப்ளட் லைட்டுகள் கண்களைக் குருடாக்கிக் கொள்ள, இயல்பான வெளிச்சம் உள்ளே வந்தது.
துணை இயக்குநர் நடராசன் புரபசர் தயாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சொன்னார். உங்க அஸிஸ்டெண்ட்ஸ் உங்களைக் காட்டிலும் ரொம்பவும் இறுக்கமா இருக்காங்க புரபசர் ஸார். யுரேனியம் ஆய்வைப் பற்றியோ – அட்டகட்டி பாரஸ்டைப் பற்றியோ எந்த கேள்வி கேட்டாலும் – உங்களைக் கேட்டுட்டுதான் பதில் சொல்வாங்களாம். குட் பாலிஸி…
நடராஜன் கைகுலுக்க – தயாவும் கையைக் கொடுத்துக் கொண்டே கேட்டார், இன்னிக்கு ரெக்கார்ட் பண்ணின பேட்டியை என்னிக்கு டெலிகாஸ்ட் பண்ணுவீங்க….?
நெக்ஸ்ட் மண்டே எயிட் ஃபிப்டீன்…
தாங்க்யூ
புரபசர் தயா விடைபெற்றுக் கொண்டு . ஸ்டேஷன் வாசலில் இருந்த காரை நோக்கிப்போக – உதவியாளர்கள் பத்து பேரும் தொடர்ந்தார்கள். இந்த பத்து பேர்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும்.
புரபசருக்கு சமமாய் – அவர் தோளை உரசுகிற சைஸில் நடந்து போகிறவன்தான் சாந்தகுமார்,. ஒரு ஹீரோவின் லட்சணம். பக்கவாட்டில் பார்க்கும்போது சிவகுமாரை நினைவுப்படுத்தினான். உயரம் கூடுதல். அணிந்திருந்த டீ ஷர்ட்டில் தேகாப்பியாச உடம்பு கிண்ணென்று திமிறியது. படித்து வேலைக்குப் போக வேண்டிய அவசியமில்லாதவன். அப்பா வகையிலும், அம்மா வகையிலும் அமோக சொத்து. பிள்ளை குட்டியில்லாத ஒரு பெரியப்பா மண்டையைப் போட்ட அடுத்த நிமிஷமே – கோத்தகிரியில் இருக்கும் ஒரு டீ எஸ்டேட்டும், கோயமுத்தூரில் இருக்கும் ஒரு பஞ்சு மில்லும், பேரூர்க்குப் பக்கத்தில் செழிப்பான நொய்யல் ஆற்றங்கரையில் – மத மதவென்று வளர்ந்து நிற்கும் இருபது ஏக்கர் தென்னந்தோப்பும் – சொடுக்கு போட்ட நாய்க்குட்டி மாதிரி ஓடிவந்து அவனுக்குச் சொந்தமாகிடும்., சாந்தகுமாருக்கு ஒரே தங்கை. பெயர் மேகலா. அடுத்த மாதம் ஒரு பெங்களூர் டாக்டருக்கு அமர்க்களமாய் வாழ்க்கைப்படப் போகிறாள்.
அற்புதமான ஒரு சொர்க்க வாழ்க்கையைக் கையில் வைத்துக் கொண்டு – அதை அனுபவிப்பதில் நிமிஷங்களைக் கரைத்துக் கொண்டிராமல் – அட்டகட்டி பாரஸ்ட் யுரேனிய தாதுப்படிவ ஆராய்ச்சிக் குழுவில் – சாந்தகுமார் சேர்ந்ததற்கு முக்கிய காரணம் சிற்பாதான்.
சிற்பா?
எஸ் | சிற்பாதான்…| புரபசருக்கு இடதுகைப் பக்கமாய் செண்பகப்பூ நிறத்தில் – ஆரம்பகால ட்ரீம் கேர்ள் ஹேமமாலினி சாயலில் – தோளில் தொங்கும் ஹேண்ட் பேக்கோடு – உதட்டுச் சுழி சிரிப்போடு – புரபசர் ஸார்… இந்த டி.வி. காரங்களுக்கு பேட்டி தரவே நீங்க சம்மதிச்சிருக்கக் கூடாது
என்று சொல்லிக் கொண்டே வேனை நெருங்குகிறாளே…. அவள்தான் சிற்பா – இருபத்தியொரு வயது நிரம்பிய எவரெஸ்ட் பனி.
சாந்தகுமாரும், சிற்பாவும் கடந்த ஆறுமாத காலமாய் – தீவிரமாய் அதே நேரத்தில் யாருக்கும் தெரியாமல் – காதலித்து கொண்டிருக்கிறார்கள்.
குழுவில் உள்ள மற்ற நான்கு ஆண்கள் – ஜெயந்த். விக்னேஷ், மகேந்திரன், சேகர், பெண்கள் – பவ்யா, சீதாலட்சுமி, அனுராதா, மாலா.
இதில் விக்னேஷ் மட்டும் சம்சாரி. இண்டு வருஷத்திற்கு முன்னால் சந்திரிகா என்கிற பெண்ணுக்கு கணவனாகி – ஆறு மாததுக்கு முன்னால் பாப்ஜி என்கிற ஆண் குழந்தைக்கு அப்பாவானவன் அசோக் நகரில் ஒரு பிளாட்டில் வாசம்.
ஸ்டேஷன் வாசலில் நின்றிருந்த காரில் ஏறப்போன புரபசர் தயா தயக்கமாய் நின்று சாந்தகுமாரை திரும்பிப் பார்த்தார்.
சாந்தகுமார்.
ஸார்…
அடுத்தமாசம் பெங்களூர்ல உன் தங்கச்சியோட கல்யாணம் – இவ்வளவு பக்கத்துல கல்யாணத்தை வெச்சுக்கிட்டு – உன்னால அட்டகட்டி பாரஸ்டுக்கு வரமுடியுமா…?
வரமுடியும் ஸார்…
எப்படி முடியும் சாந்தகுமார்…?
உங்க ஃபாதர் எனக்கு போன் பண்ணி – அவனுக்கு நீங்க புத்தி சொல்லக் கூடாதான்னு கேக்கிறார்.
நான் அங்க இருந்து… கல்யாணத்துக்காக என்ன ஸார் பண்ணப் போறேன். எல்லா காரியங்களையும் கவனிக்க ஆட்கள் போட்டிருக்கு … கல்யாணத்துக்கு ஒருவாரம் முன்னாடியே நாம பாரஸ்ட்டிலிருந்து வந்துடப் போறோம். கல்யாண காரியங்களைக் கவனிக்க ஒரு வாரம் போதாதா ஸார்…?
என்கிட்டே பேசாதே… உங்கப்பாவை கன்வின்ஸ் பண்ணு அவர் எனக்கு போன் பண்ணி ‘கூட்டிக்கிட்டு போங்க’ன்னு சொன்னாத்தான் உன்னை வேனில ஏத்துவேன்…
புரபசர் தயா, கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டுக் காருக்குள் போனார். கதவை அறைந்து சாத்திக் கொண்டே – குனிந்து கண்ணாடி வழியே பார்த்தார். கண்ணாடியை இறக்கிக் கொண்டே மெல்லிய குரலில் சொன்னார். நாளைக்கு காலையில பத்து மணிக்கெல்லாம் – பத்து பேரும் ரிசர்ச், இன்ஸ்டிடியூட் கான்பரன்ஸ் ஹாலுக்கு வந்துடணும்…
எஸ். சார்.
தலைகளை ஆட்டி – கோரஸாய் சொன்னார்கள்.
கார் நகர்ந்தது.
காரினின்றும் கீழே இறங்கி பங்களாவுக்குள் போனார் புரபசர் தயா. தன் அறைக்குள் நுழைந்து டையின் முடிச்சைக் கழற்றிக் கொண்டியிருந்தபோது – பக்கத்து மேஜையின் மேல் உட்கார்ந்திருந்த டெலிபோன் தொண்டையை கனைத்து.
தயா வேகமாய் போய் ரிசீவரை எடுத்தார்.
ஹலோ |
புரபசர் தயா…?" ஒரு குரல் மணலை வாயில் போட்டு மெல்கிற சைஸில் கேட்டது.
எஸ், ஹோல்டிங்
கேளுங்க…. புரபசர் ஸார். இந்த செகண்ட் உங்க டாட்டர் செல்வா என்னோட கஸ்டடியில இருக்கா..
தயா திடுகிட்டார்.
யா…. யார் நீ…?
உங்களுக்கு அது வேண்டாத விவகாரம்… உங்க ஒரே பொண்ணு உயிரோடும் – கற்போடும் திரும்பணும்னா… நீங்க அடுத்தவாரம் அட்டகட்டி பாரஸ்டுக்கு போறதை ட்ராப் பண்ணணும் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் டைரக்டர் போஸ்டிலிருந்து ராஜினாமா பண்ணணும்…
நீ சொன்ன ரெண்டையுமே நான் பண்ணலேன்னா...?
உங்க பொண்ணை கொன்னுடுவோம்…
சரி … கொன்னுடு…
"டொக் ‘கென்று ரிஸீவரை வைத்துவிட்டு – சாவதானமாய் நடந்துபோய் – கண்ணாடி முன் நின்று – டையின் முடிச்சை