Kovaiyil Oru Kutram
By Rajeshkumar
5/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsIrandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Saagaavaram Rating: 4 out of 5 stars4/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Uchi Nila Rating: 0 out of 5 stars0 ratingsUn Naanum En Neeyum Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5
Related to Kovaiyil Oru Kutram
Related ebooks
Nimishathukku Nimisham Rating: 0 out of 5 stars0 ratingsThooratthu Ponman Rating: 0 out of 5 stars0 ratingsWelcome To Martuary Rating: 5 out of 5 stars5/5Paathi Rajyam Rating: 0 out of 5 stars0 ratingsThappithe Aaga Vendum Rating: 5 out of 5 stars5/5Ithu Sathivelai Rating: 5 out of 5 stars5/5Muththam Thedum Mugam! Rating: 4 out of 5 stars4/5Inbavin Irandavathu Nizhal Rating: 5 out of 5 stars5/5Thodarnthu Vaa Thottu Vidathea Rating: 4 out of 5 stars4/5Puthiya Paadal Paadu Rating: 5 out of 5 stars5/5Kadalorak Kolaikal Rating: 0 out of 5 stars0 ratingsIruttai Thedi Rating: 5 out of 5 stars5/5Aayul Aare Naal Rating: 5 out of 5 stars5/5Maaya Hospital, Marupadiyum Iranthavan and Oru latsam Vinaadikal Rating: 2 out of 5 stars2/5Ratthathil Oru Kelvikuri! Rating: 4 out of 5 stars4/5Paainthu Vaa Vivek Rating: 0 out of 5 stars0 ratingsSorgathin Saavi Rating: 0 out of 5 stars0 ratingsVaaimaiye Kollum Rating: 5 out of 5 stars5/5Ezhavathu Arivu Rating: 2 out of 5 stars2/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsMonday Murder Day Rating: 0 out of 5 stars0 ratingsVivekin 1000 Nimishangal Rating: 5 out of 5 stars5/5Kaagitha Iruthayangal Rating: 5 out of 5 stars5/5Oru Maalainera Maranam Rating: 0 out of 5 stars0 ratingsChinna Thappu Periya Thappu Rating: 0 out of 5 stars0 ratingsVellai Roja Karuppu Poonai Rating: 0 out of 5 stars0 ratingsVida Maattan Vivek Rating: 0 out of 5 stars0 ratingsAthirum Uthiram Rating: 0 out of 5 stars0 ratingsVivek Jakkirathai Rating: 5 out of 5 stars5/5Muthal Pagal Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Kovaiyil Oru Kutram
1 rating0 reviews
Book preview
Kovaiyil Oru Kutram - Rajeshkumar
எடுக்கப்படும்.
1
என்றைக்குமே சரியான நேரத்தில் வராத கோவை எக்ஸ்பிரஸ் அன்றைக்கும் 1 மணி 40 நிமிடம் லேட்டாகி வந்து ரெயில்வே டிபார்ட்மெண்டின் மானத்தை செமத்தியாய் வாங்கியிருந்தது. சென்னைக்கு போக வேண்டிய பயணிகள் படித்துக் கொண்டிருந்த வாராந்திரிகளையும், மாத நாவல்களையும் பைக்குள் திணித்துக் கொண்டு தத்தம் கோச்சுகளை தேட ஆரம்பிக்க, சென்னையிலிருந்து அலுப்பையும், அழுக்கையும் சுமந்து வந்த பயணிகள் லேட்டாய் வந்த கோவை எக்ஸ்பிரஸை திட்டிக் கொண்டே கீழே இறங்க ஆரம்பித்தார்கள்.
நமக்கு இந்த ரயிலில் ஏ.சி. (ஏர்கண்டிஷன்) கோச்தான் முக்கியம். அதுவும் - ஏ.சி. கோச்சிலிருந்து பூப்பூவாய் இறங்கிக் கொண்டிருக்கிறார்களே அந்த 20-25 வயதுக்குட்பட்ட ஏழு பெண்கள். அவர்கள்தான் முக்கியம். அந்த ஏழு பேரும் புதை பொருள் ஆராய்ச்சி மாணவிகள். ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்டில் பணிபுரிவதற்காக இந்திய அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவு ஜீவியான மாணவிகள். ஆர்க்கியாலஜி சம்பந்தப்பட்ட எந்த சிக்கலான கேள்விக்கும் நுனி நாக்கில் பதிலை கம்ப்யூட்டர் டிப் மாதிரி வைத்திருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவராக பிளாட்பாரத்தில் இறங்கும்போதே வரிசையாய் அறிமுகப்படுத்தி விடுகிறேன். (ஆண் வாசகர்கள் முட்டி மோதிக் கொண்டு பார்க்கவேண்டாம்.) - முதலில் இறங்குபவள் ஜெசிந்தா. வயது இருபத்தி இரண்டு. சிவப்பு நிறம். அசப்பில் இந்தி நடிகை மந்தாகிணியை லேசாய் ஞாபகத்துக்கு கொண்டு வந்தாள். சொந்த ஊர் பெங்களூர். பெங்களூர்க்கு போனால் மட்டும் கன்னடம் பேசுவாள். இருக்கிற ஏழு பேர்களில் இவள்தான் கண்களை நிறைத்தாள். சேஸ் நாவல்கள் இவளுக்கு பாதாம் அல்வா.
அவளுக்கு அடுத்தபடியாய் - சால்வார் கம்மீஸில் ஒரு ஜெயராஜ் ஓவிய அளவுகளோடு இறங்குபவள் காஞ்சனா. கண்கள் ஒவ்வொன்றும் ஒரு காந்தப் பிரதேசம். வயது இருபத்தியொன்று. புதை பொருள் ஆராய்ச்சியில் அபார ஆர்வம். ஹரப்பா... மொகாஞ்சாதோரா இடங்களுக்கு போய் - கற்கால மனிதர்களின் மண்டையோடுகளை பொறுக்கிக் கொண்டு வந்து 'எக்ஸி பிட்' செய்து சர்பிடிகேட் வாங்கினவள். சொந்த ஊர் நாகர்கோவில். பேசுகிற தமிழில் மீன் வாசமும் மலையாள வாசமும் அடிக்கும்.
மூன்றாவதாய் இறங்குபவள் - முக்தா. ஐஸ்க்ரீமையும் - காட்பரீஸ் சாக்லேட்களையும் கண்ட கண்ட நேரத்தில் சாப்பிட்டு உடம்பை கன்னா பின்னாவென்று வளர்த்துக் கொண்டவள். ஸ்விம்மிங் சென்ட்டர்க்குப் போய். 'உடம்பை குறைக்கிறேன்' என்று போனவள் அவர்கள் போட்ட பட்டினி தண்டனையை தாள முடியாமல் ஒரே வாரத்தில் ஓடிவந்து விட்டவள். கொஞ்சம் பயந்த சுபாவம். சொந்த ஊர் குண்டூர். வாரத்திற்கு ஐந்து சினிமா பார்க்கிற ரகம். மகேஷ் விசிறி. நான்காமவள் சுந்தரி. ஏழு பேர்களில் இவள் தான் கறுப்பு. மஞ்சள் பூசி குளிக்கும் நாட்களில் மட்டும் கொஞ்சம் மாநிறமாய் தெரிவாள். ஈரம் தோய்ந்த சதை பிடிப்பான உதடுகளை அவள் அசைந்து பேசும்போது - தெரிந்து மறைகிற பல் வரிசை பழைய கே.ஆர்.விஜயாவை ஞாபகத்துக்கு கொண்டு வரும். சொந்த ஊர் சேலத்துக்குப் பக்கம் வாழப்பாடி. ஏழு பேர்களில் இவளுக்குத்தான் வயது அதிகம். அதாவது இருபத்தைந்து. ஆனால் ஒப்புக் கொள்ள மாட்டாள். ஐந்தாவதாய் - சூடிதாரில் இறங்கும் ஆர்யாவுக்கும் - அழகு என்கிற வார்த்தைக்கும் இடையில் உள்ள தூரம் ஒரு கிலோ மீட்டர். ஆண்களுக்கு இருக்கிற மாதிரியான மேடிட்ட நெற்றி. சிறிய கண்கள். மார்புகளும் இடுப்பும் ஒரே பரிமாணம். இவள் கல்யாணமானவள். கணவன் ரவீந்தர்க்கு சவுட் ஈஸ்ட்ரன் ரயில்வேயில் தண்டச் சம்பளம் வாங்கும் வேலை. சொந்த ஊர் ஹூப்ளி. போட்டோ கிராபி இவளுக்கு ஹாபி. செஸ்ஸும் ஆடுவாள்.
ஆறாவதாய் பிளாட்பாரத்தில் குதித்து இறங்குபவள் இதயா. 'பூவே பூச்சுடவா...' நதியா மாதிரியான சுட்டித்தனம். அறுவை ஜோக் ஸ்பெஷலிஸ்ட். அவள் அண்மையில் அடித்த அறுவை ஜோக்.
நான் காட்டுவழியா போயிட்டிருந்தப்போ... எனக்கு எதிர்ல ஒரு புலி வந்த நின்னு உறுமிச்சு... நான் ஏழு எழுத்து உள்ள ஒரு வார்த்தையை மெல்லமா அதோட காதுக்குப் பக்கத்துல சொன்னேன். அவ்வளவுதான் புலி வாலைச் சுருட்டிகிட்டு ஒரு சொறி நாய் மாதிரி ஓடிடுச்சு. நான் சொன்ன அந்த ஏழு எழுத்து வார்த்தை என்ன?
எல்லாரும் முழிமுழியென்று முழித்துவிட்டு 'நீயே சொல்லடி சனியனே' என்று சலித்துக் கொள்ள இதயா சொன்ன ஏழு எழுத்து வார்த்தை 'மம்பட்டியான்.' இதயாவுக்கு ஒடிசலான உடம்பு வாகு. எந்நேரமும் துறுதுறு... சுறுசுறு... சொந்த ஊர் தமிழ் நாட்டின் தலைநகரம். ஹாபி: அப்பாவி வாலிபனாய் கண்ணுக்குத் தெரிந்தால் சீண்டுவது. கடைசியாய் உதிர்த்தவள் ஊர்மிளா. யாரோடும் அதிகம் பேசாத டைப். எவ்வளவு வெய்யில் அடித்தாலும் சேலைத் தலைப்பை போர்த்திக் கொண்டே இருப்பவள். முகத்தில் அமலா ஜாடை. ஷ்யாம் என்கிற ஒரு அழகான இளைஞனை காதலிக்கிறாள். நிஜமான காதல். அதே கோவை எக்ஸ்பிரஸ்ஸில் - அவள் இருந்த 'கோச்'சிலேயே பயணம் செய்து - இந்த நிமிஷம் அடுத்த பக்க கதவின் வழியாக இறங்கி - ஹிக்கின்பாதாம்ஸ் புக் ஸ்டாலில் நின்றபடி அந்த ஷ்யாம் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறான். இவர்களைத் தவிர - மேலே சொன்ன எட்டு பேர்களைத் தவிர - வெள்ளி ரோமத் தலையோடு நாற்பத்தைந்து வயதில் இறங்கும் புரபசர் தேவாமிர்தமும் - அவர்க்குப் பின்னால் குண்டாய் குள்ளமாய் - தலைக்குப் பின்புறம் இத்தூனூண்டு 'கொண்டை போட்டுக் கொண்டு சோடா புட்டி கண்ணாடியோடு இறங்கும் அகிலா நாராயணனும் நம்முடைய நாவலுக்கு வேண்டியவர்கள். அவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.
எல்லோரும் இறங்கியாச்சா...?
குரல் கொடுத்தார் தேவாமிர்தம்.
இறங்கியாச்சு ஸார்...
இதயா எல்லோர் சார்பிலும் குரல் கொடுத்தாள்.
லக்கேஜ்...?
அதையும் இறக்கியாச்சி ஸார்...
புறப்படலாமா...?
எல்லோரும் தலைகளை ஆட்டி நகர்ந்த நேரம் - அகிலா நாராயணன் தேவாமிர்தத்தை ஏறிட்டாள். மெல்லிய குரலில் கூப்பிட்டாள்.
மிஸ்டர் தேவாமிர்தம்.
என்ன மேடம்...
ஏதாவது கூல்ட்ரிங்க் குடிச்சுட்டு வெளியே போலாமே...? ரயில்வே டைனிங் கார்ல குடுத்த புளியோதரை ரொம்ப மோசம்... தண்ணி தாகம் அப்படி எடுக்குது...
சாப்பிட்டு போலாமே... வாங்க பக்கத்துல தான் கூல்ட்ரிங்க் ஸ்டால்...
தேவாமிர்தம் தலைமை தாங்கி