Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vilaikku Oru Vanavil
Vilaikku Oru Vanavil
Vilaikku Oru Vanavil
Ebook127 pages57 minutes

Vilaikku Oru Vanavil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580100404316
Vilaikku Oru Vanavil

Read more from Rajesh Kumar

Related to Vilaikku Oru Vanavil

Related ebooks

Related categories

Reviews for Vilaikku Oru Vanavil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vilaikku Oru Vanavil - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    விலைக்கு ஒரு வானவில்

    Vilaikku Oru Vanavil

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    போயிட்டு வர எத்தனை நாளாகும்னு சொன்னே மிதிலா...?

    அஞ்சு நாள்.

    ஹம்மாடி... நெஞ்சில் கை வைத்துக் கண்களில் போலி மயக்கம் காட்டி, நாற்காலியில் 'தொப்'பென்று உட்கார்ந்தான் ஜெயராஜ். அவனுக்கு முன்பாய் வந்து நின்று இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு முறைத்தாள்.

    என்ன, அய்யா சாய்ஞ்சுட்டார்...?

    மிதிலா, உனக்கே இது நியாயமாப் படுதா...? நமக்குக் கல்யாணமாகி எத்தனை நாளாச்சு...?

    இன்னியோட நாற்பத்தியோராவது நாள்.

    கல்யாணமாகி முழுசா ரெண்டு மாசம் கூட ஆகாத ஒரு இளம் கணவனை விட்டு நீ அஞ்சு நாள் பிரிஞ்சு பெங்களூர் போறது சரிதானா...?

    நான் என்ன பண்ணட்டும்...? ஸ்டேஷன் டைரக்டர்கிட்டே நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். இந்த டி.வி. ப்ரோக்ராமுக்கு நீதான் எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர்னு அடித்துச் சொல்லிட்டார்.

    அது ஒரு கிழம்.

    திட்டாதீங்க, அவர் எனக்கு அப்பா மாதிரி.

    உனக்கு அவர் அப்பான்னா, எனக்கு மாமனார். என்னுடைய இன்ப நாட்களின் மேல் கை வைத்த இரும்பு இதயம் கொண்ட மாமனார்.

    இந்த ப்ரோக்ராம் நல்ல ப்ரோக்ராம். இந்தியா அளவில் டெலிகாஸ்ட் ஆகப் போகுதாம்.

    உலகமே அதை டெலிகாஸ்ட் பண்ணட்டுமே. எனக்கு அந்த நாள் போச்சே...

    மடத்தனமா பேசா... மிதிலா முடிக்கும் முன்பே டெலிபோன் தன் வாயைத் திறந்தது. ஜெயராஜ் போய் ரிஸீவரை எடுத்தான்.

    ஹலோ... சொல்லிச் செவி மடுத்து விட்டு, ரிலீவரின் வாயை இடது உள்ளங்கையால் கப்பென்று பொத்திக் கொண்டு மிதிலாவிடம் கிசுகிசுத்தான்.

    கொத்தவரங்காய் கோகிலா பேசுறா...

    கோகிலான்னு சொன்னாப் போதாதா...? மத்தவங்களுக்கு 'நிக் நேம்' வைக்கிறதை என்னைக்குத்தான் விடப் போறீங்களோ...?

    சொல்லிக் கொண்டே ரிஸீவரை வாங்கி, ஹாய், கோகிலா... என்றாள்.

    ஏன்டி மிதி, பெங்களூர் போகப் போறியாமே...?

    உனக்கு யார் சொன்னா...?

    உங்க டி.வி. நியூஸ் பிராம்ப்டர் ராதிகாதான்.

    ஆமா, போறேன்.

    பெங்களூர்ல ஏதாவது ப்ரோக்ராமா...?

    ஒரு சீரியல் பண்ணப் போறோம்.

    டெலி சினிமாவா...?

    ஏறக்குறைய அது மாதிரிதான். ஆனா அதுல பாக்குமெண்ட்ரி வாசனை அடிக்கும். சீரியலுக்கு டைட்டில் நெருப்பு புத்திரிகள்.

    டைட்டிலைப் பார்த்தா இலக்கிய வாசனை வீசுது...?

    டைட்டில் நான் வெச்சதாச்சே, வீசாம இருக்குமா...?

    என்ன தீம்...?

    சமூகத்துல ஒரு சில வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் மெழுகுவர்த்திகளாக வாழ்ந்திட்டிருக்காங்க. அவங்கள்ல சில பேரை நாங்கள் சந்திச்சு, பேட்டி எடுத்து, அந்தப் பொண்ணு சொல்ற சம்பவங்களை வெச்சு சீரியல் பண்ணப் போறோம்.

    பக்கத்தில் நின்றிருந்த ஜெயராஜ், நீர் யானை மாதிரி வாயைப் பிளந்து, 'ஆவ்' என்று கொட்டாவி விட்டான். மிதிலா அவனைத் தன் பெரிய கண்களால் முறைத்துப் பார்த்து விட்டு, ரிஸீவரில் தொடர்ந்தாள்.

    இந்த சீரியல் அற்புதமா அமையும் பாரேன்...

    என்றைக்குப் பெங்களூர் புறப்படுறே...?

    இன்றைக்குச் சாயந்தரம்.

    எதுல...? பஸ்ஸா...? ட்ரெயினா...?

    டி.வி. அவுட்டோர் வேன்லேயே போயிடுவோம்.

    மொத்தம் எத்தனை பேர் போறீங்க...?

    அஞ்சு பேர்.

    யார் யாரு...?

    ரிஸீவரை எரிச்சலாய்ப் பார்த்தாள் மிதிலா. 'போலீஸ் என்கொய்ரி மாதிரி எத்தனை கேள்விகள்...? ச்சே...'

    என்னடி மதி, பேச்சையே காணோம்.

    நான், டைரக்டர் லோகநாதன், காமிரா மேன் கதிர், ஸ்கிரிப்ட் அனுசூயா, ப்ரொடக்ஷன் சைடிலிருந்து ஹேமா.

    மிதி, உங்க யூனிட் கூட நானும் வரட்டுமா...?

    அப்படியெல்லாம் வர முடியாது, வரவும் கூடாது. நாங்க என்ன பிக்னிக்கா போறோம்...?

    சாரி, சும்மா கேட்டுப் பார்த்தேன். ரிஸீவரை வெச்சுடட்டுமா...? கோகிலா மறுமுனையில் ரிஸீவரை வைத்துவிட, மிதிலா பொருமினாள். 'சும்மா கேட்டுப் பார்த்தாளாம். சரியான ஓசி கிராக்கி.'

    மிதிலா...

    ஜெயராஜ் கூப்பிட்டான்.

    ம்...

    உங்க சீரியலுக்கு என்ன டைட்டில்...?

    நெருப்புப் புத்திரிகள்.

    டைட்டிலை எப்படி ஜஸ்டிஃபை பண்ணப் போறீங்க...?

    சீரியல் வந்ததும் பாருங்க புரியும். நான் கோகிலாகிட்டே பேசிட்டிருக்கும்போது கொட்டாவியா விடுறீங்க...?

    ஸாரி மிதிலா.

    என்னது...? ஸாரின்னு சொல்லிக்கிட்டே என் தோள் மேலே கைகை வைக்கிறீங்க...?

    ஒரு பிரியம்தான். நீ இன்னிக்குக் கிளம்புற, வர அஞ்சு நாளாகுமே. அது வரைக்கும் நான் தவிக்கிற தவிப்புக்கு ஒரு காம்பன்சேஷன் கொடுத்துட்டுப் போகணும்.

    மொதல்ல கையை எடுங்க.

    மாட்டேன்.

    இப்போ நீங்க கையை எடுக்கப் போறீங்களா, இல்லையா...?

    மாட்டேன். மாட்டவே மாட்டேன்.

    நீங்க என்னை பெட்ரூமுக்குக் கூப்பிடுறீங்க...?

    ஆமா, ஆமா...

    அஞ்சு நாளுக்கு ஏத்த மாதிரி காம்பன்சேஷன் தரணும்...?

    ஆமா, ஆமா...

    உங்க இஷ்டம்... மிதிலா புன்னகைத்து, அவன் இடுப்பை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

    டி.வி. அவுட்டோர் வேன், அந்தச் சாயந்திர நேரத்தில் பெங்களூரை நோக்கி விரைந்து கொண்டிருக்க உள்ளே, எதிரெதிராக சீட்களில் மிதிலா, அனுசூயா, ஹேமா, லோகநாதன், கதிர் உட்கார்ந்திருந்தார்கள்.

    லோகநாதன், ப்ரோக்ராம் சார்ட்டைக் கையில் வைத்துக் கொண்டு, மிதிலாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

    பதினொரு மணிக்கெல்லாம் பெங்களூர் போய்ச் சேர்ந்து விடுவோம். ஹோட்டல் 'அவதார்'ல தங்கல். காலையில் பத்து மணிக்கு ஹொசப்பேட்டில் இருக்கும் மகளிர் சேவா நிலையத்துக்குப் போகிறோம். நான்கைந்து பெண்களைச் சந்திக்கிறோம். நாளைக்குச் சாயந்திரம் வரைக்கும் இதே ஷெட்யூல்தான்.

    "மறுநாள் காலையில் ஒரு ப்ராஸ்ட்யூஷன் ஏரியாவுக்குப் போகப் போகிறோம். போலீஸ் அனுமதியோடு விபச்சாரம் செய்யும் சில பெண்களைப் பேட்டி எடுக்கிறோம். இந்தப் பேட்டியை எடுக்க வேண்டிய முக்கியப் பொறுப்பு, பெண்களாகிய உங்களுக்குத்தான். மூன்றாவது நாள் உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு இல்லத்துக்குப்

    Enjoying the preview?
    Page 1 of 1