Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pooja Pudhudelhi Boogambam
Pooja Pudhudelhi Boogambam
Pooja Pudhudelhi Boogambam
Ebook274 pages1 hour

Pooja Pudhudelhi Boogambam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Pooja Pudhudelhi Boogambam

Read more from Rajeshkumar

Related to Pooja Pudhudelhi Boogambam

Related ebooks

Related categories

Reviews for Pooja Pudhudelhi Boogambam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pooja Pudhudelhi Boogambam - Rajeshkumar

    26

    1

    புதுடெல்லி. சாணக்யா தியேட்டரின் வெல்வெட் இருட்டில் விக்னேஷ் தன்னுடைய இளம் மனைவி பூஜாவின் கூந்தலை வாசம் பிடித்துக் கொண்டிருந்தான். அழகான பூஜா இன்னமும் அழகாய் சிணுங்கினாள். விட்ட வெப்பமான மூச்சுக் காற்றில் பெப்பர்மிண்ட் வாசம்.

    எ... எ... என்னங்க... இது?

    எது...?

    படத்தைப் பார்க்காமே என்னையே பாத்துகிட்டிருக்கீங்க?

    படத்துல என்ன இருக்கு? ஷாரூக்கான் குட்டிக்கர்ணம் அடிச்சு டூயட் பாடற கண்ராவியை யெல்லாம் பார்க்கிறதுக்காகவா நான் வந்தேன்?

    பின்னே?

    என்னோட பூஜாவை இப்படி இருட்ல சுவாசிக்கத்தான் வந்தேன். ஆமா... நீதான் எந்த பெர்ஃப்யூமையும் யூஸ் பண்றது இல்லையே... எப்படி உடம்புல இப்படியொரு வாசம்...?

    இது ஏ.ஸி. தியேட்டர். ராத்திரி செகண்ட் ஷோ. இவ்வளவு பெரிய ஐஸ் கட்டியை என் தலையில் வைக்கணுமா?

    பூஜா...! இது ஐஸ் கிடையாது. அப்பட்டமான அக்மார்க் உண்மை. ஆறு மாசத்துக்கு முந்தி... மணவறையில் எனக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தபோதே இந்த காக்டெயில் பூ வாசம் அடிச்சது...

    காக்டெயில் பூ வாசமா...?

    உலகத்தில் இருக்கிற எல்லாப் பூக்களையும் மிக்ஸ் பண்ணின மாதிரி ஒரு வாசனை...

    உடான்ஸ்...

    அய்யோ... இது உடான்ஸ் கிடையாது. ஊர்ஜிதம் செய்யப்பட்ட உண்மை...

    எது எப்படியோ... ஒரு தமிழ்ப் பழமொழியை பொய்யாக்கிட்டீங்க...

    பூஜா...! நீ என்ன சொல்றே?

    ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்ன்னு தமிழ்ல ஒரு பழமொழி இருக்கு. அதைப் பொய்யாக்கிட்டீங்க. நமக்கு கல்யாணமாகி 180 நாளாகியும் உங்களுக்கு ஆசையும் தீரலை. மோகமும் தீரலை...

    உன்னை மாதிரி ஒவ்வொருத்தருக்கும் பெண்டாட்டி கிடைச்சா அந்தப் பழமொழியைத் தார்பூசி அழிச்சிட வேண்டியதுதான்...

    விக்னேஷ் சொல்லி சிரித்துக் கொண்டிருக்கும்போது இரண்டு வரிசை தள்ளி... கையில் டார்ச் லைட்டோடு தியேட்டர் சிப்பந்தி ஒருவர் ஹிந்தியில் கேட்டுக் கொண்டிருந்தார்.

    விக்னேஷ் கோன் ஹை...?

    பூஜா முகம் மாறி... கணவனின் தோளைத் தொட்டாள். என்னங்க... அந்த ஆள் உங்க பேரைச் சொல்றான்?

    அதானே... இரு... கேட்போம்...

    விக்னேஷ் சற்றே பதட்டமாகி எழுந்தான். அந்த டார்ச் நபரை நோக்கி குரல் கொடுத்தான். இதர் ஆவ்னா...!

    அவன் வந்தான். டார்ச் வெளிச்சத்தால் விக்னேஷை நனைத்தபடி கேட்டான்.

    ஆப்... விக்னேஷ்...?

    ஹாங்...

    மெட்ராஸி...?

    ஹாங்...

    அந்த சிப்பந்தி ஹிந்தியில் தொடர்ந்தான். உங்களுக்கு டெலிபோன் கால். தியேட்டரின் மானேஜர் அறைக்கு வாருங்கள்...

    டெலிபோனில் யார்...?

    தெரியவில்லை...

    விக்னேஷ், பூஜாவிடம் திரும்பினான். பூஜா! நீ படம் பார்த்துட்டிரு... நான் போய்... ஃபோன்ல யார்ன்னு பார்த்துட்டு வந்துடறேன்...

    இருங்க... நானும் வர்றேன்...

    விக்னேஷ் வேகமாய் மானேஜரின் அறைக்கு போய்- ரிஸீவரை எடுத்து காதுக்கு ஒட்ட வைத்தான்.

    எஸ்...

    விக்னேஷ்...?

    எஸ்... ஸ்பீக்கிங்...

    நான் தாரகராம்... மறுமுனையில் விக்னேஷின் மேலதிகாரி பேசினார்.

    சொல்லுங்க ஸார்...

    ஸாரி. உன்னோட சினிமா பார்க்கிற சந்தோஷத்தைக் கெடுத்துட்டேன்...

    நோ ஸார்! சினிமா ஒரு பெரிய விஷயமே கிடையாது. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண வந்தேன். தட்ஸ் ஆல். என்ன விஷயம் ஸார்?

    ரெட் செல் மாஸ்டர் கீ உன்கிட்ட தானே இருக்கு?

    ஆமா ஸார்!

    அந்த கீ உடனடியா வேணும். கொஞ்சம் ப்ளாண்ட் வரைக்கும் வந்துட்டுப் போறியா?

    கீ உடனே வேணுமா ஸார்?

    இல்லேன்னா... இந்த அகால நேரத்துல உனக்கு ஃபோன் பண்ணுவேனா?

    ஸார்... நான் சினிமா தியேட்டரில் இருக்கிறது உங்களுக்கு எப்படி...?

    தெரியும்னு கேட்கறியா? உன்னோட கார் ராத்திரி ஒன்பதரை மணிக்கு சாணக்யா தியேட்டருக்குள் நுழையறதை உன்னோட கொலீக் கிரண்குமார் பார்த்திருக்கார். நான் உன்னோட செல்லுக்கு ஃபோன் பண்ணி அங்கிருந்து ரெஸ்பான்ஸ் கிடைக்காம போகவே, கிரண்குமாரோட செல்லுக்கு கான்டாக்ட் பண்ணினேன். நீ சினிமாவுக்குப் போயிருக்கிறதை அவர்தான் சொன்னார்...

    ஸாரி ஸார். என்னோட செல்போனை கார்லயே வெச்சுட்டு வந்துட்டேன்...

    அடாமிக் ரிசர்ச் சென்டரில் ஒரு பொறுப்பான உத்யோகத்தில் இருக்கிற நீ செல்போனை இருபத்தி நாலு மணி நேரமும் கையிலேயே வெச்சுட்டிருக்க வேண்டாமா?

    எக்ஸ்ட்ரீம்லி ஸாரி ஸார்...

    ஓ.கே. ஸாரி சொன்னது போதும். உடனே மாஸ்டர் கீயை எடுத்துக்கிட்டு ப்ளாண்ட்டுக்கு வா...

    எஸ்... ஸார்...

    விக்னேஷ் ரிஸீவரை வைத்து விட்டு தியேட்டர் மானேஜருக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தான். காத்திருந்த பூஜா கேட்டாள்.

    ஃபோன்ல யார்ங்க? உங்க மேலதிகாரி தானே?

    விக்னேஷ் தன் வியர்த்த முகத்தை கர்ச்சீப்பால் ஒற்றிக் கொண்டு பூஜாவை ஏறிட்டான்.

    பூஜா!

    என்னங்க... ஒரு மாதிரியாயிட்டீங்க?

    ஃபோன்ல என்னோட மேலதிகாரி அடாமிக் வைஸ் சேர்மன் தாரகராம் பேசினார். என்னோட பொறுப்பில் இருக்கிற ப்ளாண்ட்டோட மாஸ்டர் கீயை உடனே கொண்டுட்டு வரும்படி சொன்னார்...

    சரி... அதுக்கு ஏன் இப்படி வேர்த்து வழியறீங்க?

    ஃபோன்ல பேசினது தாரகராம் கிடையாது...

    பின்னே...?

    அவரோட வாய்ஸ்ல வேற யாரோ பேசியிருக்காங்க...

    2

    பூஜாவின் ரோஜா நிற முகம் பயத்துக்குள் விழுந்தது. அவளுடைய பெரிய விழிகள் அப்படியே ஸ்டில் போட்டோ மாதிரி உறைந்து கணவன் விக்னேஷின் முகத்தையே பார்த்தது.

    என்ன சொன்னீங்க? டெலிபோன்ல பேசினது உங்க மேலதிகாரி தாரகராம் இல்லையா?

    இல்லை...

    எப்படிக் கண்டுபிடிச்சீங்க? வாய்ஸ்ல ஏதாவது வித்தியாசம் தெரிஞ்சுதா?

    வாய்ஸ்ல எந்த வித்தியாசமும் தெரியலை. குரல் அச்சாய் அப்படியே அவர் குரல் மாதிரியே இருக்கு. ஆனா... என்னோட மேலதிகாரிகள் எனக்கு ஃபோன் பண்ணிப் பேசும்போது ஹலோ சொல்றதுக்குப் பதிலா ஒரு கோட் வேர்ட் யூஸ் பண்ணுவாங்க. அந்த கோட்வேர்டை ஃபோன்ல பேசின நபர் யூஸ் பண்ணலை...

    யார் அந்த நபர்?

    தெரியலையே...

    இப்ப என்ன பண்ணப் போறீங்க?

    மேலதிகாரி வைஸ் சேர்மன் தாரகராமுக்கு ஹாட்லைன் டெலிபோன் வசதி இருக்கு. அந்த டெலிபோன் நம்பரும் எனக்குத் தெரியும். அந்த நம்பருக்கு ஃபோன் பண்ணிக் கேட்டா, உண்மை என்னான்னு தெரிஞ்சிடும்.

    உடனே ஃபோன் பண்ணிப் பாருங்களேன்...

    வா... காருக்குப் போயிடலாம். கார்லதான் செல்போன் இருக்கு...

    இருவரும் கார் பார்க்கிங்கை நோக்கிப் போனார்கள். தியேட்டருக்குப் பின்புறம் இருந்த கார் பார்க்கிங்கில் ஏதோ போருக்கு புறப்பட்டுப் போவதைப் போல் கார்கள் அணிவகுத்து நின்றிருந்தன. விக்னேஷ் தன்னுடைய மாருதி எஸ்டீம் காரை நெருங்கி லாக்கிற்கு விடுதலை கொடுத்து கதவைத் திறந்தான். டிரைவிங் சீட்டிலேயே செல்போன் கிடந்தது.

    அதை விக்னேஷ் எடுத்து உயிர்ப்பித்து வைஸ் சேர்மேன் தாரகராமின் ஹாட்லைன் டெலிபோன் எண்களைத் தட்டினான். மறுமுனையில் உடனடியாய் ரிங் போயிற்று. பத்து வினாடிகளுக்குப் பிறகு ரிஸீவர் எடுக்கப்பட்டது. தூக்கக் கலக்கத்தில் ஒரு பெண் குரல்,ஹலோ என்றது.

    மிஸ்டர் தாரகராம் ப்ளீஸ்!

    நீங்கள் யார்? ஹிந்தியில் ஒரு பெண் குரல் அதட்டியது.

    நான் டெல்லி அடாமிக் ரிசர்ச் சென்டரில் மிஸ்டர் தாரகராமுக்கு கீழே வேலை பார்க்கிறேன்...

    சரி, என்ன விஷயம்?

    அவரோடு நான் அவசரமாய்ப் பேச வேண்டும்!

    அவர் இப்பொழுது வீட்டில் இல்லை. ராத்திரி எட்டு மணிக்கு டின்னர் சாப்பிட்டு விட்டு ரிசர்ச் சென்டருக்குப் புறப்பட்டுப் போனார். எப்பொழுது வருவார் என்று சொல்ல முடியாது...

    நீங்கள் அவருடைய மனைவியா?

    ஆமாம்.

    மேடம்! மிஸ்டர் தாரகராமை நான் உடனடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும். அவருடைய செல்போன் நம்பரை எனக்குக் கொடுத்து உதவ முடியுமா?

    ஸாரி. நீங்கள் அவருக்கு கீழே வேலை பார்க்கும் கொலீக் என்பது எனக்கு எப்படித் தெரியும்? ஆஸ் பர் ரூல்ஸ்படி அவரோட செல்போன் நம்பர் குறிப்பிட்ட சில பேர் தவிர வேறு யாருக்கும் தெரியக் கூடாது...

    மேடம்! விஷயம் ரொம்ப அவசரம். நான் உடனடியாக அவருடன் பேசியே ஆக வேண்டும்...

    வெரி வெரி ஸாரி. நீங்கள் உண்மையிலேயே அவருக்குக் கீழே வேலை செய்யும் அடாமிக் ரிசர்ச் சென்டர் ஊழியர் தானா என்பது எனக்குத் தெரியாது. நீங்கள் ஒன்று செய்யுங்கள்...

    என்ன?

    அவருடன் நேரிடையாகப் பேச வேண்டிய அளவுக்கு விஷயம் முக்கியமானதாக இருந்தால் உடனே அடாமிக் ரிசர்ச் சென்டருக்கு புறப்பட்டுப் போய் அவரைச் சந்தியுங்கள். உங்கள் பெயர் என்னவென்று சொன்னீர்கள்?

    விக்னேஷ்!

    உங்கள் செல்போன் நம்பர் என்ன?

    விக்னேஷ் சொன்னான். அந்தப் பெண் தொடர்ந்து பேசினாள். உங்கள் செல்போன் நம்பரைக் குறித்து வைத்துக் கொண்டேன். ஒருவேளை என் கணவர் வீட்டிற்கு ஃபோன் செய்து என்னோடு பேசினால்... உங்களோடு தொடர்பு கொண்டு பேசச் சொல்கிறேன். இப்போதைக்கு இந்த உதவியை மட்டுமே என்னால் செய்ய முடியும்...

    மறுமுனையில் ரிஸீவர் வைக்கப்பட்டுவிட, விக்னேஷ் தன் செல்போனை அணைத்தான். பக்கத்தில் பதட்டமாய் நின்றிருந்த பூஜாவிடம் விவரம் சொல்ல, அவள் கலவரமானாள்.

    இப்ப என்னங்க பண்றது?

    அடாமிக் ரிசர்ச் சென்டரில் தாரகராமும் இருக்கார். இந்த ராத்திரி வேளையில அங்க அவருக்கு என்ன வேலைன்னு தெரியல. போய்ப் பார்க்கலாம்னு இருக்கேன்...

    வேண்டாங்க. இந்த வேளை கெட்ட வேளையில் எதுவும் வேண்டாம். விஷயம் எதுவாக இருந்தாலும் நாளைக்குப் பார்த்துக்கலாம். இப்ப வீட்டுக்குப் போயிடலாம்...

    விக்னேஷ் அவளைக் கோபமாய்ப் பார்த்தான். என்ன சொன்னே? வீட்டுக்குப் போறதா?

    ஆமா...

    பூஜா! நான் தாலுகா ஆஃபீஸில் வேலை பார்க்கிற குமாஸ்தா கிடையாது. அடாமிக் ரிசர்ச் சென்டரில் வேலை பார்க்கிற ஒரு பொறுப்பான அதிகாரி. எனக்கு ஃபோன் பண்ணிப் பேசினது உண்மையிலேயே என்னுடைய மேலதிகாரியான தாரகராம் தானா? இல்லை... வேற யாராவதான்னு கன்ஃபர்ம் பண்ணிக்க வேண்டியது ரொம்ப முக்கியம். உன்னை இப்ப வீட்டுல கொண்டுபோய் விட்டுட்டு நான் அடாமிக் ரிசர்ச் சென்டருக்கு கிளம்புறேன். கார்ல ஏறு...

    நான் என்ன சொல்றேன்னா...

    நீ எதுவும் சொல்ல வேண்டாம் பூஜா. நான் பார்க்கிற உத்யோகத்தைப் பத்தி உனக்கு எதுவும் தெரியாது. ம்... கார்ல ஏறு. உன்னை வீட்டுல கொண்டு போய் ட்ராப் பண்ணிட்டு நான் ரிசர்ச் சென்டருக்கு உடனே போயாகணும்... விக்னேஷ் சொல்லிக் கொண்டே காரின் டிரைவர்

    Enjoying the preview?
    Page 1 of 1