Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Abaayam! Thodu!
Abaayam! Thodu!
Abaayam! Thodu!
Ebook242 pages1 hour

Abaayam! Thodu!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

'அபாயம் தொடு!' - இது அரசியல் பின்னணியில் உருவான நாவல். பொதுவாக அரசியலில் நல்லவர்கள் குறைவு. நல்ல பண்புகளை அவர்களிடம் எதிர்பார்ப்பதும் சரியில்லை. தாங்கள் என்றென்றும் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக எப்படிப்பட்ட கொடுமையான செயலையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்பதை இந்த நாவலில் சொல்லியுள்ளேன். அரசியல் பின்னணி கொண்ட இந்த நாவலில் நடிகை நீலாம்பரியும் இடம் பெறுகிறாள். அரசியல், சினிமா, என்ற இந்த இரண்டிலும் கலக்காமல் ஒரு குடும்பக் கதையும் இணைகிறது. ஜெயகோபி, வாசமதி மோனிகா கதாபாத்திர்ங்கள் அரசியலோடும், சினிமாவோடும் எப்படி சம்பந்தப் படுகிறார்கள் என்பதே 'அபாயம் தொடு!' நாவல்.

Languageதமிழ்
Release dateOct 21, 2016
ISBN6580100401607
Abaayam! Thodu!

Read more from Rajesh Kumar

Related to Abaayam! Thodu!

Related ebooks

Reviews for Abaayam! Thodu!

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Abaayam! Thodu! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    அபாயம்! தொடு!

    Abaayam! Thodu!

    Author :

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For other books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அபாயம்! தொடு!

    1

    அந்த ஹாலில் இருந்த பத்திரிகை நிருபர்கள் அத்தனை பேரும் ஒரு வேண்டாத மெளனத்தோடு பேனாவும் பேப்பருமாய் - காமிராவும் கையுமாய் - நடிகை நீலாம்பரிக்காகக் காத்திருந்தார்கள். ராஜாஜி நகர், ஐந்தாவது அவென்யூவில் இருந்த நீலாம்பரியின் பங்களாவில் அந்த ப்ரஸ் மீட் ஏற்பாடாகியிருந்தது.

    ப்ரஸ் மீட் நடக்க இருந்த ஹாலுக்கு நேர் மேலே இருந்த அறையில் நீலாம்பரி தன்னுடைய கணவன் ஹேமந்த்குமாரோடு நிருபர் கூட்டத்துக்குப் புறப்படத் தயாராக இருந்தாள். முகத்தில் சத்தமாய் மேக்கப் இல்லை. லேசான பவுடர் பூச்சோடு பிரிண்டட் சில்க் சேலையில் ஒரு மலிவு விலை தேவதை போல் தெரிந்தாள். ஒரு சினிமா ஹீரோவைக் காட்டிலும் அழகாய் இருந்த கணவரிடம் கேட்டாள்.

    புறப்படலாமா?

    அவன் சிரித்தான். நான் ரெடி...

    நான் எடுத்திருக்கிற முடிவில் உங்களுக்கு வருத்தம் ஏதும் இல்லையே...?

    நோ... நோ... இனிமேல் நீ சினிமாவில் நடிக்கிறதும் நடிக்காததும் உன்னோட இஷ்டம்... இஷ்டப்பட்டா நீ நடிக்கலாம். இல்லேன்னா விட்டுடலாம். தி பால் ஈஸ் இன் யுவர் கோர்ட்... சாய்ஸ் இஸ் யுவர்ஸ்... நீ எப்படி முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்!

    நீலாம்பரி புன்னகைத்தாள். நடிப்பு எனக்குப் பிடிச்ச விஷயம்தான். ஆனா கல்யாணம் பண்ணிகிட்ட பிறகு அதைத் தொடரணுமான்னு யோசிக்கிறேன். வீட்டையும் உங்களையும் கவனிச்சுக்கிறதுதான் இனிமே என்னோட வேலை... எவ்வளவு பணம் சம்பாதிச்சாலும் குடும்ப வாழ்க்கையில் கிடைக்கிற நிம்மதி வேற எங்கேயும் கிடைக்காது...

    "உன்னோட எண்ணம் அதுவாயிருந்தா அப்படியே முடிவு எடுத்துரு... இப்போதைக்கு பணம் சம்பாதிக்கிறது ஒரு பெரிய விஷயமே இல்லை. சிங்கப்பூர்ல நான் நடத்திட்டு வர்ற அத்தனை பிளான்களும் அமோகமாக போயிட்டிருக்கு. நான் அங்கே இல்லாமப் போனாகூட நிர்வாகம் ஒழுங்க நடந்துட்டிருக்கும். வருஷத்துக்கு ரெண்டு மூணு தடவை போய் அக்கெளண்ட்ஸ்களைப் பார்த்தால்கூடப் போதும். எல்லாமே கம்ப்யூட்டர்ஸ். தப்பு பண்ணாது. இனிமே நீ சம்பாதிக்க வேண்டியதில்லை... என்னோட சம்பாத்தியமே போதும். நடிக்க இஷ்டமில்லைங்கிற முடிவை இன்னிக்குக் கூட்டியிருக்கிற இந்த ப்ரஸ் மீட்டிலேயே சொல்லிடு. '

    இருவரும் சுழன்று இறங்கும் படிகளில் மெதுவாய் உயரம் இழந்து பிரகாசமான புன்னகையோடு நிருபர்களை நெருங்கினார்கள்.

    வணக்கம்...

    காமிராக்கள் ஃபிளாஷ் மின்னல்களை வாரியிறைத்தன. வயதான நிருபர் ஒருவர் எழுந்து கண்ணாடித் தாளில் சுற்றப்பட்ட பொக்கேயை நீட்டினார். பத்திரிகை உலகத்தின் சார்பாக உங்கள் மணவாழ்க்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ஸாட்லைட் டி.வி.க்காரர்கள் வீடியோ காமிராக்களை இயக்க, உஷ்ணமான வெளிச்சம் நீலாம்பரி ஹேமந்த்குமார் உடம்புகளை மினு மினுப்பாய்க் குளிப்பாட்டியது.

    இருவரும் நாற்காலிகளில் சாய்ந்ததும் ஒரு நிருபர் எழுந்து கேட்டார். இந்தத் திடீர் ப்ரஸ் மீட் எதுக்காகக் கூட்டப்பட்டதுன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா...?

    நீலாம்பரி பன்னிரண்டு பல்வரிசையைக் காட்டிச் சிரித்தாள். ஷ்யூர்... எனக்குத் திடீர்னு கல்யாணம் ஆன விஷயத்தை உங்களுக்கெல்லாம் முறைப்படி தெரியப்படுத்தி - அந்தச் சந்தோஷத்தைப் பகிர்ந்துக்கிறது முதல் நோக்கம்... அப்புறம் இந்தக் கூட்டத்தின் முடிவில் இன்னொரு முக்கியமான அறிவிப்பை வெளியிடப் போகிறேன்...

    இப்பவே அதைச் சொன்னா என்ன...?

    ஸாரி... அந்த அறிவிப்பை இப்பவே சொல்லிட்டா அதுக்கப்புறமா நீங்க கேட்கிற எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டேன். சரியா?

    ''வேண்டாம்... அந்த முக்கியமான முடிவை ப்ரஸ் மீட் முடிவிலேயே சொல்லுங்க... இன்னிக்கு உங்ககிட்ட நிறையக் கேள்விகள் கேட்கணும்."

    கேளுங்க...

    தமிழ்நாட்டில் ஒரு சூப்பர் ஹீரோவுக்கு இணையான... மன்னிக்கணும் இணையானன்னு சொன்னது தப்பு. அதுக்கும் அதிகமாகவே செல்வாக்கு இருக்கு... உங்க பின்னாடி ஏராளமான ரசிகர் கூட்டம். பின்னர் குழந்தை முதல் வயதான பெரியவங்க வரை எல்லாத் தரப்பிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தை வெச்சிருக்கீங்க... உங்களுக்கு மட்டும் தமிழ்நாட்ல எழுபதாயிரம் ரசிகர் மன்றங்கள் இருக்கிறதா ஒரு சர்வே சொல்லுது... வேறு எந்த நடிகைக்கும் கிடைக்காத பாப்புலாரிட்டி உங்களுக்கு மட்டும் கிடைச்சிருக்கிறதுக்கு என்ன காரணம்...?

    எனக்குத் தெரியலை... ஏதோ கடவுளோட அனுக்கிரஹம்.

    நிருபரிடம் - ஹேமந்த்குமார் குறுக்கிட்டான். உங்க கேள்விக்கான பதிலை நான் சொல்லலாமா...?

    சொல்லுங்க ஸார்...

    பொதுவா, சினிமாவில் நடிக்கிற பெண்களை மோசமான கண்ணோட்டத்தோட பார்க்கிறதுதான் இந்தச் சமூகத்தோட பழக்கம். அப்படிப்பட்ட சமூகத்தைச் சினிமா உலகிலும் ஒரு பெண் ஒழுக்கமா வாழ முடியும்னு உணர வெச்சது நீலாம்பரிதான். எந்தப் படத்திலும் இது வரைக்கும் ஆபாசமா நடிச்சதில்லை. ஹீரோவைக் கட்டி பிடிச்சு டூயட் பாடினதில்லை... நீலாம்பரி ஒப்புகிட்டு நடிச்ச எல்லாப் பாத்திரங்களும் நிஜ வாழ்க்கையில் எத்தனையோ பெண்களை போய்த் தொட்டிருக்கு எல்லாத்துக்கும் மேலா நீலாம்பரிகிட்டே ஒரு நடிகைக்கு இருக்க வேண்டிய சாகஸம் இல்லை. பந்தா இல்லை... யார் உதவின்னு போய் நின்னாலும் பணத்தை அள்ளித் தர்ற தயாள குணம் அவருடைய புகழ்ச்சிக்கு ஒரு ப்ளஸ் பாயிண்ட். நீலாம்பரியைப் பத்தி லேட்டஸ்ட் சர்வே ஒன்று என்ன சொல்லுது தெரியுமோ...?

    என்ன சொல்லுது...?

    தமிழ்நாட்டிலே ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருத்தராவது நீலாம் பரியோட ரசிகராக இருக்காங்களாம். போன வருஷம் பொங்கலுக்கு நீலாம்பரியோட உருவம் பொறித்த பொங்கல் வாழ்த்துக்கள் மட்டும் பத்து லட்சத்துக்கும் மேலே விற்பனையாகியிருக்காம்...

    நீலாம்பரி, கணவனைப் பார்த்துப் புன்னகையோடு கையமர்த்தினாள். ஜனங்க என் மேல பிரியம் வெச்சிருக்காங்க. நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா நீங்க சொல்றது அதிகம். நான் உங்க மனைவியாயிட்ட காரணத்துக்காக ஒரேடியாத் தூக்காதீங்க...

    இன்னொரு நிருபர் குறுக்கிட்டார். நோ... மேடம்! உங்க கணவர் சொல்றது சரிதான்... உங்களுக்கு மிகப் பெரிய மக்கள் ஆதரவு இருக்கு குறிப்பா, பெண்கள் - இந்தச் சூழ்நிலையில் நீங்க ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிச்சுத் தேர்தலைச் சந்திச்சா, தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் நீங்கதான்.

    நீலாம்பரி அழகாய் அண்ணாந்து பார்த்துவிட்டுத் தொடர்ந்தாள். சரியாப் போச்சு. எனக்கு அரசியல்ன்னாலே அலர்ஜி. தேர்தல்ல ஒட்டு போடறதோடு என்னோட அரசியல் பங்களிப்பு முடிஞ்சிடுது. நான் தினமும் கும்பிடற மாங்காட்டு அம்மன் அருளால் எனக்கு இப்போ ஒரு நிம்மதியான வாழ்க்கை கிடைச்சிருக்கு. என்மேல் அன்பைப் பொழியிற தமிழ் மக்கள், நல்மனம் கொண்ட கணவர் - இதெல்லாம் என்னிக்கும் நிலைச்சிருந்தா அதுவே எனக்குப் போதும்...

    நீலாம்பரி சொல்லிக்கொண்டிருக்கும்போதே வீட்டு வேலையாள் ஒருவன் பவ்யமாய்ப் பக்கத்தில் வந்து நின்றான்.

    அம்மா...

    என்ன துரைசாமி...?

    'ப்ரொட்யூஸர் வசந்த கோபால் ஃபோன்ல காத்திட்டிருக்கார். ஏதோ உங்ககிட்ட பேசனுமாம்..."

    நீலாம்பரி எழுந்தாள். ஸாரி ஃபார் த பிரேக், ரெண்டே நிமிஷத்துல வந்துர்றேன்... வேகமாய் நடந்து போய்ப் பக்கத்து அறைக்குள் நுழைந்து மேஜையின் மேல் கறுப்பு பிராக்கெட் குறி மாதிரி ஒருக்களித்துக்கிடந்த ரிஸிவரை எடுத்துக் காதுக்குக் கொடுத்தாள்.

    ஹலோ, வசந்த கோபால் ஸார்...

    மறுமுனை கரகரத்தது.

    ஸாரி... நான் வசந்த கோபால் இல்லை. உன்னை முதன் முதலாத் தன் படத்துல அறிமுகப்படுத்தின அந்த டைரக்டரோட பேரைச் சொன்னாத்தான் ஃபோன்ல பேச ஓடோடி வருவேன்னு எனக்குத் தெரியும்...

    சரி, நீ யாரு...?

    நான் யார்ங்கிறது முக்கியமில்லை. சொல்லப் போற விஷயம் தான் முக்கியமானது...

    சரி, சொல்லு...

    கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம். கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டுச் சந்தோஷமா வாழ்க்கையைத் தொடங்க போகிற இந்த நேரத்துல உன்னால அந்த அதிர்ச்சியை ஜீரணிக்க முடியுமான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு...

    நீலாம்பரிக்கு நெற்றி வியர்த்து தொண்டை காய்ந்து போயிற்று. சொ... சொல்லு... என்ன விஷயம்...?

    டெலிபோனின் மறுமுனையில் இருந்தவன் ஒரு சின்ன சிரிப்போடு பேச ஆரம்பித்தான்.

    தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தன் மெகா சைஸ் நீள எஃகு உடம்பைச் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நுழைத்தபோது நேரம் ராத்திரி 11.05 மணி.

    ஜெயகோபி எஸ்-5 கோச்சில் இருந்தான். இருபத்தைந்து வயது இளைஞன். மாநிறத்துக்கும் கொஞ்சம் தூக்கலான நிறம். அந்த வயதிலேயே சற்று தடிமனான பவர் ஸ்பெக்ஸ் அணிந்திருந்தான் (நாள் பூராவும் கம்ப்யூட்டர் திரையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததன் விளைவு). 'எக்ஸெல் ஆட்டோமேஷன்' என்று சொன்னால் கம்ப்யூட்டர் ஞானம் உள்ளவர்கள் 'பெரிய கம்பெனியாயிற்றே!' என்று புருவங்களை அரை அங்குலத்துக்காவது உயர்த்துவார்கள். அந்தக் கம்பெனியில் கம்ப்யூட்டர் பிரிவில் ப்ரொக்ராம் அனலிஸ்ட் உத்தியோகம். ஐந்து இலக்க சம்பளம்.

    டெல்லியை விட்டுக் கிளம்பும் போது மனசுக்குள் டென்ட் அடித்து முகாம் போட்டிருந்த சந்தோஷம் அந்த நிமிடம் மைனஸ். அவனுக்கு எதிர் இருக்கையில் இருந்த அந்த நடுத்தர வயது பயணி அவனைச் சமாதானப்படுத்தினார்.

    இப்ப கவலைப்பட்டுப் பிரயோசனமில்லை தம்பி. இறங்கினதும் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுத்துட்டுப் போங்க.

    ஜெயகோபி பெருமூச்சு விட்டான். ரேணிகுண்டாவைத் தாண்டின பிறகுதான் யாரோ சூட்கேஸை அடிச்சிட்டுப் போயிருக்கணும்.

    சூட்கேஸஸுக்குச் செயின்லாக் போட்டிருந்தா பிரச்சினையே இல்லை. உள்ளே பணம் எவ்வளவு வெச்சிருந்தீங்க தம்பி...?

    பத்தாயிரத்துச் சொச்சம். என்னோட அக்காவுக்காக எடுத்து வெச்சிருந்த காஸ்ட்லி ஸாரீஸ்... ஒரு மோதிரம்...

    கைச் செலவுக்குப் பணம் இருக்கா தம்பி...?

    நல்ல வேளையா ரயில் டிக்கெட்டையும் ஒரு ஐநூறு ரூபா பணத்தையும் பர்ஸ்ல வெச்சிருந்தேன்...

    ட்ரெயின்ல கொஞ்சம் ஏமாந்தா போதும். ஆளையே அபேஸ் பண்ணிட்டுப் போயிடுவாங்க. லாஸ்ட் டைம் நான் புனே போயிருந்தப்ப இப்படித்தான் எனக்கும் ஒரு பிட்டர் எக்ஸ்பீரியன்ஸ், உங்க பாடு தேவலை தம்பி... பர்ஸ்ல கொஞ்சம் பணம் வெச்சிருக்கீங்க. நான் பாஷை தெரியாத அந்த ஊர்ல பாக்கெட்ல பத்துப் பைசாகூட இல்லாம திண்டாடிப் போயிட்டேன். என்னோட நிலைமை அப்போ எப்படியிருக்கும்ன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க தம்பி...

    அதையெல்லாம் யோசிச்சுப் பார்க்கிற மனநிலையில் ஜெயகோபி இல்லை.

    அவனுக்குச் சம்பளப் பணம் பத்தாயிரத்துச் சொச்சம் போனது பற்றிக் கொஞ்சம்கூடக் கவலை இல்லை. அக்காவுக்காக பாலிக்கரஞ்ச் பஜாரில் பார்த்துப் பார்த்து செலக்ட் பண்ணி எடுத்த விலையுயர்ந்த சேலைகள் போனது பற்றியும்கூட வருத்தம் இல்லை. அடுத்த தடவை அதே பாலிக் கரஞ்ச் பஜாரில் எடுத்துக் கொடுத்து விடலாம்.

    இப்போது அவனுடைய வருத்தமெல்லாம் முகம் தெரியாத தேவதையைப் பற்றியது.

    அந்தத் தேவதை...

    2

    அந்தத் தேவதையின் பெயர் வாசமதி.

    வாசமதிக்காக முதன் முதலாய் ஒரு பவுனில் கல் பதித்த தங்க மோதிரம் ஒன்றை இரண்டு நாட்களுக்கு முன்னால் சாந்தினி செளக் ஐவேனி மகாலில் மூன்று மணி நேரத்தைச் செலவு செய்து செலக்ட் பண்ணி வாங்கினான்.

    வாசமதி!

    அக்கா அவனுக்காகப் பார்த்து வைத்திருக்கிற பெண். அக்காவின் செலக்ஷன் சோடை போகாது என்பதில் அவனுக்கு அபார நம்பிக்கை.

    ஒரு சம்பிரதாயத்துக்காக நாளைக்கு அந்த வாசமதியைப் பார்க்கப் போகிறான். பார்த்து ஓ.கே. சொல்லித் தலையசைத்த கையோடு அந்த மோதிரத்தை அவளுக்குக் கொடுத்து எல்லோருக்கும் ஒர் இன்ப அதிர்ச்சி தர எண்ணியிருந்தான்.

    சூட்கேஸ் பறிபோனதால் இப்போது அந்த இன்ப அதிர்ச்சியில் ஏராளமான மண்.

    ரயில் ஒரு பெரிய குலுக்கலோடு நின்றது. அவனைத் தவிர, எல்லாருமே பெரிய பெரிய ஜெயண்ட் சைஸ் சூட்கேஸ்களோடு இறங்கினார்கள். டெல்லியிலிருந்து வந்து வெறுங்கையோடு இறங்குவதில் மனசெல்லாம் ரணமாய் வலித்தது.

    பிளாட்பாரத்தில் அவ்வளவாய்க் கூட்டமில்லை. இருந்த சொற்பக் கூட்டத்தில் அக்கா மோனிகாவைத் தேடினான்.

    டெலிக்ராம் கிடைத்திருக்குமோ...?

    டெல்லியிலிருந்து எஸ்.டி.டி.

    Enjoying the preview?
    Page 1 of 1