Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Kulir Kaala Kutram
Oru Kulir Kaala Kutram
Oru Kulir Kaala Kutram
Ebook74 pages32 minutes

Oru Kulir Kaala Kutram

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403284
Oru Kulir Kaala Kutram

Read more from Rajesh Kumar

Related to Oru Kulir Kaala Kutram

Related ebooks

Related categories

Reviews for Oru Kulir Kaala Kutram

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Kulir Kaala Kutram - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    ஒரு குளிர்காலக் குற்றம்

    Oru Kulir Kaala Kutram

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    ராத்திரி 9.20, அந்த ஒதுக்குப்புறமான தெருவில் பனியின் ஈரம் தரையை இலவசமாக மெழுகி விட்டிருந்தது. டைனமோ விளக்கு மங்கலாய் எரிய டி.ஆர்.மகாலிங்கத்தின் பழைய பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டு சைக்கிளை மிதித்துக் கொண்டு இருந்த கான்ஸ்டபிள் பொன்னுரங்கத்தின் பார்வையில் அந்தக் காட்சி மோத - திடுக்கிட்டார்.

    சட்டென சைக்கிளை பிரேக் அடித்தார்.

    அங்கேயே நின்று - இருட்டுக்குள் சற்றுத் தொலைவில் தெரிந்த மசமச உருவத்தை உற்றுப் பார்த்தார்.

    குனிந்து எதையோ தேடுகிறவன் போலத் தெரிந்த அந்த உருவம் முதுகைக் காட்டிக் கொண்டு நின்றிருந்தது.

    'என்ன செய்கிறான்?'

    கான்ஸ்டபிள் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு விட்டு மெதுவாய் அவனை நெருங்கினார். தூரத்தில் கண் சிமிட்டிக் கொண்டிருந்த தெரு விளக்கின் வெளிச்சம் விட்டு விட்டு அவன் மேல் மின்னலடிக்க கான்ஸ்டபிள் புருவத்தைச் சுருக்கினார்.

    அந்த உருவம் வியர்த்துப் போன முகத்தோடு - சாலையோரம் இருந்த அந்த மேன்ஹோலின் மூடியைத் திறக்க முயன்று கொண்டிருந்தது.

    2

    ஆட்டோவில் நெருக்கியடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பவித்ராவும், சரண்குமாரும். திருப்பங்களின் போதும், மேடு பள்ளங்களில் ஆட்டோ குலுங்குகிறபோதும் - வேண்டுமென்றே அவள் மேல் மெத் மெத்தென்று மோதி னான், திடீர் திடீர் என்று எதிர்பாராமல் வழவழ இடுப்பைக் கிள்ளி விட்டு பவித்ராவின் முகம் ரோஸ் பவுடர் போட்ட மாதிரி சிவந்து போவதை ரசித்துப் பார்த்தான்.

    உங்கள் யூகம் சரி.

    அவர்கள் இரண்டு பேரும் புது மெருகு குலைந்து போகாத தம்பதிகள்.

    சரண்குமாரின் முகத்தில் இடம் பிடித்திருந்த அடர்த்தியான மீசையும், தூக்கிச் சீவின் ஹேர் ஸ்டைலும், பளிச்சிடும் நிறமும் கூட்டணி அமைத்துக் கொண்டு யாரோ ஒரு கன்னட நடிகரை ஞாபகப்படுத்தியது. அவனுடைய அசத்தலான பர்சனாலிடியில் மயங்கி காதல் விண்ணப்பம் போட்ட நிறைய பெண்களை சட்டை செய்யாமல் ஒதுக்கி விட்டு அம்மா, அப்பா பார்த்து நிச்சயம் செய்த இந்தப் பவித்ராவை தொண்ணூற்றியொன்பது நாட்களுக்கு முன்னால் மனைவி யாய் வரித்துக் கொண்டான்.

    இன்று நூறாவது நாள்.

    பவித்ரா. சர்வ நிச்சயமாய் சரண்குமாருக்காகவே படைக்கப்பட்டவள் போல அழகில் அவனுக்கு ஈடு கொடுத்தாள். லிப்ஸ்டிக் பூசி கொஞ்சம் ரோஸ் பவுடரை அப்பிக் கொண்டால் யார் இந்தப் புதுமுகம் என்று கேட்பவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட வேண்டியதில்லை, மாதா வர்ண காட்டன் புடவைக்குள் பளபளவென்று நிரம்பியிருந்தாள். அவ ரிசப்ஷனுக்காக எடுத்த புடவை. அவளுடைய நிறம் தூக்கலானதா அல்லது அவளுடைய காதுகளில் தொங்கும் தங்க ஜிமிக்கிகளின் நிறம் தூக்கலானதா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தினால்

    Enjoying the preview?
    Page 1 of 1