Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Inbavin Irandavathu Nizhal
Inbavin Irandavathu Nizhal
Inbavin Irandavathu Nizhal
Ebook151 pages45 minutes

Inbavin Irandavathu Nizhal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Inbavin Irandavathu Nizhal

Read more from Rajeshkumar

Related to Inbavin Irandavathu Nizhal

Related ebooks

Related categories

Reviews for Inbavin Irandavathu Nizhal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Inbavin Irandavathu Nizhal - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    ஆகாயத்திற்கும் உற்சாகத்துக்கும் நடுவில் ஒரு இலவம்பஞ்சு துணுக்கு மாதிரி மிதந்தாள் இன்பா. முகத்தின் ஒவ்வொரு மில்லிமீட்டர் பரப்பிலும் சந்தோஷம் பெளடர் மாதிரி மினு மினுத்தது. மை பூச்சு இல்லாத கரிய விழிகளில் குத்துவிளக்கு சுடர் மாதிரி பரவசம் தெரிந்தது. ஈரமான ரோஸ்மில்க் நிற உதடுகள் மகிழ்ச்சிப் பெருக்கில் மெலிதாய் நடுங்கின.

    நிஜமாவா சொல்றீங்க அபிஷேக்...?

    ஸ்கூட்டர்க்கு சாய்ந்து நின்று கொண்டு சூயிங்கம் மெல்லும் அந்த அழகான அபிஷேக் சிரித்தான். குளிர் கண்ணாடியால் மூடப்பட்டிருந்த அவனுடைய கண்களிலும் சந்தோஷம் எகிறியது.

    நிஜமாத்தான் சொல்றேன்...

    சத்தியமா...? இன்பா தன் ரோஜா நிற உள்ளங்கையை அவனை நோக்கி நீட்டினாள்.

    போச்சுடா...! சத்தியம் வேற பண்ணனுமா...? சரி கேட்டுக்கோ இந்த பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரம், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் மேலாகவும் ஈரேழு பதினாறு லோகங்களில் வசிக்கும் முக்கோடி தேவர்கள் மீதாகவும் சேர, சோழ, பாண்டிய பல்லவ சக்கரவர்த்திகளின் மீதாகவும் இன்னும்...

    போதும்... போதும்...

    இன்பா கையமர்த்த அபிஷேக் பேசி முடித்த களைப்பில் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தான்.

    உங்கப்பாவும்... உங்கம்மாவும் சரி... எதிர்ப்பா ஒரு வார்த்தை கூட சொல்லலையா...?

    ஊ...ஹ...ம்...

    நான் ஒரு அநாதைன்னு சொன்னீங்களா?

    சொல்லலை.

    ஏன் சொல்லலை...?

    எதுக்காக சொல்லணும்...? என்னிக்கு நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சேனோ அன்னிக்கே நீ அநாதையில்லை.

    அதெல்லாம் சும்மா வார்த்தைக்காக... சொல்லிக்கலாம். பிராக்டிகலா சொல்ல வேண்டிய உண்மைகளை சொல்லித்தானே ஆகணும்.

    எல்லாமே சொல்லியிருக்கேன்... போதுமா...?

    கேட்டுட்டு என்ன சொன்னாங்க...?

    ஒண்ணுமே சொல்லலை.

    என்னால நம்பவே முடியலை... தன் அழகிய கண்களை இன்னமும் அகலமாய் விரித்தாள் இன்பா.

    நம்பு... என் காதலியே நம்பு...

    நம்ம காதல் சப்ஜெக்டை எப்படி ஓப்பன் பண்ணீங்க...?

    ரொம்ப சுலபம்... நீ பேச்சுப் போட்டியில முதல் பரிசு வாங்கின விபரமும் உன்னோட போட்டோவும் வந்திருந்த பேப்பரை அம்மா பார்த்துட்டிருந்தா. பக்கத்துல உட்கார்ந்திட்டிருந்த அப்பா கிட்டே உன்னோட போட்டோவைக் காட்டி ‘பொண்ணைப் பார்த்தீங்களா...?. மகாலட்சுமி மாதிரி இருக்கான்னு சொன்னா. அப்பாவும் பார்த்துட்டு ‘ஆமா... ஆமா... பொண்ணைப் பார்த்தா குத்துவிளக்காட்டமாத்தான் இருக்கு...'ன்னு சொன்னார். நான் உடனே குறுக்கிட்டு அந்த குத்து விளக்கைதாம்பா நான் காதலிக்கிறேன்னு சொல்லிட்டேன்...

    அப்புறம்...?

    அப்புறமென்ன... ஒரு நிமிஷத்துக்கு அங்கே குண்டூசி விழுந்தாக்கூட சத்தம் கேட்கும் என்கிற அளவுக்கு நிசப்தம். அம்மாதான் சுதாரிச்சுகிட்டு ‘என்னடா அபிஷேக் நிஜமாத்தான் சொல்றியா’ன்னு கேட்டா. நான் ஆமான்னு தலையாட்டி உன்னைப் பத்தின விபரங்களை சொல்ல ஆரம்பிச்சுட்டேன்.

    சந்தோஷப்பட்டாங்களா? கோபப்பட்டாங்களா?

    சந்தோஷம்தான். உன்னை உடனே கூட்டிட்டு வரச் சொன்னாங்க... அதான் புறப்பட்டு வந்தேன். நீ சீக்கிரமா கிளம்பணும்...

    இன்பா, தன் கையிலிருந்த வாட்ச்சைப் பார்த்தாள். மணி நான்கு.

    சரி... நீங்க ரிசப்ஷன்லேயே இருங்க... நான் போய் மானேஜர்கிட்டே பர்மிஷன் சொல்லிட்டு வந்துடறேன்.

    சீக்கிரமா வா...

    இன்பா உள்ளே போனாள். அவள் மானேஜரின் அறையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் போதே ப்யூன் எதிர்பட்டான்.

    அம்மா உங்களை ஜி.எம் கூப்பிடறார்...

    அவரைப் பார்க்கத்தான் போயிட்டிருக்கேன்...

    நான்கைந்து அறைகளைத் தாண்டி தென்பட்ட ஜி.எம்மின் அறைக்குள் நுழைந்தாள்.

    குட் ஈவினிங் ஸார்... இன்பா சொல்ல வழுக்கைத்தலை ஜி.எம். நிமிர்ந்தார்.

    வாம்மா... இன்பா... ரொம்ப நேரமா உன்னோட டேபிள்ல உன்னைக் காணமே...?

    கெஸ்ட் வந்திருக்காங்க ஸார்.

    கெஸ்ட்டா? உனக்குக்கூட கெஸ்ட் இருக்காங்களா? அம்மா, அப்பா, சொந்த பந்தம் யாரும் இல்லேன்னு சொன்னே... இப்ப என்னம்மா திடீர்ன்னு கெஸ்ட்...?

    அ...அ...அது வந்து...

    நீ சொல்ல சிரமப்படாதேம்மா... நானே சொல்றேன். அந்த கெஸ்ட்டோட பேர் அபிஷேக். கற்பகம் காட்டன் மில்ஸ் எம்.டியோட ஒரே பையன். நீ அவனை காதலிக்கிறே! அவனும் உன்னைக் காதலிக்கிறான்... ஏம்... ஐ... கரெக்ட்...?

    ஸ... ஸார்...

    "இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்ன்னு ஆச்சர்யப்படாதேம்மா... நம்ம ஆபீஸ் டெலிபோன் ஆபரேட்டர் மார்க்கரெட்டின் உபயம்.

    ஸ்...ஸாரி... ஸார்.

    எதுக்கம்மா ஸாரி சொல்றே...? காதலிக்கிறது ஒண்ணும் தப்பு கிடையாது. அது கல்யாணத்துல முடியாமே போனாத்தான் தப்பு. அந்த அபிஷேக் எப்படிப்பட்டவன்?

    ரொம்ப நல்லவர் ஸார்.

    எல்லாப் பெண்களும் சொல்ற யூஷ்வலான வார்த்தை இது. அந்த பையன் ரிசப்ஷன்லதானே இருக்கான்...

    ஆமா... ஸார்.

    கொஞ்சம் கூப்பிடம்மா...

    ஸார்...

    நான் ப்ரூடலா ஒண்ணும் பேசிடமாட்டேம்மா...

    ஸார்... அவங்க வீட்ல என்னை மருமகளா ஏத்துக்க சம்மதம் தெரிவிச்சுட்டாங்க. அதை என்கிட்டே சொல்லி என்னைக் கூட்டிட்டு போகத்தான் வந்திருக்கார்.

    ஈஸிட்...? அந்த பையனைக் கூப்பிடம்மா... நான் அவன்கிட்டே கொஞ்சம் பேசணும். இன்பா, சேலைத்தலைப்பால் வியர்வையை ஒற்றிக் கொண்டே கதவைத் திறந்து கொண்டு வெளியே போய் அடுத்த நிமிஷம் அபிஷேக்கோடு வந்தாள்.

    குட் ஈவினிங் ஸார் அபிஷேக் புன்னகைத்துக் கொண்டே ஜி.எம்.மின் கையைப் பற்றி குலுக்கினான்.

    குட் ஈவினிங் மிஸ்டர் அபிஷேக். அண்ட் க்ளாட் டூ மீட் யூ... ஜி.எம். நாற்காலியைக் காட்ட அவன் உட்கார்ந்தான். நாற்காலிக்குப் பின்னால் நின்றிருந்த இன்பாவை ஏறிட்டார், ஜி.எம். அம்மா இன்பா... நீ உன்னோட சீட்டுக்குப் போய் வேலையைப் பாரு... பத்து நிமிஷம் கழிச்சு நானே கூப்பிடறேன்."

    எஸ். ஸார்...

    இன்பா தயக்கமாய் சொல்லிவிட்டு- அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள். தள்ளு கதவு ஆடி முடித்து நிலை கொண்டதும் ஜி.எம் மேஜை

    Enjoying the preview?
    Page 1 of 1