Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Bull Bull Paravai
Oru Bull Bull Paravai
Oru Bull Bull Paravai
Ebook94 pages56 minutes

Oru Bull Bull Paravai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written Rajeshkumar
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466893
Oru Bull Bull Paravai

Read more from Rajeshkumar

Related to Oru Bull Bull Paravai

Related ebooks

Related categories

Reviews for Oru Bull Bull Paravai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Bull Bull Paravai - Rajeshkumar

    1

    ‘கம்ப்யூட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்’

    சிமெண்டால் உருவாக்கப்பட்ட எழுத்துக்கள் - சிவப்பு பெயிண்டில் குளித்து காம்பௌண்ட் கேட்டின் மேல் உட்கார்ந்திருக்க - சுவரோரமாய் மாணவர்கள் கூட்டம். கண்களை கவ்விய குளிர் கண்ணாடிகள். வாய்களின் இடுக்குகளில் சிக்கியிருக்கும் சிகரெட்கள். கக்கங்களில் அதக்கப்பட்ட புத்தகங்கள்.

    மச்சி...

    சொல்லும்மா...

    வேதம் புதிது பாத்தியா...

    பாக்கலேம்மா... ஊர்லேர்ந்து எங்கப்பன் மணியார்டர் அனுப்பினாத்தான் சினிமாவைப் பத்தியே கனவு காண முடியும்... பணம் வந்ததும் மொத காரியமா ‘கண்ணே கலைமானே’ படத்துக்கு போகணும்...

    ஏம்மா... அந்தப் படத்துல... என்னயிருக்கு?

    அர்ச்சனா ஜாக்கெட் போடாம வர்றாளாம்...

    போஸ்டரைப் பார்த்துட்டு ஏமாந்துடாதே...

    இல்லேம்மா... நம்ம ஜக்கு சொன்னான்... படம் பூராவும் ஒரே... ஏதோ சொல்ல வந்த அந்த மாணவன் சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு தன் சக மாணவனைப் பார்த்தான்.

    மச்சி... ஒரு ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட் வர்றான்... ராக்கிங்ல அழுத்திடுவோமா...

    ம்... அழுத்து...

    அந்த மாணவன் குரல் கொடுத்தான்.

    டேய்...!

    முதல் வருஷ மாணவன் சிறுமுயல் போல் பயந்த பார்வையோடு ஓடி வந்தான். சீனியர் மாணவர்களிடம் மாட்டிக்கொண்டதால் வியர்த்துப் போயிருந்தான். குழறிக்கொண்டே ‘விஷ்’ செய்தான்.

    கு... கு... குட் மார்னிங் சார்...

    என்ன சொல்றே... குட் மார்னிங்கா...

    ஆ... ஆமா... சார்...

    நீ என்ன மவுண்ட்பேட்டன் பிரபு பரம்பரையா... குட் மார்னிங் சொல்றே? காலை வணக்கம்னு தமிழ்ல சொல்லுடா...

    காலை வணக்கம் சார்...

    உம் பேரென்ன?

    ரமேஷ் சார்...

    இன்ஷியலோட சேர்த்து சொல்லுடா...

    ஆர்.ரமேஷ்...

    எந்த ஊரு...?

    கம்பம்...

    உனக்கு பொது அறிவு இருக்கான்னு இப்போ நானும் இவனும் டெஸ்ட் பண்ணப் போறோம். கேக்கிற கேள்விக்கு ‘பளிச், பளிச்’ன்னு பதில் சொல்லணும்...

    ச... சரி... ஸார்...

    இந்தியாவோட தந்தை யார்?

    மகாத்மா காந்தி

    இந்தியாவோட அம்மா யாரு?

    தெரி... யலை... ஸார்...

    இதெல்லாம் தெரிஞ்சுக்காம எதுக்காக கம்ப்யூட்டர் சயன்ஸ் படிக்க வர்றே? சரி, அடுத்த கேள்விக்காவது யோசிச்சு பதில் சொல்லு... பனியனை உள்ளே போட்டு அதுக்கு மேலே நாம சர்ட்டைப் போட்டுக்கறோம். ஏன் சர்ட்டை உள்ளே போட்டுக்கிட்டு பனியனை மேலே போட்டுக்கக்கூடாது?

    புது மாணவன் விழித்தான்.

    சொல்லுடா...

    தெ... தெரியலை... ஸார்.

    இதெல்லாம் தெரிஞ்சுக்காமே ஏன்டா கம்ப்யூட்டர் சயன்ஸ் படிக்க வர்றே...! சர்ட்டை உள்ளே போட்டு பனியனை மேலே போட்டுக்கிட்டா பாக்கிறவங்களுக்கு அசிங்கமா இருக்குண்டா... தெரியுதா...

    தெரியுது ஸார்...

    உனக்கு சாமியாடத் தெரியுமா?

    தெரியாது ஸார்...

    சிகரெட் குடிப்பியா...?

    பழக்கமில்லை ஸார்...

    எந்தப் பொண்ணையாவது சைட் அடிச்சிருக்கியா...?

    இல்ல ஸார்...

    பின்னே எதுக்காகடா இவ்வளவு பெரிய உடம்பை வளர்த்து வெச்சிருக்கே... தினமும் எந்த பிளேடால் ஷேவ் பண்றே...?

    செவன்-ஓ-கிளாக்.

    இனிமே செவனோ கிளாக் பிளேடிலே ஷேவ் பண்ணாதே. பைவ்-ஓ-கிளாக் பிளேட்லேதான் பண்ணணும்.

    சரி... ஸார்...

    என்னடா சரி... அப்படியொரு பிளேடே இல்லாதபோது நீ எப்படி ஷேவ் பண்ணுவே...?

    மாணவன் விழித்தான். கண்கள் கலங்கிப் போய் நீர் முட்டிக்கொண்டு நின்றது. இன்னும் இரண்டு சீனியர் மாணவர்கள் சேர்ந்துகொள்ளவே ராகிங் சூடு பிடித்தது.

    அம்பிகா-ராதாவோட அம்மா பேரென்ன?

    "தெரியலை ஸார்...

    இதெல்லாம் தெரிஞ்சுக்காமே... எதுக்குடா... கம்ப்யூட்டரிங் சயன்ஸ் படிக்க வந்தே...!

    தப்புதான் ஸார்... நாளைக்கு தெரிஞ்சுக்கிட்டு வந்து சொல்றேன் ஸார்...

    "சரி இந்நேரம் தியரி பார்த்தோம்... இப்போ ஒரு பிராக்டிகல் கொஸ்டியன்... அதோ எதிர்த்த சைட்ல - பஸ் ஸ்டாப்ல ஒரு பொண்ணு நின்னுக்கிட்டு இருக்கா தெரியுதா?

    "தெரியுது ஸார்...

    அந்தப் பொண்ணுக்கிட்டே போய்... ஜாக்கெட்டுக்கு எவ்வளவு சென்டிமீட்டர் துணி எடுக்கிறான்னு கேட்டுட்டு வா...

    அந்த ரமேஷ் தயங்கினான்.

    ம்... போடா... போய் கேட்டுட்டு வாடா...

    ஸ... ஸார்... ஸ... ஸார்... பயம்மாயிருக்கு ஸார்...

    என்னடா... பயம்...? நாட்டுக்கு தேவையான ஒரு முக்கியமான ந்யூஸை தெரிஞ்சுக்கிட்டு வர்றதுக்காக நீ போயிட்டிருக்கே... தைரியமா போய் கேளுடா...

    ரமேஷ் நகர்ந்தான்.

    வைசாலி தன் மணிக்கட்டில் வெளிச்சமாய் மினுமினுத்த சிட்டிஸன் குவார்ட்ஸில் பார்வையைப் பதித்துவிட்டு - பஸ் வருகிறதாவென்று திரும்பிப் பார்த்தாள்.

    பஸ்ஸின் அலுமினிய முகம் தெரியாமல் போகவே லேசாய் சோர்ந்து முணுமுணுத்தாள். "பாழாப்போற

    Enjoying the preview?
    Page 1 of 1