Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mattroru Naal
Mattroru Naal
Mattroru Naal
Ebook79 pages34 minutes

Mattroru Naal

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateApr 11, 2020
ISBN6580100404894
Mattroru Naal

Read more from Rajesh Kumar

Related to Mattroru Naal

Related ebooks

Related categories

Reviews for Mattroru Naal

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mattroru Naal - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    மற்றொரு நாள்

    Mattroru Naal

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    நிருபமர் அவசரமாய்க் கிளம்பிக் கொண்டிருந்தாள். காலை நேரப் பரபரப்பு. அந்த லேடீஸ் ஹாஸ்டலின் முதல் மாடியில் வால் பகுதியில் இருந்தது அவளுடைய அறை.

    கண்ணாடி முன்னால் நின்று தன் நீளமான தலை முடியை அவசர அவசரமாக வாரிக் கொண்டிருந்தாள். அழகான சதைப் பிடிப்பான உதடுகளுக்கு நடுவே ஏர்பின்னை வைத்து அரிசி பற்களால் கடித்திருந்தாள். சின்ன நெற்றியிலும் திரட்சியான மோவாயிலும் வியர்வைத் துளிகள் பன்னீர் தெளித்த மாதிரி தெரிந்தது. தலையை வாரிமுடித்து ஹேர் பின்னை சொருகிய நிருபமா - சல்வார் கமீஸ் துப்பட்டா, மடிப்புகளை சரிப்படுத்திக் கொண்டு கைப்பையை ஆணியிலிருந்து உருவியபோது-

    'க்ளிக்'

    பாத்ரூம் கதவு திறந்தது.

    பெரிய டவலை உடலுக்குச் சுற்றியிருந்த வாசவி பாத்ரூமுக்குள் இருந்து வெளிப்பட்டாள். வாசவி நிருபமாவின் ரூம்மேட் -

    என்னடி கிளம்பிட்டியா...?

    ஃபார்ட்டி செவன் ஏ புளி மூட்டை மாதிரி அடைச்சிட்டு வருவான். கொஞ்சம் எர்லியரா கிளம்பி அதுக்கு முந்தின பஸ்ஸைப் பிடிச்சாத்தான் உட்கார இடம் கிடைக்கும்

    இன்னிக்கு எனக்காக ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ண முடியுமா? வாசவி கேட்க - கைப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டே-நிருபமா நிமிர்ந்தாள்.

    ஏன்-நீயும் கூட வர்றியா...? உனக்கு ஒன்பதரை மணிக்குத்தானே ஆபீஸ்?

    உன்கூட வர்றதுக்காகக் காத்திருக்கச் சொல்லலை.

    பின்னே...?

    விஷயம் இருக்கு...

    என்ன விஷயம்...

    ஒரு அஞ்சே நிமிஷம் ப்ளீஸ்...

    சொல்லிவிட்டு மாக்ஸிக்கு மாறி வாசவி அலமாரியை நோக்கிப் போனாள்.

    இவள் எதற்காக இருக்கச் சொன்னாள்?

    நிருபமா வாசவியை பார்த்தபடி அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள்.

    இரண்டே நிமிஷம்!

    அலமாரியைவிட்டு விலகி வந்தாள் வாசவி. அவள் கையில் ஒரு சின்ன ட்ரே அதில் நாலைந்து 'கேக்’ துண்டங்கள்.

    எடுத்துக்கடி...

    நிருபமாவின் கண்களில் வியப்பு ஓடிற்று.

    என்ன விஷயம். எதுக்காக இன்னிக்கு திடீர்ன்னு கேக்...

    மொதல்ல கேக்கை எடுத்து வாய்ல போடு. அப்புறமா விஷயத்தை சொல்றேன்...

    மொதல்ல நீ விஷயத்தைச் சொல்லு...

    நோ... உன் வாய்ல கேக் கரையும்போது விஷயத்தைச் சொல்வேன்.

    நீ விடமாட்டியே? சொன்ன நிருபமா ஒரு கேக் துண்டை எடுத்துக் கடித்தாள்."

    போதுமா? இப்ப விஷயத்தைச் சொல்லு எதுக்காக கேக்?

    கெஸ் பண்ணு பார்க்கலாம்.

    மணிக்கட்டை உயர்த்தி வாட்சைக் காட்டினாள் நிருபமா.

    நேரமாச்சுடி...! என்னை சஸ்பென்ஸ்ல வெச்சுப்படுத்தாதே. வாசவி புன்னகைத்தாள்.

    நீதான் ஒரு பெரிய பத்திரிக்கையில் உதவி ஆசிரியரா இருக்கியே. நான் கேக் தந்ததுக்கான காரணத்தைக் கண்டு பிடியேன் பார்க்கலாம்.

    நிருபமா உஷ்ணமாய் முறைத்தாள்.

    இப்ப நீ சொல்லப் போறியா இல்லையா?

    வாசவி நெஞ்சுக்குக் கைகளைக் கட்டிக் கொண்டாள்.

    கெஸ் பண்ணிச் சொல்லு. காரணத்தைக் கண்டு பிடிச்சுக் கரெக்டா சொல்லிட்டா உனக்கு ஒரு ட்ரீட் உண்டு.

    கண்டிப்பா ட்ரீட் குடுப்பியா?

    ஷ்யூர்

    Enjoying the preview?
    Page 1 of 1