Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uchi Nila!
Uchi Nila!
Uchi Nila!
Ebook98 pages43 minutes

Uchi Nila!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352850594
Uchi Nila!

Read more from Rajesh Kumar

Related to Uchi Nila!

Related ebooks

Related categories

Reviews for Uchi Nila!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uchi Nila! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    உச்சி நிலா!

    Uchi Nila!

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books
    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ***

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    ***

    1

    ஒரு தத்துவம்:

    காதலித்துப் பார்!

    உன் கையெழுத்து அழகாகும்.

    காதலிப்பதை விட்டுப் பார்!

    உன் தலையெழுத்து அழகாகும்.

    அமைச்சர் தாமரைக் கண்ணன் ஷிவாஸ் ரீகல் ஸ்காட்ச்சையும், நெய்யில் பொரித்த பெப்பர் சிக்கனையும் வயிற்றுக்கு அனுப்பிவிட்டு... தன் மெகா சைஸ் தொப்பியைத் தடவியபடி எதிரில் நின்றிருந்த பி.ஏ.வைப் பார்த்தார்.

    கிருஷ்ணன்!

    ஸார்...

    மணி என்ன?

    பத்தே முக்கால் ஸார்!

    நான் இனித் தூங்கப் போகலாமா?

    ஸ... ஸார்... அது வந்து...

    என்னய்யா?

    பதினோரு மணிக்கு மிஸ்டர் அனந்தராமனுக்கு அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்திருக்கீங்க...!

    அனந்தராமனா... யாரய்யா அது?

    ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் ரிடையர்ட் டெப்டி டைரக்டர்!

    ஓ... அந்த ஆளா! அவன் எதுக்கய்யா என்னைப் பார்க்க வர்றான்...?

    தெரியலை ஸார்! ஒரு வாரமாய் உங்களைப் பார்க்க டைம் கேட்டுகிட்டே இருந்தார். இன்னிக்கு ராத்திரி பதினோரு மணிக்குத்தான் அவருக்கு நான் அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்தேன்.

    என்ன விபரம்ன்னு அந்த ஆள்கிட்டயே கேட்டிருக்க வேண்டியதுதானே?

    கேட்டேன் சார்! இது அமைச்சர்கிட்ட மட்டும் சொல்ல வேண்டிய விஷயம்... உங்களுக்கு இஷ்டம் இருந்தா அப்பாய்ண்ட்மெண்ட் கொடுங்க. இல்லேன்னா வேண்டாம்ன்னு சொன்னார்...

    அந்த ஆள் எந்த டிபார்ட்மெண்ட்ன்னு சொன்னே?

    ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் சார்!

    அப்படின்னா... புதை பொருள் ஆராய்ச்சித் துறை தானே?

    ஆமா சார்! - பி.ஏ. கிருஷ்ணன் தலையாட்டிக் கொண்டிருக்கும் போதே அவருடைய செல்போன் ‘பல்லேலக்கா...’ என்று ரிங் டோனை வெளியிட்டுக் கூப்பிட்டது.

    எடுத்துக் காதுக்கு ஒற்றினார். மறுமுனையில் குரல் கேட்டது.

    நான் அனந்தராமன்...!

    ஓ... நீங்களா? உங்களைப் பற்றித்தான் இப்போ மினிஸ்டர் கிட்ட பேசிட்டிருக்கேன்...

    அப்பாயிண்ட்மெண்ட் கன்ஃபர்ம்தானே?

    கன்ஃபர்ம்தான்...! புறப்பட்டு வாங்க. மினிஸ்டர் உங்களுக்காகத்தான் தூங்கக் கூட போகாம வெயிட் பண்ணிட்டிருக்கார்.

    நான் வந்து பேசும்போது அவருக்குப் பக்கத்துல வேறு யாரும் இருக்கக் கூடாது...

    யாரும் இருக்க மாட்டாங்க. வாங்க...!

    பி.ஏ. கிருஷ்ணன் செல்போனை அணைத்து விட்டு அமைச்சரை ஏறிட்டார்.

    அந்த அனந்தராமன் தான் ஸார்!

    டி.வி.யைப் போடய்யா... அந்த ஆள் வர்ற வரைக்கும் எதையாவது பார்த்துட்டு இருக்கலாம்...

    கிருஷ்ணன் ரிமோட் கண்ட்ரோலை எடுத்துப் பட்டனைத் தட்ட முயன்ற விநாடி... அமைச்சரின் செல்போன் அழைத்தது. எடுத்து நம்பர் யாருடையது என்று பார்த்தார். சக அமைச்சர் துரைபாண்டியன்.

    என்ன துரை?

    தாமரை! நீ இப்ப போதையில் இருக்கியா?

    போதைதான்... பட் ஸ்டெடி! சொல்லு... என்ன விஷயம்?

    ஒண்ணுமில்லை. என்னோட ஈச்சம்பாக்கம் கெஸ்ட் ஹவுஸ்ல சின்னதா ஒரு பார்ட்டி வெச்சிருக்கேன். வந்துட்டுப் போயேன்.

    என்ன திடீர்ன்னு?

    காண்ட்ராக்ட் பேசி முடிச்சதுல ஒரு லம்ப் அமவுண்ட் கிடைச்சுது. அதைக் கொண்டாடத்தான்...!

    இதை ரெண்டு நாளைக்கு முன்னாடியே சொல்லியிருக்கலாமே...?

    "தாமரை! இந்த அமைச்சர் பதவிக்கு நீ புதுசு. அதான் சில விபரங்கள் உனக்குத் தெரியுறது இல்லை... இது மாதிரியான பார்ட்டிகளை யெல்லாம் ரெண்டு நாளைக்கு முன்னாடியே அரேஞ்ச் பண்ணினால் மீடியாவோட காதுகளுக்குப் போய்ச் சேர்ந்துடும். அதான் திடீர் ஏற்பாடு.

    பார்ட்டி சரியாய் பன்னிரண்டு மணிக்கு ஆரம்பமாகும். விடியற்காலை நாலு மணி வரைக்கும் நடக்கும். அஜால் குஜால் எல்லாம் உண்டு. சினிமாவில் கனவுக் கன்னியாய் இருக்கிற ஒரு நடிகையும் பார்ட்டியில் கலந்துக்கறா...!

    அட... யாரது?

    சொல்ல மாட்டேன். வந்து பாரு... அசந்து போவே! அந்தக் கனவுக் கன்னி உன்னோட மடியிலேயே வந்து உட்கார்வா... போதுமா?

    துரை!

    "என்ன தயங்கறே? இப்ப மணி பத்து அம்பது. உடனே காரை எடுத்துக்கிட்டு புறப்படு... உன்னோட

    Enjoying the preview?
    Page 1 of 1