Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Everest Thottuvidum Uyaramthaan
Everest Thottuvidum Uyaramthaan
Everest Thottuvidum Uyaramthaan
Ebook313 pages1 hour

Everest Thottuvidum Uyaramthaan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'நம்மால் எதையும் சாதிக்க முடியும்' என்கிற ஒரு மகத்தான உண்மையைத்தான் இந்தப் புத்தகம் உங்களுக்கு சுலபமாய் பாடம் நடத்த வருகிறது.

இது இளம் எழுத்தாளர்களுக்கானது மட்டுமல்ல, எந்தத்துறையாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, இந்தப் புத்தகத்தைப் படித்த பின் அவர்கள் அந்த துறையில் எவரெஸ்ட் உச்சியைத் தொடுவது சர்வ நிச்சயம்.

எவரெஸ்ட் தொட்டுவிடும் உயரம்தான், மின்மினி வார இதழில் 1986ஆம் ஆண்டு ஒரு தொடராக வெளிவந்தது.

மிக்க அன்புடன்

ராஜேஷ்குமார்

Languageதமிழ்
Release dateJul 8, 2023
ISBN6580100410038
Everest Thottuvidum Uyaramthaan

Related to Everest Thottuvidum Uyaramthaan

Related ebooks

Reviews for Everest Thottuvidum Uyaramthaan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Everest Thottuvidum Uyaramthaan - Rajeshkumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    எவரெஸ்ட் தொட்டுவிடும் உயரம்தான்

    Everest Thottuvidum Uyaramthaan

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajeshkumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியர் அறிமுகம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    ஆசிரியர் அறிமுகம்

    E:\Priya\Book Generation\Everest\1-min.jpg

    ராஜேஷ்குமார்

    1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி கோவை மாநகரில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் கே.ஆர்.ராஜகோபால். எழுத்துக்காக ராஜேஷ்குமார் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். இவரின் முதல் சிறுகதை உன்னைவிட மாட்டேன் 1969ம் வருடம் மாலை முரசு கோவை பதிப்பில் வெளிவந்தது. 1980வது வருடம் இவருடைய முதல் நாவல் வாடகைக்கு ஓர் உயிர் மாலைமதி மாத இதழில் வெளிவந்தது. அதே வருடம் கல்கண்டு வார இதழில் ஏழாவது டெஸ்ட் ட்யூப் என்ற முதல் தொடர்கதை வெளியானது.

    கடந்த 53 ஆண்டுகளில், இதுவரை 1500 மேற்பட்ட நாவல்கள் 2000 மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இதைத்தவிர, நூற்றுக்கணக்காண அறிவியல், சமூக, ஆன்மிக மற்றும் வாழ்வியல் கட்டுரைகள் படைத்துள்ளார். அவற்றில் ஸார் ஒரு சந்தேகம்!, வாவ்! ஐந்தறிவு, எஸ் பாஸ், சித்தர்களா! பித்தர்களா!! முக்கியமானவை. என்னை நான் சந்தித்தேன் என்ற தலைப்பில் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை சுவராஸ்யமான நடையில் எழுதியுள்ளார். இது மிகச் சிறந்த சுயமுன்னேற்ற நூலாகவும் பார்க்கப்பட்டு பாராட்டப்படுகிறது.

    இவரது சில தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்கள் பிராந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய நாவல்கள் பல, திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன.

    தான் எழுதிய குற்ற புதினங்களில், நவீன அறிவியலையும் பல புதுமைகளையும் புகுத்தி தனிமுத்திரை பதித்ததால், வாசகர்களும் பதிப்பாளர்களும் இவரை ‘க்ரைம் கதை மன்னர்’ என்று அழைக்கிறார்கள். இந்த 2023 வருடத்திலும் பல முன்னணி அச்சிதழ்களிலும் மின்னிதழ்களிலும் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

    எழுத்துலகில் இவர் ஆற்றிய சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022ல் அங்கீகரித்துள்ளது. இவர்க்கு தமிழக அரசு, 2010ல் கலைமாமணி விருது வழங்கி சிறப்பு செய்துள்ளது.

    E:\Priya\Book Generation\Everest\2-min.jpg

    ‘நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்கிற ஒரு மகத்தான உண்மையைத்தான் இந்தப் புத்தகம் உங்களுக்கு சுலபமாய் பாடம் நடத்த வருகிறது.

    இது இளம் எழுத்தாளர்களுக்கானது மட்டுமல்ல, எந்தத்துறையாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, இந்தப் புத்தகத்தைப் படித்த பின் அவர்கள் அந்த துறையில் எவரெஸ்ட் உச்சியைத் தொடுவது சர்வ நிச்சயம்.

    எவரெஸ்ட் தொட்டுவிடும் உயரம்தான், மின்மினி வார இதழில் 1986-ஆம் ஆண்டு ஒரு தொடராக வெளிவந்தது.

    மிக்க அன்புடன்

    E:\Priya\Book Generation\Everest\3-min.jpg

    1

    காக்ஸ் ரோடு.

    பரிமளம் ஏஜென்சீஸ் வாசலில் என் சுவேகா மொபட்டை மௌனமாக்கி இறங்கினேன். மொபட்டை ஸ்டாண்டிட்டு நிறுத்தி, தலையிலிருந்த ஹெல்மெட்டை கைக்குக் கொண்டு வந்து வாசற்படியேற நண்பர் சுப்ரமணியம் ஓடிவந்தார். ஒடிசலான தேகம், படிய வாரிய சுருண்ட கிராப், பிறழாத பல் வரிசையில் சிரித்து வாங்க ராஜேஷ் என்றார்.

    ஷ்யாம் வந்துட்டாரா...? நான் வாயைத் திறந்து கேட்பதற்குள் ஷ்யாம் உள்ளேயிருந்து ஆர்வமாய் எழுந்து வந்து என் கையைப் பற்றிக் கொண்டார்.

    வாங்க ராஜேஷ்... எப்படியிருக்கீங்க…?

    ஏதோ உங்க ஆசீர்வாதத்துல நான் நல்லா எழுதறதா மத்தவங்க சொல்றாங்க. எனக்கும் மாத நாவல்களுக்கு ஒத்துக்கிட்டு எழுத நேரமில்லை...

    இதெல்லாம் ஒரு சீசன்... எழுத்தாளர்கள் வர்ற வாய்ப்பை பயன்படுத்திக்கணும்... நீங்க விடாதீங்க எழுதித் தள்ளுங்க.

    நான் அந்த மாதிரி எழுதறதாயில்லை மிஸ்டர் ஷ்யாம். பணத்துக்கு ஆசைப்பட்டு எல்லா மாத நாவல்களுக்கும் எழுத ஆரம்பிச்சோம்னா... எழுதப்படற நாவல்கள்ல வெரைட்டி இருக்காது. கதையை சொல்ற பாணியிலேயும், சம்பவங்கள்லேயும் ஒருவித ஸ்டீரியோத்தனம் வந்துடும். நாவலைப் படிக்கிற வாசகன் சீக்கிரமாய் அந்த எழுத்தாளனை புரிஞ்சிக்குவான். மாசத்துக்கு ரெண்டு நாவல் வந்தா... அந்த எழுத்தாளனுடைய எழுத்து ஆரோக்கியமா இருக்கும்.

    யூ ஆர் கரெக்ட் ராஜேஷ்... எங்கள் பேச்சை செவிமடுத்து சுப்ரமணியம் தன் வெண்கலக் குரலில் கணீரென்று சொல்லிப் பாராட்டினார்.

    பேசிக் கொண்டிருக்கும் போதே,

    சுப்ரமணியத்தின் வீட்டிலிருந்து சுடச்சுட காபி வந்தது. ஒரு வாய் காப்பியை விழுங்கிக் கொண்டே கேட்டேன், என்ன ஷ்யாம் ஸார்... திடீர்ன்னு கோயமுத்தூர் வந்திருக்கீங்க. என்ன விஷயம்...?

    நான் ஒரு பத்திரிகை ஆரம்பிக்கப் போறேன்...

    மாத நாவலா...?

    நோ... நோ... வாரப் பத்திரிகை...

    பத்திரிகைக்கு என்ன பேர் வெக்கப் போறீங்க?

    மின்மினி… அதுல நீங்க எழுதப் போறீங்க.

    என்ன ஸார்... வழக்கமான பாட்டுக்கே வந்துட்டீங்க. நான் எல்லாப் பத்திரிகைக்கும் எழுதிட்டிருக்கேன். இப்போ ரொம்பவும் டைட் சிட்சுவேஷன்... இப்போ போய் மின்மினிலேயும் எழுதச் சொல்றீங்களே...?

    நீங்க நாவலோ தொடர்கதையோ எழுத வேண்டாம்.

    பின்னே...?

    கிரிமினாலஜியைப் பத்தின கட்டுரை மாதிரி எழுதுங்க.

    அதெல்லாம் வேண்டாம் ஸார்... அதை படிக்க ஆரம்பிச்சா கொட்டாவி வந்துடும்.

    அப்போ கேள்வி பதில்...

    இது பழசு ஸார்...

    பின்னே என்ன பண்ணலாம்? நீங்கதான் சொல்லுங்களேன்.

    சுப்ரமணியம் குறுக்கிட்டார்.

    இந்த சமுதாய சீர்கேடுகளை மையமா வெச்சுக்கிட்டு ஒரு சோசியல் நாவல் எழுதி சமுதாயத்தை பிச்சு உதறுங்களேன்.

    வேண்டாங்க சுப்ரமணியம் ஸார். சமுதாயம் ஏற்கனவே பலபேர்கிட்ட உதைவாங்கி நலிஞ்சி போயிருக்கு. நானும் என் பங்குக்கு அதை பிச்சு உதற ஆரம்பிச்சா தாங்காது...

    அப்போ எங்க மின்மினிக்கு உங்க காண்ட்ரிப்யூஷன் என்ன?

    ஷ்யாம் ஸார்... 1968ல் எழுத ஆரம்பிச்சேன். மொதல்ல சுமார் பத்து வருஷம் பத்திரிகைகள்ல எழுத எனக்கு அவ்வளவா வாய்ப்பு கிடைக்கலை... எழுதின கதைகள்ல பாதி கதை எனக்கே திரும்பி வந்தது. அந்த சமயத்துல எழுத நேரம் இருந்தது. ஆனா இப்போ இந்த 87 ஆம் வருஷத்துல எழுதறதுக்கு அவகாசம் இல்லை.

    ஷ்யாம் விரலைச் சொடுக்கினார்.

    இப்படி செஞ்சா என்ன ராஜேஷ்?

    எப்படி?

    நீங்க இந்த எழுதற ஃபீல்டுக்கு வந்து பத்தொன்பது வருஷமாச்சுன்னு சொன்னீங்க...

    ஆமா...

    போட்டியும், பொறாமையும் நிறைஞ்ச எழுத்துலகத்தில நீங்க எதிர் நீச்சல் போட்டு இன்னிக்கு ஒரு நிலையான இடத்தை பிடிச்சிருக்கீங்க.

    அதை நீங்க சொல்லணும்.

    ஷ்யாம் சிரித்துவிட்டு தொடர்ந்தார். நீங்க இந்த எழுத்துத் துறைக்கு எப்படி வந்தீங்க...? உங்க எழுத்தார்வத்துக்கு யார் காரணம்...? போட்டி நிறைஞ்ச இந்த ஃபீல்டுல எப்படி முன்னுக்கு வந்தீங்க? நீங்க சந்தித்த எழுத்தாளர்கள், பத்திரிகையாசிரியர்கள், வாசகர்கள் அவர்களோடு உங்களுக்கு நேரிட்ட கசப்பான அனுபவங்கள், இனிப்பான சம்பவங்கள், இதைப் பத்தி நீங்க எழுதலாமே... ராஜேஷ்?

    நான் கன்னத்தை தேய்த்துக் கொண்டு யோசித்தேன்.

    என்ன யோசிக்கறீங்க...?

    நல்ல கான்செப்ட் தான்... ஆரம்பிச்சிடலாம்.

    அடுத்தநாளே அதற்கு தயார் ஆனேன்.

    2

    கோவை. வருடம் 1968.

    அரசினர் கல்லூரி. மார்ச் மாதத்தில் ஒரு மத்தியான நேரம். தமிழ் வகுப்பு. தமிழ்ப் பேராசிரியர் வராததால் - வகுப்பறை முழுவதும் சளசளவென்று சத்தம். காலரியின் உச்சியில் நானும் என் நண்பர்களும் உட்கார்ந்திருந்தோம். என்னுடைய நண்பர் குழாமில் நெருங்கின ஒப்பற்ற நண்பர்கள் தண்டபாணியும், ஜோதிவேலும்.

    டேய் கேயார்... சாயந்தரம் எங்கே போகலாம்? தண்டபாணி கேட்டான். என் பெயருக்கு முன்னால் இருக்கும் K.R. இன்ஷியல்தான் எல்லோர்க்கும் பெயர்.

    சினிமா என்றேன்.

    வேண்டாம்... எக்ஸிபிஷன் போகலாம்... இன்னிக்கு ஆர்.எஸ்.மனோகர் நாடகம்... என்றான் தண்டபாணி.

    பேசிக் கொண்டிருக்கும் போதே தமிழாசிரியர் உள்ளே நுழைந்தார். எல்லோரும் எழுந்து நின்று உட்கார்ந்தோம்.

    அவர் வகுப்பு எடுப்பதற்கு முன்பாக - மேடைக்கு முன்பாக வந்து நின்றார். சற்று நேரத்திற்கு முன்னால்தான் அனைத்துக் கல்லூரிகளின் சார்பில் கல்லூரி முதல்வர்க்கு ஒரு சுற்றறிக்கை வந்தது. வெளியிடப் போகும் ஆண்டு கல்லூரி மலரில் சிறுகதைகள் இடம் பெறப் போவதால் சிறுகதை எழுதத் தெரிந்த மாணவர்கள் கண்டிப்பாய் சிறுகதை எழுதித் தர வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளார். நம் வகுப்பில் யாருக்கு சிறுகதை எழுத வரும்...?

    வகுப்பில் கனமான நிசப்தம்.

    ஆசிரியர் தொடர்ந்தார், ஜெயகாந்தன் மாதிரியோ, அகிலன் மாதிரியோ... கதை எழுத வேண்டும் என்று நான் சொல்லவில்லை. கதை சுமாராய் எழுதத் தெரிந்திருந்தாலே போதும். யாருக்கு எழுத வரும்...?

    நானும் யோசித்துப் பார்த்தேன்.

    ‘இந்த வகுப்பில் யாருக்கு கதை எழுத வரும்...?’

    ‘பாலசுப்ரமணியம் எழுதுவானா...? ஊஹூம்... அவன் மேடையேறி நல்லா பேசுவான்... அவ்வளவுதான்…’

    நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே,

    திடீரென்று,

    என் முதுகுக்குப் பின்னாலிருந்து அந்தக் குரல் கேட்டது.

    ஸார்... ராஜகோபாலுக்கு கதை எழுத வரும் ஸார்... ராஜகோபாலும் என்னுடைய நாமகரணம். மற்றவர்களை வம்புக்கிழுத்து மாட்டவைக்கும் பிரபாகரன் பின்னாலிருந்து சொல்ல ஆசிரியர் நிமிர்ந்தார்.

    யாரது ராஜகோபால்...?

    நான்தான் ஸார் எழுந்து நின்றேன் தயக்கமாய்.

    உனக்கு கதை எழுத வருமா...?

    வராது ஸார்... பிரபாகரன் வேணும்ன்னே சொல்றான்...

    பிரபாகரன் சீரியஸாய் எழுந்து நின்றான். ஸார்... இவன் நல்லா கதை எழுதுவான் ஸார்... என்கிட்டே சொல்லியிருக்கான்... அவனை விடாதீங்க ஸார்...

    ஆசிரியர் ஒரு நம்பிக்கையான பார்வையோடு என்னைப் பார்த்தார். உன்கிட்டே இருக்கிற திறமையை எதுக்காக இல்லேன்னு சொல்றே...? கதை எழுதறது என்ன கிரிமினல் குற்றமா...?

    நிஜமாத்தான் சொல்றேன் ஸார்... எனக்கு கதை எழுதத் தெரியாது. கதைப் புஸ்தகம் படிக்கிறதுல கூட இன்ட்ரெஸ்ட் கிடையாது... நான் பேசப் பேச பிரபாகரனின் கண் அசைவுக்குக் கட்டுப்பட்ட அவனுடைய சகாக்கள் கோரஸாய் எழுந்து நின்று கத்தினார்கள்.

    ஸார்... பொய் சொல்றான் ஸார்... ராஜகோபால் அட்டகாசமாய் கதை எழுதுவான் ஸார்... அவ்வளவுதான்.

    ஆசிரியர் தீர்மானமாய் நம்பிவிட்டார்.

    சரி நாளைக்கு வர்றப்ப... அஞ்சு பக்கத்துலே ஒரு கதை எழுதிட்டு வந்துடு... காதல் கதையெல்லாம் வேண்டாம்... ஏதாவது படிப்பினை இருக்கிற மாதிரி கதை எழுது. அதுக்காக அம்புலிமாமா மாதிரி எழுதிட்டு வந்திடாதே...

    ஸார் எனக்குக் கதை எழுதத் தெரியாது ஸார்… நான் கரடியாய் நின்று கத்தியதை அவர் பொருட்படுத்தாமல் மனோன்மணீயம் நாடகத்தை நடத்த ஆரம்பித்தார்.

    ஸார்...

    உட்கார்... நாளைக்கு வகுப்புக்கு வர்றப்ப கதையோட வந்துடு...

    எழுதத் தெரியாது ஸார்...

    பேசாதே உட்கார்... என்னை அதட்டல் போட்டு உட்கார்த்திவிட்டு அவர் பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.

    நான் உட்கார்ந்து கொண்டே பிரபாகரனை திரும்பிப் பார்த்து முறைத்தேன். ஏண்டா இப்படி சொன்னே...?

    இதெல்லாம் சும்மா... ஒரு ஜாலிம்மா... கண்டுக்காதே...! ஏதாவது கதை பண்ணி கொண்டாந்துடு...

    அடப்பாவி...!

    தண்டபாணி என்னை சமாதானப்படுத்தினான். க்ளாஸ் முடிஞ்சதும் புரபசர்கிட்டே அவர் ரூமுக்கே போய் சொல்லிக்கலாம்... இப்ப நீ என்ன சொன்னாலும் எடுபடாது.

    அவன் சொன்னது போல் பேசாமல் உட்கார்ந்து கொண்டேன்.

    ஒரு மணி நேரம் கழித்து வகுப்பு முடிந்தது. தமிழ்ப் பேராசிரியர் அறையை விட்டு வெளியேறும் போதே அவரைப் பின்தொடர்ந்தேன்.

    ஸார்... நிஜமா எனக்கு கதை எழுதத் தெரியாது ஸார்... அந்த பிரபாகரன்...சும்மா உங்ககிட்டே பொய்... சொல்லி...

    அவர் சட்டென்று நின்றார்.

    உனக்குக் கதை எழுதத் தெரியாதா...?

    தெரியாது ஸார்...

    தெரியாதுன்னா எழுதப் பழகு... நாளைக்கு வர்றப்ப நீ எதையாவது ஒண்ணை எழுதிட்டு வா... நான் திருத்தித் தர்றேன்.

    நான் விக்கித்துப் போய் நிற்க அவர் புன்சிரிப்போடு நகர்ந்து விட்டார்.

    மாலை வீட்டுக்கு வந்தேன்.

    வழக்கமாய் கல்லூரி பாடங்களில் அமிழ்ந்துவிடும் நான், அன்றைக்கு ஸ்டோர் ரூமிலிருந்த பழைய வார இதழ்களைக் கிளற ஆரம்பித்தேன். ஆனந்த விகடன், குமுதம், கல்கி சிரத்தையாய் பிரித்து வைத்துக் கொண்டு, அதில் வந்துள்ள கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.

    அம்மா கேட்டாள். என்னடா கோபால்... காலேஜிலிருந்து வந்ததும் வராததுமா ஸ்டோர் ரூமுக்குள்ளே பூந்துகிட்டு புஸ்தகம் படிச்சிட்டிருக்கே...?

    வாத்தியார் கதை எழுதச் சொல்லிட்டாரு... மூக்கால் அழுதேன்.

    வாத்தியார் கதை எழுதச் சொன்னாரா...? ஆமா நீ கதை கூட எழுதறியா?

    அய்யோ அம்மா... நீ வேற ஏம்மா என்னை இம்சை செய்றே...? நாலைஞ்சு சென்டன்ஸை ஒழுங்கா பார்ம் பண்ணி ஒரு லெட்டர் எழுதக் கூட எனக்கு வராது. அந்த பிரபாகரன் என்னை வாத்தியார்கிட்டே மாட்டி விட்டுட்டான்.

    கதை எழுதத் தெரியாதுன்னு நீ சொல்ல வேண்டியது தானே...?

    சொல்லிப் பார்த்துட்டேன். அவர் கேக்கிற மாதிரியில்லம்மா... எழுதத் தெரியாதுன்னா எழுதிப் பழகுன்னு சொல்லிட்டார்...

    சரி... என்ன பண்ணப் போறே...?

    அதான் புரியாமே... பழைய விகடன், குமுதம் புரட்டிப் பார்த்துட்டிருக்கேன். யார் யார் எப்படி எழுதியிருக்காங்கன்னு பார்த்து அதே மாதிரி எழுதிக் கொடுத்துடலாம்னு நினைக்கிறேன்...

    என்னத்தையோ பண்ணு... ஸ்டோர் ரூமாவது கொஞ்சம் சுத்தமாகட்டும். அம்மா முனகிக் கொண்டே போய்விட்டாள்.

    நான் கரப்பான் பூச்சிகள் மேல் ஏறி ஊர்வதையும் பொருட்படுத்தாமல் கதைகளை படிக்க ஆரம்பித்தேன். குமுதத்தில் ரா.கி.ரங்கராஜன் எழுதியிருந்த ஒரு சிறுகதை மனசுக்கு ரொம்பவும் பிடித்துப் போயிற்று. ‘அதை உல்டா பண்ணிப் பார்க்கலாமா...?’

    உல்டா பண்ணுவதற்காக - மூளையை கசக்கிக் கொண்டேன்.

    எதுவுமே தோன்றவில்லை. உல்டா பண்ணுவதற்கும் ஒரு தனித்திறமை வேண்டும் என்று அப்போதே புரிந்தது. விகடனில் ஜெயகாந்தனின் முத்திரைக்கதை ஒன்றை படித்தேன். கதையில் உள்ள சாராம்சம் என் மண்டைக்கு உரைக்கவே ஏராளமான நிமிஷமாயிற்று.

    பதினோரு வயதான என் கடைசி தங்கை ராஜேஸ்வரி ஸ்டோர் ரூமுக்குள் வந்தாள்.

    அண்ணா…

    நான் ஏறிட்டேன். என்ன...?

    நீ கதை எழுதப்போறியாமே...?

    உனக்கு யார் சொன்னா?

    அம்மா

    நான் முறைத்தேன். என் முறைப்பை பொருட்படுத்தாமல் அவள் கேட்டாள். என்ன கதை எழுத போறேன்ணா...?

    காக்கா நரிக்கதை... நான் எரிச்சல் பட்டுக் கொண்டேன்.

    அது வேண்டாண்ணா... எல்லோர்க்கும் தெரியும். வேற எதையாவது எழுது... என சிரிக்க

    சரி... நீ மொதல்ல வெளியே போ...

    அவள் போன பிறகு, இன்னும் நான்கைந்து கதைகளைப் படித்து விட்டு எதுவும் தோன்றாமல் வெளியே வந்தேன். ‘காலார நடந்து போனால் நம்ப மூளைக்கு ஏதாவது தோணுமோ...?’

    சர்ட்டை மாட்டிக் கொண்டு - தெருவில் இறங்கினேன். தெருமுனையில் இருக்கும் பெட்டிக்கடை, மளிகைக் கடையைத் தாண்டியிருக்க மாட்டேன். மளிகைக் கடை அண்ணாச்சி கூப்பிட்டார். தம்பி...!

    நின்றேன்.

    பழக்க தோஷத்தால் புன்னகைத்தேன்... என்ன அண்ணாச்சி...?

    அண்ணாச்சி தன் தாம்பூல வாயை பிளந்து எச்சிலை ஒரு பக்கமாய்த் துப்பிவிட்டு சிரிப்போடு கேட்டார். ஆயிரம் பேர் படிக்கிற நாட்டிலே நீங்கதான் கதை எழுதணும்னு வாத்தியார் சொல்லிட்டாராமே நெஜமா தம்பி...?

    உங்களுக்கு யார் சொன்னது...?

    உங்க வீட்டு வேலைக்காரி பாக்கியம்...

    3

    என் மனசுக்குள் சந்தோஷம் கொப்பளித்தது.

    ‘கல்லூரியில் நான்கு சுவர்களுக்கு மத்தியில் தமிழ் பேராசிரியர் என்னை கதை எழுதச் சொன்ன விஷயம் எங்கள் தெரு மளிகைக்கடை அண்ணாச்சிக்கு எப்படித் தெரிந்தது?’ என் வார்த்தைகளில் லேசாய் பெருமை அப்பிக் கொண்டது.

    ஆமா கதை எழுதப்போறேன். அவர் வெற்றிலைக் காவிப்பற்களில் சிரித்தார். (அவருடைய காவிப் பல் வரிசையைப் பார்க்கும் போதெல்லாம் என் மனசுக்குள் ஒரு ஆத்திரமான எண்ணம் தோன்றும். அவருடைய கையையும் காலையும் கட்டிபோட்டு ஆசாமியை மல்லாக்கக் கிடத்தி வாயைப் பிளக்க வைத்து ஒரு பிரஷ்ஷால் அந்தப் பற்களை தேய்த்துவிட வேண்டும் போல் தோன்றும்...)

    என்ன கதை எழுதப்போறீங்க...?

    இனிமேத்தான் யோசிக்கணும்...

    சாண்டில்யன் மாதிரி ஒரு சரித்திரக் கதை எழுதுங்க தம்பி...

    பிரமாதமா எழுதிடுவேன்... ஒரு அஞ்சு நிமிஷம் உட்கார்ந்து யோசிச்சா போதும். கதையோட சம்பவங்கள் மளமளன்னு கொட்டும்...

    அப்படி இல்லாமலா உங்க காலேஜிலேயே உங்களை மாத்திரம் செலக்ட் பண்ணி கதை எழுத சொல்லியிருக்காங்க... மூஞ்சியில அந்தக்களை எல்லார்க்குமே வந்துடாதே…? மளிகை கடை அண்ணாச்சி என்னைப் பாராட்டிக் கொண்டிருக்கும் போதே,

    என் முதுகில் ஒரு கை விழுந்தது.

    திரும்பினேன்.

    என்னுடைய நண்பர்கள் தண்டபாணியும், ராமச்சந்திரனும் நின்றிருந்தார்கள். இருவரும் என்னை அனுதாபத்தோடு பார்த்தார்கள்.

    கண்களில் சோடாபுட்டி கண்ணாடியோடு, ராமச்சந்திரன் கவலையான குரலில் கேட்டான்.

    "என்னடா கேயார்... உன்னை கதை

    Enjoying the preview?
    Page 1 of 1