Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

முத்திரை சதி
முத்திரை சதி
முத்திரை சதி
Ebook144 pages1 hour

முத்திரை சதி

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

எல்லா துறைகளிலும் போலிகள் இருக்கின்றன, மருத்துவ துறையில் போலிகள் நுழைந்தால் என்ன வகையான தவறுகள் நடக்கும் என்பதை ஆசிரியர் அவருக்கே உரித்தான பாணியில் எழுதியுள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 21, 2018
முத்திரை சதி

Related to முத்திரை சதி

Related ebooks

Related categories

Reviews for முத்திரை சதி

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    முத்திரை சதி - ராஜேஷ்குமார்(Rajeshkumar) ராஜேஷ்குமார்(Rajeshkumar)

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    சிட்டி ரெக்ரியேஷன் கிளப். ராத்திரி மணி பத்தரை.

    வாயில் புகையும் சிகரெட்டோடு - ரம்மி சீட்டாட்டத்தில் தீவிரமாயிருந்த காசியை - கிளப் பையன் நெருங்கினான்.

    ஸார்... உங்களுக்கு போன்...

    சீட்டுக்களின் மேலிருந்த பார்வையை நகர்த்தாமல் - காசி கேட்டான். போன்ல யார்ரா?

    தெரியலை... ஸார்...

    போய் கேட்டுட்டு வா...

    அவன் போய் - உடனே வந்தான்.

    உங்க தங்கச்சி பேசுறாங்களாம் ஸார்...

    காசி சீட்டைக் கவிழ்த்தான். நீங்க ஆடுங்கப்பா. நான் என்னோட உடன் பிறப்புகிட்டே பேசிட்டு வந்துடறேன்.

    டெலிபோன் ஆபரேட்டரை நோக்கிப் போன காசிக்கு முப்பது வயது இருக்கலாம். பீர் பாட்டிலில் உப்பிய உடம்பு. கண்களுக்கு கீழே கன்னங்கள் பிதுக்கலாய் தெரிந்தன.

    ஆபரேட்டர் வாரப்பத்திரிகை படித்துக் கொண்டிருக்க - மேஜையின் மேல் ஒருக்களித்து விழுந்திருந்த ரிஸீவரை எடுத்தான்.

    ஹலோ...

    அண்ணா...!

    என்னம்மா ஸ்நேகா?

    நான் இப்போ வீட்டிலிருந்துதான் பேசிகிட்டிருக்கேன்.

    வீட்லேயிருந்தா...? ஏம்மா.... இன்னிக்கு நைட் ட்யூட்டின்னு சொன்னே... போகலையா?

    போய்ட்டு வந்துட்டேன்.

    போய்ட்டு வந்துட்டியா...? நீ என்னம்மா சொல்றே...?

    அண்ணா! அந்த ஹோட்டல் மானேஜர் என்கிட்ட நடந்துக்குற விதம் சரியில்லை. ரெட்டை அர்த்தம் வெச்சு பேசறான். எதையாவது கொடுக்கற - வாங்கற சமயங்கள்ல என் கையை வேணுமின்னே தொடறான். இன்னிக்கு என்னோட ட்ரஸ்ஸிங் ரூமுக்கே வந்து... ஒரு மாதிரியா பேச ஆரம்பிச்சான். கன்னத்துல பளார்ன்னு அறைஞ்சுட்டு ராஜினாமா லெட்டரை எழுதிக் குடுத்துட்டு வந்துட்டேன்.

    ராஸ்கல்...

    நீ கோபப்பட்டு அவன்கிட்டே சண்டைக்குப் போயிடாதேண்ணா! நான் இன்னிக்கு விட்ட அறை - அவனோட ஆயுசு காலம் வரைக்கும் ஞாபகம் இருக்கும். இனிமே அவன் எந்தப் பொண்ணுகிட்டேயும் வாலாட்ட மாட்டான்.

    பாஸ்டர்ட்...!

    போன்ல திட்டினது போதும். வீட்டுக்கு வா... ஒரு மணி நேரமா இந்த ஏரியாவில் கரண்ட் வேற இல்லை. எனக்குத்தான் இருட்டைக் கண்டா பயம்ன்னு உனக்குத் தெரியுமே...?

    இப்ப வந்துடறேன்...

    நேரா வீட்டுக்கு வா...! ஹோட்டல் மானேஜரை விசாரிக்கப் போயிடாதே...!

    ம்.... ம்...

    ரிஸீவரை வைத்த காசி - பாண்ட் பாக்கெட்டிலிருந்து ஸ்கூட்டர் சாவியை எடுத்தபடி - கிளப்பை விட்டு வெளியே வந்தான். ‘ராஸ்கல்!’ ‘பாஸ்டர்ட்’ இந்த இரண்டு வார்த்தைகளும் அவனுடைய உதட்டில் மாறி மாறி உச்சரிக்கப்பட்டன. அவனுடைய ஆத்திரமான உதைக்கு ஸ்கூட்டர் உடனே உயிர்பிடித்துக் கொண்டது. பரவி ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்.

    அந்த த்ரீ ஸ்டார் ஹோட்டல் ரெயின்போ நிற கொடிகள் பறக்க வந்தது. அதன் வெளிச்சமான போர்டிகோவில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு உள்ளே போனான். ரிசப்ஷன் ஹால் பாலைவனமாய் வெறிச்சோடிப் போயிருக்க - கௌண்ட்டரில் நின்றிருந்த ஒரு இளைஞனை நோக்கிப் போனான் காசி.

    அவன் காசியை அடையாளம் புரிந்து கொண்டு புன்னகைக்க, காசி புன்னகைக்காமல் - இறுகின முகத்தோடு கேட்டான்.

    மானேஜர் எங்கே...?

    ரூம்ல இருக்கார்... ஸார்...

    ரூம் எங்கே...?

    ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல கார்னர் ரூம்.

    காசி வேகமாய் நகர்ந்து லிஃப்ட்டை உபயோகிக்காமல் மாடிப்படிகள் வழியாகவே - முதல் மாடியைத் தொட்டு - சலவைக்கல் வராந்தாவில் நடந்து அந்த கடைசி அறைக்கு முன்பாய் நின்றான்.

    ஆட்காட்டி விரலை - கேள்விக்குறி சைஸில் மடக்கி டொக்... டொக்...

    எஸ்... கம்மின்...

    உள்ளேயிருந்து கனமான குரல் வர -

    காசி கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனான். பிளேட்டில் இருந்த மசாலா நூடுல்ஸை - ஸ்பூனில் அள்ளி வாய் கொள்ளாமல் திணித்துக் கொண்டிருந்த மானேஜர் கைலாசபூபதி - நூடுல்ஸை மெல்வதற்கு மறந்து மெள்ள எழுந்தான்.

    வா... வாங்க...

    உட்காரலாமா...?

    உ... உ... உட்கார்ங்க... எதிரே இருந்த நாற்காலியைக் காட்டினான் கைலாசபூபதி.

    உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்.

    பே... பேசலாமே...

    நீங்க உங்க அப்பா அம்மாவுக்கு ஒரே மகன்தானா?

    ஆ... ஆமா...

    கூடப் பிறந்தவங்க...?

    யா... யாருமில்ல...

    அதான் உனக்கு இவ்வளவு கொழுப்பு...! - கைலாசபூபதி திகைக்க - காசி எழுந்து - அவனுடைய கழுத்து டையைப் பற்றினான். "ஏண்டா... ஸ்டார் ஹோட்டல் மேனேஜர்னா... பெரிய கொம்பன்னு நினைப்பா...? அக்கா, தங்கச்சியோடு பிறக்கலைன்னா

    Enjoying the preview?
    Page 1 of 1