Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arunthathiyum Aaru Thottakkalum
Arunthathiyum Aaru Thottakkalum
Arunthathiyum Aaru Thottakkalum
Ebook197 pages1 hour

Arunthathiyum Aaru Thottakkalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ராஜேஷ்குமார் அவர்களின் சிறுகதைகள் அடங்கிய ஓர் தொகுப்பு.

இவை 1969 முதல் 2023 வரை – பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்த முன்னணி மாத, வார, தின பத்திரிக்கைகளில் வெளிவந்த சிறுகதைகள்.

Languageதமிழ்
Release dateJul 8, 2023
ISBN6580100410041
Arunthathiyum Aaru Thottakkalum

Related to Arunthathiyum Aaru Thottakkalum

Related ebooks

Related categories

Reviews for Arunthathiyum Aaru Thottakkalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arunthathiyum Aaru Thottakkalum - Rajeshkumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அருந்ததியும் ஆறு தோட்டாக்களும்

    (சிறுகதைகள்)

    Arunthathiyum Aaru Thottakkalum

    (Sirukathaigal)

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajeshkumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ராஜேஷ்குமார் எழுத்தாளரைப் பற்றி...

    அருந்ததியும் ஆறு தோட்டாக்களும்...

    ஆறாவது விரல்

    சந்திர கிரகணம்

    பண வாசனை

    இன்னொரு அம்மா

    வானவில் நேரம்

    திரிசங்கு சொர்க்கம்

    2047

    அவள் பெயர் தமிழச்சி

    எட்டாவது ஸ்வரம்!

    ஒரு தப்பும் தவறும்

    காதல் - 2025

    சத்தமில்லாத யுத்தம்!

    தீபாவ(லி)ளி

    ரேணுகா

    ராஜேஷ்குமார் எழுத்தாளரைப் பற்றி...

    ராஜேஷ்குமார், 1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி கோவை மாநகரில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் கே.ஆர்.ராஜகோபால். எழுத்துக்காக ராஜேஷ்குமார் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். இவரின் முதல் சிறுகதை உன்னைவிட மாட்டேன் 1969ம் வருடம் மாலை முரசு கோவை பதிப்பில் வெளிவந்தது. 1980வது வருடம் இவருடைய முதல் நாவல் வாடகைக்கு ஓர் உயிர் மாலைமதி மாத இதழில் வெளிவந்தது. அதே வருடம் கல்கண்டு வார இதழில் ஏழாவது டெஸ்ட் ட்யூப் என்ற முதல் தொடர்கதை வெளியானது.

    கடந்த 53 ஆண்டுகளில், இதுவரை 1500 மேற்பட்ட நாவல்கள் 2000 மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இதைத்தவிர, நூற்றுக்கணக்காண அறிவியல், சமூக, ஆன்மிக மற்றும் வாழ்வியல் கட்டுரைகள் படைத்துள்ளார். அவற்றில் ஸார் ஒரு சந்தேகம்!, வாவ்! ஐந்தறிவு, எஸ் பாஸ், சித்தர்களா! பித்தர்களா!! முக்கியமானவை. என்னை நான் சந்தித்தேன் என்ற தலைப்பில் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை சுவராஸ்யமான நடையில் எழுதியுள்ளார். இது மிகச் சிறந்த சுயமுன்னேற்ற நூலாகவும் பார்க்கப்பட்டு பாராட்டப்படுகிறது.

    இவரது சில தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்கள் பிராந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய நாவல்கள் பல, திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன.

    தான் எழுதிய குற்ற புதினங்களில், நவீன அறிவியலையும் பல புதுமைகளையும் புகுத்தி தனிமுத்திரை பதித்ததால், வாசகர்களும் பதிப்பாளர்களும் இவரை ‘க்ரைம் கதை மன்னர்’ என்று அழைக்கிறார்கள். இந்த 2023 வருடத்திலும் பல முன்னணி அச்சிதழ்களிலும் மின்னிதழ்களிலும் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

    எழுத்துலகில் இவர் ஆற்றிய சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022ல் அங்கீகரித்துள்ளது. இவர்க்கு தமிழக அரசு, 2010ல் கலைமாமணி விருது வழங்கி சிறப்பு செய்துள்ளது.

    அன்புக்குரிய வாசக நெஞ்சங்களே!

    வணக்கம்.

    இப்போது உங்களுடைய கைகளில் இடம்பிடித்து இருக்கும் அருந்ததியும் ஆறு தோட்டாக்களும் - சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடித்ததும் உங்களுடைய இதயங்களிலும் இடம் பிடிக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. என் ஐம்பத்திமூன்று ஆண்டுகால எழுத்துலக வாழ்க்கையில் 2000-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா வார, மாத, தின இதழ்களிலும் வெளிவந்து என்னுடைய எழுத்துப் பசியை தணிய வைத்தன.

    மலர்கள் உதிரிகளாக இருப்பதைக் காட்டிலும் மாலையாய் மாறி இருக்கும்போதுதான் அவைகளின் அழகு பன்மடங்காகத் தெரியும். பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பதிப்பகத்தாரால் என் சிறுகதை மலர்கள் மாலைகளாய் வெளிவந்து வாசகர்களை மகிழ வைத்தது.

    இந்த புத்தகத்தில் 15 சிறுகதைகளும் என்னால் கவனமாகப் படிக்கப்பட்டு தேர்ந்து எடுக்கப்பட்டவை. வெகுஜன இலக்கியம் என்ற பிரிவில் சிறுகதைகள் எழுதப்பட்டிருந்தாலும், கதையைப் படித்து முடிக்கும்போது அதன் இறுதி வரிகளில் ஒரு பயனுள்ள செய்தியை இந்த சமூகத்துக்கு சொல்பவையாகவே சித்தரிக்கப்பட்டு இருப்பதை படிக்கும் வாசகர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

    மிக்க அன்புடன்,

    அருந்ததியும் ஆறு தோட்டாக்களும்...

    கண்களை மூடிப் படுக்கையில் சாய்ந்திருந்த லாயர் அண்ணாஜிராவ் தன்னுடைய செல்போன் சிணுங்கும் சத்தத்தில் கலைந்து, அதை எடுத்து டிஸ்ப்ளேயில் அழைப்பது யார் என்று பார்த்தார்.

    மாஜி எம்.பி மகுடபதி.

    அண்ணாஜிராவ் பவ்யமாய் எழுந்து உட்கார்ந்து குட் ஈவினிங்... என்றார். மறுமுனையில் மகுடபதி கேட்டார்.

    என்ன லாயர் ஸார்... உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டேன்.

    ஆமா... வைரல் ஃபீவர்... ரெண்டு நாளாய் கோர்ட்டுக்கே போகலை...

    ஆயிரத்து சொச்சம் பக்கத்துல ஒரு குட்டித் தலையணை மாதிரி குற்றப்பத்திரிகையை நம்ம கையில கொடுத்துட்டாங்க. அதைப் படிச்சுப் பார்த்தீங்களா...?

    பாதி படிச்சேன்...! ஃபீவர் சரியானதும் படிக்க ஆரம்பிக்கணும்...

    லாயர் ஸார்... நா ஒண்ணு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே...?

    "சொல்லுங்க.’’

    நாளைக்கு டெல்லியிலிருந்து எனக்குத் தெரிஞ்ச லாயர் ஒருத்தர் வர்றார். கிரிமினல் வழக்குகளையெல்லாம் புஸ்வாணமாக்கியிருக்கார். ‘கிருஷ்ணா கபூர்’ன்னு பேர். நீங்க கூட கேள்விப்பட்டிருப்பீங்க...?

    தெரியும்... சொல்லுங்க...

    அவர்கிட்டே இந்த கேஸ்ஸை ஒப்படைக்கலாம்னு இருக்கேன். ஏன்னா, இந்த கேஸ் ரொம்பவும் ஸ்ட்ராங்கா இருக்கு. நானும் என்னுடைய மகன் பரணிகுமாரும் துப்பாக்கியையும், கத்தியையும் காட்டி பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு பல பெண்களைக் கெடுத்து அதில் ரெண்டு பெண்களைக் கொலை பண்ணிட்டதா குற்றப் பத்திரிகையில் போலீஸ் ஆணித்தரமா சொல்லியிருக்காங்க. போதாத குறைக்கு ரெண்டு விட்னஸ் வேற...

    இதோ பாருங்க மிஸ்டர் மகுடபதி... நீங்க கேஸை யார்கிட்டே வேணும்னாலும் ஒப்படைங்க. அதைப்பத்தி எனக்கு எந்தவிதமான வருத்தமும் கிடையாது.

    நீங்க தப்பா நினைக்கமாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். உங்ககிட்ட இருக்கிற குற்றப்பத்திரிக்கை நகலை கொஞ்சம் குடுத்து விடறீங்களா?

    இப்பவே வேணுமா...?

    ஆமா... நாளைக்குக் காலையில் ஏழு மணிக்கெல்லாம் டில்லியிலிருந்து லாயர் கிருஷ்ணாகபூர் வந்துடுவார். குற்றப் பத்திரிகை நகலை உங்க ஜூனியர்ஸ் யார் மூலமாவது கொடுத்துவிட்டா பரவாயில்லை.

    சரி...! இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே குடுத்து விடறேன்... சொன்ன அண்ணாஜிராவ் செல்போனை அணைத்துவிட்டு பக்கத்தில் இருந்த இண்டர்காம் மூலமாக வீட்டின் கீழே இயங்கிக் கொண்டிருந்த தன்னுடைய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டார். ஜூனியர் லாயர் பூர்ணிமா ரிஸீவரை எடுத்தாள்.

    எனக்காக ஒரு உதவி பண்ண முடியுமாம்மா...?

    சொல்லுங்க ஸார்...

    மாஜி எம்.பி மகுடபதி தன்னோட குற்றப்பத்திரிகை நகலைக் கேட்டார். கிண்டியில் இறங்கி, ரேஸ்கோர்ஸ் ரோட்டில் இருக்கிற அவர் பங்களாவுக்குப் போய் குடுத்துட்டு அப்படியே நீ தாம்பரம் போயிடும்மா...

    ஸார்... வந்து...

    என்னம்மா...?

    கிண்டியில் இறங்கிட்டுப் போனா லேட்டாயிடும் ஸார். அவரோட குற்றப்பத்திரிகை நகலை நாளைக்குக் காலையில பத்து மணிக்குக் கொண்டு போய் கொடுத்துடறேன். இன்னும் பதினஞ்சு நாள்ல எனக்குக் கல்யாணம். ராத்திரி வீட்டுக்கு லேட்டாப் போனா அம்மா திட்டுவா ஸார்.

    இதோ பாரம்மா... அந்த மாஜி எம்.பி மகுடபதி அவரோட கேஸை டில்லி லாயர் ஒருத்தர்கிட்ட ஒப்படைக்கப் போறார். அதை போன் பண்ணி நம்மகிட்டே சொன்ன பின்னாடி அவரோட குற்றப்பத்திரிகை நகலை நாம வெச்சுக்கிட்டு இருக்கிறது சரியில்லை. நாளைக்கு வேணும்னா நீ லீவு எடுத்துக்கோ. இன்னிக்கு இந்த வேலையைப் பண்ணிடு...

    சரி... ஸார்...

    ***

    ரேஸ்கோர்ஸ் ரோட்டின் வால்பகுதியில் ஜனநடமாட்டமற்ற நிசப்தத்தில் உறைந்து போயிருந்தது மாஜி எம்.பி மகுடபதியின் பங்களா.

    பங்களாவின் மேல் மாடியறையில் ஷீவாஸ் ரீகல் விஸ்கி பாட்டிலின் மூடியைத் திறந்துகொண்டே அப்பா... என்று கூப்பிட்டான் பரணிகுமார். காட்டெருமை உடம்பு. ரோமம் மண்டிய மார்பில் பதினைந்து பவுன் செயின் புரண்டது.

    டெல்லி வக்கீல் கிருஷ்ணாகபூர் உன்னையும் என்னையும் கரை சேர்த்துடுவாராப்பா?

    இதோ பார்ரா… நமக்காக வாதாடப் போற லாயர் கிருஷ்ணாகபூர் சாதாரணமானவர் கிடையாது. வடநாட்டுல வித்யாகர் ஜோஷின்னு ஒரு எம்.பி அவன் பண்ணாத படுபாதகம் கிடையாது. பத்து வயசு பொண்ணிலிருந்து நாப்பது வயசு பொம்பளைங்க வரை நாசம் பண்ணியிருக்கான். தன் சொந்தப் பண்ணை வீட்டிலேயே பல பொண்ணுகளைத் தீர்த்துக் கட்டி அரவை மெஷின்களுக்குக் குடுத்து தீவனமாக்கி கோழிப்பண்ணைகளுக்கு சப்ளை பண்ணியிருக்கான். எட்டு பேர் ஐவிட்னஸ். ரெண்டு பேர் அப்ரூவராக மாறிட்டாங்க. இப்பேர்ப்பட்ட கேஸைக் கையில் எடுத்தார் லாயர் கிருஷ்ணாகபூர். ஒரே வருஷம்… கேஸ் தூள் பக்கோடாவாய் மாறி வித்யாகர்ஜோஷி வெளியே வந்துவிட்டார்.

    அப்போது... இன்டர்காம் கூப்பிட்டது. ரிஸீவரை எடுத்தார். மெயின் கேட்டிலிருந்து செக்யூரிட்டி பேசினார்.

    ஸார்...! நான் வீராச்சாமி.

    சொல்லு...

    பூர்ணிமான்னு ஒரு பொண்ணு... லாயர் அண்ணாஜிராவ் ஆபீஸிலிருந்து வந்துருக்கு... ஏதோ குற்றப்பத்திரிகை நகல் கொடுக்கணுமாம். உள்ளார அனுப்பட்டுங்களாய்யா...?

    அனுப்பு... பரணிகுமார் ரிஸீவரை வைத்துவிட்டு மகுடபதியை ஏறிட்டான். லாயர் குற்றப்பத்திரிகையைக் குடுத்து விட்டிருக்கார்... பூர்ணிமான்னு ஒரு பொண்ணு வந்திருக்கா.

    பொண்ணா...? மகுடபதியின் கண்களில் லேசாய் ஒரு கோட்டிங் காமம் தெரிந்தது.

    அடுத்த சில விநாடிகளில் தட்டப்பட்டது.

    உள்ளே வாம்மா... தயக்கமாய்க் கதவைத் திறந்துகொண்டு வந்தாள். கைகளைக் கூப்பினாள்.

    தலையணை சைஸில் இருந்த குற்றப்பத்திரிகையை டீபாயின் மேல் வைத்துவிட்டு மறுபடியும் கை கூப்பினாள் பூர்ணிமா.

    நான் வர்றேன் ஸார்...

    மகுடபதி கட்டியிருந்த தங்கப்பல் தெரிய சிரித்தார். அட... என்னம்மா... நீ... போஸ்ட்மேன் மாதிரி இதைக் கொடுத்துட்டுப் போகவா வந்தே...? உட்காரம்மா...! ஏதாவது ஜூஸ் சாப்பிட்டுப் போலாம்...

    அதெல்லாம் வேண்டாம் ஸார்... நான் உடனே கிளம்பணும். கல்யாணப் பத்திரிகை கொடுக்கிறதுக்காக தாம்பரம் வரை போகணும்.

    கல்யாணம் யாருக்கு...?

    எனக்குத்தான் ஸார்...

    அப்படியா... பரணி! கல்யாணப் பொண்ணுக்கு மொய்ப்பணம் குடுடா...

    அதெல்லாம் வேண்டாம் ஸார்...

    மகுடபதி சலித்துக்கொண்டார். என்னம்மா... நீ...? ஜூஸ் கொடுத்தாலும் வேண்டாங்கிறே...? பணம் கொடுத்தாலும் வேண்டாங்கிறே...? நாங்க கொடுக்கிறதுதான் உனக்கு வேண்டாம். நீயாவது எதையாவது குடுத்துட்டுப் போம்மா! பரணி...! கதவைச் சாத்தி தாழ்ப்பாள் போடு...! கிழட்டு லாயர்கிட்டே இப்படியொரு கிளி மாதிரி ஜூனியரா? பார்வையில் படவே இல்லையே...?

    பரணிகுமார் கதவைத் தாழிட எழுந்த விநாடி டீபாயின் மேல் இருந்த டெலிபோன் கூப்பிட்டது. எடுத்தான். மெல்ல குரல் கொடுத்தான்.

    ஹலோ!

    மறுமுனையில் அண்ணாஜிராவ் பேசினார். குரலில் பதட்டம்.

    ஒரு தப்பு நடந்து போச்சு.

    "தப்பா...! என்ன தப்பு...?

    "அப்பா குற்றப்பத்திரிக்கை நகல் வேணும்ன்னு கேட்டார். அவர் அவசரம்ன்னு சொன்னதால என்கிட்ட ஜூனியரா வேலை பார்க்கிற பூர்ணிமாகிட்டே கொடுத்துவிட்டேன். அந்தப் பொண்ணு அதை எடுத்துக்கிட்டு எலக்ட்ரிக் ட்ரெயினில் வரும்போது பொண்ணு ஒருத்தி பேச்சு கொடுத்து இருக்கா… அப்பிடியே பிஸ்கட்டை ஷேர் பண்ணியிருக்கா. பிஸ்கெட் சாப்பிட்ட பூர்ணிமா மயக்கத்துக்குப் போக... அவளை யாரோ ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்காங்க. அந்த ஹாஸ்பிடல்ல இருந்த ஒரு டாக்டர் என்னோட க்ளையண்ட். பூர்ணிமாவையும் அவருக்குத் தெரியும்.

    Enjoying the preview?
    Page 1 of 1