Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Theeratha Dhrogam
Theeratha Dhrogam
Theeratha Dhrogam
Ebook70 pages45 minutes

Theeratha Dhrogam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

பிரபு தன் நண்பர்களுடன் சேர்ந்து விபரீத முயற்சியில் ஈடுபடுகிறான்.

அதன்‌பின் அவனுக்கு நேர்ந்தது என்ன? அவன் அதில் வெற்றி பெற்றானா...இல்லையா?

இந்த கதையில் போலீஸ் அதிகாரி நவநீதகிருஷ்ணனின் புலனாய்வு திறமையை, ராஜேஷ்குமாருக்கே உரிய த்ரில்லான பாணியில்... சுவாரஸ்யமான கதைக்களம் வாசியுங்கள்... தீராத துரோகம்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580100406727
Theeratha Dhrogam

Read more from Rajesh Kumar

Related to Theeratha Dhrogam

Related ebooks

Related categories

Reviews for Theeratha Dhrogam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Theeratha Dhrogam - Rajesh Kumar

    https://www.pustaka.co.in

    தீராத துரோகம்

    Theeratha Dhrogam

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    ஆட்டோ குரல் உடைந்த தவளை மாதிரி கொரகொரத்தபடி ஓடி அந்த வீட்டு வாசலில் தன் இயக்கத்தை நிறுத்தியது.

    ஆட்டோவினின்றும் இறங்கினான் பர்வதன். நாற்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிற அவனுடைய தலைக் கேசத்தில் அங்கங்கே சமாதான நிறம் தெரிந்தது. கதர் பாலியெஸ்டரில் ஜிப்பா ரக உடை ஒன்றுக்குள் காற்றோட்டமாய் நுழைந்திருந்தான்.

    ‘மீட்டருக்கு மேல் ஒரு ரூபா கொடுத்துடுங்க ஸார்' என்று சொல்ல வந்த ஆட்டோ டிரைவரை,

    வெயிட்டிங்ல இருப்பா என்று சொல்லிவிட்டு, அந்த வீட்டின் காம்பவுண்ட் கதவை விரித்தான். வழக்கறிஞர் எஸ். ராமாமிர்தம். எம்.ஏ.பி.எல். என்ற உரத்த எழுத்துக்களைத் தாங்கியிருந்த சதுர போர்டு கண்ணில் அடித்தது.

    கார்டன் இருந்த திசையில் பாமரேனியனின் குரைப்பு சத்தம் அவனை வரவேற்க, போர்டிகோ படிகளைத் தாண்டி, வாசல் கதவில் இருந்த காலிங் பெல்லை அழுத்தினான். உள்ளே டிடிங் என்ற சப்தம். சத்தத்தைத் தொடர்ந்து,

    வக்கீல் ராமாமிர்தம் வெளிப்பட்டார். கேஸ் கோப்புகளையும், சட்டப் புத்தகங்களையும் கடந்த இருபத்தைந்து வருஷமாக பார்த்ததில், கொஞ்சம் தடிமனான கண்ணாடியை அவருடைய கண்கள் தத்து எடுத்திருந்தன.

    ஓ! வாங்க பர்வதன்.

    வக்கீல் ஸார்... ஆட்டோ வெயிட்டிங்கில் இருக்கு. வர்றீங்களா?

    ஒரு நிமிஷம். ட்ரஸ் சேஞ்ஜ் பண்ணிட்டு வர்றேன்.

    பர்வதன் அங்கேயிருந்த நாற்காலியொன்றில் சாய, ராமாமிர்தம் உள்ளே போனார். வால் க்ளாக்கை பார்த்தபடி அவன் சில விநாடிகளைக் கரைத்திருக்க, ராமாமிர்தம் வேறு உடையில் திரும்பி வந்தார்.

    வாங்க போகலாம்.

    இருவருமாக காத்திருக்கும் ஆட்டோவில் திணித்துக் கொள்ள அது உறுமியது. நகர்ந்து ஓடியது. டிரைவர் கேட்டார்.

    இப்ப எங்கே ஸார் போகணும்?

    பி4 போலீஸ் ஸ்டேஷன்

    ஆட்டோ டிரைவர் சாலையில் கவனமானார். பர்வதன் ராமாமிர்தத்திடம் திரும்பினான்.

    வக்கீல் ஸார். நான் உங்களைத்தான் நம்பியிருக்கேன். பிரபுவை எப்படியாவது காப்பாத்திடணும்.

    "பிரபு ‘ராஹேண்டா’ மாட்டியிருக்கான். அவனை இந்த கேஸிலிருந்து கழட்டி வெளியே கொண்டு வர்றது ரொம்பவும் கஷ்டம்.

    எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை லாயர் ஸார். டாக்டர் கிட்டே தான் செலவைப் பத்திப் பேசணும்.

    ஏழெட்டு கொலை பண்ணினவனெல்லாம் சட்டத்தை ஏமாத்திட்டு. வெளியே வந்துடறானே... பிரபுவை வெளியே கொண்டு வர முடியாதா?

    குற்றம் செய்யறதுக்கும் கொஞ்சம் சாமர்த்தியம் வேணும் பர்வதன். நீங்க சொல்ற அந்த ஏழெட்டு கொலை பண்ணினவனெல்லாம் சட்டத்துக்கு புரியற சாட்சி, தடயம் எதையும் விட்டு வெக்காம

    Enjoying the preview?
    Page 1 of 1