Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Readymade Sorkkam
Readymade Sorkkam
Readymade Sorkkam
Ebook130 pages40 minutes

Readymade Sorkkam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Readymade Sorkkam

Read more from Rajeshkumar

Related to Readymade Sorkkam

Related ebooks

Related categories

Reviews for Readymade Sorkkam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Readymade Sorkkam - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    முதல் மரியாதை

    ராஜேஸ்வரி ரிக்கார்டிங் தியேட்டர் வாசல்.

    வீடியோ கேமிராக்களும் – கானன் காமிராக்களும் காத்திருக்க, வர்ண துணி பேனர்கள் 1001-வது பாடலை இசைக்க வரும் ‘இன்னிசை இளவரசி’ சுரபி அவர்களே வருக வருக... - என்ற வாசகத்தோடு காற்றில் மெல்ல அசைந்தன. ரிக்கார்டிங் தியேட்டர் முகப்பு வாசலில், திரையுலகப் புள்ளிகள், பத்திரிக்கை நிருபர்கள், சில அரசியல் முகங்கள், எல்லோருடைய உதடுகளிலும் ‘சுரபி’ அடிபட்டாள்.

    ஃபீல்டுக்கு வந்து - மூணு வருஷம் கூட ஆகலை... அதுக்குள்ளே ஆயிரமாவது ஸாங் ரிக்கார்டிங்...

    பிரமிப்பா இருக்கு...

    கின்னஸ் சாதனைக்கு எழுதிப் போடலாம்...

    வருஷக் கணக்கைப் பார்த்தா... தினசரி ஒரு பாட்டு ரிக்கார்ட் ஆயிருக்கு...

    தமிழ் மட்டும் கிடையாதே... மலையாளம், தெலுங்கு, கன்னடம் இப்படி எல்லா மொழியிலேயும் பாடத் தெரிஞ்ச ஒரே பாடகி சுரபி தான்...

    வயசு இருபத்தஞ்சு இருக்குமா...?

    ஜாதகமே என்கிட்ட இருக்கு... சுரபிக்கு வயது இருபத்தி மூணு

    பொதுவா ப்ளேபேக் ஸிங்கர்ஸ் பாக்கறதுக்கு அழகா இருக்க மாட்டாங்க...! ஆனா சுரபி இதுக்கு விதிவிலக்கு... இன்னிக்கு ஃபீல்ட்ல நெம்பர் ஒண்ணா இருக்கிற ஹீரோயினைக் காட்டிலும்... அழகாவே இருக்காங்க...

    வாசலில் பரபரப்பு அரும்பியது.

    பௌடரில் குளித்த மாதிரியான பளபளப்பில் - வெள்ளை மாருதி – ஆரஞ்சு வர்ண பொகேன் வில்லா பூக்கள் பூத்துக் கொட்டிய பந்தலுக்குக் கீழே வந்து மிதந்து நின்றது. இக்னீஷியனை அணைத்து சாவியை எடுத்தபடி - காரின் கதவைத் திறந்து கொண்டு - பெரிய புன்னகையோடு கைகளைக் குவித்துக் கொண்டே வெளிப்பட்டாள் சுரபி.

    சந்தன நிறம், இருபத்தி மூன்று வயதுக்குரிய இளமை. விசேஷமான தேன் நிறக் கண்கள். ஆரஞ்சு சுளைகளை ஞாபகப்படுத்தும் உதடுகள். உடம்பின் எந்த பாகத்தைப் பார்த்தாலும் அதில் ஒரு ஜீரோ எரர் அழகு தெரிந்தது. பார்க்கப்படுகிற இந்த நிமிஷம் வயலெட் வண்ண பட்டுச் சேலையில் - கனகாம்பரமும், மல்லிகையும் கலந்த பூப்பந்தில் இருந்தாள். நெற்றியில் ஸ்டிக்கர் இல்லை. நிஜமான குங்குமம்.

    வெல்கம் மிஸ் சுரபி... - தொந்தியும் தொப்பையுமாய் இருந்த படத் தயாரிப்பாளர் ஒருவர் - செண்ட் வாசனையோடு அவளை நெருங்கி - ஒரு பெரிய ரோஜா மாலையை கையில் கொடுத்தார்.

    தாங்க்... யூ...

    விஷ்... யூ... ஆல்... த... பெஸ்ட்...

    ஆயிரத்தோராவது... பாடலை இன்னிக்கு பாடப் போகிற நீங்க... சீக்கிரமே... பத்தாயிரமாவது பாடலையும் பாடணும்...

    சுரபி சுத்தமான பல்வரிசையில் சிரித்தாள்.

    எல்லாம் கடவுளோட சித்தம்... என்னை பாட வைக்கிறதே அவன்தான்...

    வீடியோ காமிராக்கள் இயங்கின.

    கானன் காமிராக்கள் பளிச்சிட்டன.

    சுரபி நடந்தாள்.

    பொக்கேக்களும், மாலைகளும், சால்வைகளும் அவளை நோக்கி நீட்டப்பட - அவைகளை வாங்கி - தன் பெண் உதவியாளரிடம் கொடுத்துக் கொண்டே போனாள்.

    இசை ஞானி வந்துட்டாரா...?

    அவர் ஏழு மணிக்கே வந்துட்டார். கம்போஸிங்கில் அமரோடு தீவிரமாய் இருக்கார்...

    மொதல்ல அவர்கிட்டே ஆசிர்வாதம் வாங்கணும்... என்னோட குரலை அடையாளம் கண்டுகிட்டவரே அவர்தானே...?

    நிருபர்கள் அரை வட்டமாய் சூழ்ந்தபடியே வந்தார்கள்.

    மிஸ் சுரபி... உங்க மனநிலை இன்னிக்கு எப்படியிருக்கு...?

    காத்துல பறக்கிற இலவம் பஞ்சு மாதிரி இருக்கு…

    உங்க குரல் இனிமையை பாதுகாக்க என்ன செய்யறீங்க...?

    கடவுளை நம்பறேன்...

    உங்க வெற்றிக்கு என்ன காரணம்...?

    கடவுளை நம்பறேன். அவர் எனக்குள்ளேயிருந்து என்னை பாட வைக்கிறார். இதுல என்னோட வெற்றின்னு எதுவுமேயில்லை...

    இந்தியில் எப்ப பாடப் போறீங்க...?

    அவங்க கூப்பிட்டதும்...

    புதுசா தமிழுக்கு வந்திருக்கிற இசையமைப்பாளர்களைப் பத்தி என்ன நினைக்கறீங்க...?

    புதிதாய் வந்திருக்கறவங்ககிட்டே திறமை தெரியுது. ஓரிரு படங்கள்ல திறமையையும் காட்டியிருக்காங்க... இனிமே போக போகத்தான் பார்க்கணும்...

    இளையராஜாவைப் பத்தி...?

    அவர் ஒரு இசைக் கடல்... நான் அதுல ஒரு அலை...

    இன்னொரு முக்கியமான கேள்வி...?

    ஸாரி... ரிக்கார்டிங் தியேட்டர் வந்துடுச்சு... பேட்டியெல்லாம் இன்னொரு நாளைக்கு பார்த்துக்கலாம்.

    யாரோ ஒருவர் கதவைத் திறந்து விட - சுரபி பட்டுச் சேலையை இழுத்துப் போர்த்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். அறை ஏ.ஸி. காற்றை சுவாசித்துக் கொண்டிருந்தது. ஸின்தஸைஸர் ஆர்கனில் - விரல்களை வைத்துக் கொண்டிருந்த இளையராஜா நிமிர்ந்தார். வாம்மா...!

    வணக்கம் ஸார்...

    அவருடைய கால்களில் விழுந்து எழுந்தாள்.

    நல்லாயிரும்மா...

    ஸாரி ஸார்... கொஞ்சம் லேட்டாயிடுச்சு... உங்களை காக்க வெச்சுட்டேனோ...?

    அதெல்லாம் ஒண்ணுமில்லேம்மா... உன்னோட ஆயிரத்தோராவது பாட்டை சூப்பர்ஹிட் பண்ணி பட்டி தொட்டியெல்லாம் பாடும்படியா பண்ண வேண்டாமா? அதுக்காகத்தான் நானும் அமரும் ஸ்ட்ரெயின் எடுத்துட்டிருக்கோம்...

    Enjoying the preview?
    Page 1 of 1